என்னோட ரசிக உறவுகள் அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்! நான் உங்க பிரமீளா! என்னோட பேட்டி ஒளிபரப்பான நியூஸ் மிக்ஸ் டிவியில, நீங்க எல்லாரும் பதிவிட்ட கமென்டஸ் எல்லாத்தையும் பார்த்தேன்! ஆண்டவனே, நான் என்ன பண்றது - உங்க எல்லாருக்கும் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல! ஏன்னா, கமென்ட்ஸ் எல்லாத்தையும் அவ்வளவு அழகழாக போட்டிருக்கீங்க! என் மேல எப்படி - எதனால இவ்வளவு அன்பு வச்சுருக்கீங்க! அப்படி நான் என்ன பண்ணிட்டேன்? இத்தன வருஷம் கழிச்சு என் மேல இவ்வளவு அன்பு வச்சுருக்கிற அன்பு உள்ளங்களாகிய உங்க எல்லாரையும் நெனச்சு, என் மனம் மகிழ்ச்சி கடல்ல மூழ்கி போயிடுச்சு! எமோஷனாலா பேச தெரிஞ்ச எனக்கு, உங்க அளவுக்கு அழகழாக எழுத தெரியலைங்க! நானும் என்னால முடிஞ்ச அளவுக்கு சிலருக்கு பதில் போட்டுருக்கேன்! ஆனால், இவ்வளவு பேருக்கும் அதுபோல பதில் போடுறதுன்னா அது எப்படின்னு எனக்கு தெரியல! உங்க எல்லோரையும் நேரில் பார்க்கனும், கை கொடுக்கனும், ஒரு தாயாக - சகோதரியாக - மகளாக ஆரத்தழுவி நன்றி சொல்லனும்னு எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு! இத எழுதும்போதே என் கண்கள் தண்ணீர் குளமாகிவிட்டது! கண்ணீருடன் நன்றியையும் சேர்த்தேதான் நான் எழுதுறேன்! என் நடிப்ப மட்டும் பார்த்த நீங்க, உங்க வீட்டு பெண்ணா நெனச்சு அன்போட வரவேற்பையும் கொடுத்து கமென்ட்ஸ் பண்ணியிருக்கீங்க! அத பார்த்து மெழுகுவர்த்தியவிட வேகமா நான் உருகி போனதோடு மட்டுமில்லாம, அழுகைதான் என் பதிலாவும் வந்துச்சு! ஆரம்பத்துல நானும் ஒரு நடிகையா சினிமாவுல வந்துருக்கலாம்! ஆனால், இப்ப நான் மிக சராசரியான சாதாரண பெண்தான்! கணவர் - குடும்பம் - உறவுகள்னு வாழ்ந்துகிட்ட வந்தவதான்! ஆனால், உங்க எல்லாருடைய அன்பு கமென்ட்ஸ் ஆனது, இத எல்லாம் அப்படியே திருப்பி போட்டுடுச்சு! எனக்குன்னு ஒரு மிகப் பெரிய ரசிக உறவுகள் உலகம் பூராவும் இருக்காங்கன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் சோர்ந்து போயிருந்த என் மனதுக்கு ஒரு பெரிய உற்சாகமே கிடைச்சுருக்கு! தமிழகம் வந்தப்ப சிலர் மீண்டும் நடிக்கிறீங்களான்னு என்கிட்டே கேட்டாங்க! 45 வருஷமா குடும்பம் - அரசு வேலைன்னு என் காலத்த கழிச்சுட்டேன்! அதனால இப்ப நடிக்க முடியுமான்னு எனக்கு தெரியல? மத்தவங்க கேட்கும்போதுதான், நான் ஒரு நடிகையா இருந்துருக்கேன் என்பது ஞாபகத்துக்கு வந்துவிட்டு போகுது! மிகப் பெரிய இயக்குநர்கள் பலரும் சொல்லி கொடுத்ததை கிளிப்பிள்ளை மாதிரி நடிச்சுட்டுபோன எனக்கு, இப்ப அதுபோல நடிக்க முடியுமாங்றது சந்தேகம்தான்! இப்ப நடிக்கிற பலரும் நேச்சுரலா நடிக்கிறாங்க - அவங்க அளவுக்கு நான் நடிக்க முடியுமாங்றது எனக்கு சுத்தமா தெரியலைங்க! கவனம் எங்கேயோ போயிடுச்சு போல! சரிங்க, உங்க பாசமிகு அரவணைப்புக்குள் மீண்டும் வர்றேன்! தமிழகத்தவிட்டு பல்லாயிரம் கிலோமீட்டர் தள்ளி அமெரிக்காவுல, என் குடும்பம் - உறவுகள்னு நான் வாழ்ந்துகிட்டு வர்ற நிலையில, எனக்குன்னு அன்பு செலுத்துற - பாசத்த அள்ளி வீசுற ஒரு மாபெரும் ரசிக உறவு உள்ளங்கள் இருக்குறாங்கன்னு தெரிஞ்ச உடனேயே, என் சந்தேஷத்துக்கு அளவே இல்லைங்க! இமயத்தோட உச்சிய தொட்டது போல ஒரு பிரமிப்புதான் எனக்கு! உங்க அனைவரோட பாசம் - அன்பு - வாழ்த்து மழையில நனஞ்சுபோன எனக்கு, ஒரு பெரிய தெம்பும் - தைரியமும் உருவாகி இருக்கு! உங்க அன்புக்கு ஈடாக நான் என்ன சொல்றது - என்ன பண்றதுன்னே தெரியலைங்க! இருந்தாலும் உங்க எல்லார்கிட்டேயும், என்னோட இரு கரம் கூப்பி என் நன்றிய இதன் மூலம் தெரிவிச்சுக்கிறேன்! நீங்களும் என்னோட நன்றிய கனிவோட ஏற்று கொள்வீங்கன்னு முழுமையா நம்புறேன்! மீண்டும் ஒரு வாய்ப்ப இறைவன் எனக்கு கொடுத்தால் உங்க எல்லாரையும் நேரில் சந்திக்கிறேன்னு கூறி இப்போதைக்கு விடை பெறுகிறேன்! இப்படிக்கு , என்றென்றும் உங்கள் அனைவருடைய பாச நினைவுகளில்! உங்கள் பிரமீளா! நன்றி!... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤Mam i have seen Arangetram movie. One dialogue you say to kamal sir. That time you feel whole family ignored you except your mom. Now this interview made Pramila mam is very cool ,casual to talk.❤ God bless your simple nature mam. 🎉
@@rcorrektvisvanathan4581 இந்த மாதிரி சொல்லாதீர்கள். குடும்பத்தோடு தற்கொலைக்கு போனவர்களை கடவுள் பிரமீளா அம்மா மூலம் அந்த குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்று தான் வாசல் கதவை தட்டி சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளது. பிரமீளா நடிக்க வந்த பிறகு தான் அந்த குடும்பம் கொஞ்சம் நிமிர்ந்தது. நடிகைகள் வாழ்க்கை பெரிய போராட்டம் நிறைந்தது. அவர்கள் மனம் புண்படுத்தகூடிய வார்த்தைகளை பேசவேண்டாம்..
வெடிச்சிரிப்பால் வியக்க வைத்த நடிப்பு ! "தெய்வமே கலங்கி நின்னா அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும் ?" சோக வசனம் மறக்க முடியா நடிப்பிலும் வியக்க வைத்தவர் ! நிறைவான நேர்காணல் ! Nes mix tv இன் வித்தியாச முயற்சி👍 !
