Thalayai Kuniyum Thamaraye Video Song - Oru Odai Nadhiyagirathu | Raghuvaran | SPB | Ilaiyaraja

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • Oru Odai Nadhiyagirathu is a 1983 Indian Tamil-language film, written, produced and directed by C. V. Sridhar and starring Raghuvaran. The female leads were Sumalatha and Manochitra.
    #Raghuvaran #Sumalatha #ilaiyaraja
    For More Tamil Hit Songs Subscribe: bit.ly/3t5S5Ga
    Music Studio is a Music Library which brings in all melody to Rapp from old and new movies.

КОМЕНТАРІ • 62

  • @kpp1950
    @kpp1950 2 роки тому +30

    நம்மை விட்டு என்றும் பிரியாத SPB அவர்கள் பாடிய மிகச் சிறந்த பல பாடல்களில் இதுவும் ஒன்று.‌ கர்நாடக இசை இராகங்களில் ஒன்றான ரீதி கௌளை இராகத்தின் அடிப்படையில் அமைந்த ஒரு பாடல்.‌இசை இசைஞானி இளையராஜா அவர்கள் .‌

  • @vsrn3434
    @vsrn3434 8 місяців тому +12

    கிளாரினட்
    புல்லாங்குழல்
    வீணை
    வயலின்
    தபேலா
    இவர் களின் ஆர்பாட்டம்
    எதிரொலி..இப்படிப்பட்ட அட்டகாசமான பாடல்....

