காது இரைச்சல் குணமாக | Understanding Tinnitus: Causes, Symptoms, and Treatments

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • #drkarthikeyantamil #doctorkarthikeyan #tinnitus #காதுஇரைச்சல்
    Do you suffer from tinnitus? You're not alone. In this video, we explore the causes, symptoms, and treatments of this often-debilitating condition.
    Tinnitus can be frustrating, but there are ways to manage it. Join us for expert advice, real-life stories, and practical tips on how to cope with this ringing in your ears.
    If you're looking for natural remedies and therapies to relieve your tinnitus, this video is for you. We explore a range of solutions, from sound therapy to herbal remedies.
    Understanding tinnitus is the first step in finding relief. In this video, we break down the science behind this condition and explain how it affects your hearing.
    If you're struggling with tinnitus, you may be wondering how to prevent it from getting worse. Our video offers helpful advice on protecting your hearing and avoiding common triggers.
    Coping with tinnitus can be challenging, but mindfulness and relaxation techniques can help. Our video offers a range of strategies for managing stress and anxiety related to tinnitus.
    Tinnitus research is constantly evolving. In this video, we explore the latest breakthroughs and future directions for the treatment of this condition.
    Living a normal life with tinnitus is possible. Join us for real-life stories of people who have found ways to cope with this condition and continue to thrive in their personal and professional lives.
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    Disclaimer:
    #doctorkarthikeyan tea,health benefits,blood pressure,heart health,immunity,weight loss,wellness,natural remedies,herbal tea,home remedy,tea recipe,tea benefits,healthy drinks,health and wellness,tea time,tea cultureDisclaimer: Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition.
    காது இரைச்சல் (Tinnitus) என்பது ஒரு தனிப்பட்ட நோயல்ல; உடலில் இருக்கும் ஒரு நோயின் வெளிப்பாடு; அறிகுறி. காது இரைச்சலுக்கான காரணம் காதிலும் இருக்கலாம்; உடலின் வேறு பகுதியிலும் இருக்கலாம்.
    செவி அழற்சியின் காரணமாகவும், செவியில் மெழுகு அடைவதாலும் அதிக ஓசையுடைய ஒலிகளைக் கேட்பதால் ஏற்படும் செவி மந்த நிலை காரணமாகவும், meniere's disease என்று சொல்லக்கூடிய உள்செவிப் பிரச்சினை காரணமாகவும் இது வரும்.
    இந்த meniere's நோயில் காதில் முழக்கம், செவித் திறன் குறைவு, தலை சுற்றும் தன்மை, வாந்தி போன்றவை காணப்படலாம். மது அருந்துதல் மாத்திரைகள் காரணமாகவும் இது ஏற்படலாம்.
    tinnitus
    ringing in ears
    hearing loss
    sound therapy
    mindfulness
    relaxation techniques
    coping strategies
    natural remedies
    medical treatments
    support groups
    hearing protection
    ear health
    ear care
    audiologist
    brain training
    stress management
    sleep disorders
    ear training
    white noise
    sound machines

КОМЕНТАРІ • 863

  • @murugesang758
    @murugesang758 4 місяці тому +41

    எனக்கு 19 வயது இருக்கும் போது மதிய வேளையில் பசியோடு நடந்து வரும்போது லேசானா மயக்கம் டப் ஒரு சத்தம் காதுக்குள் வந்து ஒரு சில நிமிடத்துக்குள் வண்டு சத்தம்போல் இறைச்சலாக காதுக்குள் கேட்க ஆரம்பித்தத்து இது நடந்தது 1985 வருடம். இப்பொழுது வயது 57, ஆனாலும் இறைச்சல் இன்றுவரை கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது. ஆரம்பத்தில் மருத்துவரிடம் சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருக்கிற கேட்கும் திறனும் போய் இறைச்சலும்
    அதிகமானுதுதான் மிச்சம், எதை தின்றால் பித்தம் தெளியும் நோக்கில் இருவேறு மருத்துவர்களை அணுகி மறுபடியும் மொத்தமாக மூன்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு காது வீணாய் போனதுதான் மிச்சம். நடு இரவில் தூக்கமின்மையால் அழுதது ஏராளம், பிறகு காலப்போக்கில் அதுவே பழகிபோய்விட்டது. திருமணமாகி இரு பிள்ளைகள் பெரியவர்களாகி நான் சிறு தொழில்முனைவராக வாழ்ந்து கொண்டுஇருக்கிறேன். எனக்கு பக்கபலமாக இருப்பது earing aid,teble fan. இதை ஏன் பதிவா போடுறேன்ன இந்த நோயால் பாதிக்கபட்டவர் யாராக இருந்தாலும் மணம்தளரவேண்டாம் வாழ்கை வாழ்வதற்கே.

    • @sreeramsundar9388
      @sreeramsundar9388 4 місяці тому

      Ungaluku 2 kaathum iraichala

    • @murugesang758
      @murugesang758 4 місяці тому

      ஆமாம்

    • @sreeramsundar9388
      @sreeramsundar9388 4 місяці тому

      @@murugesang758 kaathu nalla kekuma ungaluku

    • @murugesang758
      @murugesang758 4 місяці тому

      இரண்டு காதுமே அறுவை சிகிச்சை செய்ததால் இடது காது சுத்தமாக கேட்காது வலது காது 70 சதவீதம் கேட்காது வலது காது மட்டும் Ear Aid மூலம் பயன்படுத்தி ஒரு 80 சதவீதம் கேட்கும்.

    • @sreeramsundar9388
      @sreeramsundar9388 4 місяці тому

      @@murugesang758 enakum kaathu kekama pohuma sir😪😪😪

  • @valliboobalan3360
    @valliboobalan3360 10 місяців тому +24

    சோகமாக இருந்த மனதிற்கு ஆறுதல் அளிக்கும் விதமாக இருக்குங்க டாக்டர்.நன்றிகள், நன்றிகள் நன்றிகள் டாக்டர்.