பிரமிளா அம்மா எனக்கு வயது 25 ஆனா உங்க அரங்கேற்றம் படம் என் மனதில் அவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியது, என்ன அருமையான நடிப்பு....எத்தனை சுத்தமான உச்சரிப்பு....அப்பப்பா லலிதா என்ற அந்த கதாபத்திரமாகவே வாழ்ந்துள்ளீர்கள், உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி, உங்கள் உடல் நிலை பத்திரமாக பார்த்துக்கொள்ளவும், நீங்கள் நல்ல ஆரோகியத்துடன் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவன் துணை இருப்பானாக. வணக்கம் 🙏🏻🙏🏻
Thanks to God..last week leave la family ரசிச்சு பாத்த படம் தங்கபதக்கம் அப்ப்பா இமயமலையிடமே மோதுகிற நடிப்பு..அப்பறம் அரங்கேற்றம் கோமாதா..வாழையடிவாழை..அழகும் நடிப்பும் துறுதுறுப்பும் எங்கயோ உங்களை தொலைத்து விட்டோமோ என்ற வருத்தமான சூழ்நிலையில் உங்கள் பேட்டி SO CUTE Mam❤ GOD BLESSINGS WILL SHOWER UPON YOU Mam ❤ Please come baby Mam ❤❤❤❤
பிரமிளா பேட்டி மனதை உருக்கிவிட்டது. பேட்டி எடுத்த ஆண்டனி சார் குரல் தமிழை அழுத்தம் திருத்தமாக பேசுவது அற்புதம்.. பிரமிளா வெளிப்படையாக மனம் திறந்து பேசுவதை கேட்க கேட்க ரொம்ப நன்றாக இருந்தது. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
பிரமிளா மேடம்.... ஒரு படம் தயாரிக்க முயன்ற போது - உதவி இயக்குனரான நான் அவர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது... நடிகை என்பதற்கு அப்பாற்பட்டு அவர் மிகவும் அன்பானவர். மற்றவர்களின் உணர்வு புரிந்து நடக்க கூடியவர். வாழ்க்கையில் மறக்க முடியாதவர். அவருக்கு எனது அன்பு கலந்த வணக்கம் !
மிக நல்லப்பதிவு.. கேள்வி கேட்ட விதமும், பதில் கூறிய விதமும் மிக அருமை. மேலும், நடிகர் முத்துராமன் அவர்களைப் பற்றிக் கூறியது மிகப் பெருமையாக உள்ளது. ஏன் என்றால் நடிகர் முத்துராமன் பிறந்த ஊர் எங்கள் ஊர் தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், ஒக்கநாடு மேலையூர் என்ற பெரிய கிராமம். அதனால் ஊர்காரரை பிறர் கூறும்போது பெருமையாக உள்ளது. ஒலிபரப்பிய சேனலுக்கு மிக்க நன்றி..
பிரிமிளா சகோதரி அவர்கள் நேரடியாக பேசியது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது அதுவேம் இவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு துயரங்கள் கடந்து வந்துள்ளனர் மறுபடியும் இவர் நடிக்கவந்தால் நான்றகா இருக்கும் இவரை நேரடியாக பேட்டி காண்டதற்க்கு உங்கள் டிவி எங்கள் நன்றிகள் 🙏🙏🙏
சிறப்பான பேட்டி எனக்கு மிகவும் பிடித்த நடிகை வீரமங்கையாக பல படங்களில் பிரமிளா அவர் திறமையை காட்டியிருப்பார். அதோடு பேட்டி எடுக்கும் உங்களை நேரில் பார்த்தது சந்தோசம் இன்னும் பல புதிய முயற்சிகளுக்கு நன்றி!
மிகவும் எதார்த்தமாக பேசுகிறார்...அரங்கேற்றம் படம் மறக்க முடியாத ஒன்று எனக்கு வயது 35 ஆனால் selected old movies பார்ப்பேன்..அரங்கேற்றம் படம் இப்போதும் நினைவில் வருகிறது... அற்புத நடிப்பு...அற்புதம்........ இங்கு படம் நடித்து...அதன் பின்பு வெளிநாடு அரசுப்பணி வாழ்க...வாழ்த்துக்கள்....மேடம்...மிக்க மகிழ்ச்சி..அமெரிக்காவில் போட்டி தேர்வெழுதி வென்று அரசு பணி செய்யும் அளவிற்கு கல்வியும் அதனுடன் முயற்சியும் அறிவும் உங்களின் கடின முயற்சிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நீங்கள் பலருக்கும் சிறப்பான முன் மாதிரி......
@@premela_schlacta Wow! Really that was your first flim .really really. You doesn't know mam what a diehard fan of that flim Iam mam. Every time I will watch in tv and youtube. Every scene Every dialogue I know from that flim. All person have lived in that flim .not acted. That's true. I have also commented in the interview of varalakshmi mam interview about that flim. All are talking about your second flim.but I have not seen it yet. Iam addicted to your first flim.though I have born in 90's
மிக நேர்த்தியா பேசறாங்க பிரமீளா. கேள்விகளும் நறுக்குத் தெறித்தாற்போல உள்ளன. முத்துராமன், சிவகுமார் இவர்களைப் பற்றி அவர்களின் ஒழுக்கத்தைப் பற்றி சிலாகித்து பேசுகிறார்.
ஆம் இவரது கண் அழகும்.. சிரிப்பழகும்... வள்ளி தெய்வானை படத்தில் வரும் பாடல் பூத்த இருந்து காத்திருந்தேன்.. பாடல் இன்று வரை என் யூ டியூப் லைக் கில் உள்ளது. Love ❤you Pramilamma🥰🥰🥰
உங்களுடைய அரங்கேற்றம் படம் பார்த்துவிட்டு வந்த என் என் அம்மாவை அம்மாவின் மாமா குடும்ப பொம்பளைகள் இந்த மாதிரி படம் பார்ப்பார்களா என்று திட்டினார். எனக்கு விவரம் தெரிந்து படம் பார்த்தபோது அந்தக் கேரக்டர் நடிப்பதற்கு அந்தக் காலத்தில் நிறைய தைரியம் வேண்டும் ஆராத அந்த கேரக்டரில் நடிக்கும் பொழுது நீங்கள் விவரம் தெரியாமல் தான் நடித்து இருப்பீர்கள் ஆனால் அந்த கதாபாத்திரம் குடும்பத்திற்காகதியாகம் செய்யும் கதாபாத்திரம் இப்பொழுதும் அந்த படம் எந்த சேனலில் போட்டாலும் நான் விரும்பி பார்ப்பேன் தங்கப் பதக்கமும் நல்ல கேரக்டர் உங்கள் பேட்டியை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி
அம்மா உங்கள் பேட்டி மிகவும் இயல்பாக இருந்தது.அமெரிக்காவில் நாற்பது வருடத்துக்கு மேல் ஆனாலும் தமிழிலேயே இயல்பான உரையாடல்.மனசும் ரொம்பவே அழகு நீங்கள் நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ வேண்டும் வாழ்க வளமுடன்
@@premela_schlactaYou've acted well in all movies. Arangetram was soooo touching. I watched it with my mom. My heart bled seeing your character and acting in that movie. It made quite an impact. Are you thinking about acting again? Why not pair up with Sivakumar and act as parents in movies?! We'd love to see you both together on screen!
Happy to see both Antony sir and Madam prameela, extraordinary acting in Vazhayadi வாழை,மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ் விலே முன்னேற்றம்,மறக்க முடியுமா அந்த பாடலை🎉🎉🎉🎉throwback song
சார்..உங்கள் குரலைக் கேட்டுக் கொண்டிருந்த நாங்கள் இந்த நிகழ்ச்சியின் வழியாக, உங்களையும் அம்மா பிரமிளா அவர்களையும் நேரில் பார்க்க முடிந்தது..மிக்க மகிழ்ச்சி..சந்தோஷம்🎉❤from🇲🇾
ரொம்ப நன்றாக இருந்தது உங்கள் குரல் மட்டும் கேட்டு இருந்த எங்களுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுத்துள்ளீர் பிரமிளா அவர்களை பார்த்தது மிகவும் சந்தோஷம் அய்யா...
அம்மா திருமதி பிரமிளா அவர்கள் அழகு திறமை துணிவு அனைத்தும் கொண்ட நடிகை. ஆனால் மிகவும் நல்ல கண்ணியமானவர்.மிகப்பெரும் டைரக்டர்கள் அவரை நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஒரு ஆச்சரியம்.எனவே அம்மா மீண்டும் தாங்கள் எப்படியாவது தமிழ்த்திரை யில் நடிக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.தாங்கள் நீண்ட ஆயுளையும் நிறைவான ஆரோக்கியமும் பெற்று விளங்கிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.நன்றி.
பிரமிளா ஒரு பிரமிப்பு. அதே குரல் இன்னும் மாறவில்லை. உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. அரங்கேற்றம் படத்தை யாரும் அழுது கண்ணீர் விடாமல் பார்த்ததாக சொன்னால் நான் நம்பமாட்டேன்.
