தொட்டது துலங்கும் ஆடி 18 | ஆடி பெருக்கு - செய்யவேண்டிய முக்கிய வழிபாடு | Aadi 18 | Aadi perukku

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • தொட்டது துலங்கும் ஆடி 18 ஆடி பெருக்கு, இந்த ஆடி 18 இல் என்ன செய்யவேண்டும் என்ன செய்ய கூடாது இதை தெரிந்து வணங்கும்போது நாம் நினைத்தது நடக்கும் கேட்டது கிடைக்கும், அனைவரும் இந்த ஆடி 18 இல் வேண்டியதை பெற்று மகிழ்ச்சியாக வாழ வேண்டிக்கொள்கிறேன் ,
    பதினெட்டு என்ற எண் ‘ஜய’த்தை அதாவது வெற்றியைக் குறிக்கும். மகாபாரதத்தில் 18 பர்வங்கள், பகவத்கீதையில் 18 அத்தியாயங்கள், சபரிமலையில் 18 படிகள் முதலானவை எல்லாம் இந்த அடிப்படையிலேயே அமைந்தன. இந்த முறையிலேயே, நீர் பெருக் கெடுத்து ஓடும் நதிக்கரைகளில் பதினெட்டுப் படிகளை அமைத்த நம் முன்னோர்கள், உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அளிக்கும் காவிரி முதலான நதிகளுக்கு நீர்நிலைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாடினார்கள்
    ஆடிப் பதினெட்டு விழாவில் பெண்களே அதிக அளவில் பங்கு கொள்வார்கள். விழாவுக்குப் பத்து நாட்கள் முன்னதாகவே, நவதானியங்களை விதைத்து முளைப்பாலிகை (முளைப்பாரி என்றும் சொல்வர்) வளர்க்கத் தொடங்குவார்கள். ஆடிப் பதினெட்டு தினத்தன்று பெண்கள் இந்த முளைப்பாலிகையைக் கையில் ஏந்தி, பிற்பகல் வேளையில் அணிவகுத்தபடி ஆற்றங்கரைக்குச் செல்வார்கள்.
    பதினெட்டாம் பெருக்கு அன்று மாங்கல்யம் பெருக்கிக் கட்டுவது முக்கியமான வைபவம். பெண்கள் தாலி பெருக்கி போடுவார்கள். இதன்மூலம் கணவரின் ஆயுள் அதிகமாகும் என்ற நம்பிக்கை, புது மணப்பெண்கள் ஆடிப்பெருக்கன்று புதிய மஞ்சள் கயிறை மாற்றிக்கொள்வார்கள். கன்னிப் பெண்கள் வழிபட்டால் சிறந்த கணவர் அமைவர் என்பது நம்பிக்கை.
    நீர்நிலைகள் நதிதீரத்துக்குச் செல்ல இயலாதவர்கள், வீட்டிலேயே காவிரியம்மனுக்கு படையலிட்டு வழிபடும் வழக்கம் சில பகுதிகளில் உண்டு. அன்றைய தினம் காவிரியின் கதையைப் படிப்பதும் கேட்பதும் புண்ணியம் என்பார்கள் பெரியோர்கள்.
    இப்படிக்கு
    அதுதான் ரகசியம்
    Nageswari Amma
    #aadi18 #aadivelli #aadimatham #aadimasam #aadiyilseiyavendiyathu #aadiammavasai #aadiperukku #aadiperukkupoojai #aadiperukku2024 #aadipathenetu #aadiperukkupoojai2024 #ஆன்மிகம் #ஆடிப்பெருக்கு #aadi #aadiperukku2024 #aadi18perukku #aadi18intamil #aadiperukkuintamil #aadiperukkufoods #aadiperukkuprasatham #aadiperukkuspecial #aadi18special #aadi2024 #aadiperukkupooja #aadiperukkupoojaintamil #aadi18englishdateintamil #aadiperukkuenglishdateintamil #aadiperukku2024status #aadi182024status #2024aadiperukku #2024aadi18 #2024aadiperukkudate #aadi18date #2024aadiperukkuintamil #aadi #athuthanragasiyam #aadi18historyintamil #aadi18history #historyofaadi18

КОМЕНТАРІ • 1

  • @nageswarim164
    @nageswarim164 Місяць тому +2

    ❤அருமையான பதிவு ❤