  • @kavithasaravanan2364
    @kavithasaravanan2364 Рік тому +76

    உங்களை நல்ல மனிதர் என்பதா அல்லது தெய்வம் என்பதா மக்களுக்கு நல்ல வழிகாட்டி என்பதா உங்கள் ஒவ்வொரு வீடியோவும் எல்லா வகையிலும் பயனுள்ளதாக உள்ளது உங்கள் வீடியோவை பார்த்து நாங்களும் மருத்துவம் கற்றுக் கொண்டோம் லட்சக்கணக்கில் செலவு செய்து அடுத்த செக்கப்புக்கு போகும்போது பழைய பைலை புரட்டிப் பார்த்து மாத்திரை எழுதிக் கொடுக்கிறார்கள் நம்மிடம் எந்த விளக்கமும் கூறுவதில்லை நீங்கள் இவ்வளவு தெளிவாக விளக்கம் கூறுகிறீர்கள் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @EDITORWORKS-jc7th
    @EDITORWORKS-jc7th 7 місяців тому +12

    😟நிரந்தர தீர்வு இல்லை என்றாலும், உங்களது பேச்சு மனதிற்கு ஆறுதல் அளிக்கின்றது ஐய்யா...🙏

  • @Vijayaprabha-ss2gk
    @Vijayaprabha-ss2gk Рік тому +19

    டாக்டர் சொல்வது 100க்கு100உண்மை உண்மையிலேயே நீங்கள் உண்மையானவர்,அதிசயமானவர் இப்பிரச்சனை அப்படியே என்க்கு இருக்குங்கசார் goodடாக்டர்,

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 Рік тому +25

    மனிதன் என்பவனே தெய்வம் ஆகலாம் என்றால்
    மருத்துவர்களில் சிலர் தெய்வமாகவே பிறக்கிறார்கள் என்று மக்கள்
    சொல்லுகிறார்கள்.

  • @janakavallimuthaiah8275
    @janakavallimuthaiah8275 Рік тому +20

    Thank you Doctor. You have given very valuable health tips. Many people suffer with this problem silently. This is an eye opener.

  • @sakthiveljayaraman4439
    @sakthiveljayaraman4439 7 місяців тому +5

    அய்யா தெய்வமே நான் இந்த இறச்சலால் மிகவும் கவலையுடன் இருந்தேன் உங்கள் பதிவைப் கேட்டு விட்டு நிம்மதி பெருமூச்சு விட்டேன் வாழ்த்துக்கள் ஐய்யா உண்மையான தெய்வம் நீங்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

    • @dev-bc2rv
      @dev-bc2rv Місяць тому

      @@sakthiveljayaraman4439 doctoe one year adipa iruku kuradai satham mathiri kedukuthu t. V sound echo ah varuthu dr

  • @jothishivaram3049
    @jothishivaram3049 Місяць тому +2

    டாக்டர்தங்கள் அறிவுரைபடிபின்பற்றினேன் ஆனாபழுதடைந்த பேஸ் மேக்கர் லீட் மாற்றிய பிறகு ஸவுணட் இல்லை நன்றி

  • @peterjohn3673
    @peterjohn3673 4 місяці тому +1

    கடந்த வருடம் அயர்லாந்து போக வாய்ப்பு கிடைத்தது. காரில் பயணம் செய்த போது முன்னால் குதிரை வண்டி சைடு கொடுக்காமல் நடு ரோட்டில் ஓடிக்கொண்டிருந்தது கார் ஓட்டுனர் ஆரன் அடிக்காத்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட இடம் வரை குதிரை வண்டி பின் வேகத்தை முற்றிலும் குறைத்து கார் சொன்றுக் கொண்டிருந்தது. Round about வந்த போது இடதும் வலதுமாக குதிரை வண்டியும் காரும் பிரிந்தன கார்ரின் வேகம் தொடந்தது. மவுணமாக இருந்த நான் கார் ஓட்டுனரிடம் ஆரன் அடித்தால் குதிரை வண்டி ஒதுங்கும் கார் ஓவர் டேக் செய்து முன்னேறி இருக்கலாமே என்று கேட்டேன். அதற்கு ஓட்டுனர் குதிரை சத்தம் கேட்டு மிரண்டு பயந்து தடுமாறிவிடக் கூடாது என்பதால் அரசாங்க Traffic rules இதுவும் ஒன்று. ஆரன் உபயோகிக்கக் கூடாது.
    அயர்லாந்தில் குதிரைகளுடைய காதுகளுக்கு இவ்வளவு பாதுகாப்பு என்றால் மனிதனுடைய காதுகளுக்கு எவ்வளவு அதிகமாக இருக்கும் என்பதை என்னிப் பார்த்தேன்.

  • @DeepakDeepak-km7yi
    @DeepakDeepak-km7yi Рік тому +9

    சார் மிகவும் தாழ்வான வேண்டுகோள் டாக்டர்.மைக்ரோவேவ் பற்றிய குறிப்புகள் போடுங்கள் டாக்டர்.அது உடம்புக்கு நல்லதா கெட்டதா என்று சொல்லுங்கள் டாக்டர்.நான்.மைக்ரோவேவ் வாங்கின பிறகு நிறைய தீமைகள் இருக்கு என்று சொல்றாங்க டாக்டர்.அதன் பிறகு எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது டாக்டர்.

    • @sarojini763
      @sarojini763 Рік тому +1

      தீமையானதே. காசைப்பாராமல் தேரப்போடுங்கள். உடல் நலம் முக்கியமல்லவா

  • @sundararajan1170
    @sundararajan1170 Рік тому +3

    நன்றி. இதுவரை யாரும் இவ்வளவு தெளிவாக சொல்லவில்லை.எனக்கும் ஒருகாதில் காற்று சப்தம் கேட்கும் .செல்போன வலது பக்கமாக வைத்துத்தான் பேசுகிறேன். பழகிவிட்டேன் .மிக்க நன்றி தமிழில் சிறப்பாக விளக்கியதற்கு.

