Naakku Chevandhavarae | Naatpadu Theral - 01 | Vairamuthu | Vagu Mazan | Kiruthiga Udhayanidhi

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • A village girl’s agony in Rock - Folk.
    காதலித்துக் கைவிட்டவனைக் காதலி கேட்கும் கேள்விகள்.
    *
    Naatpadu Theral is a 100 song project by Kavipperarasu Vairamuthu. 100 Composers - 100 singers - 100 Directors.
    கவிப்பேரரசு வைரமுத்துவின் நாட்படு தேறல் 100 பாடல்கள் திட்டம். 100 இசையமைப்பாளர்கள் - 100 பாடகர்கள் - 100 இயக்குநர்கள். வெவ்வேறு உள்ளடக்கங்களில் உலகத்தின் எல்லாப் பொருள் குறித்தும் பாடப்படும் பாடல்கள்.
    Song : Naakku Chevandhavarae
    Lyricist: Vairamuthu
    Composer: Vagu Mazan
    Singer : Vagu Mazan
    Director : Kiruthiga Udhayanidhi
    Produced by : Vairamuthu
    Video Crew :
    Artist
    Vagu Mazan, Preethy Karan, Sakthi Venkatraj, Kotil Vesli, Joyel Piruthvi, Kesav, Vijayalakshmi
    Video Credits :
    Dop : Richard M Nathan
    Art : Sakthi Venkatraj M
    Editor : Lawrence Kishore
    Choreographer : Dastha
    Costumer : Moorthy
    Costume designer : S D Ezhilmathy
    Makeup : Raj Kennedy
    Cinematography Team : Kedarnath.S , K.V.Pavithran
    Choreographer Assistant : Sabarish
    Associate Editor : Martin Titus A
    Online Edit : Don Mani
    Assistant Editor : Lokesh
    Art assistant : Kumaran
    Set assistant : Sekar
    Hairdresser : Venkat
    Makeup Assistant : Murugan
    Production Manager : E.Arumugam, K.V.Subramaniyam
    Making Video : Vandana Mazan
    Musician Credits :
    Song Composed, Arranged, Produced and Sung by Vagu Mazan
    Nadaswaram : Padmanaban
    Guitars and Bass : Vagu Mazan
    Additional Drums Arrangement - Goel Wesley
    Additional Keys Arrangement - Gowtham Raj
    Music Advisor - Vaishnavi Kannan
    Recorded at - D studio, Chennai
    Sound Engineers - Vaishnavi Kannan, Gowtham Raj
    Mixed by Vagu Mazan
    Mastered by S.Sivakumar
    Music Distrubution Partner : Believe Digital
    PRO : Nikil Murukan
    Office Administration : P.Baskaran , Kesavan Vellaichamy
    Line Production : Kanaa Ads
    ***
    Also Available on :
    Apple Music : / naaku-chevandhavarae-n...
    Amazon Music : music.amazon.i...
    Gaana : gaana.com/song...
    Resso : m.resso.app/ZS...
    Saavn : www.saavn.com/...
    Spotify : open.spotify.c...
    UA-cam Music : • Naaku Chevandhavarae (...
    ****
    Follow Facebook : / vairamuthuoffl
    Follow Twitter : / vairamuthu
    Follow Instagram : / vairamuthuoffl
    ****
    பாடல் வரிகள் :
    நாக்குச் செவந்தவரே
    நாலெழுத்து மந்திரியே
    மூக்கு வெடச்சவரே
    முன்வழுக்கை மன்னவரே
    கூத்து முடிஞ்சிருச்சு
    கொமரிப்புள்ள எதுக்குன்னு
    பாத்தும் பாக்காமப்
    பரபரன்னு போறீரோ!
    ஒருவாய் வெத்தலைய
    இருவாய் உண்டகதை
    திருவாய் மறந்தாலும்
    தின்னருசி மறந்திருமோ?
    *
    வைக்கப் போர்ப் படப்புக்கு
    வடஇருட்டு மூலையில
    அக்கப்போர் செஞ்சகதை
    அய்யனுக்கு மறந்திருச்சோ?
    சவரக் கத்திக்குத்
    தப்பிச்ச குறுமுடியில்
    முகர ஒரசுனது
    முழுசாத்தான் மறந்திருச்சோ?
    மொட்டு மொட்டு மல்லிகையை
    முட்டிமுட்டித் தட்டிவிட்டு
    முத்துமுத்து வேர்வைச் சொட்டு
    மோந்தகதை மறந்திருச்சோ?
    வாழைத் தோப்புக்குள்ள
    வளவி ஒடச்சகதை
    வாழை மறந்திருக்கும்
    வலதுகையி மறந்திருமோ?
    *
    தேனேறிப் போயிருந்த
    சிறுக்கிமக தலைமயிரு
    பேனேறிப் போனதய்யா
    பேச்சுவார்த்தை இல்லாம
    புள்ளித் தேமலுக்கும்
    புதுவேட்டி மடிப்புக்கும்
    கருப்பட்டி ஒதட்டுக்கும்
    கருத்தகிளி அலையுதய்யா
    ஆறுசரம் சங்கிலியோ
    அட்டிகையோ கேக்கலையே
    மஞ்சக் கயித்துக்கு
    மனசுக்குள்ள அரிக்குதய்யா
    ஆம்பளைக சகவாசம்
    அடுத்தொருத்தி வாரவரைக்கும்
    பொம்பளைக சகவாசம்
    புதைகாடு போறவரைக்கும்
    *
    Naakkuch chevandhavarae
    naalezhuthu mandhiriyae
    mookku vedachavarae
    munvazhukkai mannavarae
    koothu mudinjiruchu
    komarippuLLa edhukkunnu
    paathum paakkaamap
    parabarannu poaReeroa!
    oruvaay vethalaiya
    iruvaay uNdahadhai
    thiruvaay maRandhaalum
    thinnarusi maRandhirumoa?
    *
    vaikkap poarp padappukku
    vadaruttu moolaiyila
    akkappoar chenjahadhai
    ayyanukku maRandhiruchoa?
    chavarak kathikkuth
    thappicha kuRumudiyil
    muhara orasunadhu
    muzhusaathaan maRandhiruchoa?
    mottu mottu mallihaiyai
    muttimuttith thattivittu
    muthumuthu vaervaich chottu
    moandhahadhai maRandhiruchoa?
    vaazhaith thoappukkuLLa
    vaLavi odachahadhai
    vaazhai maRandhirukkum
    valadhuhaiyi maRandhirumoa?
    *
    thaenaeRip poayirundha
    chiRukkimaha thalaimayiru
    paenaeRip poanadhayyaa
    paechuvaarthai illaama
    puLLith thaemalukkum
    pudhuvaetti madippukkum
    karuppatti odhattukkum
    karuthahiLi alaiyudhayyaa
    aaRusaram changiliyoa
    attihaiyoa kaekkalaiyae
    manjak kayithukku
    manasukkuLLa arikkudhayyaa
    aambaLaiha chahavaasam
    aduthoruthi vaaravaraikkum
    pombaLaiha chahavaasam
    pudhaihaadu poaRavaraikkum
    *
    © 2021 Vairamuthu
    #Vairamuthu #NaatpaduTheral #NaakuChevanthavarae

