அறனுக்கு அரணாய் முரணுக்கு முரணாய் ஆருக்குமஞ்சானவன்
Вставка
- Опубліковано 4 лис 2024
- அறனுக்கு அரணாய் முரணுக்கு முரணாய் ஆருக்குமஞ்சானவன் ஆல்லிப்பெருவிரல் வலதெம் அன்னை நிலம் நோக்க அகத்தலம் நோக்கின் முன்னழகு முகத்தோற்றத்தொடு முறக்காதுடன் இருகோடுடை எழில் களபமங்கு செங்குத்து பாகையில் சரிபாதி சாய்வினில் அங்குற்று அடியேன் கண்பறிக்குமே. மூவருள் இருளன் விரல் சுழற்றும் எழிற் சங்குடன் அங்கயற்கண்ணிணைந்து ஆனையாகுமதன் அல்லியங்குலி (அல்லி +அங்குலி)
அவன் பெருவிரல் அடுத்து பிறைபோல் வளைந்து அருநிலம் நோக்கியே அருவியாய் விழும் அவ்வாம்பல் நிறத்து ஐயன் கைத்தலம் வலதுள் அது அறிவின் வேர் நட்டு அரும்பொன்னூல் தொட்டு ஆயுள் வேர் விட்டு ஆனையின் முகங்காட்டி அழகேதும் சிதையாது மையத்திற் மேலுதிரன் உறைந்த மலைக்குன்றிற் மறையாதொளிர அவன் மரையடியிற் மலர் கூட்டும் கரம் பட்டால் மறுபிறப்பறுத்து மாயோனடி சேர்வதற்கு வழிவகுக்க வரமொரு கோடியுறும். வாக்கிது பொய்யில்லை. வானமே அதற்கெல்லை. அவனிதயம் எழில் வில்லாய் வளைந்திருந்து புலவன் பாதம் பணிந்து கீழ்ஆரன் சிரம் தன்னில் ஆழவேரூன்றி அதன் பின்னர் நீலன் குன்றில் நிமிர்ந்த கிளை விட்டு மேலேறும். மதிவில்லின்னொரு முனையோ மாமேதைக்குற்றது போல் உயர் செவ்வாயில் உச்சி வைத்து அதனொரு கால் இதயத்துள் ஈட்டியாக இன்னொரு கால் விதி தழுவி மதிமடிக்குள் குறியிறக்கி விரலரையாய் நின்றுவிடும். ஆயுளல்லிக்கொடி ஆரல் மேட்டிற் அறிவொடு தொப்புள் கொடியுறவெடுத்து தோன்றியே நிலவுக்கு வலமும் நீண்டு வெள்ளிக்கு இடமும் கொடுத்து மணிக்கட்டிற் மையங்கொள்ளும் மலர்க்கரம் இதுவே.
#immortal #Ntk #Dmk | #Admk | #Bjp | #Congress | #Ntk | #Vck | #Mdmk | #pmk | #SudharmaSena #immortal #kalki2898ad #politics #spirituality #shorts #sports #kalki #kali
#immortalruler
❤️ வாழ்த்துகள் ஐயா 🙏🙏🙏.
அறம்பாடி சித்தர் பாடல் 205.