  • @AathiSaravanan82
    @AathiSaravanan82 11 місяців тому +7

    டின்னிட்டஸ் இந்த இரைச்சலால் நானும் பாதிக்கப்பட்ட்டேன்...4 மாதங்களுக்கு முன் சத்தமான இசை நிகழ்ச்சி கேட்டபிறகு உண்டானது....இப்போதும் tinnitus சத்தம் கேட்கிறது.... ஆனால் அது எந்த வித அசவுகரியத்தையும் தரவில்லை... முதல் 1 மாதத்திற்கு அது மிக பயங்கரமானதாக தோன்றும்... தூங்க முடியாது.... நாட்கள் போகப் போக உடல் மனம் இரண்டும் அந்த சத்தத்தை ஏற்று பழகும்...அது உங்களுக்கு எந்த வித பயத்தையும் தராது.... இதற்கு தீர்வு காலம்...காலம்....காலம்....அது தீவிரமாக இருந்தாலும்....குறைவாக இருந்தாலும் உங்கள் குணமாதல் நிகழ்ந்தே தீரும்... ஆரம்பத்தில் மிக மிக பயங்கரமாக தோன்றும்.... விரக்தி மனநிலை உண்டாகும்.... எல்லோருக்கும் இது போல மனநிலை உண்டாகும்.... பிறகு நிச்சயம் குணமான நிலையை அடையலாம்...

    • @Pappush-pappu96ed
      @Pappush-pappu96ed 11 місяців тому

      Hi anna.. Rpy pannungae..

    • @Pappush-pappu96ed
      @Pappush-pappu96ed 11 місяців тому

      Enaku intha problem iruku..

    • @AathiSaravanan82
      @AathiSaravanan82 11 місяців тому

      @@Pappush-pappu96ed பயம் வேண்டாம்.... சீக்கிரம் உடலும் மூளையும் ஏற்றுப் பழகும்...

    • @senthil3285
      @senthil3285 2 місяці тому

      அண்ணா, ஒரு மாதமாக எனக்கும் டினிட்டஸ் பிராப்ளம் இருக்கிறது காதில் கௌய்ங் என்ற சத்தம் கேட்கிறது மிகவும் பதட்டமான மனநிலை இருக்கிறது. டாக்டர் சில மாத்திரை கொடுத்துள்ளார் அதை போட்டால் தூக்கம் வருகிறது பகலிலும் மாத்திரை கொடுக்கிறார் அது ஒரு கிறுகிறுப்பு தன்மையை உண்டாக்கிறது. மிகவும் பதட்டமான மனநிலையில் இருக்கிறேன் என்ன செய்வது என்றே தெரியவில்லை. வாழ்க்கையே விரக்தியுடன் செல்கிறது எதிலுமே நாட்டம் இல்லை. அண்ணா தயவு செய்து பதில் கூறவும். பதிலுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்

    • @AathiSaravanan82
      @AathiSaravanan82 2 місяці тому

      @@senthil3285 உடலும் மனமும் ஏற்றுப் பழகும்...டின்னிட்டஸ் பழக்கமாததல் 4 நிலைகளைக் கொண்டது..
      1) எப்போதும் டின்னிட்டஸ் பற்றிய பயம் விரக்தி தூக்கமின்மை
      2) இந்த நிலையில் தூங்க ஆரம்பிப்பீர்கள்.ஆனால் டின்னிட்டஸ் பற்றிய கவலை இருந்து கொண்டே இருக்கும்
      3) இந்த நிலையில் உடல் மனம் சத்தத்தை ஏற்றுப் பழகும் எப்போதாவது கவலை இருக்கும்
      4) இந்த நிலை நிறைவு நிலை இதில் உடல் மனம் இரண்டும் சத்தத்தை பொருட்படுத்தாது... இயல்பான வாழ்க்கை யாக அமையும்....இதில் முதல் நிலையை கடந்து வருவதுதான் சிரமம்.. இந்த நிலை 22நாட்கள் முதல் 40 நாட்கள் வரை நீடிக்கலாம்... நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த நான்கு நிலையையும் உடலும் மனமும் அடைந்தே தீரும்,...

  • @gokulhandsome2964
    @gokulhandsome2964 9 місяців тому +90

    20 வருடம் இந்த துன்பத்தை அனுபவிக்கிறேன் ரொம்ப நாளாக சில்வண்டுவின் சத்தமென்று நினைத்தேன் பிறகுதான் என் காதுக்குள் சத்தம் என உணர்ந்தேன் மிகவும் வேதனையாக உள்ளது கரண்ட் போய்விட்டால் அவ்வளவுதான்

    • @VigneshVicky-ng9wp
      @VigneshVicky-ng9wp 8 місяців тому +3

      Ipo epdi iruku brother

    • @shanthisivapalan4243
      @shanthisivapalan4243 8 місяців тому

      Qqq

    • @Triplesparker200
      @Triplesparker200 8 місяців тому +1

      enna bro pandrathu 😢 solutions theriuma bro

    • @gokulhandsome2964
      @gokulhandsome2964 8 місяців тому +1

      ​@@Triplesparker200அதை நாம் சரிபண்ணமுடியாது நமது செவிதிரை கிழிந்துவிடுவதால்தான் இப்படி இரைச்சல் உண்டாகுது நம்ஆயுல்வரை இந்தகொடுமையை அனுபவித்துக்கொள்ளவேண்டியதுதான் எனக்கு தலையில் சயினஸ் பிரச்சினை உள்ளதால் சீக்கிரம் பாதிக்கபட்டேன்

    • @gokulhandsome2964
      @gokulhandsome2964 8 місяців тому

      ​@@VigneshVicky-ng9wpஅது சரியாகாது தம்பி கடைசி வரையிலும் இரைச்சல் இருந்துகோண்டுதான் இருக்கும் கேட்கும்திறனும் குறைந்துவிட்டது

  • @minnialarelectrician503
    @minnialarelectrician503 Рік тому +4

    🌹🤝🙏நான் ஒரு காதுகேளா மாற்றுத்திறனாளி....மின் பணி செய்கிறேன்...காது இரைச்சல் உண்டு. ஸ்பீக்கர் உதவியில் அதிக ஒலி அளவில் உங்கள் பதிவை கேட்டேன்... சிறப்பு ....

  • @nagalingamthayanithy1735
    @nagalingamthayanithy1735 Рік тому +24

    Even the ENT Doctor didn't explain like you Doctor. God bless you for the kind words.