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @Dadsamsa
    @Dadsamsa Рік тому +410

    Bigg boss la archana paadunatha kettu inga vanthavanga lam yaaru 👌

  • @karthickvel7498
    @karthickvel7498 2 роки тому +290

    ஆம்பளைங்க சகவாஷம் அடுத்த ஒருத்தி வரவரைக்கும்😶
    பொம்பளைங்க சகவாஷம் பொதகாடு போர வரவரைக்கும்😍
    ...... semma line😍
    It's true

  • @yogeshwarisivanandham1228
    @yogeshwarisivanandham1228 Рік тому +80

    Bigg boss 7 archana இந்த பாடலை பாடிய பிறகு வந்து கேட்டேன் மிக அருமையாக உள்ளது இந்த பாடல் ❤

  • @vijayraja1464
    @vijayraja1464 3 роки тому +526

    Who is watching after krithiga uthayanithi interview

  • @dp1983dp
    @dp1983dp 3 роки тому +873

    நான் ஓர் மலையாளி என்றாலும் தாய் தமிழுக்கு என்றென்றும் தலை வணங்குகிறேன்....
    🙏🙏🙏🙏

    • @jayasurya4381
      @jayasurya4381 3 роки тому +6

      ❤🌹👍🌹🌹🌹

    • @kirthikas4340
      @kirthikas4340 3 роки тому +3

      D p 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @arunnatarajan7464
      @arunnatarajan7464 3 роки тому +7

      Nee malayali lam ipa kadha udatha summa

    • @vinayagmuruga9344
      @vinayagmuruga9344 3 роки тому +6

      நன்றிகளும் வாழ்த்துக்களும்
      பலகோடி💐💐💐💐💐💐💐💐💐💐💐💐உங்களுக்கும், உங்களை போன்றவர்களுக்கும்👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @akhilaa9423
      @akhilaa9423 3 роки тому +3

      Nandri. 🙏💐

  • @elangovan6143
    @elangovan6143 Рік тому +12

    இந்த பாடல் பிக்பாஸ் அர்ச்சனா பாடுகிற வரை கேட்டதில்லை ❤ super

  • @Gethkarthi
    @Gethkarthi 3 роки тому +456

    கேட்ட உடனே புடிச்சு போச்சு❤️❤️❤️❤️😍😍😍😍😍 வைரம் போன்ற வரிகள்..வைரமுத்து அவர்களால் மட்டுமே கொடுக்க முடியும்.

