வைட்டமின் K நிறைந்த உணவுகள்|வைட்டமின் k நன்மைகள்|vitamin k rich foods|Benefits of vitamin K - தமிழ்

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • Our previous videos👇about Vitamins
    நமது முந்தைய வைட்டமின்களை பற்றிய விடியோஸ்👇
    வைட்டமின் ஈ குறைபாட்டால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகள்/வைட்டமின் ஈ நிறைந்த உணவுகள்
    • வைட்டமின் ஈ குறைபாட்டா...
    வைட்டமின் டி நிறைந்த உணவுகள்/வைட்டமின் டி குறைபாட்டால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகள்
    • வைட்டமின் டி நிறைந்த உ...
    வைட்டமின் சி நிறைந்த உணவுகள்/வலுவான நோயெதிர்ப்பு சக்திக்கு துணைபுரியும் விட்டமின் சி நிறைந்த உணவுகள்
    • ‘வைட்டமின்-சி’ நிறைந்த...
    வைட்டமின் b குறைபாட்டால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும்/வைட்டமின் b காம்ப்ளக்ஸ் என்றால் என்ன
    • வைட்டமின் b குறைபாட்டா...
    வைட்டமின் ஏ நிறைந்த உணவுகள்/simple foods rich in vitamin A
    • வைட்டமின் A நிறைந்த எள...
    #வைட்டமின்K நிறைந்த உணவுகள்
    #vitamin K rich foods
    #வைட்டமின்K நன்மைகள்
    #Benefits of vitamin k
    நாம் சுறுசுறுப்பாக இயங்கவும், நோயின்றி ஆரோக்கியமாக வாழவும் துணைபுரியும் வைட்டமின்கள் பல... எந்தெந்த உணவுகளில் என்னென்ன வைட்டமின்கள் அடங்கியுள்ளன என்பதை அறிந்து உட்கொண்டு நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழலாம்
    நமது உடல் நலமுடன் இருக்க போதுமான ஊட்டச்சத்துகளும் அவசியம். அதில் விட்டமின் கே போன்ற ஊட்டச்சத்துக்கள் நமது உடலுக்கு அத்தியாவசியமான ஒன்று என்கிறார்கள் மருத்துவர்கள்
    விட்டமின் கே நீரில் கரையைக் கூடிய ஊட்டச்சத்தாகும். இது இரண்டு வகைகளில் காணப்படுகிறது. ஒன்று கே1மற்றொன்று கே2.நமது குடலில் உள்ள பாக்டீரியா கே1 விட்டமீனை கே2 ஆக மாற்றம் செய்கிறது. இதை நமது உடல் நிறைய வகைகளில் பயன்படுத்தி கொள்கிறது. விட்டமின் கே1 கீரைகள், காய்கறிகள் போன்றவற்றில் அதிகளவில் காணப்படுகிறது.
    பயன்கள்
    எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கிறது
    ஆஸ்ட்டியோபோரஸிலிருந்து பாதுகாக்கிறது.
    இதய ஆரோக்கியத்திற்கு பயன்படுகிறது.
    ரத்தத்தை உறைய வைக்கும்
    வைட்டமின் கே எந்தெந்த உணவுகளில் அதிகமாக இருக்கிறது என்பது பற்றி பார்ப்போம்
    உணவுகள்
    முளைக்கட்டிய பயிறு வகைகள், கொடி முந்திரி, உலர்ந்த துளசி, அவகேடா, கீரைகள், செங்கீரை(சிகப்பு தண்டுக்கீரை) போன்றவற்றில் காணப்படுகிறது
    #பச்சை இலைக் காய்கறிகள்
    #Green leafy vegetables
    பச்சை இலைக் கீரைகளில் அதிகளவு விட்டமின் கே காணப்படுகிறது. பாதி கப் கீரையில் 400 மைக்ரோ கிராம் அளவிற்கு விட்டமின் கே காணப்படுகிறது. இது ஒரு நாளைக்கு தேவையான விட்டமின் கே அளவை விட நான்கு மடங்கு அதிகம்
    #கொடி முந்திரி