  • @rajanvenkat
    @rajanvenkat Рік тому +74

    நான் நாற்பது வருடங்களாக இந்த டினிட்டஸ் நோயுடன் வாழ்ந்து வருகிறேன். நீங்கள் சொன்னது போல இதனுடன் வாழப் பழகிக் கொண்டு விட்டேன். மிகவும் அருமையான விளக்கமும், நிறைய வழி முறைகளையும் சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள். மிக்க நன்றி.

    • @anburani9176
      @anburani9176 Рік тому +3

      எனக்கு 3 எஸ் இருக்கு

    • @mohamednihal8637
      @mohamednihal8637 Рік тому

      Nan 3 years ear sound 24 hours kekudu . Nikkaway illa
      Thank you docter

    • @laxman9797
      @laxman9797 Рік тому +4

      12 year ah palagiten

    • @kirubakirubakaran1223
      @kirubakirubakaran1223 Рік тому +2

      எனக்கும் 38 வருடம் அதிசத்தம் இருக்கிறது

    • @chandrua226
      @chandrua226 Рік тому +4

      சார் வணக்கம் எனக்கு Tinnitus தொந்தரவு வந்து எட்டு நாட்கள் ஆகிறது. எனது காதில் Electric sound கேட்டுக்கொண்டே இருக்கிறது. இந்த தொந்தரவு சரியாக ஆலோசனை கூறுங்கள் சார்

  • @venkatramambujavalli7164
    @venkatramambujavalli7164 Рік тому +9

    அருமையான பதிவு நேரில்
    நாங்கள் கேட்கற கேள்விகளுக்கு
    பதில் சொல்வதுபோல இருக்கிறது நன்றி கார்த்தி மிகவும் பயனுள்ளதாக இருந்தது

    • @raguramranjith5352
      @raguramranjith5352 Рік тому

      அருடைய பதிவு

    • @pathamguru3414
      @pathamguru3414 Рік тому

      அருமையான பதிவு நன்றி ஐயா

  • @KLRthephotoguru
    @KLRthephotoguru 7 місяців тому

    I appreciate your dedication of making such an useful video. It is an eye opener for a person like me suffering from this problem. Thank you for all your suggestion. Let me try few of your suggestions . I am UA-cam video content creator (My channel is 'KLR the photo guru') and I know the effort you put for such an informative content.

  • @mathangikowsi7176
    @mathangikowsi7176 3 місяці тому +5

    இரைச்சலும் சேர்ந்து சவ்வு ஓட்டை யும் இருந்தால் என்ன செய்ய?

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 Рік тому +18

    Very well explained doctor.I am living with it without getting bothered. Sometimes when I focus I get irritated. I ignore and focus on meditation.

  • @manoharansivagnanam4439
    @manoharansivagnanam4439 Рік тому +34

    ஐயா எனது நீண்ட நாள் பிரச்சினை.ஃபேன் ஒலி எனக்கு உதவுகிறது.ஐயாவின் காணொலிகள் சாமானிய மக்களுக்கான எளிமையான யோசனைகள் அற்புதமானவைகள். பணத்தை தேடி ஓடாத நல்ல மருத்துவர். வாழ்த்துகள்.மருத்துவரிடம் சென்றால் consulting fees குறைந்தது 500,600ரூபாய் கையைத் திருகி பிடுங்கி விடுவார்கள்.

    • @nirmalaarulanandam1046
      @nirmalaarulanandam1046 Рік тому

      Correct sir I feel many years

    • @jeromexavier7987
      @jeromexavier7987 Рік тому

      Your video on Tinnitus is exhaustive and interesting. Iam living with this problem. From your explanation only, I come to know the real problem that lies in the synaptic junction of the limbic system. Thank you Dr.

    • @mahalakshmialagusundaram6577
    • @sampaths7587
      @sampaths7587 Рік тому

      ! நான் வின்

    • @nandadassnandadass
      @nandadassnandadass Рік тому

      Fees structure very high tablets costly high ranges one time some problems solved money expenses hgh

  • @Agent_Ninja.
    @Agent_Ninja. Рік тому +3

    நான் பட்டாசு வெடிக்கும் போது இது உருவானது இரண்டு வருடங்கள் கடந்துவிட்டது நான் வாழ பழகிவிட்டேன் 🥺

  • @tharavenkatesh5720
    @tharavenkatesh5720 Рік тому +3

    சார் நீங்க தான் real Doctor...

  • @priomonline1275
    @priomonline1275 10 місяців тому +4

    அற்புதம் தெளிவான தகவல்கள் நன்றி டாக்டர் அவர்களே

  • @valarmathiarunachalam6581
    @valarmathiarunachalam6581 Рік тому +8

    தெளிவான விளக்கம்.நன்றி

  • @tumashankar4186
    @tumashankar4186 Рік тому +2

    மிகவும் அருமை தாங்கள் வாழ்வில் அனைத்து செல்வ வளங்களையும் பெற்று நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க வையகம் நன்றி அன்புடன் மாங்காடு உமா சங்கர்.

  • @vasanthakumari7370
    @vasanthakumari7370 Рік тому +10

    வணக்கம் டாக்டர். இயற்கை படைப்பில் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் பாதம்வரை உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பிலும் ஏதாவது உடல்நலக்குறைவுடன் மக்கள் கஷ்டப்படுகிறார்கள்.மருந்துகள் எடுத்துக்கொண்டாலும் சில மருத்துவ சந்தேகங்களுக்கு தெளிவு கிடைக்காமல் இருக்கிறோம். சிரித்த முகத்துடன் உடற்கூறு பற்றி வரைபடத்துடன் தெளிவான விளக்கமும் பல வழிமுறைகளில் மருத்துவ தீர்வை பொறுமையாக பதிவுகளை தரும் டாக்டருக்கு நன்றி.மக்களுக்கு மருத்துவ சேவை புரியும் உங்களுக்கு நன்றி.