  • @shaliniravi6976
    @shaliniravi6976 3 роки тому +161

    🔥🔥கூத்து முடிஞ்சிருச்சு
    குமரிப்புள்ள எதுக்குன்னு
    பாத்தும் பாக்காமப்
    பரபரன்னு போறீரோ !💥💥 What a line✨ பொய் காதாலில் ஏமாறும் பெண்களின் வலி🖋️💫

  • @EDS_seenu_Edits
    @EDS_seenu_Edits Рік тому +15

    Big boss laa Archana🥰 paadunathukku aprom vanthen....enna song yaaa ithu😍

  • @MaheshKumarSTSV
    @MaheshKumarSTSV 3 роки тому +186

    வைரமுத்து வின் கவிக்கு தமிழ் சினிமா தீனி போடமுடியாததால், அவரே நமக்கு படையல் போட்டு விட்டார்... நன்றி அய்யா...

  • @salemsmartkids1770
    @salemsmartkids1770 Рік тому +7

    Yaarellam big boss archana padiyappin indha paadalai paaka vandheenga please like pannunga

  • @mathankumar6508
    @mathankumar6508 Рік тому +16

    Bigboss அர்ச்சன்னா பாடுனது நல்லா இருக்கு

  • @abbasamithaf8582
    @abbasamithaf8582 Рік тому +214

    பிக்பாஸ் அர்ச்சனா பாடிய பிறகு தான் இப்படி பாடல் உள்ளது என்று

    • @n.s.k7473
      @n.s.k7473 Рік тому +2

      Me

    • @nkcreation1324
      @nkcreation1324 Рік тому +2

      Avanga paadunadhu youtube la illa

    • @mathankumar6508
      @mathankumar6508 Рік тому +2

      அத பாத்துட்டு தான் நானும் பாக்க வந்த

    • @logeshlogu7676
      @logeshlogu7676 Рік тому +2

      Also me

    • @barvinkumari7245
      @barvinkumari7245 Рік тому +2

      After listening from archana I came to see this video.Really nice song

  • @BABybaby-db1ct
    @BABybaby-db1ct Рік тому +11

    Bigg Boss la archana entha song super ah padirukaga...ethu ena song ketathu ilanu search pani keten super ❤

  • @santhosht4725
    @santhosht4725 3 роки тому +796

    இது மாதிரி ஒரு தமிழ் பாடலை கேட்க எத்தனை நாள் காத்திருந்தோம் வாழ்க தமிழ்

    • @avinashgowtham6618
      @avinashgowtham6618 3 роки тому +37

      @@agilan6930 இந்த பாடலை புரிந்து கொள்ளும் அளவுக்கு உங்களுக்கு தகுதி இல்லை...

    • @babuappasamy9595
      @babuappasamy9595 3 роки тому +5

      Innum neraiya peruki theriyala bro athan add illa athan

    • @govindarajraja9803
      @govindarajraja9803 3 роки тому +1

      Nanumtha Bro

    • @subhashinikirubanandhan7143
      @subhashinikirubanandhan7143 3 роки тому

      @@k.mshakthisri8549 0hvc#

    • @Priyanga.V
      @Priyanga.V 3 роки тому +2

      Enakum pudichiruku

  • @arunkrarunkr1200
    @arunkrarunkr1200 3 роки тому +93

    வைரமுத்து எழுதிய பாடல் வரிகள் அருமை இந்த மாதிரி பாடலுக்கு அதிக பார்வையாளர்கள் வரவேண்டும் என் கருத்து

  • @naturelover1323
    @naturelover1323 3 роки тому +279

    வரிகளுக்காகவே இந்த பாட்டுக்கு லைக்👍

  • @VenkatJ-m5o
    @VenkatJ-m5o Рік тому +9

    அர்ச்சனா சூப்பர்

  • @Aathiraamullai
    @Aathiraamullai 3 роки тому +487

    பாடல் முழுவதும் தமிழ் எழுத்து.“ஆம்பளங்க சகவாசம் அடுத்தொருத்தி வரும் வரைக்கும் பொம்பளங்க சகவாசம் பொத காடு போர வரைக்கும்.... இது கவிஞரின் கையெழுத்து (சிக்னேச்சர் வரி). வைர வரி.. அழகு. ஆழம்.

    • @deenakaran9243
      @deenakaran9243 3 роки тому +12

      சகோதரி இப்போ எல்லம் பசங்கா எவலவோ தேவலம் ...