பழைய நினைவுகள்.ஸ்ரீ பிரமிளா அவர்களின் பேட்டி மிக்க உணர்ச்சி பூர்வமான மகிழ்ச்சியாக உள்ளது.பழம்பெரும் குணச்சித்திர அருமையான நடிப்பு.எங்கிருந்தாலும் எங்கள் இதய சகோதரி வளமுடன் வாழ்க.சகோதரியின் பேட்டி மற்றும் முகத்தை பார்த்தது ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே.இந்த பேட்டியை எடுத்த சேனலுக்கு மனமார்ந்த நன்றிகள்.
வணக்கம் அம்மா நான் உங்கள் அரங்கேற்றம் படம் பார்த்து வியந்து போய்விட்டேன் அப்புறம் நீங்கள் நடித்த அனைத்து படங்களையும் தேடி தேடி பார்த்தேன் அருமை எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டீர்கள் நீங்கள் நலமுடன் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்
சூப்பர் sir நீங்கள். எத்தனையோ சினிமா பிரபலங்கள் பற்றிய சேனல் பதிவுகளை பார்த்து இருக்கிறோம். ஆனால் உங்கள் சேனலில் மட்டும்தான் ஆபாசம் இல்லா வார்த்தைகள், கேள்விகள், என்று சிறந்த பதிவுகளை தருகிறீர்கள். யாருடைய மனதையும் புண்படுத்தாத நீங்களும், உங்கள் குடும்பம் மற்றும் இந்த நேர்மையான உங்கள் சேனலும் வாழ்க பல்லாண்டு.
சூப்பர் சார்..... வாழையடி வாழை படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நடிகை..... மிகவும் மகிழ்ச்சி சார்.... நல் வாழ்த்துக்கள் இவ்வளவு நாட்கள் திரு ஆன்டனி சார் குரலை மட்டுமே கேட்டேன் இப்போது நண்பரையும் பார்த்தேன் நன்றி சார்
நான் என் சிறு வயது முதற்கொண்டு பழைய படங்கள் பார்க்கும் பழக்கம் உள்ளவன். இதில் பிரமிளா அம்மா நடித்த அநேக படங்களின் பார்த்து ரசித்திருக்கிறேன்.முத்துராமன் பிரமிளா அம்மா ஜோடி மிகவும் அருமையாக இருக்கும். இப்பொழுது தொடர்ந்து அவருடைய பேட்டியை பார்க்கும் பொழுது அவர் எவ்வளவு சிறப்பானவர் எவ்வளவு அன்பானவர் எவ்வளவு மரியாதை என்று பார்க்க பார்க்க மிகவும் மனதிற்கு சந்தோசமாக இருந்தது.இந்த பேட்டி முடியும் பொழுது ஏதோ இவர்களை விட்டு பிரிய போவதைப் போல மனதிற்கு ஒரு வழி ஏற்படுகிறது. மீண்டும் இவர்களை பார்க்க
அரங்கேற்றம் படத்தை இப்ப டிவி யில போட்டாலும் அந்த படத்தை தான் பார்ப்பேன்...😊 எனக்கு மிகவும் பிடித்த படம் அது.....பிரமிளா நடிப்பு அபாரம்.... இன்றும் மறக்க முடியாத படம்......
அழகென்றால் அப்படி ஒரு அழகு இந்த அம்மா. நடிப்பு சொல்லவே வேண்டாம். ஆனால் பரிமளிக்கவில்லை. சினி உலகத்தில் அரிய பொக்கிஷம் இந்த அம்மா. இனி ஒருவர் பிறக்க முடியாது. பதிவு அருமை. பார்த்தது பெரும் பாக்யம். குடும்ப கதை கேட்டால் கண்ணீர் வருகிறது. மருத்துவ குடும்பத்திற்கே இத்தனை வருமை கொடுமை.
உண்மை சிவக்குமார் சார் அவர்களை விமான நிலையத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. முன்பின் தெரியாத என்னுடன் அவ்வளவு பிரியமாக பேசினார். அவர் மனைவி உயரமாக கம்பீரமாக சிரித்த முகத்துடன் பேசினார். அருமையான தம்பதிகள்❤❤❤❤❤❤❤❤❤
அந்தக் காலத்தில் பார்த்த அரங்கேற்றம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் பிரமிளா அவர்களின் நடிப்பு இன்றும் கண் முன்னே இருக்கிறது அவர்கள் என்றும் வாழ்க இனிதாக.
Excellent pramila mam. Really you are so intelligent. Very happy to see you. After this interview only I saw arangetram movie. Really I cried to the core…hats off pramila mam… may god be with you always
இன்னும் நிறைய படங்களில் நடித்து நிறைய விருதுகள் பெற்றிருக்கவேண்டிவர் பிரமிளா அவர்கள்.அழுத்தமான சவால்கள் நிறைந்த ஒரு அரங்கேற்றம், ஜாம்பவான் களுடன்நடித்த தங்கப் பதக்கம் படங்கள் இவரது புகழைப் பேசிக்கொண்டே இருக்கும்.நேர்காணல் அருமை.
அம்மா ஆண்டவனின் தோட்டத்தில் பாட்டுக்கு நான் டிக்டாக்கில் வீடியோ போட்டேன் இன்னும் அந்த வீடியோ பாதுகாத்து வைத்து உள்ளேன் உங்கள் நடிப்பு அபாரம்@@premela_schlacta
அரங்கேற்றம் பிரமீளா இவங்களா ஆள் அடையாளமே தெரியல குரல் அப்படியே இருக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள பார்த்துல ரொம்ப சந்தோசம் அலட்டல் இல்லாமல் இயல்பாக பேசுகிறார் மிக்க நன்றி ஐயா பிரமீளா அவர்களை பேட்டி எடுத்ததற்கு❤❤❤❤
K.R Vijay போன்று தமிழ் சினிமாவில் நன்றாக வந்திருக்கிற வேண்டிய நடிகை அரங்கேற்றம் கதாபாத்திரம் எத்தனை கனமான பாத்திர படைப்பு , மற்ற நடிகைகள் நடிக்க மறுத்த character ஆனாள் இவர் அதை ஏற்று நடித்து நடிப்பில் முத்திரை பதித்தார் .. ஆகச் சிறந்த நடிகை என்பதே" மறந்த போச்சு , இல்லை மறத்து போச்சு .... நல்ல நடிகை ... என்ன செய்வது ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்கவில்லையோ ...
என்றும் கொண்டாடப்பட வேண்டிய தாரகை பிரமிளா அவர்கள்! Spell bound performance in arangetram n of course many other movies. Excellent acting! Thank you for the interview. Lady with guts in arangetram to மாமனார் முன்னர் பயந்தாங்கொள்ளி மருமகள் என பல அருமையான characters நடித்தவர்! Best wishes to her for a healthy n active years to come.
அரங்கேற்றம், தங்கப்பதக்கம். ஆஹா மறக்க முடியாத நடிப்பு. நீண்ட காலத்தின் பின்னர் கண்டது மகிழ்ச்சி. என்னமோ அமெரிக்காவில் சந்தோசமாக நலமாக இருந்தாலும் அந்த அரங்கேற்றம் பாத்திரம் தான் கண் முன் நிற்கிறது. வாழ்க நலமுடன். யாழில் இருந்து ஒரு தீவிர ரசிகன்
குழந்தை யிலே சிரிப்பது தான் இந்த சிரிப்பு ௮த குமரி பொண்ணு சிரிக்கும் போது ௭ன்ன வெருப்பு🎉🎉🎉இன்னும் மறக்கமுடியாத வரிகள் ௭னது தங்கை சரிபா பானு உங்களை போலவே இருக்கும்👍🎉🎉🎉
நான் மறுபடியும் இந்த பேட்டியை க் கண்டேன். மனம் மிகவும் துக்கத்தில் ஆழ்ந்து கண்களில் கண்ணீர் தளும்பியது. அவர்களின் காலத்தில் வீட்டில் நிறைய பிள்ளைகள் இருக்கும் அதில் ஒன்று பலிதான்.