    • @rajrathinampalaniswamy2458
      @rajrathinampalaniswamy2458 10 місяців тому

      நன்றி,டாக்டர் உங்க அறிவுரை நல்லதாக தெரிகிறது.முயற்சி செய்ய போகிறேன்.மிக்க நன்றி

  • @sethuraman432
    @sethuraman432 Рік тому +2

    பணியில் உள்ளவர்கள் விடுபட வேண்டும் என்ற நோக்கத்துடன் அருமையான விளக்கம் உங்களுடைய எண்ணம் உயர்வானதாக உள்ளதைஉனரமுடிகிறது

  • @sundarvadivelan5388
    @sundarvadivelan5388 3 місяці тому +3

    எனக்கு வயது 56, 28 வயதில் ஆரம்பித்தது இரைச்சல் மருத்துவரிடம் சென்றேன் அறுவை சிகிச்சை என்றார் நான் பதறிப்போய் வந்து விட்டேன் தற்போது என் மகளுக்கு திருமணம் செய்ய போகிறேன் . இரைச்சல் பற்றி கண்டுகொள்வதில்லை எனினும் எப்போதாவது லைட்டா வரும்

  • @snsnrsnsnsnr6663
    @snsnrsnsnsnr6663 9 місяців тому +3

    Super dr. neenga yella diseases um feel panni explain pandrenga. clear ah solutions solrenga.. 🎉 thanks a lot doctor. Neenga Tamilnadu ku mattum ella India ke pokkisam. Vazhga pallandu.vazhga valamudan..🎉🎉🎉🎉❤❤❤

  • @Pacco3002
    @Pacco3002 11 місяців тому +2

    Sir எனக்கு மிக கடுமையான அலர்ஜி காரணமாக ஏற்பட்ட இருமல், கண் அரிப்பு ஏற்பட்டு அதே நாளில் இந்த tinnitus ஆரம்பித்து பல வருடங்களாக அத்துடன் வாழ பழகி விட்டேன். ஆனால் சமீபத்தில் வயிறு, கல்லீரல் பிரச்சினை யால் இந்த சத்தம் அதிகமாகிறது. முக்கியமாக பால், காரம், உப்பு, புளி,சர்க்கரை யால் அதிகரிக்க இவற்றை நிறுத்தி உடற் பயிற்சி செய்த பின் 80% குறைந்துள்ளது. நன்றி

    • @Prakash-57
      @Prakash-57 8 місяців тому

      Unmaiyava solringae..

  • @KV0105
    @KV0105 Рік тому +15

    Chant AUMMM 54 or 108 times everyday , eat well and do mild exercises , U will feel lot better

    • @bareerabegum5410
      @bareerabegum5410 Рік тому +1

      வாழ்க வளமுடன்👍 டாக்டர் நல்ல தெளிவான விளக்கங்கள் .. 👏👌 நன்றிகள்

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 7 місяців тому +1

    நன்றிங்க நன்றிங்க நீங்க நீடூழிவாழ வேண்டுமென மனதார வேண்டுகிறேன்.மிக பயனுள்ள நல்ல தகவலாக உள்ளது.👍🙌🙌

  • @geaswararrar4471
    @geaswararrar4471 Рік тому +15

    Experience of the Tinnitus by a person is highly well explained, my sincere thanks to you Dr. karthikeyan sir.

  • @vethaiyabalasubramanian
    @vethaiyabalasubramanian 10 місяців тому +8

    What a wonderful explanation of tinnitus and possible remedies! Thank you, doctor.

  • @mangalamumamaheswaran3052
    @mangalamumamaheswaran3052 11 місяців тому +3

    மயக்கம் வர காரணம் என்ன என்று அறிய பார்த்தேன் எனக்கு கா தும் ஒரு காரணம் என்பதால் your video kku many thanks

  • @arrivazhaganarrivazhagan8043
    @arrivazhaganarrivazhagan8043 Рік тому +3

    நல்ல விளக்கமான நம்பிக்கையூட்டும் பதிவிற்கு நன்றி ஐயா 🙏

  • @user-to8gt1yp3q
    @user-to8gt1yp3q 6 місяців тому +1

    நன்றி டாக்டர் அருமையாக தெளிவாகவும் சொன்னிங் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நன்றி நீங்கள் நீடுடிவாழ இறைவனின் ஆசிர்வாதம் உண்டு நன்றி

  • @narasimhans4387
    @narasimhans4387 10 місяців тому +3

    Thanks so much. Very very informative video. Explains so well in simple language. I do suffer from tinitus for long time, but not much hearing loss. Affects concentration, of course.
    Thanks again
    Narasimhan

  • @manoranjithamalarkanagarat3676
    @manoranjithamalarkanagarat3676 11 місяців тому +4

    உங்களுடைய ஆலோசனைகளுக்கு மிகவும் நன்றி டாக்டர்

  • @govindasamikannan
    @govindasamikannan Рік тому +7

    அருமை மருத்துவர் கார்த்திகேயன். சமூக உணர்வு உங்களை உயரத்துக்கு அழைத்துச் செல்லும்.

  • @palaniponnuswamy8183
    @palaniponnuswamy8183 Рік тому +6

    Thank you very much doctor. Very helpful .

  • @cbsdba
    @cbsdba Рік тому +5

    No Tinnutus is caused by Vata imbalance... you need to keep body warm .. this sound comes from eustachian tube problem.. balance is need Kapa, Peta and Vata... this will get control .. Seasame oild drops and Sweet basil drops in ear helps lot. Almond, Horse gram..etc.. Avoid cold related food... Yoga is best relief and walking and proper sleep

    • @kausalyanallainathan1721
      @kausalyanallainathan1721 9 місяців тому

      I agree. Vata is space and air. More space causes this issue. Balancing space mute will help

  • @balanp2874
    @balanp2874 9 місяців тому +3

    Wonderful description for Tinititus problem.Thank you dear Doctor

  • @Jayalakshmi-hm4zh
    @Jayalakshmi-hm4zh Рік тому +3

    Yes I'm also experiencing the same problem doctor. I'll try ur suggestion. Thank u doctor.

  • @jeyakumarrajamannar4202
    @jeyakumarrajamannar4202 Рік тому +22

    Very well explained Doctor. I too suffer with Tinnitus. Whenever, I find difficult getting into sleep, I used to travel in my mind with some interesting and challenging incidents I faced in my life, which masks Tinnitus and makes me sleep. I enjoy all of your posts that explain in simple terms with pleasing smile, an effective and cost- free medicine available in the world. Thank you for your relentless medical service.