    • @SureshSuresh-qg2nv
      @SureshSuresh-qg2nv 3 роки тому +2

      Yeah

    • @gandhan3699
      @gandhan3699 3 роки тому +5

      காலங்காலமா அப்படித்தான் வைரமுத்து எழுததறாரு....
      சவரக்கத்திக்கு..... அந்த வரிதான் அவருக்கே தெரியாம வந்திரிச்சிபோல....

    • @destroyedsoul1791
      @destroyedsoul1791 3 роки тому +7

      @@surenderkamala9413 aambailanga ore ponnu kooda iruka maatangalam.puthusa oruthi vanthuta Ava kooda poidu vaangalam.aana ponnunga sudukaatuku pora varaikum oruthanaiye than nenaipangalam.ithan antha variku artham.intha kaalathula ithu saathiyame illa.

    • @suryapravinantony.p1859
      @suryapravinantony.p1859 3 роки тому +4

      அது தான் வைரமுத்து 😉

  • @Dinesh-gh7pn
    @Dinesh-gh7pn Рік тому +7

    Intha song Biggboss la Archana sing pananga Anga irunthu straight ah Inga tha varaen sema songs 🤗🤗

  • @jdmohan51
    @jdmohan51 3 роки тому +60

    ஆண்களின் ஆசை மொழி முதலில் கொண்டாட்டம்,
    காதலினால் பேதை பெண்
    அதை நம்பியதால் திண்டாட்டம்.
    அருமையான காணொளி ஆக்கம்.

  • @VelMurugan-jr7wl
    @VelMurugan-jr7wl 3 роки тому +58

    ஐயோ...
    உயிரையே உலுக்கி எடுக்குதய்யா உமது வரிகள்..
    காந்தக் குரலால் கட்டி இழுக்கும் இந்த கவி குயிலுக்கு காலமெல்லாம் நன்றிகள்..
    அற்புதமான வரிகளுக்கு அருமையான காட்சி அமைப்பு..
    என் தமிழே இங்கு மகிழ்வுடன் மலர்ந்திருக்கிறது..

  • @jayaprakash-oj1yb
    @jayaprakash-oj1yb 3 роки тому +331

    இங்கிலீஷ் பேசினாலும் தமிழன் என்ற உணர்வை கொடுக்கிறது இந்த பாடல்

    • @komathik9263
      @komathik9263 3 роки тому +4

      Sir, Did you really understand more about the core content of this song rather than English or Tamil as such?

    • @jagansworld2885
      @jagansworld2885 3 роки тому +6

      BRO தமிழ் MAATHIRI ENTHA MOLYUM VARATHU ORU VAAI VETHALAYEA 😍favorite

    • @pavithra9535
      @pavithra9535 3 роки тому +1

      I don't know why people are praising the person who speaks fluent English come on guys it's just a language for global level communication it's not a knowledge or our identity our mother tongue is our identity now a days people wants to learn German, Spanish, French etc but they don't want to learn their mother tongue tamil and they likes to say in social media oh tamil is such a beautiful language but still we won't learn

    • @jayaprakash-oj1yb
      @jayaprakash-oj1yb 3 роки тому

      @@anjubala7324 hai

    • @jayaprakash-oj1yb
      @jayaprakash-oj1yb 3 роки тому

      @@anjubala7324 fyn

  • @bharathibharu8670
    @bharathibharu8670 Рік тому +8

    Na intha song ah first time kekran insta la arachana akka padanaga atha pathutu vanthu pakran ❤❤❤

  • @revathirengarajan2012
    @revathirengarajan2012 3 роки тому +162

    பெண் ஆழ்மனத் தவிப்பிற்கு அழகான வடிகால்.வாகு மசான் குரல் வாகின் குளிர்ச்சி. இருவித இசையை ஒன்றாய் இழைத்துக் காண்பதில் இன்ப அதிர்ச்சி.மிகவும் மகிழ்ச்சி.

    • @gandhan3699
      @gandhan3699 3 роки тому

      வாஃகு மசான் நல்லா பன்னிருக்காங்க ஆனா வைரமுத்து தான் நல்லா பன்னல.... பெண் நிலையில் நின்னு எழுதனமாதிரி எனக்குப்படல..... ஒரு ஆண் பெண்ணோட தவிப்ப பாடறமாதிரிதான் இருக்கு.... அதுதான் இந்தபாட்டோட கொற.....my opinion

    • @rockervijaygaming9452
      @rockervijaygaming9452 3 роки тому +1

      @@gandhan3699 illa bro idhu innum vaira muthu dhan kaaranam yen na avar ipadiye nalla paadal kuduthu palakittaar idhe arasiyal influence illaama, pudhusaa yaaraavadhu pannirundha payangara hit neengalu ipdi sollirukka maattinga