என்னதான் புது நடிகர்கள் புதுமுகங்கள் எவ்வளவு பேட்டி கொடுத்தாலும் பழைய நடிகர்களின் பேட்டி மற்றும் உரையாடல் பார்க்கும் பொழுது அவர்களை மிகவும் பிடிக்கிறது இந்த ஏற்பாடு செய்த அனைவர்களுக்கும் நன்றி
நான்காவது படிக்கும்போது பார்த்த படம் ஆண்டவனின் தோட்டதிலே அழகு சிரிக்குது எண்ற பாடல் கடந்த 58 ஆண்டுகலாக அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்பது போல் தோண்றும் நண்றி சகோதரி
என்னோட ரசிக உறவுகள் அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்!
நான் உங்க பிரமீளா!
என்னோட பேட்டி ஒளிபரப்பான நியூஸ் மிக்ஸ் டிவியில, நீங்க எல்லாரும் பதிவிட்ட கமென்டஸ் எல்லாத்தையும் பார்த்தேன்!
ஆண்டவனே, நான் என்ன பண்றது - உங்க எல்லாருக்கும் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல!
ஏன்னா, கமென்ட்ஸ் எல்லாத்தையும் அவ்வளவு அழகழாக போட்டிருக்கீங்க!
என் மேல எப்படி - எதனால இவ்வளவு அன்பு வச்சுருக்கீங்க! அப்படி நான் என்ன பண்ணிட்டேன்?
இத்தன வருஷம் கழிச்சு என் மேல இவ்வளவு அன்பு வச்சுருக்கிற அன்பு உள்ளங்களாகிய உங்க எல்லாரையும் நெனச்சு, என் மனம் மகிழ்ச்சி கடல்ல மூழ்கி போயிடுச்சு!
எமோஷனாலா பேச தெரிஞ்ச எனக்கு, உங்க அளவுக்கு அழகழாக எழுத தெரியலைங்க!
நானும் என்னால முடிஞ்ச அளவுக்கு சிலருக்கு பதில் போட்டுருக்கேன்!
ஆனால், இவ்வளவு பேருக்கும் அதுபோல பதில் போடுறதுன்னா அது எப்படின்னு எனக்கு தெரியல!
உங்க எல்லோரையும் நேரில் பார்க்கனும், கை கொடுக்கனும், ஒரு தாயாக - சகோதரியாக - மகளாக ஆரத்தழுவி நன்றி சொல்லனும்னு எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு!
இத எழுதும்போதே என் கண்கள் தண்ணீர் குளமாகிவிட்டது!
கண்ணீருடன் நன்றியையும் சேர்த்தேதான் நான் எழுதுறேன்!
என் நடிப்ப மட்டும் பார்த்த நீங்க, உங்க வீட்டு பெண்ணா நெனச்சு அன்போட வரவேற்பையும் கொடுத்து கமென்ட்ஸ் பண்ணியிருக்கீங்க!
அத பார்த்து மெழுகுவர்த்தியவிட வேகமா நான் உருகி போனதோடு மட்டுமில்லாம, அழுகைதான் என் பதிலாவும் வந்துச்சு!
ஆரம்பத்துல நானும் ஒரு நடிகையா சினிமாவுல வந்துருக்கலாம்!
ஆனால், இப்ப நான் மிக சராசரியான சாதாரண பெண்தான்!
கணவர் - குடும்பம் - உறவுகள்னு வாழ்ந்துகிட்ட வந்தவதான்!
ஆனால், உங்க எல்லாருடைய அன்பு கமென்ட்ஸ் ஆனது, இத எல்லாம் அப்படியே திருப்பி போட்டுடுச்சு! எனக்குன்னு ஒரு மிகப் பெரிய ரசிக உறவுகள் உலகம் பூராவும் இருக்காங்கன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் சோர்ந்து போயிருந்த என் மனதுக்கு ஒரு பெரிய உற்சாகமே கிடைச்சுருக்கு!
தமிழகம் வந்தப்ப சிலர் மீண்டும் நடிக்கிறீங்களான்னு என்கிட்டே கேட்டாங்க! 45 வருஷமா குடும்பம் - அரசு வேலைன்னு என் காலத்த கழிச்சுட்டேன்! அதனால இப்ப நடிக்க முடியுமான்னு எனக்கு தெரியல?
மத்தவங்க கேட்கும்போதுதான், நான் ஒரு நடிகையா இருந்துருக்கேன் என்பது ஞாபகத்துக்கு வந்துவிட்டு போகுது!
மிகப் பெரிய இயக்குநர்கள் பலரும் சொல்லி கொடுத்ததை கிளிப்பிள்ளை மாதிரி நடிச்சுட்டுபோன எனக்கு, இப்ப அதுபோல நடிக்க முடியுமாங்றது சந்தேகம்தான்!
இப்ப நடிக்கிற பலரும் நேச்சுரலா நடிக்கிறாங்க - அவங்க அளவுக்கு நான் நடிக்க முடியுமாங்றது எனக்கு சுத்தமா தெரியலைங்க!
கவனம் எங்கேயோ போயிடுச்சு போல!
சரிங்க, உங்க பாசமிகு அரவணைப்புக்குள் மீண்டும் வர்றேன்!
தமிழகத்தவிட்டு பல்லாயிரம் கிலோமீட்டர் தள்ளி அமெரிக்காவுல, என் குடும்பம் - உறவுகள்னு நான் வாழ்ந்துகிட்டு வர்ற நிலையில, எனக்குன்னு அன்பு செலுத்துற - பாசத்த அள்ளி வீசுற ஒரு மாபெரும் ரசிக உறவு உள்ளங்கள் இருக்குறாங்கன்னு தெரிஞ்ச உடனேயே, என் சந்தேஷத்துக்கு அளவே இல்லைங்க! இமயத்தோட உச்சிய தொட்டது போல ஒரு பிரமிப்புதான் எனக்கு!
உங்க அனைவரோட பாசம் - அன்பு - வாழ்த்து மழையில நனஞ்சுபோன எனக்கு, ஒரு பெரிய தெம்பும் - தைரியமும் உருவாகி இருக்கு!
உங்க அன்புக்கு ஈடாக நான் என்ன சொல்றது - என்ன பண்றதுன்னே தெரியலைங்க! இருந்தாலும் உங்க எல்லார்கிட்டேயும், என்னோட இரு கரம் கூப்பி என் நன்றிய இதன் மூலம் தெரிவிச்சுக்கிறேன்!
நீங்களும் என்னோட நன்றிய கனிவோட ஏற்று கொள்வீங்கன்னு முழுமையா நம்புறேன்!
மீண்டும் ஒரு வாய்ப்ப இறைவன் எனக்கு கொடுத்தால் உங்க எல்லாரையும் நேரில் சந்திக்கிறேன்னு கூறி இப்போதைக்கு விடை பெறுகிறேன்!
இப்படிக்கு ,
என்றென்றும் உங்கள் அனைவருடைய பாச நினைவுகளில்!
உங்கள் பிரமீளா!
நன்றி!...
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தங்களின் பேரன்புமிக்க பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
Thank you madam god bless you always 🙏🙇
Thank you madam god bless you always
❤Mam i have seen Arangetram movie. One dialogue you say to kamal sir. That time you feel whole family ignored you except your mom. Now this interview made Pramila mam is very cool ,casual to talk.❤ God bless your simple nature mam. 🎉
Mam nanum trichy holy redemers la padichavathan. Unga junior than nan neenga cini field ku ponapa school ah avlo pecha irukum
வயசு ஆனாலும் குரல் அப்படித்தான் இருக்கு ங்க! நல்ல நடிகை 🙏🏻 கோடான கோடி நன்றி! அம்மா 🙏🏻
பழைய நடிகைகளை இந்த மாதிரி பேட்டி எடுக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு பிரமிளா ரொம்ப பிடிக்கும் எனக்கு ஆளே மாறி போயிட்டாங்க ரொம்ப நன்றி
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
❤❤பிரமிளாமேடம்ஹேர்ஸ்டைல்பழையமாதிரியேநேர்வாக்கு.எடுத்துதலைசீவிசடைபோடுங்கஅழகா.இருப்பிங்கநான்சொன்னதுததப்புன்னாமன்னிக்கனும்மேடம்
குடும்பத்துக்காக பிரமீளாமா செய்த தியாகம் நெகிழ்ச்சியாக உள்ளது.