    • @johnarun9599
      @johnarun9599 8 місяців тому

      How to avoid the sound while travelling, i travelled in an non AC sleeper train coach now feeling much worse.. can this sound be treated in AC coaches while travelling which has proper sound insulation or any earplugs to use... Any foods to avoid..

  • @nesamony7008
    @nesamony7008 10 місяців тому +1

    நிறைய வார்த்தைகள் எழுதவில்லை. VERY THANKS GOD BLESS YOU

  • @rgopalakrishnankrish5429
    @rgopalakrishnankrish5429 9 місяців тому +3

    For Tinnitus there's a operation called OTOSCLEARSIS but success rate is below 50*%

  • @navamshath6141
    @navamshath6141 10 місяців тому +7

    எனக்கு கடந்த இரண்டுநாளாக இந்த பிரச்சனையால் பெரும் அவதிப்பட்டேன்,உங்களது பயிற்சி செய்ததும் ஒரு மணித்தியாலத்தில் சரியாகி விட்டது மிக்க நன்றி ஐயா

    • @priyadharshiniarumugam1116
      @priyadharshiniarumugam1116 9 місяців тому +1

      Ungaluku endha maari saththam ketathu...bro

    • @VigneshVicky-ng9wp
      @VigneshVicky-ng9wp 8 місяців тому +1

      Epdi

    • @Prakash-57
      @Prakash-57 8 місяців тому +1

      @@VigneshVicky-ng9wp ungalukku ethanalae inthaa problem vanthuchi..

    • @VigneshVicky-ng9wp
      @VigneshVicky-ng9wp 8 місяців тому

      @@Prakash-57 atha theriyale brother

    • @Prakash-57
      @Prakash-57 8 місяців тому +1

      @@VigneshVicky-ng9wp ningae ent doctor ah paathingalae??

  • @a.l.johnsonasirvatham6137
    @a.l.johnsonasirvatham6137 11 місяців тому +2

    Doctor, Thanks for your useful Health tips and Good advices. 🙏🙏. May God Bless you abundantly.

  • @kalyanraman5322
    @kalyanraman5322 Рік тому +6

    Very useful tips.Thank you Doctor

  • @propmaxxrealitycoimbatore2897
    @propmaxxrealitycoimbatore2897 10 місяців тому +1

    அற்புதமான ஆலோசனை.. எனக்கு நிறைய தெளிவை தந்தது 🎉 நன்றி 🙏🏻

  • @mathivananramanathan8561
    @mathivananramanathan8561 Рік тому +4

    Thanks Dr. I am having this problem in my right ear.

  • @vennilasubramaniam9997
    @vennilasubramaniam9997 9 місяців тому +3

    தாங்கள் பெற்றவர்களுக்கு நன்றி.தாங்கள் கூறிய ஒரு சில நோய்க்கு எனக்கு பலன் அளிக்கிறது.தாங்கள் பேசுவதே எங்கள் நோய் எங்களை விட்டு போய்விடும்.ரொம்ப சந்தோஷம் தம்பி.உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள்.நன்றி நன்றி

  • @kumarkathiravelu8700
    @kumarkathiravelu8700 Рік тому +7

    Doctor, I have this issue for last 6-8 months and I started using Cpap machine at night for sleep apnea

  • @packiaraj13
    @packiaraj13 Рік тому +15

    I live with Tinnitus for 25 years - I am so much used to it that it is not a problem now.

    • @thalavazhka8436
      @thalavazhka8436 Рік тому +1

      Bro cure panna mudiyatha..

    • @packiaraj13
      @packiaraj13 Рік тому +5

      @@thalavazhka8436 I have this problem for 25 years. It started in a very mild form - but gradually increased. I read several articles on the subject. As Dr. Karthikeyan says, you can try several things, but NO CURE. Just be calm and accept this. Avoid loud noises - especially in wedding halls, worship places etc. If sugar level in blood is high, it will increase. After a vigourous exercise or walking, it will increase also, but this effect is temporary. Keeping this in mind, accept the problem and live accordingly. Avoid using cell phone near the ear. Use it by connecting an earphone or speak in speaker phone. Never experiment with any medicines. If it is a problem for sleeping, play some music at very low volume. All the best. God bless you

    • @bhuvaneshmdceomkstextilefa9285
      @bhuvaneshmdceomkstextilefa9285 Рік тому

      mudiyathu @@thalavazhka8436

    • @AathiSaravanan82
      @AathiSaravanan82 10 місяців тому

      ​@@packiaraj13tinnitus சத்தம் உடல் ஏற்று பழக.... எவ்வளவு காலம் பிடிக்கும்...bro pls reply...

    • @packiaraj13
      @packiaraj13 9 місяців тому

      @@AathiSaravanan82 பத்து நாட்கள்

  • @santhanamk3759
    @santhanamk3759 Рік тому +3

    மிக தெளிவான விளக்கம்

  • @sukanyasuresh6948
    @sukanyasuresh6948 Рік тому +5

    thank you doctor..well explained.. please tell about geographical tongue...is it harmful...does it affect taste

  • @balajiad1150
    @balajiad1150 Рік тому +3

    Very nice Dr. You are doing excellent service to people.

  • @rajalakshmisankaran4292
    @rajalakshmisankaran4292 Рік тому +2

    மிகத்தெளிவான விளக்கம். நன்றி.

  • @manikandana.s7886
    @manikandana.s7886 Рік тому

    Sirவணக்கம், எனக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இந்த பிரச்சனை இருந்து வருகிறது. இந்த பிரச்சனை எனக்கு corona தொற்று ஏற்பட்டு அதற்கான ட்ரீட்மெண்ட் எடுத்த இரண்டு மாதங்கள் சென்ற பின்பு இடது பக்க காதில் tinnitus பிரச்சனை வந்துவிட்டது. தங்களின் டின்னிட்டஸ் தொடர்பான விளக்கம் மிகவும் அருமை மனதிற்கு தெம்பும், தெளிவும், கிடைத்துள்ளது. மேலும் இதனை குணப்படுத்துவதற்கு மருத்துவ முறை கண்டறியப்பட்டால் பதிவிடவும். நன்றி,

  • @subramanianr6210
    @subramanianr6210 6 місяців тому

    Good Morning Dr.I am 81 having tinnitus for past 5 yrs.also having vertigo ear balancing.Am taking Diziron tabs daily also.Your explanation on tinnitus is very clear.Thanks