    • @gandhan3699
      @gandhan3699 3 роки тому

      @@rockervijaygaming9452 😀😀😀😀
      1 நான் பெரியார் அண்ணாவின் கொள்கைகளில் ஈடுபாடு உள்ளவன்தான்....
      2 கலை என்பது கலைக்காக என்றாலும் சரி கலை என்பது மக்களுக்காக என்றாலும் சரி..... கலையை கலையாக அணுகனும்னு நான் நினைக்கிறேன்.
      3 நாள்படு தேறல் கு முன்ன தேள்கடுப்பன்ன நாள்படு தேறல் னு வரும்......
      அதாவது தேள் கொட்டியதுபோல் சுர்ர்ருனு ஏறுமாம் நாள்பட்ட கள்......
      இந்த பாட்டு வரிகள் அப்படியாங்க இருக்கு.....?

    • @rockervijaygaming9452
      @rockervijaygaming9452 3 роки тому

      @@gandhan3699 உண்மை நன்பா நானும் அப்படித்தான் நினைக்கிறேன் ஆனால் இதை நாம் ஒவ்வொருவரிடமும் நாம் சென்று கூற முடியாது அல்லவா

    • @manakulammudhukulathur9551
      @manakulammudhukulathur9551 3 роки тому

      Me🙋

  • @pandiyan7047
    @pandiyan7047 Рік тому +8

    Tq archana vera level song💗🎧🎧

  • @paramana1677
    @paramana1677 3 роки тому +241

    10 முறை மேல் கேட்டுவிட்டேன் சலிப்புத் தட்டாத அழகான கிராமிய பாடல்

  • @RajRaj-jr9mc
    @RajRaj-jr9mc 3 роки тому +1

    நான் இந்த பாட்ட ரொம்ப நாளா பக்குர,ஆனா இன்னிக்கு பாத்த very best

  • @sushmoandhanapal
    @sushmoandhanapal 3 роки тому +232

    ஒரு வாய் வெத்தலைய இரு வாய் உண்ட கதை.... பாடலின் ஆரம்பத்திலேயே காதலின் ஆழத்தையும் காதலர்களின் நெருக்கத்தையும் அருமையாக உணர்த்திய நேர்த்தி உங்களுக்கே உண்டான ஓர் தனித்துவம் ஐயா

  • @livethelife7530
    @livethelife7530 3 роки тому +6

    பாடகி....1000 வணக்கம்

  • @armfaseelmubarak
    @armfaseelmubarak 3 роки тому +166

    "சவர கத்திக்கு தப்பிச்ச குறுமுடியில் மொகற ஒரசினது ..." பழைய காதலியின் நினைவுத் தீப்பொறிகளில் ஒன்று லேசாகப் பட்டுச் சுட்டுச் சென்றது.

  • @syedali-zv8fp
    @syedali-zv8fp Рік тому +7

    Bigg boss Archana intha song paduchathu aprm dhan thrum eni Parpanga ....bigg boss pathitu vanthu intra song Pathavanga oru like pannuga

  • @karthia6827
    @karthia6827 3 роки тому +121

    உலகின் தலைசிறந்த மொழியை தலைசிறந்த கவிஞரின் வரிகள் கேட்பதற்க்கு இனிமை

  • @MrBoss-eb1kv
    @MrBoss-eb1kv 3 роки тому +2

    மிகவும் அருமை வாழ்த்துக்கள் வரிகளில் இருந்த பழமை இசையில் இல்லையோ என்ற ஏக்கம் எனக்குள் வந்தது பழமை பழமையாகவே இருந்திருக்கலாம்...

  • @rajeshrj9343
    @rajeshrj9343 3 роки тому +1690

    இந்த பாட்ட நான் தினமும் கேக்குற🎧 ஆனால் இந்த பாட்டு ஏன் இன்னம் அதிக பார்வையாளர்கள் வரல 🤔

    • @tamilserialsonyoutube9903
      @tamilserialsonyoutube9903 3 роки тому +104

      ஏன் என்றால் பாட்டு முழுவதும் தமிழ் ததும்புகிறது .. அது மட்டும் தான் காரணம்..

    • @chozhan6089
      @chozhan6089 3 роки тому +51

      Music manasula nikkala pattukum isaikum ottave illa athan nikkiren but lyrics semmaya irkku❤️

    • @jayamanijoseph1789
      @jayamanijoseph1789 3 роки тому +5

      ஞநவவவ

    • @baskardurai775
      @baskardurai775 3 роки тому +8

      Earphone

    • @barathis9356
      @barathis9356 3 роки тому +4

      Enakku aptithan thonuthu

  • @sandycreations.
    @sandycreations. 3 роки тому +13

    பெண்களின் ஆல் மனதில் உள்ள மறக்கமுடியாத சில... உறவுகளின் உணர்ச்சி வெளிப்பாடு... இந்த பாடல் வரிகள்... 😔💔