நாற்பது ஆண்டுகளாக அமெரிக்காவில் இருந்தாலும் இன்னும் அட்சரம் பிசகாமல் தமிழில் பேசுவது அழகு.வாழ்த்துகள் அம்மா
Thank you so much
À😊😊@@rcorrektvisvanathan4581
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅@@premela_schlacta
@@premela_schlacta9o0
@@rcorrektvisvanathan4581 இந்த மாதிரி சொல்லாதீர்கள். குடும்பத்தோடு தற்கொலைக்கு போனவர்களை கடவுள் பிரமீளா அம்மா மூலம் அந்த குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்று தான் வாசல் கதவை தட்டி சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளது. பிரமீளா நடிக்க வந்த பிறகு தான் அந்த குடும்பம் கொஞ்சம் நிமிர்ந்தது. நடிகைகள் வாழ்க்கை பெரிய போராட்டம் நிறைந்தது. அவர்கள் மனம் புண்படுத்தகூடிய வார்த்தைகளை பேசவேண்டாம்..
வெடிச்சிரிப்பால் வியக்க வைத்த நடிப்பு ! "தெய்வமே கலங்கி நின்னா அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும் ?" சோக வசனம் மறக்க முடியா நடிப்பிலும் வியக்க வைத்தவர் ! நிறைவான நேர்காணல் ! Nes mix tv இன் வித்தியாச முயற்சி👍 !
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
எத்தனை படம் நடித்தார் என்பது முக்கியமல்ல அரங்கேற்றம் ஒரு படமே ஆயிரம் படத்துக்கு சமம் 🌹🙏 பிரமிளா பேரே அபூர்வம் ❤️
❤❤
Super Madam , we like your good nature
பிரமிளா அம்மா எனக்கு வயது 25 ஆனா உங்க அரங்கேற்றம் படம் என் மனதில் அவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியது, என்ன அருமையான நடிப்பு....எத்தனை சுத்தமான உச்சரிப்பு....அப்பப்பா லலிதா என்ற அந்த கதாபத்திரமாகவே வாழ்ந்துள்ளீர்கள், உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி, உங்கள் உடல் நிலை பத்திரமாக பார்த்துக்கொள்ளவும், நீங்கள் நல்ல ஆரோகியத்துடன் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவன் துணை இருப்பானாக. வணக்கம் 🙏🏻🙏🏻
லவ் யூ அம்மா
Thanks to God..last week leave la family ரசிச்சு பாத்த படம் தங்கபதக்கம் அப்ப்பா இமயமலையிடமே மோதுகிற நடிப்பு..அப்பறம் அரங்கேற்றம் கோமாதா..வாழையடிவாழை..அழகும் நடிப்பும் துறுதுறுப்பும் எங்கயோ உங்களை தொலைத்து விட்டோமோ என்ற வருத்தமான சூழ்நிலையில் உங்கள் பேட்டி
SO CUTE Mam❤ GOD BLESSINGS WILL SHOWER UPON YOU Mam ❤
Please come baby Mam ❤❤❤❤
பிரமிளா பேட்டி மனதை உருக்கிவிட்டது. பேட்டி எடுத்த ஆண்டனி சார் குரல் தமிழை அழுத்தம் திருத்தமாக பேசுவது அற்புதம்.. பிரமிளா வெளிப்படையாக மனம் திறந்து பேசுவதை கேட்க கேட்க ரொம்ப நன்றாக இருந்தது. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் பல!...
Thank you so much 😘
Mama , kaajipone Bhoomi ellam .....
Really she is great for her open talk
Really very great ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
பாராட்ட வேண்டும் பிரமீளா அவர்களை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரனின் பதிவு ❤
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@@Newsmixtv தனித்துவம் மிக்க உங்கள் செயல்பாடுகள் மிகவும் அருமை பிரேம நாதன் கோயம்புத்தூர்
மீண்டும் பிரமீளா...ரொம்பவே அழகு இவங்க. பேட்டி கண்டதும் சந்தோஷமாய்ட்டேன். நன்றி
Thank you, umaa.❤
இன்றும் அரங்கேற்றம் படத்தில் பிரமிளா மேடத்தின் நடிப்பை பார்த்து அழுது விடுவேன் குறிப்பாக கிளைமாக்ஸ் சீன்... HATS TO KB சார் & பிரமிளா மேடம் 🎉🎉🎉
பாலச்சந்தர். தட்டிவிட்டுதான்வாய்பேகொடுத்திருப்பான்..
அழகான நடிப்பு
பிரமிளா மேடம்....
ஒரு படம் தயாரிக்க முயன்ற போது - உதவி இயக்குனரான நான் அவர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது... நடிகை என்பதற்கு அப்பாற்பட்டு அவர் மிகவும் அன்பானவர். மற்றவர்களின் உணர்வு புரிந்து நடக்க கூடியவர். வாழ்க்கையில் மறக்க முடியாதவர். அவருக்கு எனது அன்பு கலந்த வணக்கம் !
Thank you so much for your kind words.
@@premela_schlacta i was born at her house
அய்யா தற்போது என்ன செய்கரீர்
மிக நல்லப்பதிவு..
கேள்வி கேட்ட விதமும், பதில் கூறிய விதமும் மிக அருமை.
மேலும், நடிகர் முத்துராமன் அவர்களைப் பற்றிக் கூறியது மிகப் பெருமையாக
உள்ளது.
ஏன் என்றால் நடிகர் முத்துராமன் பிறந்த ஊர் எங்கள் ஊர் தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு வட்டம்,
ஒக்கநாடு மேலையூர்
என்ற பெரிய கிராமம்.
அதனால் ஊர்காரரை பிறர் கூறும்போது பெருமையாக உள்ளது.
ஒலிபரப்பிய சேனலுக்கு மிக்க நன்றி..
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
பிரிமிளா சகோதரி அவர்கள் நேரடியாக பேசியது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது அதுவேம் இவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு துயரங்கள் கடந்து வந்துள்ளனர் மறுபடியும் இவர் நடிக்கவந்தால் நான்றகா இருக்கும் இவரை நேரடியாக பேட்டி காண்டதற்க்கு உங்கள் டிவி எங்கள் நன்றிகள் 🙏🙏🙏
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
சிறப்பான பேட்டி எனக்கு மிகவும் பிடித்த நடிகை வீரமங்கையாக பல படங்களில் பிரமிளா அவர் திறமையை காட்டியிருப்பார். அதோடு பேட்டி எடுக்கும் உங்களை நேரில் பார்த்தது சந்தோசம் இன்னும் பல புதிய முயற்சிகளுக்கு நன்றி!
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
அரங்கேற்றம் படத்தில் அருமையாக நடித்திருப்பார். தன்னடக்கம் மிகுந்த நடிகை
உண்மை
பிரமிளா அம்மா ,சினிமாவுக்கு வரும்முன் நீங்க குடும்ப சூழ்நிலை சொன்னது.என்னை வேதனை படுத்திவிட்டது.எங்க இருந்தாலும் தமிழ் பொண்ணு ,தமிழ் பொண்ணுதான்.வாழ்க.
பேட்டி முழுவதும் பார்த்தேன்..பிரமிளா அழகாக பேசுகிறார் 🎉
True
மிகவும் எதார்த்தமாக பேசுகிறார்...அரங்கேற்றம் படம் மறக்க முடியாத ஒன்று எனக்கு வயது 35 ஆனால் selected old movies பார்ப்பேன்..அரங்கேற்றம் படம் இப்போதும் நினைவில் வருகிறது... அற்புத நடிப்பு...அற்புதம்........
இங்கு படம் நடித்து...அதன் பின்பு வெளிநாடு அரசுப்பணி
வாழ்க...வாழ்த்துக்கள்....மேடம்...மிக்க மகிழ்ச்சி..அமெரிக்காவில் போட்டி தேர்வெழுதி வென்று அரசு பணி செய்யும் அளவிற்கு கல்வியும் அதனுடன் முயற்சியும் அறிவும் உங்களின் கடின முயற்சிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நீங்கள் பலருக்கும் சிறப்பான முன் மாதிரி......
அருமையான நேர்காணல் வாழையடி வாழை அரங்கேற்றம் பாடத்தில் பிரமிளா அம்மா நடிப்பு மிகவும் அருமை அருமை உங்களை பார்த்தது மிகவும் மகிழ்ச்சி 🙏🏻🙏🏻
வாழையடி வாழை
படத்தில் பிரமிளா அவர்கள் நடிப்பு
அற்புதமாகயிருக்கும்.