🌸 கன்னல் மொழிபொழி காதுக்கனியதோர் கலையெழில் காவியன் கடினப் பாதையுள் காலுறும் கயவரை கரிக்க கனல் வரும். கயமை பெண்டவள் கண்ணில் கருணையே காணேன் அக்கல்லக காரிகை கால்தடம் பதிந்திடாதிருந்திடில் கொற்கொடியடியிலே கூத்தனின் காவலில் குறைவிலா வளமையே விதியென அமையுமே. கொற்றவை கோவிலில் கொழுஞ்சுடரொத்தவன் கொண்டதோர் கழுத்தினை கொய்யத்துணிந்தவள் பொற்கொடியேற்றியே பொன்முடி சூட்டியே புவிசார் குறியொடு போற்றும் புத்தொளி மாதென புவியில் நிலைக்க புண்ணியம் பூக்காது பொய்த்தது யாதெனில் முன்னமே தொட்டதோர் முரணுறு ஊழென முக்கண் மூலமே மொழிந்ததை கேட்கவே ! நீதிக்கடங்காதோள் நெஞ்சில் நஞ்சுடன் நின்றதோர் நீலிதான் நிமலனின் நெறியினை நேரிடும் நேர்மையை நீக்கியே போனதால் ஆரந்தாழ் அரவஞ்சூடியோன் அழல் குஞ்சிற்காழக்குழி தோண்டி அடக்கம் செய்யவே அகப்பால் குடித்தவள் அடங்கா கயவரை ஆயிரமாயிரம் அனுதினம் முடுக்கியே நிழல் தொட்டவள் நீள்கரத்தோடுத்தான் நிறுவியே நெடுநகர் நெய்தலுள் நிறைந்த அக்கிளைகளில் நிற்கும் அக்கடை மக்கள் நெருங்கியே வந்திட அஞ்சுதற்கஞ்சாதோர் அரியோனவன் தலையினை அரிந்துதான் கொல்லவே அற்பமாய் எண்ணினள் ஆணவப் பெரும்பிணிக்காட்பட்ட அரக்கியே அழிந்துபோயிட ஆக்கம் அறுத்தவன் அன்னை உமையொடு அங்கமே அமைத்தவனென்பதை யானுமே இறுதியில் அறிந்திட்டேன் என்பதை ஏற்றிட வேண்டுவேன் எண்ணிலா மூடரே !
ஐயா இராதா கிருஷ்ணன் அவர்களுக்கு அடியேனின் ஆவலை ஆலோசனையாக கூற விரும்புவது,
தாம் அறம்பாடியார் பாடல்கள் விரைவாகப் பறவிடவும் அதில் கற்கியும் கண்டு தெளிவுறவும் எண்ணி பரப்பும் வகைக்கு பலரையும் ஈடுபடுத்தி தாம் அறிந்ததை அவர்களிடமும் பகிர்ந்து அவ்வாறான எவராவது இருக்கிறீரா என விலாசம் உரைத்ததை போல் கல்கியின் அடையாளங்களையும் அவர் வாழ்வில் இருந்ததையும் அறம்பாடியார் அறிந்துணர்ந்ததை பகிர்ந்து, அந்த ஒரு அவதாரத்தை உலகம் அறிய,அவரும் தன்னை தாம் அறிய விழைந்தீர்.
விலாசம் என்றால் நாடு, மாநிலம், மாவட்டம், வட்டம்,நகரம்,தெருவோ கிராமமோ, அஞ்சல் நிலையம்,கடைசியாக இனிஷியல் என இத்தனை விசயங்கள் அடங்கியது.
கடவுள் சேவையாக எண்ணி பரப்புங்கள்,அறிய முற்படுங்கள் அல்லது தமக்ககானதானாலும் தகவமைத்துக் கொள்ளுங்கள்,அத் தமிழனுக்கு அனைவரும் அரனாக நிற்போம் என்றீர்.
பாடல்கள் யூ டிபர்ஸ்,அதுவும் IR ஆர்வலரிடமட்டும் பரவியது.
நான் Fb தவிர யூடியூப் ஆர்வலர் அல்ல. ஆக மூண்று மாதத்திற்கு முன்பே அறம்பாடியார் என்ற பெயரே அறிந்தேன்,எதற்காக சொல்கிறேன் எனில் பரவிய பர்சன்டேஜ் எவ்வளவிருக்கும் என்பதை உணர்த்ததான்.
அதிலே அறிந்தவர்கள் குழு அமைத்து ஏதோ ஓரிரு அடையாளங்களை பிடித்துக்கொண்டு நான்,நான் என பேராசை கண்களை மூட, மற்ற அடையாளங்களை புறக்கணித்தார்கள்.
அதில் நானா,நீயா என போட்டி வேறு.தாங்கள் நினைத்ததோ ஒன்று நடந்ததோ ஒன்று.அதில் விடுகதை போல் உரைத்துள்ளதை தமக்கேற்றார் போல் புரிந்துக்கொள்ளலோ, பொருதிக்கொள்ளலோ செய்து கட்சித் தலைவர் போல் ஆகிவிட ஆசைப்படுதல்,அவர் சார்ந்த குழுவிலே இயலாதபோது அகிலம் முழுதும் அரங்கேறி விடுமா என நினைக்காமல் நினைத்தபடி நடந்திட்டர் சிலர்.