  • @kalaivanisaravanan7056
    @kalaivanisaravanan7056 3 роки тому +905

    ஆம்பளைங்க சகவாசம் அடுத்தொருத்தி வர வரைக்கும்...
    பொம்பளைங்க சகவாசம் பொதகாடு போற வரைக்கும்....
    Unmai 💯😏

    • @pitacokarthi7840
      @pitacokarthi7840 3 роки тому +22

      ஏது நீங்க பாத்திங்க😒😒

    • @Raja_yesudas
      @Raja_yesudas 3 роки тому +19

      தண்ணில எழுதி வசிகொங்க நீங்க சொன்னது

    • @vijayre1050
      @vijayre1050 3 роки тому +4

      👍👍🔥🔥🔥

    • @Dr_A01
      @Dr_A01 3 роки тому +3

      Means

    • @maharajan1442
      @maharajan1442 3 роки тому +3

      Mairu

  • @livethelife7530
    @livethelife7530 3 роки тому +2

    இந்த இசைக்கு ஒரு நோபல்

  • @Selvimuthu1409
    @Selvimuthu1409 3 роки тому +18

    மீண்டும் ஒரு கிராமத்தில் செல்வது போல் ஒரு தோற்றம் ரம்மியமான வரிகள் பாடல் அருமை கவிஞர் வரியில் என் மகிழ்வு முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்.பாலம் இருளப்பன்

  • @selvamps24
    @selvamps24 3 роки тому +3

    பிரமாண்டம்
    அருமை அனைத்து கலைஞர்களுக்கும் பாராட்டுகள்
    வைரவரிகளார் வைரமுத்து சார் வரிகள் அனைத்தும் தேன் சுவை
    வாழ்த்துகள்
    இது உலகம் பூரா பெரிய வைரலாக வேண்டும் வாழ்த்துகள் கோடி

  • @madhanpanneer4644
    @madhanpanneer4644 3 роки тому +72

    பல ஆண்டுகள் கழித்து பிறந்த தாய் மண்ணில் தாய் கையால் உண்ணும் போது முதல் வாய் சோறு தொண்டையில் இறங்கும் போது கண்ணில் கண்ணீர் இறங்குமே அந்த உணர்வை இப் பாடல் தருகிறது... நன்றி ஐயா...

  • @naturelover7809
    @naturelover7809 3 роки тому +1

    இந்தப் பாட்டை தேடிக் கண்டுபிடிப்பதற்கு இரண்டு வார காலம் ஆகிவிட்டது மிகவும் அருமையான பாடல் கிராமிய த்தின் பாடல் இன்றைய காலகட்டத்தில் அழிந்து வரும் நிலையில் இப்பொழுது வந்திருக்கும் இந்த மாதிரியான பாடல்கள் வரவேற்கத்தக்கது. 👏👏👏👏👏

  • @karuppukadaul3940
    @karuppukadaul3940 3 роки тому +58

    என் தமிழுக்கு கிடைத்த தமிழ்பெரும் கவியே உம்மால் பெருமை கொள்வோம்.கொண்டாடுவோம். வாழ்த்துக்கள் பேரரசே

  • @sivabalan2829
    @sivabalan2829 3 роки тому +27

    முத்து முத்தாய் வரிகள்... மனமாடுகிறது ஆடிக்காற்றில் அரச மரத்து இலைகளாய்.... வாழ்த்துகள் வைரமான முத்து அய்யா...

  • @jerishope
    @jerishope 3 роки тому +11

    அய்யோ இந்த பாட்ட நான் தேடாத இடம் கிடையாது இசையருவி சேனல்ல இந்த பாட்ட கேட்டுட்டு எப்படா இந்த பாட்ட ரிலீஸ் பண்ணுவாங்கனு ஏங்கிட்டு இருந்த இந்த பாட்டுக்காக மட்டுமே இசையருவி சேனல் வெச்சு பாத்துக்கிட்டே இருப்பேன் எப்போ இந்த பாட்டு போடுவாங்கனு கரெக்டா 1hr once potruvanga athum opening song ah I really love this song pls ithe mathiri song kudunga ஆனா ஏன்‌ இன்னும் இந்த பாட்டு நெறையா பேருக்கு reach agalanu therila but gudos to the team congratulations team sprrrb

  • @Sandy_2410
    @Sandy_2410 4 місяці тому +2

    Inthe song elaruku theriya karanamey....bigboss la archana padunathu tha...aprm tha ipadi oru song irukarathey theruchuthuuu ....sema song❤❤❤❤