Thank you so much but Credit goes to my Director k.s. Gopalakrisnàn.
Gilli padam paru vijy
Valayadi valai nalla irukuma na🤔
@@premela_schlacta
Wow! Really that was your first flim .really really.
You doesn't know mam what a diehard fan of that flim Iam mam.
Every time I will watch in tv and youtube.
Every scene Every dialogue I know from that flim.
All person have lived in that flim .not acted. That's true.
I have also commented in the interview of varalakshmi mam interview about that flim.
All are talking about your second flim.but I have not seen it yet.
Iam addicted to your first flim.though I have born in 90's
@@premela_schlactamam...ur acting in vazayadi vazai...so super...I lik ur acting mam....my mom is ur biggest fan❤
மிக நேர்த்தியா பேசறாங்க பிரமீளா. கேள்விகளும் நறுக்குத் தெறித்தாற்போல உள்ளன. முத்துராமன், சிவகுமார் இவர்களைப் பற்றி அவர்களின் ஒழுக்கத்தைப் பற்றி சிலாகித்து பேசுகிறார்.
திறமையான நடிகை. அரங்கேற்றம் வாழ்கையில் மறக்கமுடியாத சிறந்த திறைபடம். அவர்களை பாராட்டுகிறேன்.
உங்கள் குரலை மட்டும் கேட்டு கொண்டு இருந்த நாங்கள் இப்போது உங்கள் முகத்தையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அம்மாவின் உரையாடல் மிக நன்று
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் பல!...
Super my fevarat actors
ஆம் இவரது கண் அழகும்.. சிரிப்பழகும்... வள்ளி தெய்வானை படத்தில் வரும் பாடல் பூத்த இருந்து காத்திருந்தேன்.. பாடல் இன்று வரை என் யூ டியூப் லைக் கில் உள்ளது. Love ❤you Pramilamma🥰🥰🥰
J@@nishaabiramalingam8401
உங்களுடைய அரங்கேற்றம் படம் பார்த்துவிட்டு வந்த என் என் அம்மாவை அம்மாவின் மாமா குடும்ப பொம்பளைகள் இந்த மாதிரி படம் பார்ப்பார்களா என்று திட்டினார். எனக்கு விவரம் தெரிந்து படம் பார்த்தபோது அந்தக் கேரக்டர் நடிப்பதற்கு அந்தக் காலத்தில் நிறைய தைரியம் வேண்டும் ஆராத அந்த கேரக்டரில் நடிக்கும் பொழுது நீங்கள் விவரம் தெரியாமல் தான் நடித்து இருப்பீர்கள் ஆனால் அந்த கதாபாத்திரம் குடும்பத்திற்காகதியாகம் செய்யும் கதாபாத்திரம் இப்பொழுதும் அந்த படம் எந்த சேனலில் போட்டாலும் நான் விரும்பி பார்ப்பேன் தங்கப் பதக்கமும் நல்ல கேரக்டர் உங்கள் பேட்டியை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி
Thank you so much
Enakku antha padam rompa pathitha padam
நான் அந்த படம் பார்த்து அழுது விட்டேன் அபார நடிப்பு
@@premela_schlactahi madam
அருமையான நேர் காணல் .திருமதி பிரமிளா அவர்களின் இயல்பான பேச்சில் போலித்தனம் என்பதே இல்லை.அவருக்கு என் வாழ்த்துக்கள்
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
70 களில் காஞ்சி காமாட்சி ,வருவான் வடிவேலன் போன்ற பக்தி படங்களில் நடித்த பேபி சுதா பற்றி காணொளி பதிவிட வேண்டுகிறேன்
இருவரையும் நேரில் பார்த்த மாதிரியான சந்தோஷம்.நன்றி.
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
அருமையான நமது சுத்த தமிழில் பேசுவது பெருமையாகவும் சந்தோசமாக வும் இருக்கிறது. இப்போ போய் அங்கே settle ஆனவர்கள் வேரமதிரி style ஆக பேசுகிறார்கள்........
அருமையான நடிகை, 1960 kid's
like her acting ❤..
மிக நல்ல நேர்காணல் நெறியாளர் அவர்களும் குறுக்கே குறுக்கே பேசாமல் நிதானமாக நல்ல கேள்விகள் நல்ல பதில்கள் பிரமிளா அவர்கள் வாழ்த்துகள் இருவருக்கும்
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
அந்த வசனம் "ஆம்பளைங்களே மரத்து போச்சு". "அக்கா என்ன சொல்லரே", "ஆம்பளை என்பதே மறந்து போச்சு". அருமையான வசனம்.
ஆம்பளைங்களே மறந்து போச்சு இல்லை.ஆம்பிளைங்கறதே மறந்து போச்சு.
சூப்பர் இது மாதிரி தேடி தேடி பழைய கலைஞர்கள் பேட்டி கொடுக்க வேண்டும் நன்றி
Great Sir
@@comewelcome😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Dl
7:09 ❤😂🎉😢😮
@@comewelcome❤❤❤❤❤❤❤❤
Ya old is gold🙏
மிக்க நன்றி சார்... எனக்கு வயது 35 தான் எனக்கு பழைய படங்கள்தான் பிடிக்கும்...
அம்மா உங்கள் பேட்டி மிகவும் இயல்பாக இருந்தது.அமெரிக்காவில் நாற்பது வருடத்துக்கு மேல் ஆனாலும் தமிழிலேயே இயல்பான உரையாடல்.மனசும் ரொம்பவே அழகு நீங்கள் நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ வேண்டும் வாழ்க வளமுடன்
சார் உங்க குரலை மட்டும் கேட்டேன். அருமையான குரல் வளம் . உங்களை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
எத்தனையோ வருடங்களுக்கு பிறகு இப்போது பார்க்கிறோம்...அந்த கால படங்களின் நினைவில்.....
பேசும் விதம் ரொம்ப அழகு. அழகான உச்சரிப்பு
அதே கணீர் குரல் அன்றைக்கு குரல் டயலாக் இப்போதும் மாறாமல் இருக்கிறது.ஆச்சரியமாக உள்ளது.உங்களை கோமாதா குளமாதா மறக்க முடியாத படம் எனக்கு.வாழ்த்துகள்.
Thank you so much
@@premela_schlactaYou've acted well in all movies. Arangetram was soooo touching. I watched it with my mom. My heart bled seeing your character and acting in that movie. It made quite an impact. Are you thinking about acting again? Why not pair up with Sivakumar and act as parents in movies?! We'd love to see you both together on screen!
குலமாதா.
வாழையடி வாழை திரைப்படத்தில் இவரின் நடிப்பும் அழகும் எனக்கு மிகவும் பிடிக்கும் ❤
Thank you so much 💓
பிரமீளா அம்மாவின் குடும்பம் சூப்பர். பிரமீளா அம்மாவின் ஆர்வத்தால் உங்களின் முகத்தைபார்க்கும் பாக்கியம் கிடைத்தது எங்களுக்கு. மகிழ்ச்சி.
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
Wow.. Prameela madam interview very natural.. No artificial
Happy to see both Antony sir and Madam prameela, extraordinary acting in Vazhayadi வாழை,மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ் விலே முன்னேற்றம்,மறக்க முடியுமா அந்த பாடலை🎉🎉🎉🎉throwback song
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
சார்..உங்கள் குரலைக் கேட்டுக் கொண்டிருந்த நாங்கள் இந்த நிகழ்ச்சியின் வழியாக, உங்களையும் அம்மா பிரமிளா அவர்களையும் நேரில் பார்க்க முடிந்தது..மிக்க மகிழ்ச்சி..சந்தோஷம்🎉❤from🇲🇾
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@@Newsmixtv 🙏🙏🙏
மிகச் சிறப்பான நேர்க்காணல்.
அந்தக் கால அழகிய நடிகை பிரமிளாவின்
பேச்சு சூப்பர்.
ஆண்டவனின் தோட்டத்திலே அழகு
சிரிக்குது.