  • @PS2-6079
    @PS2-6079 2 роки тому +38

    1983-ம் ஆண்டு சித்ராலயா மூவிஸிற்காக CV.ஸ்ரீதர் எழுதி, இயக்கி, தயாரித்த படம்தான் "ஒரு ஓடை நதியாகிறது."
    பல முன்னணி நடிகர் நடிகைகளை தமிழ் திரை உலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமை இயக்குனர் CV ஸ்ரீதருக்கு உண்டு.
    நடிகர்கள் ரகுவரன், சுமலதா, மனோசித்ரா, பிரதாபசந்திரன், காத்தாடி ராமமூர்த்தி, M.R.கிருஷ்ணமூர்த்தி, டைப்பிஸ்ட் கோபு, அனுராதா மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சிக்காக உருவானது தான் கவிஞர் வைரமுத்துவின் இந்தப் பாடல் வரிகள்!
    சரி... பாடலிற்கு வருவோம்!
    ஆண் :
    "தலையைக் குனியும் தாமரையே
    என்னை எதிர்பார்த்து
    வந்த பின்பு வேர்த்து
    தலையைக் குனியும் தாமரையே"
    பிரபலமான "சின்னக் கண்ணன் அழைக்கிறான்", "கண்கள் இரண்டால், " "அழகான ராக்ஷஸியே" போன்று இந்தப் பாடலும் ரீத்தி கோவ்லா ராகத்தில் அமைந்த இளையராஜாவின் இசைக் கோர்வைக்குள் சங்கமித்தன பாடலாசிரியரின் கற்பனை வரிகள்!
    "பாடும் நிலா" பாலுவும், MS.ராஜேஸ்வரியும் மறைந்து விட்டபோதிலும் அவர்கள் சிறப்பாகப் பாடி இந்த பாடலிற்கு உயிரூட்டியதை மறுக்க முடியாதல்லவா?
    யார் இந்த ரகுவரன்?
    தமிழ் திரை உலக வரலாற்றில் கதாநாயகனாக அறிமுகமாகி பிறகு வில்லனாக உச்சம் தொட்ட நடிகர் இவராகத் தான் இருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன். வில்லத்தனம் நிரம்பிய எந்தப் பாத்திரமாக இருந்தாலும் நடிப்பதற்கு முன்னர் தன்னை தயார்படுத்தி, மெருகேற்றி நிஜ பாத்திரமாகவே அவர் வாழ்ந்து காட்டி ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றதை எல்லாம் மறுக்க முடியுமா?
    இல்லை... மறக்கத்தான் முடியுமா?
    நிற்க...
    கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தின் கொல்லங்கோடு கிராமத்தில் R.வேலாயுதம் நாயர் - கஸ்தூரி தம்பதியரின் தலைமகனாக ஜனித்த ரகுவரன் கோவையில் தன் பள்ளி படிப்பையும், கல்லூரி இளங்கலை படிப்பையும் முடித்தார். படிக்கும்போதே
    நாடகக் கலையில் நாட்டம் கொண்டு சென்னை திரைப்படக் கல்லூரியில் பயின்று நடிகனான போதிலும் இசையில் மிகுந்த ஆர்வம் காட்டினார். ஒரு சிறந்த இசையமைப்பாளராக வர வேண்டும் என்கின்ற அவரது ஆசை கடைசிவரை நிறைவேறாமல் போயிற்று. கல்லூரி பருவத்தில் KNOCK OUT எனும் இசைக்குழுவை நடத்தி வந்ததோடு நேரம் கிடைத்தபோதெல்லாம் பல பாடல்களை இசையமைத்து பாடி, பாட வைத்து பதிவு செய்து வைத்ததை எல்லாம் அவரது மரணத்திற்கு பிறகு உயிர்பெற்று காற்றோடு கலந்தது என்று சொன்னால் மிகையல்ல!
    அவரது சினிமா கனவு 1982 ஆம் ஆண்டு "ஏழாவது மனிதன்" படத்தின் மூலம் தமிழ் சாத்தியமாயிற்று. அவர் முதன்முதலாக நடித்தது நிழல்கள் ரவியும், ரோகிணியும் ஜோடியாக நடித்த "கக்கா" (Clam- கிளிஞ்சல்) எனும் மலையாள மொழி படத்தில் தான்!
    ஆனால் முதலில் வெளியான படம் "ஏழாவது மனிதன்." தமிழில் அவரது இரண்டாவது படமான "ஒரு ஓடை நதியாகிறது" படத்திற்கு பிறகு சில படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பதுதானே நிஜம்!
    விசுவின் சம்சாரம் அது மின்சாரம், மணிரத்தினத்தின் அஞ்சலி போன்ற படங்களில் அவரது குணச்சித்திர வேடம் பேசப்பட்டது.
    தன்னுடைய தனி ஸ்டைலான நடை, உடை, பாவனை மற்றும் வசன உச்சரிப்பால் தனக்கென தனி இடத்தை தக்க வைத்துக்கொண்டு தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களில் வலம் வந்த இவரது பங்களிப்பு இல்லாமல் பாட்ஷா, முதல்வன், புரியாத புதிர் ஆகிய படங்களை நினைத்து பாருங்களேன்!
    No Chance!
    தீராத போதைப் பழக்கம் காரணமாக காதல் திருமணம் முறிந்து மனைவியும் நடிகையுமான ரோகிணி, மகனுடன் பிரிந்து சென்ற சூழலும் திரையுலக மார்கெட் சரிவும் அவரை நிலைகுலைய வைத்ததை மறுக்க முடியாதல்லவா?
    அவர் இறுதியாக முழுமையாக நடித்துக் கொடுத்த படம் "யாரடி நீ மோகினி" என்று தான் ஞாபகம்!
    போதை பழக்கத்திலிருந்து அவர் மீண்டபோதிலும் தனிமையும், உடல்நலமின்மையும் அவரை வெகுவாக பாதித்ததால் திரைஉலகம் ஒரு திறமைமிக்க நாற்பத்தி ஒன்பது வயது கலைஞனை இழந்தது வருந்தக்கூடிய விஷயம்தான்!
    ஈடு செய்ய முடியாதது தான் அவரது இழப்பு என்றாலும் கூட அவர் வாழ்ந்து காட்டிய பேசும் ஒளி சித்திரங்கள் உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகின்றேன்.
    ஓம் சாந்தி.
    எதிர்பாராமல் கேட்க நேர்ந்த இந்தப் பாடலால் பல சுவாரஸ்யமான நினைவுகள் மனதை சஞ்சலப்படுத்தியதின் வெளிப்பாடு தான் இந்தப் பதிவு. எனவே, இந்த பாடல் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன்.
    நன்றி. மீண்டும் ரசிப்போம்!
    ப.சிவசங்கர்
    03.08.2022

  • @RameshK-ti1es
    @RameshK-ti1es 9 днів тому

    மனம் நெகிழ்கிறது இந்த பாடல்

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 5 місяців тому +6

    ❤hi.for.ilayaraja.music.composed.and.spb/s.rajeshwary.voice.very.(nice).tamil.flim/song-date:24/03/2024.