  • @anandhraja8864
    @anandhraja8864 3 роки тому +35

    ஒரு வாய் வெத்தலய இரு வாய் உண்ட கதய எத்தனை முறை கேட்டாலும் சலிக்கல😍

  • @voiceofchennai4439
    @voiceofchennai4439 Рік тому +7

    Bigg boss Archana favourite song. She sung well in bb

  • @Ambikakumaran-v6o
    @Ambikakumaran-v6o 3 роки тому +19

    ஆம்பிளைக சகவாசம் அடுத்தொருத்தி வர வரைக்கும்
    பொம்பளைக சகவாசம் பொதைகாடு போகவரைக்கும்// மிகவும் அருமை
    பாடல் வரிகளும் இசையும்
    வாழ்த்துகளும் வணக்கமும். 💐

    • @naliniraman2227
      @naliniraman2227 3 роки тому

      Sssss

    • @Raja_yesudas
      @Raja_yesudas 3 роки тому

      Unga husband Ippo avaroda ex lover kooda contact la irundha accept pannipingla sister ????

    • @ramya9028
      @ramya9028 3 роки тому

      @@Raja_yesudas ella aangalum thappanavargal alla. Wife ah angel mathiri pathukitta santhosama life pogum athu purinjikkama better nu thedi thedi wife ku throgam panravanga gents tha athigam. 1st than best 2nd eppavume nilaikkathu

    • @prabuprabuspn8437
      @prabuprabuspn8437 3 роки тому

      @@ramya9028eppo ellam ponnugathan appati irukku
      Passanga maritanga..

    • @ramya9028
      @ramya9028 3 роки тому

      @@prabuprabuspn8437 alagana ponna patha nenga thirumba pakamatengana nenga nallavar than

  • @SanjeevKumar-ur8dm
    @SanjeevKumar-ur8dm 2 роки тому +7

    வாழ தோப்புகுள்ள வளவி ஓடச்ச கத,
    வாழ மறந்திருக்கும் வலது கை மறந்திருமோ...? 🤔
    You are a Legend Sir...😍💙✨

  • @Mrvfxmanoj
    @Mrvfxmanoj 3 роки тому +94

    What a vocal she has western tamil culture collab... Rocking

    • @arunmohan6567
      @arunmohan6567 3 роки тому +3

      Yes, she is unique...Happy to see her after Vijay tv..

    • @ramsyoutube8743
      @ramsyoutube8743 3 роки тому

      Her name

    • @riyazahamed4856
      @riyazahamed4856 3 роки тому

      @@ramsyoutube8743 vagu mazan

    • @arunmohan6567
      @arunmohan6567 3 роки тому +2

      @@ramsyoutube8743 ..it's written in song name bro...vagu mazan

  • @StudyCAwithme
    @StudyCAwithme Рік тому +6

    How many of you see this song sung by VJ archana on BB7 tamil ❤

  • @agnipradeep4744
    @agnipradeep4744 3 роки тому +23

    முத்தமிழின் ஊற்றால் வீற்றிருக்கும் கவிப்பேரரசு அவர்களின் தமிழாற்றுப்படை சாதனைக்குப்பின் "நாட்படு தேறல்" தமிழ் மொழியும் மக்களிசை பாடலும் வாழ்வியலும் பாடல் மரபும் மீட்டெடுக்கும் புரட்சி பயணம். வெல்க தமிழ்

    • @gandhan3699
      @gandhan3699 3 роки тому

      நாட்படு தேறல் னா என்னா பா....?

  • @kombaiahpandian.v9259
    @kombaiahpandian.v9259 3 роки тому +7

    வைரமுத்து வைர வரிகள் .... அழகான தமிழ் பாடல் ...
    தமிழ் வாழ்க!

  • @kanis2116
    @kanis2116 3 роки тому +180

    இந்த மாதிரி ஒரு தமிழ் வார்த்தை கேட்க எத்தனை காலம் காத்திருந்தோம்

    • @manipk3541
      @manipk3541 3 роки тому +5

      நானும் கேட்டேன் அருமையான தமிழ் வார்த்தை வைரமுத்து வரிகள் அருமை

    • @MariMuthu-gu4id
      @MariMuthu-gu4id 3 роки тому +1

      Super.na.enta.patta.kettu.aananta.kanner.perukeduccu

    • @manigounder4581
      @manigounder4581 3 роки тому

      @@manipk3541 7

    • @kathirgayu7755
      @kathirgayu7755 3 роки тому

      @@manipk3541 MN?nmnnnnnnnnnn???nmnnnnn

    • @kathirgayu7755
      @kathirgayu7755 3 роки тому

      @@manipk3541 ?Mann?m

  • @balajisiva632
    @balajisiva632 2 роки тому

    எனது நண்பன் சக்திவெங்கட்ராஜ் நடித்த கிராமத்து பாடல் மிக மிக அருமை,வாழ்க வளமுடன்.👌