  • @Sugumar-mt1ss
    @Sugumar-mt1ss 11 місяців тому +2

    Extraordinary Explanation Doctor. THANKS 🎉

  • @Vijayaprabha-ss2gk
    @Vijayaprabha-ss2gk 5 місяців тому +1

    Sir டாக்டர்களை,தெய்வம் என்பார்கள்,அந்ததெய்வம் நீங்கள்தான்good

  • @jayajayavalli4344
    @jayajayavalli4344 Рік тому +3

    ஐயா எனக்கு வண்டியில் போகும்போது ஆக்சிடெண்ட் ஆயிருச்சு ஒரு பக்கம் படுக்கும் போது காதில் இரைச்சல் சவுண்டு கேக்குது நைட் நேரத்தில் மட்டும் கேட்டது இப்ப பகல் நேரத்தில் கேட்கிறது எனக்கு பயமா இருக்கு அதுக்கு என்ன பண்றது ஐயா

    • @sumathir8256
      @sumathir8256 Рік тому +1

      Same problem. I too have due to accident

  • @ramsankar1969
    @ramsankar1969 Рік тому +2

    You give me a tonic through this speech. 😀Nice details. Thank u doctor.

  • @vijayakrishnamoorthy1568
    @vijayakrishnamoorthy1568 Рік тому +2

    Hi Doctor namaste I am 70. Years old
    Enakku 17 years rendu kadhulayum sound varadhu
    Indha problem vandadhe because of vertigo kadhu kekkaradhum kuranjuduthu. Hearing aid poturukken
    Neenga sonnamadhiri pazhagiduthu😃

  • @anandr4010
    @anandr4010 Рік тому

    7 வருஷம் எனக்கு காது sound பல வகை இருக்கு. But 2 years கஷ்டமா இருந்தது. But இப்போ என்ன சவுண்ட் வந்தாலும் பழகி போச்சி. எந்த சொந்தரவு தெரியல 👍

  • @rajeswariangiya4121
    @rajeswariangiya4121 Рік тому +2

    You are Great and giving Valuable suggestions Sir.

  • @user-dm8ho4qd9d
    @user-dm8ho4qd9d 9 місяців тому +1

    Thankyou very much doctor so wonderful 👍 explained as about tinnitus treatment,once again thanks 👍

  • @devica6677
    @devica6677 Рік тому +3

    Very useful tips Dr. Thank you so much❤

  • @MohammedYaseen-xe9ej
    @MohammedYaseen-xe9ej 2 місяці тому

    மருத்துவர் கார்த்திகேயன் அவர்களுக்கு எனக்கு , விபத்து நடந்த தலையில் அறுவை சிகிச்சைக்கு அப்றம் ஒரு காதில் இந்த சவுண்ட் கேட்டுகொண்டே இருக்கு ஒரு வருடத்திற்கு மேல்..

  • @sudhasundararajan4096
    @sudhasundararajan4096 Рік тому +3

    Thanks Dr. Very clear explanation

  • @venkatesh2285
    @venkatesh2285 Рік тому +7

    I am 36years for past few months I am having crackling sensation in my left ear when ever I swallowing and also having constant threat clearing. I don't have any pain but I feel discomfort because of this problem and also I hear erachal when I ear temple bell. Also I feel some discomfort when fan air touches the ears in my left ear but not in right ear.

    • @karthigajothis2925
      @karthigajothis2925 10 місяців тому

      same situation ungaluku epo epudi eruku atha cure panitangala elaya enaku na pesum pothu matum tha kekuthu distape aguthu matha padi onum problem ela

  • @Bushu000
    @Bushu000 3 місяці тому

    Thank you for this video, I learned more today about tinnitus than any other videos I have watched.
    I have had this problem for over five decades. It was there but milder, but as I am approaching 70, plus asthma problem, the sound has increased tenfold.
    I do some massages regularly, and as you said, at night when the fan or the clean air machine is on, it doesn’t disturb my sleep. But unfortunately, the nights of insomnia, it’s very difficult.
    Thank you again I will try some of the methods, like closing one ear and closing the mouth and force the air out plus meditate more.
    I do believe in meditation and mind over matter.
    I have enjoyed your other videos as well.
    Best wishes and god bless you to continue your good work. 🙏🏻

  • @tharavenkatesh5720
    @tharavenkatesh5720 Рік тому

    All in all அழகு ராஜா ... சார் நீங்க. எல்லா பிரச்சனைக்கும் தீர்வு சொல்றீங்க.

  • @SPRadhaKrishnan-bv2pp
    @SPRadhaKrishnan-bv2pp 4 місяці тому

    சார் எனக்கு Tinnitus கொரானா 2வது ஊசி போட்டபின் 5வகையான சப்தம் வந்தது ENT டாக்டர் களிடம்
    காண்பித்தும் கொஞ்சம் கூட
    குறையவில்லை. தூக்கமில்லாமல் இரண்டு
    வாரங்கள் இறந்துவிடுவோமா
    என நினைத்து அழுது கொண்டிருந்தேன். அதனுடன் பழகி நான்கு
    வருடங்களாகிறது. நீங்கள்
    கூறிய அத்தனை பயிற்சிகளும் செய்தும் பலனில்லை. சப்தத்துடன்
    பழக ஆரம்பித்து விட்டேன்.
    நன்றி.

  • @kannanb9072
    @kannanb9072 5 місяців тому

    டாக்டர் நீங்க சொல்றது மிக நல்ல தகவல் சார் இதை நான் பாலோ பண்றேன் சார் சூப்பர் நன்றி நன்றி

  • @umavishwanath4396
    @umavishwanath4396 Рік тому +5

    Useful post Doctor 🙏

  • @MuruganMurugan-dh7ll
    @MuruganMurugan-dh7ll 8 місяців тому +3

    உண்மையிலேயே மன அழுத்தமே காது இரைச்லுக்கு காரணம் ,மணம் அமைதியானால் காதும் அமைதியாகும்

    • @M.siddiqSiddiq-vn5bs
      @M.siddiqSiddiq-vn5bs 8 місяців тому

      Tru

    • @cbsdba
      @cbsdba 7 місяців тому

      his is inner infection and what doctor said is not correct.. due to vata imbalance fluid release in inner ear and that makes infections... I have issues 6 years and able to manage.. keep your body warm, eat thuthuvalai, kallu use seasome oil drops in ears and do shuya muthra.. no need to worries.... cold will increase sound..