  • @mohamedmaideen3102
    @mohamedmaideen3102 4 місяці тому +1

    ரேடியோ அதிகம் ஒலித்த பாடல் இசையோடு இனைய வைத்த ரா.ஜா இசை எஸ் பி குரல் மிருதங்கம் தாளம் ❤

  • @Mr.G2118
    @Mr.G2118 Рік тому +7

    தலையைக் குனியும் தாமரையே
    தலையைக் குனியும் தாமரையே
    என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
    என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
    தலையைக் குனியும் தாமரையே
    நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்..
    நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்
    பாற்கடலின் ஓரம் பந்தி வைக்கும் நேரம்
    பாற்கடலின் ஓரம் பந்தி வைக்கும் நேரம்
    அமுதம் வழியும் இதழைத் துடைத்து
    விடியும் வரையில் விருந்து நடத்து.
    தலையைக் குனியும் தாமரை நான்
    உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
    உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
    தலையைக் குனியும் தாமரையே
    காத்திருந்தேன் அன்பே
    இனிக் காமனின்
    வீதியில் தேர் வருமோ
    பூமகள் கன்னங்கள்
    இனி மாதுளை போல் நிறம் மாறிடுமோ
    ஆயிரம் நாணங்கள்
    இந்த ஊமையின் வீணையில் இசை வருமா
    நீயொரு பொன் வீணை
    அதில் நுனிவிரல் தொடுகையில் பலசுரமா
    பூவை நுகர்ந்தது முதல் முறையா
    ம்ம் ம்ம் ம்ம்....
    வேதனை வேலையில் சோதனையா
    முதல் முறையா
    இது சரியா
    சரி சரி பூவாடைக் காற்று ஜன்னலை சாத்து
    பூவாடைக் காற்று ஜன்னலை சாத்து
    உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி
    உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி
    இரண்டு நதிகள் இணைந்து நடக்கும்
    புதிய அலைகள் கரையை உடைக்கும்..
    தலையைக் குனியும் தாமரையே
    தலையைக் குனியும் தாமரையே
    உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
    உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
    தலையைக் குனியும் தாமரையே...

  • @ravichandrang3724
    @ravichandrang3724 10 місяців тому +6

    எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காத பாடல்.

    • @Leyman06
      @Leyman06 6 місяців тому

    • @GanesankalaivaniGanesan
      @GanesankalaivaniGanesan 5 місяців тому

      ,yes

    • @BC999
      @BC999 5 місяців тому +1

      That is the HALLMARK of 95% of MAESTRO ILAYARAJA's output (songs and BG scores)!

  • @saravanant9209
    @saravanant9209 Рік тому +3

    Singing King SPB & MS Rajeswari - Absolute TREAT for LIFE. Then, No Need To Express About MUSIC KING SIR. ILAIYARAASA. Always Magnetic.

  • @vsrn3434
    @vsrn3434 8 місяців тому +2

    இத்தகைய பாடல் சிறப்பாக..வர பாடலாசிரியர்.வைரமுத்து .இசை திறமை கொண்டு வர பட இயக்குனர்.CVஸ்ரீதர் ..மூல காரணம்.....இத்தகைய பாடல் கள்..போன்று பட்டி தொட்டி முதல் ..உலகளாவிய. பரவ இளையராஜா க்கு ஆரம்பத்தில் உதவியது பாரதிராஜா போன்ற இயக்குனர்கள்......

  • @geekay70
    @geekay70 6 місяців тому +4

    Beautiful Reethi Gowla Ragam!