    #Black grapes
    தமிழகத்தின் சில மாவட்டங்களில் கருப்பு நிற திராட்சையைத் தான் கொடி முந்திரி என்று அழைப்பார்கள். 1 கப் கொடி முந்திரியில் 104 மைக்ரோ கிராம் அளவிற்கு விட்டமின் கே உள்ளது. இது உங்கள் தினசரி தேவையில் 100% பூர்த்தி செய்கிறது
    #உலர்ந்த துளசி #Dried basil
    உலர்ந்த துளசி யில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் மினரல்கள் மட்டும் இல்லை. 45% அளவு விட்டமின் கே உள்ளது. ஒரு டீ ஸ்பூன் மட்டும் சாப்பிட்டால் போதும் தினசரி அளவு சரியாகி விடும்
    #கீரைகள் #Green leaves #Spinach
    கீரைகளில் அதிகளவு விட்டமின் கே உள்ளது. ஒரு நாளைக்கு தேவைப்படும் அளவை விட 1100% அளவு அதிகமாக காணப்படுகிறது
    #அவகேடா #Avocado
    100 கிராம் அவகேடாவில் 21 மைக்ரோகிராம் விட்டமின் கே உள்ளது. இது ஒரு நாளைக்கு தேவையான அளவில் 20% அளவை பூர்த்தி செய்கிறது
    #வெள்ளரிக்காய் #Cucumber
    ஒரு மீடியம் வடிவ வெள்ளரிக்காயில் 60% அளவு ஒரு நாளைக்கு தேவையான விட்டமின் கே அளவு உள்ளது
    #முளைக்கட்டிய பயிறு வகைகள்
    #Sprouted grains
    முளைக்கட்டிய பயிறு வகைகள் 240% அளவு விட்டமின் கே அளவை பூர்த்தி செய்கிறது
    #சிகப்பு தண்டுக்கீரை
    சிகப்பு தண்டுக்கீரையில் 36 கலோரிகள் மற்றும் 600% விட்டமின் கே சத்து உள்ளது. இது ஒரு நாளைக்கு தேவையானதை விட அதிகம் தான்
    இந்தச் சத்து உடலில் குறைவதால் இரத்தம் நீற்றுப் போகும்.சிறு காயம் ஏற்பட்டாலும் அதிக ரத்தப்போக்கு ஏற்படும். இரத்த உறைதலுக்கு இந்தச் சத்து அவசியமாகின்றனது
    எடுத்துக் கொள்ளும் அளவு
    ஒரு நாளைக்கு எவ்வளவு வேண்டுமென்றாலும் விட்டமின் கேயை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் இருப்பினும் இதன் அளவு வயது, பாலினம் இவற்றை பொருத்து வேறுபடுகிறது. 75 மற்றும் 120 மைக்ரோகிராம் அளவு ஒரு நாளைக்கு போதுமானது.
    குறிப்பு
    விட்டமின் கே சத்தை நீங்கள் மாத்திரை வடிவில் எடுத்து வந்தால் அலர்ஜிக் விளைவு வர வாய்ப்புள்ளது. எனவே உணவு வழியாக இந்த சத்தை பெறுவது நல்லது. இதை மாத்திரை வடிவில் எடுப்பதற்கு முன், மருத்துவரை ஆலோசித்து கொள்வது நல்லது.
    #Osteoporosis
    #Vitamin k
    #Blood thinner
    #Bone density

КОМЕНТАРІ • 4

  • @deepar5324
    @deepar5324 3 роки тому +2

    Vitamin k information super

  • @steffithomson4216
    @steffithomson4216 3 роки тому +1

    அனைவருக்கும் தேவைப்படும் அற்புதமான பதிவு. இவற்றை பகிர்ந்தளித்தமைக்கு மிக்க நன்றி.. அனைவரும் பயன் பெற்று சிறப்பிக்க என்னுடைய வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன்.

  • @hemachandrand2446
    @hemachandrand2446 3 роки тому +1

    Well explained

  • @hemachandarhemachandar769
    @hemachandarhemachandar769 3 роки тому +1

    Nice.. Well explained