கண்ணிலே என்ன உண்டு பாடல் | Kannilae Enna Undu song | S. Janaki | Sujatha, Vijayakumar sad song .

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • #sujatha #sad #vijayakumar #oldsongs #msvhitsongs #4koldsongs
    கண்ணிலே என்ன உண்டு பாடல் | Kannilae Enna Undu song | S. Janaki | Sujatha, Vijayakumar sad song .Tamil Lyrics in Description .
    Movie : Aval Oru Thodar Kathai
    Music : M. S. Viswanathan
    Song : Kannilae Enna Undu
    Singers : S. Janaki
    Lyrics : Kannadasan
    பாடகி : எஸ். ஜானகி
    இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
    பெண் : கண்ணிலே என்ன உண்டு
    கண்கள் தான் அறியும்
    கண்ணிலே என்ன உண்டு
    கண்கள் தான் அறியும்
    பெண் : கல்லிலே ஈரம் உண்டு
    கண்களா அறியும்
    கல்லிலே ஈரம் உண்டு
    கண்களா அறியும்
    என் மனம் என்னவென்று
    என்னை அன்றி யாருக்கு தெரியும்
    பெண் : கண்ணிலே என்ன உண்டு
    கண்கள் தான் அறியும்
    கல்லிலே ஈரம் உண்டு
    கண்களா அறியும்
    பெண் : {நெருப்பென்று சொன்னால்
    நீரிலும் அணையும்
    நீர் என்று சொன்னால்
    நெருப்பிலும் வேகும்} (2)
    பெண் : நான் கொண்ட நெருப்பு
    அணைக்கின்ற நெருப்பு
    நான் கொண்ட நெருப்பு
    அணைக்கின்ற நெருப்பு
    யார் அணைப்பாரோ
    இறைவனின் பொறுப்பு
    என் மனம் என்னவென்று
    என்னை அன்றி யாருக்கு தெரியும்
    பெண் : கண்ணிலே என்ன உண்டு
    கண்கள் தான் அறியும்
    கல்லிலே ஈரம் உண்டு
    கண்களா அறியும்
    பெண் : சேலைக்குள் ஆடும்
    மங்கையின் மேனி
    மேனிக்குள் ஆடும்
    மனம் எனும் ஞானி
    பெண் : ஞானியின் மனமும்
    ஆசையில் தேனி
    ஞானியின் மனமும்
    ஆசையில் தேனி
    நான் ஒரு ராணி
    பெண்களில் ஞானி
    என் மனம் என்னவென்று
    என்னை அன்றி யாருக்கு தெரியும்
    பெண் : கோடையில் ஒரு நாள்
    மழை வர கூடும்
    கோயில் சிலைக்கும்
    உயிர் வர கூடும்
    பெண் : {காலங்களாலே
    காரியம் பிறக்கும்} (2)
    காரியம் பிறந்தால்
    காரணம் விளங்கும்
    என் மனம் என்னவென்று
    என்னை அன்றி யாருக்கு தெரியும்
    பெண் : கண்ணிலே என்ன உண்டு
    கண்கள் தான் அறியும்
    கண்ணிலே என்ன உண்டு
    கண்கள் தான் அறியும்
    பெண் : கல்லிலே ஈரம் உண்டு
    கண்களா அறியும்
    கல்லிலே ஈரம் உண்டு
    கண்களா அறியும்
    என் மனம் என்னவென்று
    என்னை அன்றி யாருக்கு தெரியும்

КОМЕНТАРІ • 54

  • @sakthiksmani9846
    @sakthiksmani9846 3 місяці тому +12

    ஜானகியின் குரலில் பாடல் வரிகள் கண்களில் நீரை வரவைக்கிறது

  • @selvakumark9342
    @selvakumark9342 6 місяців тому +16

    கவியரசு திரு கண்ணதாசன்....அவர்களின் அருமையான வரிகள்.....
    M S விஸ்வநாதன்....இசை
    S. ஜானகி.,....இவர்கள் மூவரும்

  • @xavierjeganathan9162
    @xavierjeganathan9162 7 місяців тому +49

    ஆண்கள் தறுதலையாக இருக்கும் வரை பெண்கள் சுமைதாங்கியாகத்தான் வாழ முடியும். கண்ணீரும் கந்தகமாகும். கனவுகளும் நரகமாகும். யாருக்காக வாழ்கிறோம் என்பதில்தான் வாழ்க்கையின் அர்த்தம் இருக்கிறது. அந்த யார்.... யார்...?? என்பதில்தான் வாழ்வின் சுவை இனிப்பா..? கசப்பா...?? என தீர்மானிக்கப்படுகிறது.