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
பிரமீளா is an actress who was brillant in vilain or heroin roles...!!!hats to you...!!! and Nandry ஐயா, அருமையான பதிவு போட்டதுக்கு
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
ரொம்ப நன்றாக இருந்தது உங்கள் குரல் மட்டும் கேட்டு இருந்த எங்களுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுத்துள்ளீர் பிரமிளா அவர்களை பார்த்தது மிகவும் சந்தோஷம் அய்யா...
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
பிரமிளா அவர்களின் நேர்காணல் மன மகிழ்வு. அதே போல் இதுவரை குரல் மட்டும் தந்து கொண்டிருந்த திரு அந்தோணி அவர்களின் முகம் கண்டதிலும் மகிழ்வே
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
நெகிழ்வான உரையாடல் ,பல கசப்பான அனுபவம் இதெல்லாம் எதுவுமே வெளிக்காட்டாமல் பிரமிளா உரையாடல் சிறப்பு 🎉
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
🙏🥰🙏
ரொம்ப ரொம்ப எனக்கு பிடித்த நடிகை...
நல்ல பெண்மனியாக உள்ளார் குழந்தை உள்ளம் அற்புதமான தமிழ் உச்சரிப்பு அமெரிக்காவில் 40 ஆண்டுகள்கள் வாழ்ந்தாலும் ஆங்கில கலப்பு இல்லாமல் பந்தா இல்லாத நடிகை
Thank you , thank you ❤
உருவம் மாறினாலும் குரல் மாறாமல் அப்படியே உள்ளது
தமிழும் அழகாக இருக்கிறது. வாழ்க வளமுடன் பிரமிளா மேடம். Love you very much. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
பிரமிளா நான் உங்கக்கூடதான் படித்தேன்ஹோலி ரெடிமர்ஸ்ஸில் தான் படித்தேன்
அம்மா திருமதி பிரமிளா அவர்கள் அழகு திறமை துணிவு அனைத்தும் கொண்ட நடிகை. ஆனால் மிகவும் நல்ல கண்ணியமானவர்.மிகப்பெரும் டைரக்டர்கள் அவரை நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஒரு ஆச்சரியம்.எனவே அம்மா மீண்டும் தாங்கள் எப்படியாவது தமிழ்த்திரை யில் நடிக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.தாங்கள் நீண்ட ஆயுளையும் நிறைவான ஆரோக்கியமும் பெற்று விளங்கிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.நன்றி.
தொகுப்பாளர் மிகவும் அழகாக கேள்வி கேட்டதற்கு அழகான உண்மையான பதில்கள் அருமை🎉🎉🎉🎉🎉
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
பிரமிளா ஒரு பிரமிப்பு.
அதே குரல் இன்னும் மாறவில்லை. உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.
அரங்கேற்றம் படத்தை யாரும் அழுது கண்ணீர் விடாமல் பார்த்ததாக சொன்னால் நான் நம்பமாட்டேன்.
நாற்பது வருடங்களாக அமெரிக்கா வில் இருந்தாலும் தமிழை மறக்காமல் அலட்டாப்ஸ் தமிழில் பேசாமல் அழகான தமிழில் பேசுகிறீர்கள்.வாழ்துகள்.
Eppadi thaimozhi marakka mudiyum?
Unmai
பழைய நினைவுகள்.ஸ்ரீ பிரமிளா அவர்களின் பேட்டி மிக்க உணர்ச்சி பூர்வமான மகிழ்ச்சியாக உள்ளது.பழம்பெரும் குணச்சித்திர அருமையான நடிப்பு.எங்கிருந்தாலும் எங்கள் இதய சகோதரி வளமுடன் வாழ்க.சகோதரியின் பேட்டி மற்றும் முகத்தை பார்த்தது ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே.இந்த பேட்டியை எடுத்த சேனலுக்கு மனமார்ந்த நன்றிகள்.
வணக்கம் அம்மா நான் உங்கள் அரங்கேற்றம் படம் பார்த்து வியந்து போய்விட்டேன் அப்புறம் நீங்கள் நடித்த அனைத்து படங்களையும் தேடி தேடி பார்த்தேன் அருமை எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டீர்கள் நீங்கள் நலமுடன் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்
இருவரையும் பார்த்த மிக்க நன்றி. Very happy today.
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
சூப்பர் sir நீங்கள்.
எத்தனையோ சினிமா பிரபலங்கள் பற்றிய சேனல் பதிவுகளை பார்த்து இருக்கிறோம். ஆனால் உங்கள் சேனலில் மட்டும்தான் ஆபாசம் இல்லா வார்த்தைகள், கேள்விகள், என்று சிறந்த பதிவுகளை தருகிறீர்கள். யாருடைய மனதையும் புண்படுத்தாத நீங்களும், உங்கள் குடும்பம் மற்றும் இந்த நேர்மையான உங்கள் சேனலும் வாழ்க பல்லாண்டு.
தங்களின் பேரன்புமிக்க பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
அருமையான நடிகை. அம்மா மீண்டும் திரையில் பார்க்க வேண்டும்.
🥰🙏🤗
சூப்பர் சார்..... வாழையடி வாழை படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நடிகை..... மிகவும் மகிழ்ச்சி சார்.... நல் வாழ்த்துக்கள் இவ்வளவு நாட்கள் திரு ஆன்டனி சார் குரலை மட்டுமே கேட்டேன் இப்போது நண்பரையும் பார்த்தேன் நன்றி சார்
தங்களின் பேரன்புமிக்க ஆதரவு பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
உங்கள் கம்பீரமான குரலுக்காகவும் தனித்துவமான படைப்புகளுக்காகவும் ..... அருமையான பதிவு 🎉❤
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
நான் என் சிறு வயது முதற்கொண்டு பழைய படங்கள் பார்க்கும் பழக்கம் உள்ளவன். இதில் பிரமிளா அம்மா நடித்த அநேக படங்களின் பார்த்து ரசித்திருக்கிறேன்.முத்துராமன் பிரமிளா அம்மா ஜோடி மிகவும் அருமையாக இருக்கும். இப்பொழுது தொடர்ந்து அவருடைய பேட்டியை பார்க்கும் பொழுது அவர் எவ்வளவு சிறப்பானவர் எவ்வளவு அன்பானவர் எவ்வளவு மரியாதை என்று பார்க்க பார்க்க மிகவும் மனதிற்கு சந்தோசமாக இருந்தது.இந்த பேட்டி முடியும் பொழுது ஏதோ இவர்களை விட்டு பிரிய போவதைப் போல மனதிற்கு ஒரு வழி ஏற்படுகிறது. மீண்டும் இவர்களை பார்க்க
நான் உங்கள் ரசிகை. உங்கள் படங்களை இப்போது you tube மூலம் தொடர்ந்து பார்த்து வருகிறேன். அற்புதமான நடிப்பு.உங்கள் பயணம் தொடரட்டும் 🎉
வாழ்த்துகள் பிரமிளாம்மா. இன்றும் தங்களுடைய ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது பாடலை ரசித்து பார்ப்பேன்
அரங்கேற்றம் படத்தை இப்ப டிவி யில போட்டாலும் அந்த படத்தை தான் பார்ப்பேன்...😊 எனக்கு மிகவும் பிடித்த படம் அது.....பிரமிளா நடிப்பு அபாரம்.... இன்றும் மறக்க முடியாத படம்......
அழகென்றால் அப்படி ஒரு அழகு இந்த அம்மா. நடிப்பு சொல்லவே வேண்டாம். ஆனால் பரிமளிக்கவில்லை. சினி உலகத்தில் அரிய பொக்கிஷம் இந்த அம்மா. இனி ஒருவர் பிறக்க முடியாது. பதிவு அருமை. பார்த்தது பெரும் பாக்யம். குடும்ப கதை கேட்டால் கண்ணீர் வருகிறது. மருத்துவ குடும்பத்திற்கே இத்தனை வருமை கொடுமை.
அருமை . இத்தனை வருடம் சென்று உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி. இதே மகிழ்வோடு நீண்டு வாழனும்❤💐
உண்மை சிவக்குமார் சார் அவர்களை விமான நிலையத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. முன்பின் தெரியாத என்னுடன் அவ்வளவு பிரியமாக பேசினார். அவர் மனைவி உயரமாக கம்பீரமாக சிரித்த முகத்துடன் பேசினார். அருமையான தம்பதிகள்❤❤❤❤❤❤❤❤❤
Pramela mam is a born actress
Her acting in many of her movies was top notch
Recently I watched Thai Pasam. Her combination with Sivakuamar was good.