அவர்களின் செயலும் சொல்லும் பிடிக்காத சிலரோ பைனான்ஸ் கம்பெணியில் பயணடையலாம் என்ற நிலையில் சேர்ந்வர்களால் பயணிக்கப்படுகிறது.
அரசமைத்து அவரவர் மந்திரி ஆகிவிடலாம் ன்போர் கூட்டம் அது என்று கூறி விலகி விட்டார்கள்.
விலகிவிட்டவர்களில் சிலர் தாம் நோக்கிய,கல்கியை எதிர்நோக்கிய நேர்மையானவர்கள் இருக்கலாம்.அவர்கள் மீண்டும் அறம்பாடியார் பாடல்களை அலச வகை செய்யும் பொருட்டு தாமே தங்கள் சேனலில் பாடல்களை பதிவிடுவதால் என்ன பாதிப்பு வந்துவிடப் போகிறது?.
பழந்தமிழ் கலந்து பண் இசைப்பதே செயற்கறிய பெரியார் ஆக அறம்பாடியார் இருக்க,செயற்கறிய செய்ய இயலா நாம் சிறியோரே.
இந்நிலையில் அவரவர் புறிதல் அறிவு,அக்கரை சார்ந்து மாறுபடும்.
உதாரணமாக அக்கரையோ, நாட்டமோ,கவனமோ குறைந்ததால் இப்பாடலில் இடது கர படம் தந்துள்ளார் இது அறிவு சார்ந்தது என நான் கூறவில்லை திருவுக்கு இருக்கும் அறிவே போதும்.
அத்துடன் என் புரிதலில் அல்லி முகை பெருவிரல் நடு விரலே.முகை எனும் மொட்டுப் போல கையைப் பொதித்தால் முனையில் பொருவிரலாய் நடு விரலே.இருகோடென்பது தந்தங்கள் கைரேகை யில் கோடு என்பது அவசர புரிதல் புலவருக்கு.
யானையின் முகம் ஒரு பக்கம் முழுக் கண்ணும் அடுத்த பக்க கண் பாதியும் தெரியும் பக்க தோற்றமாகவே என் கற்பனை.அது தவறாகக்கூட இருக்கலாம்,அறம்பாடியாருக்கே அத்துபடி.
ஆக நீங்கள் உங்கள் சேனலில் பதிவிடுங்கள் கடவுள் என நினைத்து தம் கற்பனைகளை பாடலின் கருத்துக்களை ஓரிரு வரிகளைக் கூட உரைத்து கமண்ட் செய்யட்டுமே!
கொடியாகக் கொழுவை தேடி படர்ந்த பாடல்கள் இனி தனியாக தடம் பதிக்கட்டுமே!.
நன்றி.
@@GunaseelanS.K.10
நன்றி ஐயா கோடு என்றால் இந்தப் பாடலில் * தந்தம் * என்று தான் அர்த்தம்.
அதுபோல இன்னொரு பாடலில் ..... ஆள்காட்டி விரலில் ஆழி தாங்கி ...... என்று பாடல் வருகிறது அதுவும் * ஆழி * என்றால் திருமாலின் சுதர்சன சக்கரம் என்றும் ஆழ்வார் பாசுரத்தில் வருகிறது.. ஆழி என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் இருக்கின்றன.
எல்லா பாட்டுக்கும் திருநாவுக்கரசரையே விளக்கம் கொடுங்கள்.
சித்தராட்சியில் கற்கி - தீர்க்கதரிசன ஆய்வுகள், சித்தராட்சி விழுமியங்கள் ஆய்வு & பயிற்சி பாசறை - விவாத குழுவில் இணைய chat.whatsapp.com/ICRrwulBgMbECUTi3rBRrD
நல்மாந்தருய்ய அருள்வழியைச் சொல்லி ஓருலகாய் கொடி உயர்த்த sudharmasena.com/
நலிந்தோர் மீள! நல்லோர் ஆள!!
ua-cam.com/video/GrHX7s5N5HU/v-deo.html
மடமை கண்ட மக்களாட்சி, மாற்ற முயலும் சுதர்ம சேனை
ua-cam.com/video/f8AyMthXkqM/v-deo.html&lc=UgwWDzaUfw2D1v1auCt4AaABAg.A7Yy_WQPRgVA7Z9t3b4lqp