  • @BalaProfessor
    @BalaProfessor 4 місяці тому +6

    Appappa...enna super hit superb meaningful song. MSV matrun janaki thangal life koduthu padalai Uru akki irukkirargal.

  • @pazhanipanipuri2409
    @pazhanipanipuri2409 2 місяці тому +5

    பாடியது பெண் உணர்த்தி எழுதியது ஒரு ஆண் எழுதிக் கொடுத்தால் பாடுவான் பெண் அதை உணர்ந்தவனே ஆன் ஆச்சே

  • @keerthikanmani8481
    @keerthikanmani8481 6 місяців тому +10

    மனதை கலங்க வைக்கும் பாடல்

  • @anandharajasai
    @anandharajasai 3 місяці тому +5

    எனக்கு பிடித்த பாடல்

  • @Jothibasschokkalingam1960
    @Jothibasschokkalingam1960 Рік тому +12

    கண்ணிலே என்ன உண்டு என்ற வரிகள் மிகவும் அருமை எனது தேவதை நாகேஸ்வரிக்காக எழுதப்பட்ட பாடல்

  • @ravichandranc8895
    @ravichandranc8895 Рік тому +15

    என் கண்ணில் நீர் வருகிறது

  • @srinivasanveera
    @srinivasanveera 5 місяців тому +4

    an excellent song. The combination of SJanaki amma + MSV+kannadasan lifred this song to height. Sujatha action is awesome and given an life to the song. Balachander directiom

  • @saibaba172
    @saibaba172 Рік тому +15

    மிகவும் அருமையான பாடல்👍

  • @veerakumar4884
    @veerakumar4884 6 місяців тому +6

    ஜானகி குரலில் தேன் மழை

  • @xavierpaulraj9504
    @xavierpaulraj9504 2 місяці тому +3

    மயிலாப்பூர் காமதேனு தியேட்டர் ல பார்த்த திரைப்படம் அவள் ஒரு தொடர்கதை

  • @pazhanipanipuri2409
    @pazhanipanipuri2409 2 місяці тому +3

    ஒரு ஆண் மனதை பெண்ணாக ஆக்கி உணர்ந்து எழுதியது தான் இந்தப் பாடல்

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Рік тому +17

    கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய பாடல்
    MSVஇசை
    S.ஜானகி அவர்கள் தன் இனிய குரலில் நம் மனதைப் பிழிந்தெடுத்து விடுகிறார்
    K.பாலச்சந்தர் அவர்கள் இயக்கத்தில்
    1974 ல் வெளிவந்த படம்
    இராம அரங்கண்ணல் அவர்கள் தயாரித்த படம்

    • @thangamp3324
      @thangamp3324 Рік тому

      Ààaaaaaaaaààààààaaaàaààaaàaà

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj2314 4 місяці тому +3

    மயிலாப்பூர் காமதேனு தியேட்டர் ல பார்த்த திரைப்படம் 1980களில்

  • @rahmansharief3763
    @rahmansharief3763 Рік тому +7

    அருமையான பாடல்

  • @SELVISELVI-uw4tk
    @SELVISELVI-uw4tk Рік тому +7

    என் மனதை கவர்ந்த பாடல்.

