பழுது அற ஓதி (திருப்புகழ் - 1174)

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024
  • இராகம் - ஆனந்தபைரவி
    இசையமைத்துப் பாடியவர் - பாண்டிச்சேரி ப.சம்பந்தம் குருக்கள்
    யாழிசை - பண்ணப்பட்டு S.வெங்கடேசன்
    முழவிசை - சென்னை K.மாதேஷ்வரன்
    முகர்சிங் - சிதம்பரம் S.ராஜேந்திரன்
    ஒளிப்பதிவு, எடிட்டிங் மற்றும் இயக்கம் - ரோஹித் சுப்பிரமணியனின்
    திருப்புகழ்1174
    பழுதற ஓதி கடந்து
    பகைவினை தீரத் துறந்து
    பலபல யோகத் திருந்து
    மதராசன்
    பரிமள பாணத்து அயர்ந்து
    பனை மடல் ஊர்தற்கு இசைந்து
    பரிதவியா மெத்த நொந்து
    மயல்கூர
    அழுதழுது ஆசைப் படுங்கண்
    அபிநய மாதர்க்கு இரங்கி
    அவர் விழி பாணத்து நெஞ்சம்
    அறை போய் நின்று
    அழிவது யான் முன் பயந்த
    விதி வசமோ மற்றை உன்தன்
    அருள் வசமோ இப் பிரமம்
    தெரிகிலேனே
    எழுத அரு வேதத்தும் அன்றி
    முழு தினுமாய் நிற்கும் எந்தை
    என ஒரு ஞான குருந்தர்
    உளம் மேவும்
    இரு உருவாகி துலங்கி
    ஒரு கன தூணில் பிறந்து
    இரணியன் மார்பை பிளந்த
    தனி ஆண்மை
    பொழுது இசையா விக்ரமன் தன்
    மருக புரரிக்கு மைந்த
    புளக படீர குரும்பை
    உடன்மேவும்
    புயல் கரி வாழ சிலம்பின்
    வனசர மானுக்கு உகந்து
    புனம் மிசை ஓடி புகுந்த
    பெருமாளே

КОМЕНТАРІ • 20

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 10 місяців тому

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏

  • @natarajankandaswamy7207
    @natarajankandaswamy7207 4 роки тому +3

    சம்பந்த குருக்கள் ஐயா குரல் என்றும் அதே லயத்துடன் மிகவும் எளிமையாக உள்ளது...

  • @thirukkayilai_23
    @thirukkayilai_23 4 роки тому +3

    மனம் மகிழ்ந்தது! ஐயாவின் குரல் அற்புதமானது

  • @maruthachalamkrishnasamy2846
    @maruthachalamkrishnasamy2846 4 роки тому +2

    காதில் தேன் மழை நன்றி அன்பரே இந்த மாலை நேரத்தில் மனதுக்கு மிகவும் சுகந்தமாக உள்ளது கைலாஷ் மானசரோவர் டெக்ஸ்டைல்ஸ் கோவை

  • @javanpannadi
    @javanpannadi 4 роки тому +1

    அண்ணா வணக்கம், தங்கள் எண்ணம் அனைத்தும் நிறைவேற இறைவன் அருள் புரிவாராக.!
    தமிழ் இசையினை மற்றோரு கோணத்தில் எடுத்து கொண்டு செல்ல வேண்டும் என்ற தங்களது பணி , சரித்திர புகழ் அடைய வேண்டியது! தங்கள் முயற்சிகள் அனைத்தும் நல்ல பலன் தர இறைவன் துணை வருவான்.! இத்துணை நாட்கள் நீங்கள் திருப்புகழ் பணி செய்தது.. எனக்கு சம்பந்தம் குருக்களை அறிமுகம் செய்தது உங்கள் சன்னல் தாம் .., நன்றி நன்றி.. கோடி புண்ணியம் அடைந்தான் .@
    இந்த நற்பணியில் எனது பின்னூட்டத்தையும் சற்று ஆலோசனை செய்து பாருங்கள்.. புதிய கோணத்தில் தமிழ் இசை பயணிக்க புதிய கருவிகளை அறிமுக படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்.. அதில் ஒன்று தான் " HANG DRUM" . அதன் இசை சற்று ஆன்மிக ஈர்ப்பை தரும்.. அதையும் கொஞ்சம் ஈடு படுத்த பாருங்களேன்.!!

  • @THAMILTIGERS
    @THAMILTIGERS 3 роки тому

    அற்புதம்

  • @KarthickM-em1md
    @KarthickM-em1md 4 роки тому +1

    மகிழ்ச்சி

  • @chelladuraimkp5962
    @chelladuraimkp5962 4 роки тому +1

    அருமை மனம்மகிழ்ந்தது

  • @KarthickM-em1md
    @KarthickM-em1md 4 роки тому +1

    நன்றி

  • @ushaellankaumaran5967
    @ushaellankaumaran5967 4 роки тому

    நமச்சிவாய ஐயா திருப்புகழ் திருத்தலம் பதிவிட்டால் நன்றாக இருக்கும் ஐயா

  • @sachchisubra8922
    @sachchisubra8922 2 роки тому

    Please and humble understanding is your heavenly tours in your hand

  • @nagendiransubbu949
    @nagendiransubbu949 4 роки тому +1

    🙏🙏🙏

  • @chandirasudan6379
    @chandirasudan6379 4 роки тому +1

    Karoki kudunga aiya.....

  • @aravamuthanr8203
    @aravamuthanr8203 4 роки тому +1

    அருமை 👌.

  • @karthickvelusamy1698
    @karthickvelusamy1698 4 роки тому +1

    So nice

  • @sivacnccentre4917
    @sivacnccentre4917 4 роки тому

    OM SIVA VELA MURUGA

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 4 роки тому +1

    👣🙏🙏🙏👍👌❤️💐

  • @jeyabalssk5372
    @jeyabalssk5372 4 роки тому

    ஓம்நமோ குமாராய

  • @ushaellankaumaran5967
    @ushaellankaumaran5967 4 роки тому

    திருத்தல பெயர்