  • @jaffershaji1024
    @jaffershaji1024 27 днів тому

    மிகவும் நன்றி

  • @SathyaSathya-mg3nr
    @SathyaSathya-mg3nr 12 днів тому

    Sir nenga great ❤ unga pani sirakka valthukirom😊🎉

  • @NK-vn1fo
    @NK-vn1fo 4 місяці тому

    Doctor sonna tips follow panni paarunga bro.. Don't worry.. Will pray for you 😊

  • @Vijayaprabha-ss2gk
    @Vijayaprabha-ss2gk Рік тому +1

    சார் நீங்க நல்லா இருகனும் நன்றிகள் பல நீங்கள்சொல்வது100சதம்உண்மை,

  • @ranjithakanaganayagam9651
    @ranjithakanaganayagam9651 6 місяців тому

    எனக்கும் கடந்த 11 வருடங்கள் காது கடல் இரைச்சல் போல் இரைந்து கொண்டு இருக்கு.மருத்துவரிடம்
    காட்டியும் பிரயோசனம் இல்லை.சர்க்கரை நோய் உள்ளது.உஙகள் கருத்துக்கள் மனதுக்கு இதமாக உள்ளது.நன்றி.

  • @kavijeni5195
    @kavijeni5195 Місяць тому

    TQ doctor for ur exercise, if I old. My breath sound is automatically stopped for sometime but again started for time being I can relax tq 🙏

  • @Karthickraj-P3
    @Karthickraj-P3 Рік тому +1

    சார் எனக்கு இதே மாதிரிதான் காதுக்குள் பிரச்சனை இருக்கிறது காது டாக்டர்பார்த்து ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன் ஒரு சில நேரத்தில் காதலை சவுண்ட் வந்துக்கிட்டே தான் இருக்குது ரெண்டு நாளை காதுக்குள்ள சத்தம் கேக்குது அப்புறம் நல்லா இருக்கு அப்ப மறுபடியும் சத்தம் கேக்குது அப்புறம் நல்லா இருக்குது இப்படியே மாறி மாறி இருந்து நான் டைலரிங் வேலை செய்கிறேன் என்ன டைலரிங் வேலை செய்ய வேண்டாம் டாக்டர் சொல்கிறார் அது ஏன்

  • @nagalingamthayanithy1735
    @nagalingamthayanithy1735 Рік тому +2

    Thanks so much Doctor nice consoling explanation.

  • @radhaswaminathan2477
    @radhaswaminathan2477 Рік тому +1

    Tnq. Very much Dr. Very useful and well explained.🙏

  • @user-ij3xn5lj5d
    @user-ij3xn5lj5d Рік тому +1

    நீங்கள் மக்களுக்கு நன்மை செய்வதால் பரமாத்துமாவின் நல்குணம் உங்களுக்கு இன்னும் அதிகமாக கிடைக்கும்.இயேசு உங்களை ஆசீர்வதிப்பார். எனக்கு இந்தபிரச்சனை இருந்தது கடைசியில் சொன்ன பயிற்ச்சி பலன்அளித்தது.

  • @vgganesan9826
    @vgganesan9826 10 місяців тому +1

    Dear Dr sir, thanks so much for your kind sharing 🙏

  • @vijayasanthivijayasanthi7704
    @vijayasanthivijayasanthi7704 10 місяців тому +2

    Dear doctor thank you so so much ❤️ ennaku 3 workout achu ones again thank you sir 🙏

  • @mahilambikakannan1751
    @mahilambikakannan1751 Рік тому +2

    Very useful information sir.Thank you sir

  • @sheikalavudeenskp6505
    @sheikalavudeenskp6505 Рік тому +13

    I suffered some years with this problem. Now completely I relived from this. Automatically the sound gone itself. My best advise is don't use headphones.

  • @kannammalkrishnamoorthy4765
    @kannammalkrishnamoorthy4765 Рік тому +3

    Sir enaku adikade kathu vali soundum erukuthu sir. Oru nalla Usful. Thanks Doctor

  • @margaretjeyamala-qc2ji
    @margaretjeyamala-qc2ji 4 місяці тому

    நீங்கள் நீடூழி காலம் வாழவேண்டும் ஐயா.கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்.❤❤❤❤❤❤❤

  • @ramaprapharamaprapha2105
    @ramaprapharamaprapha2105 Рік тому +2

    எனக்கு இந்த பிரச்சனை உள்ளது ஆனால் நான் சத்தத்தை நான் பொறுப்படுத்துவது கிடையாது தற்போது எனக்கு பழகிவிட்டது

  • @prabhuprabhu8081
    @prabhuprabhu8081 6 місяців тому +1

    நன்றி🙏💕
    😢

  • @gomathimyndhan
    @gomathimyndhan 4 місяці тому

    ஐயா, எனக்கு 47 வயதாகிறது., 2005ஆம் ஆண்டு ஒரு விபத்தில் தலையில் அடிபட்டு நாள் கணக்கில் கோமா நிலையில் இருந்து அறுவை சிகிச்சை செய்து என்னை உயிர் பிழைக்க வைத்தார்கள்., ஆனால் இரண்டு வருடங்கள் கழித்து எனக்கு தலைசுற்றல் போன்ற பல பிரச்சினைகள் வர ஆரம்பித்தன.,அதிலும் குறிப்பாக வலது காதில் இரைச்சல் அல்லது நீங்கள் குறிப்பிட்டது போல் கடல் அலை சப்தம் இருந்துகொண்டே இருக்கிறது., 2015 ஆம் ஆண்டு ஒரு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் hearing aid வைத்துப் பார்த்தேன்., ஆனால் ஒரு பயனும் இல்லை., தற்போதும் அந்த பிரச்சனையோடுதான் வாழ்ந்துவருகிறேன்., இதற்கு என்ன தீர்வு? உங்கள் தொலைப்பேசி எண் பதிவிடமுடியுமா?