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 8 місяців тому +3

      அந்தக் காலத்தில் வந்த ஜானகி குரல் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருந்தது

  • @vsathish8h272
    @vsathish8h272 2 місяці тому +4

    அவள் ஒரு தொடர்கதை

  • @Selvamgobal-bk1jl
    @Selvamgobal-bk1jl 7 місяців тому +2

    SUPER SONG I LIKE THIS SONG LYRICS KANADASAN SUPER GREAT M.S VISVANATHAN MUSIC S.JANAKI VOICE EXCLENT OLD IS GOLD

  • @Jjohnbritto-m9x
    @Jjohnbritto-m9x 9 місяців тому +5

    Miss you like sad song also nice to you

  • @SikandarSikandar-js9rn
    @SikandarSikandar-js9rn 3 місяці тому +1

    Amazing 😍 voice.S.janaki. Sujata first movie.k.balachandar.first.shoman.jaykanes.❤MS.V.isai.aruvi.❤ movie ❤

  • @pandureddy9753
    @pandureddy9753 Рік тому +8

    Very good song nice super

  • @mariejosephmalea3593
    @mariejosephmalea3593 4 місяці тому +2

    My Best song veri Good song ❤❤❤ by Robert Malea

  • @user-uq3lp7nh8v
    @user-uq3lp7nh8v 6 місяців тому +5

    அருமையானபதிவு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂

  • @vennilamoun3471
    @vennilamoun3471 4 місяці тому +2

    My favorite song.

  • @malar_seenu
    @malar_seenu 8 місяців тому +2

    My favourite Heroine and Song.Thank You. 🙏🙏

  • @BalukalaiJ
    @BalukalaiJ 2 місяці тому +1

    Very nice song.I like it.G.M.Balasubramanian

  • @somanathansobithampillai5952
    @somanathansobithampillai5952 9 місяців тому +4

    Super song

  • @rathimeena9553
    @rathimeena9553 9 місяців тому +4

    Rampa nalla song

  • @chandrasekar5867
    @chandrasekar5867 9 місяців тому +3

    Arumaiyanapatll

  • @vasanthik9208
    @vasanthik9208 11 місяців тому +4

    Arumai

  • @muruganabi7085
    @muruganabi7085 10 місяців тому +4

    ❤❤❤❤❤

  • @devitamil7967
    @devitamil7967 4 місяці тому +1

  • @gisakstone5917
    @gisakstone5917 7 місяців тому +3

    😢😢😢❤❤❤❤🎉🎉🎉🎉

  • @SivalingamL-xd1vu
    @SivalingamL-xd1vu 9 днів тому

    Many of jents all so cannot tell to others

  • @ms.mubarakfaizalms.mubarak1983
    @ms.mubarakfaizalms.mubarak1983 6 місяців тому +3

    THIS.SOGS.IAM.HAPPI.

  • @JamalmuhammadhJamal
    @JamalmuhammadhJamal 3 місяці тому +1

    🎉❤❤❤❤❤❤

  • @BakiyalashmiRajendran
    @BakiyalashmiRajendran Рік тому +4

    Super

  • @Fun_to_see_me
    @Fun_to_see_me 10 місяців тому +5

    Eval oru thodarkadhai #myself😅

  • @nithya3126
    @nithya3126 3 місяці тому +1

    Jayagopi

  • @nagenrakumar5631
    @nagenrakumar5631 6 місяців тому +3

    Movie name plźzzzzz

  • @thirumoorthi.gkala.772
    @thirumoorthi.gkala.772 8 місяців тому +2

    Penguin Ulla kumural.

  • @nithya3126
    @nithya3126 3 місяці тому +1

    2:21 2:23

  • @neethivendhan7004
    @neethivendhan7004 7 місяців тому +9

    இசை மேதை எம்.எஸ்.வி.ராமமூர்த்தி கவிப்பேரரசன் கண்ணதாசன்.குயிலசரசி சுசிலா.எஸ்.ஜானகி.எல்.ஆர்.ஈஸ்வரி.வாணிஜெயராம்.எஸ்.பி.பாலசுப்ரமணி.கே.ஜே.ஏசுதாஸ்.பி.பி.ஸ்ரினிவாஸ்.இவர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் கேவி மகாதேவன்.குமார்.டைரக்டர்கள் கே.பாலசந்தர்.இவர்கள் யாரையும் மறக்க முடியாது