Thank 😂 so much 🙏
அந்தக் காலத்தில் பார்த்த அரங்கேற்றம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் பிரமிளா அவர்களின் நடிப்பு இன்றும் கண் முன்னே இருக்கிறது அவர்கள் என்றும் வாழ்க இனிதாக.
Excellent pramila mam. Really you are so intelligent. Very happy to see you. After this interview only I saw arangetram movie. Really I cried to the core…hats off pramila mam… may god be with you always
பிரமிளா அவர்களை யாராலும் மறக்க முடியாது. அரங்கேற்றம் பாத்திரத்தில் அவர் நடிக்க ஒத்துக்கொண்டதே அவரது நிஜவாழ்க்கை தியாகம் ஆகும்.
ஆண்டவனின் தோட்டத்திலே …என்ற அந்தப் பாடலில் அனாயாசமாக பாடும் பாடல் மிக சிறப்பு ……! நன்றி …!
பிரமிளா மேடமின் தமிழ் உச்சரிப்பும். பேச்சும் அழகோ அழகு.
மிகவும் எளிமையாக பேசுகிறார்.. உங்களை பார்த்தது மிகவும் மகிழ்ச்சி❤
Very simple person down to earth. Very honest in her speech. Beautiful Tamil accent. May God give her good health 🙏
ஆண்டவனின்தோட்டத்திலே அழகு சிரிக்குது..
Thank you so much
இன்னும் நிறைய படங்களில் நடித்து நிறைய விருதுகள் பெற்றிருக்கவேண்டிவர் பிரமிளா அவர்கள்.அழுத்தமான சவால்கள் நிறைந்த ஒரு அரங்கேற்றம், ஜாம்பவான் களுடன்நடித்த தங்கப் பதக்கம் படங்கள் இவரது புகழைப் பேசிக்கொண்டே
இருக்கும்.நேர்காணல்
அருமை.
அம்மா ஆண்டவனின் தோட்டத்தில் பாட்டுக்கு நான் டிக்டாக்கில் வீடியோ போட்டேன் இன்னும் அந்த வீடியோ பாதுகாத்து வைத்து உள்ளேன் உங்கள் நடிப்பு அபாரம்@@premela_schlacta
அரங்கேற்றம் பிரமீளா இவங்களா ஆள் அடையாளமே தெரியல குரல் அப்படியே இருக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள பார்த்துல ரொம்ப சந்தோசம் அலட்டல் இல்லாமல் இயல்பாக பேசுகிறார் மிக்க நன்றி ஐயா பிரமீளா அவர்களை பேட்டி எடுத்ததற்கு❤❤❤❤
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
K.R Vijay போன்று தமிழ் சினிமாவில் நன்றாக வந்திருக்கிற வேண்டிய நடிகை அரங்கேற்றம் கதாபாத்திரம் எத்தனை கனமான பாத்திர படைப்பு , மற்ற நடிகைகள் நடிக்க மறுத்த character ஆனாள் இவர் அதை ஏற்று நடித்து நடிப்பில் முத்திரை பதித்தார் .. ஆகச் சிறந்த நடிகை என்பதே" மறந்த போச்சு , இல்லை மறத்து போச்சு .... நல்ல நடிகை ... என்ன செய்வது ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்கவில்லையோ ...
என்றும் கொண்டாடப்பட வேண்டிய தாரகை பிரமிளா அவர்கள்! Spell bound performance in arangetram n of course many other movies. Excellent acting! Thank you for the interview.
Lady with guts in arangetram to மாமனார் முன்னர் பயந்தாங்கொள்ளி மருமகள் என பல அருமையான characters நடித்தவர்! Best wishes to her for a healthy n active years to come.
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
அரங்கேற்றம், தங்கப்பதக்கம். ஆஹா மறக்க முடியாத நடிப்பு. நீண்ட காலத்தின் பின்னர் கண்டது மகிழ்ச்சி. என்னமோ அமெரிக்காவில் சந்தோசமாக நலமாக இருந்தாலும் அந்த அரங்கேற்றம் பாத்திரம் தான் கண் முன் நிற்கிறது. வாழ்க நலமுடன். யாழில் இருந்து ஒரு தீவிர ரசிகன்
குழந்தை யிலே சிரிப்பது தான் இந்த சிரிப்பு ௮த குமரி பொண்ணு சிரிக்கும் போது ௭ன்ன வெருப்பு🎉🎉🎉இன்னும் மறக்கமுடியாத வரிகள் ௭னது தங்கை சரிபா பானு உங்களை போலவே இருக்கும்👍🎉🎉🎉
அண்ணே இன்னைக்கு உங்கள பாத்ததில் ரொம்ப மகிழ்ச்சி 🙏🙏🙏
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
அதே சிரிப்பு. அதே கணீர் குரல்.
ஆத்மார்த்தமான அன்பு கலந்த பேட்டி.
அன்பு அக்கா பிரமீளா நீங்கள் நோ யின்றி நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏
பிரமிளாவின் முகத்தையும், தங்கள் முகத்தையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@@Newsmixtvnan ungalai parkanumnu ketirundhen sir
@Myv3425 தங்களின் பேரன்புமிக்க பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
"ஆம்பளைங்கள்ள நல்லவங்களே இல்லையா" அந்த நடிப்பும் வசனமும் அரங்கேற்றம் திரைப்படத்தை பார்த்த போது பார்த்தவர்களின் மனதை உலுக்கிய காட்சி.
Jayachitra amma polave thudukkana vedam,thullal nadippu , thelivana vasana ucharippu.. maruppatha katha paathirangal..sernthathu than pramilla amma...nenda ayyilodu nimathiyana vaalvu vaala iravanidam prathithu kolgiren 🙏❤️
News mix tv kkum nandrigal Pala...
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
நான் மறுபடியும் இந்த பேட்டியை க் கண்டேன். மனம் மிகவும் துக்கத்தில் ஆழ்ந்து கண்களில் கண்ணீர் தளும்பியது. அவர்களின் காலத்தில் வீட்டில் நிறைய பிள்ளைகள் இருக்கும் அதில் ஒன்று பலிதான்.
It's ok, dear ❤
@@premela_schlactalove you amma
வணக்கம் பிரமிப்பாயிருக்கிறது அருமையான துரு துருவனான நடிப்பில் இருப்பார் நேரில் பார்த்தா வித்தியாசம் இருக்கிறார்கள் நன்றி அவர்களை நேரில் காண்பதற்கு நன்றி நியூஸ் மிக்ஸ் டிவி சேனலுக்கு 😊🌹🙏
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
அருமையான பதிவு
மலரும் நினைவுகள்
வாழ்த்துக்கள்
👍உங்களை 💕நேரில் பார்த்தது ரொம்ப சந்தோசமா இருக்கு சார் 💞🦋
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
அரங்கேற்றம் படத்தில்அருமையான நடிப்பு மிக்க நன்றி❤❤❤
அருமையான பதிவு போட்டதுக்கு மிக்க நன்றி ஐயா இந்த பதிவில் உங்களை பார்த்தில் மிக்க மகிழ்ச்சி ஐயா 🎉
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் பல!...
பலசை மறக்காம பேசுறது சூப்பர் மேடம் ❤
என்னதான் புது நடிகர்கள் புதுமுகங்கள் எவ்வளவு பேட்டி கொடுத்தாலும் பழைய நடிகர்களின் பேட்டி மற்றும் உரையாடல் பார்க்கும் பொழுது அவர்களை மிகவும் பிடிக்கிறது இந்த ஏற்பாடு செய்த அனைவர்களுக்கும் நன்றி
நான்காவது படிக்கும்போது பார்த்த படம் ஆண்டவனின் தோட்டதிலே அழகு சிரிக்குது எண்ற பாடல் கடந்த 58 ஆண்டுகலாக அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்பது போல் தோண்றும் நண்றி சகோதரி
சினிமாவில் பிரமீளா அம்மா அவர்களின் ஷார்ட் லெங்த் அசைந்தாடும் வேகமான நடை அக்கால ரசிகரான எனக்கு மிகவும் பிடித்தது.
Very talented lady... The TV should utilise her ....🎉
How humble she is.