  • @sellamuthug7952
    @sellamuthug7952 3 місяці тому +1

    வரிகள், குரல்கள், இசை அனைத்தும் இனிமை.

  • @saravanant9209
    @saravanant9209 Рік тому +5

    Power of MUSIC KING

  • @kathirgamanathanganeshan5222
    @kathirgamanathanganeshan5222 Рік тому +3

    Super song, today I listen more than 100 times

  • @saravanana6122
    @saravanana6122 Рік тому +11

    பாடலின் தொடக்கத்தில் வரும் நாதஸ்வரம் தவில் கெட்டி மேள இசை அருமை. SBP ஒரு மேதை. இசை கடவுள் இளையராஜா வாழ்க நூறாண்டு. இளையராஜாவிற்கு மாற்று யாராவது உண்டா. யாராவது இருந்தால் சொல்லுங்கள். வாழ்க இளையராஜா.

  • @nchrishikesh7616
    @nchrishikesh7616 9 місяців тому +2

    The playback singer along with SPB is Kalaimamani S Rajeswari

  • @sarojakrishnamurthi1153
    @sarojakrishnamurthi1153 5 місяців тому

    I like this song ever. Particularly raghuvaran's peak period.

  • @sasikumarkalimuthu8012
    @sasikumarkalimuthu8012 Рік тому +1

    Ravuvaranai paarkum pothu happya irukku

    • @Leyman06
      @Leyman06 6 місяців тому

      Semma❤look

  • @ganesan3611
    @ganesan3611 2 роки тому +1

    Very Super Hit Song Thankyou 👌🌹💐🙏🏼🙏🏼❣️🎶👍🙏🏽🙏🏽

  • @user-mw3xt3qj1p
    @user-mw3xt3qj1p 4 місяці тому

    ரகுவரன் போன்ற ஒரு நடிகர் இனி கிடைக்க போவதில்லை 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @dr.dineshkumar1187
    @dr.dineshkumar1187 2 роки тому +5

    Very nice song , lyrics Vairamuthu awesome, Illayaraja God of music 🎶🎼🎶🎶

  • @s.parvathiparvathi1058
    @s.parvathiparvathi1058 2 роки тому +2

    Thank you llayajraj sir nice song

  • @Rajalakshmishanmugam-ec6yc
    @Rajalakshmishanmugam-ec6yc 5 місяців тому

    நீபார்க்கவிலைஎன்றால்நானம்என்ற உணர்வைஅறியமுடியுமே

  • @nirajshivaperumal7175
    @nirajshivaperumal7175 Рік тому +4

    THOSE WHO HATE ILAYARAJ BASED ON HIS CASTE-OF COURSE THAT IS THE ONLY REASON MANY UNCIVILISED DUMEELS HATE HIM SHOULD LISTEN TO THIS SONG

  • @vsrn3434
    @vsrn3434 8 місяців тому +2

    Not MS Rajeswari....singer S Rajeswari.....classic song teacher...

  • @hariharan6315
    @hariharan6315 5 місяців тому

    ❤spb yin then malai

  • @ram69354
    @ram69354 Рік тому +3

    S rajeswari amma and spb sir

    • @shiva-ml1cl
      @shiva-ml1cl Рік тому +3

      Illayaraja music also

    • @BC999
      @BC999 5 місяців тому +1

      @@shiva-ml1cl Not mere "also". COMPOSER FIRST, without whom the song does not exist. Then, what do you do with such good/great voices?!

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 3 місяці тому

    தலையை குனியும் தாமரையே
    தலையை குனியும் தாமரையே....
    வணக்கம்
    7/6/2024

  • @ramakrishnanms5546
    @ramakrishnanms5546 20 днів тому

    Rethi gowlai

  • @prakashkumar1488
    @prakashkumar1488 6 місяців тому +2

    2024 now..1/3/24

  • @ramakrishnanms5546
    @ramakrishnanms5546 20 днів тому

    Anybody know the Ragam

  • @kanagavalli9811
    @kanagavalli9811 9 місяців тому

    The thamarai why shy?