மார்கழி 15-ஆம் நாள் கேட்க வேண்டிய திருப்பாவை & திருவெம்பாவை | Margazhi 15-Thirupavai & Thiruvempavai

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024
  • திருவெம்பாவை - 15
    ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
    சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர
    நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண் பனிப்பப்
    பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள்
    பேரரையற்கு இங்ஙனே பித்துஒருவர் ஆமாறும்
    ஆர்ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
    வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
    ஏருருவப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.
    திருப்பாவை - 15
    எல்லே! இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
    சில்லென்று அழையேன் மின் நங்கைமீர் போதருகின்றேன்
    வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
    வல்லீர்கள் நீங்களே நான் தான் ஆயிடுக
    ஒல்லை நீ போதாய் உனக்கு என்ன வேறு உடையை
    எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக் கொள்
    வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க
    வல்லானை மாயானை பாடு ஏல் ஓர் எம்பாவாய்
    இதுபோன்ற பல பயனுள்ள வீடியோக்களை தொடர்ந்து பார்க்க அறிவொளி யூ டியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும். மேலும் உங்களது நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
    Please Subscribe Arivoli UA-cam Channel to view useful and beneficial videos. Please also share to your friends and relatives.
    Arivoli

КОМЕНТАРІ •