  • @sathiyaneeethanapal848
    @sathiyaneeethanapal848 3 роки тому +6

    கவிப்பேரரசு வைரமுத்து வரிகள் ஒவ்வொன்றும் வைரமும் முத்தும் தான். இசையும் சிறப்பு வாழ்த்துகள்

  • @the_dinesz
    @the_dinesz Рік тому +9

    ❤Bigg boss la archana padunatha kettu vanthavaga like pottu ponga👉

  • @ashokraj3823
    @ashokraj3823 Рік тому +5

    Ippodhan bigg Boss Archana bb7 la paadunaanga superb

  • @livethelife7530
    @livethelife7530 3 роки тому +15

    இந்தப் பாடல் பொக்கிஷம்...காலத்தால் அழியாத காவியம்...இந்தப் பாடலுக்கு பங்களிப்பு செய்த அனைவரையும் பிரமிக்கிறேன்....வைரமுத்து ஐயா உமது கட்டை ,ஆட்காட்டி விரலுக்கு ஒரு முத்தம்

  • @penatheivam34
    @penatheivam34 3 роки тому +45

    இதுதான் உண்மையான தமிழ் ருசி உள்ள நான் பார்த்து வியந்த பாடல்

  • @varadharajan.m1969
    @varadharajan.m1969 2 роки тому +1

    First' time kekkuren vera level lyrics Aiya vairamuthu sir gramathu vaasam veeuthu paatula arumai. Thodarattum Tamil payanam

  • @ThreeTamilselvi-01
    @ThreeTamilselvi-01 3 роки тому +4

    ஆறு சவரன் சங்கிலியோ அட்டிகையும் கேட்கலாய !!... மஞ்சள் கையித்துக்கு மனசுக்குள்ள அரிக்குதையா !!!.... ஆம்பளைங்க சாவகாசம் அடுதொறுத்தி வரும் வரைக்கும் , பொம்பளைங்க சாவகாசம் பொதாக்காடு போறவரைக்கும் ❗❗- வைரமுத்து❣️❣️❣️

  • @choco_prinxe
    @choco_prinxe Рік тому +6

    Bigg Boss house VJ Archana பாடியபிறகு யாரெல்லாம் இங்கு வந்து கேட்டீங்க 🖐️

  • @vikramk2691
    @vikramk2691 3 роки тому +725

    Cuckoo cuckoo mari indha song um vera level reach agunu yarellam ninaikiringa....😍?

  • @livethelife7530
    @livethelife7530 3 роки тому +2

    இந்தக் குரலுக்கு ஒரு ஆஸ்கர்

  • @soundkizhiyuthu
    @soundkizhiyuthu Рік тому +9

    who is here to watch after #Arachana sang this in #biggboss

  • @iyappantamil1602
    @iyappantamil1602 3 роки тому +1

    வைரமுத்தின் வரிகளே வரிகள்ளையா.......... ❤️.... வைர வரிகள்

  • @selvamk5628
    @selvamk5628 3 роки тому +18

    வைரமுத்து அவர்களின் வரிகள் கேட்பதே சுகம் இந்த பாடல் ரொம்ப நல்லா இருக்கு

  • @shivakumarramaswamy8556
    @shivakumarramaswamy8556 Рік тому +14

    Yesterday 1.1M , today 1.6M...Reason: archana 🔥

  • @naveennaveen644
    @naveennaveen644 Рік тому +8

    Thanks to bigg boss Archana

  • @Rupa_murugan
    @Rupa_murugan 3 роки тому +15

    தமிழ் மொழிக்கு தரமான மகுடம்🔥🔥இப்பாடல்....

  • @vishwaannamalai84
    @vishwaannamalai84 3 роки тому +48

    என் உயிரில் உங்கள் கவிதை ஊறிப்போய் இருக்கிறது வாழ்க உங்கள் கவிதை வாழ்க தமிழ் வாழ்க வைரமுத்து....🙏

  • @lifeofsiva3575
    @lifeofsiva3575 Рік тому +8

    Archana paduna speed version nalla irunchu ❤

  • @bapuandavar11104
    @bapuandavar11104 3 роки тому +13

    கம்பனும் பாரதியும் முத்தமிட்டும் தும்பை போல கற்பு பெற்ற தமிழின் தலைமகனே, கவிதை - இலக்கியத்திற்கு இலக்கணம் வகுத்து எளிய முறையில் ஓர் ஈசப்புகழ் நூல் ஒன்று படைப்பீராக. நன்றி

  • @hemaramasamy6080
    @hemaramasamy6080 Рік тому +3

    Thanks to Archana singing this song on Bigg Boss 7 last night - such a good song 👏🏼

  • @rajneeshbagvan2176
    @rajneeshbagvan2176 3 роки тому +15

    தரமான சம்பவம்....ஆம்பளைங்க சகவாசம் அடுத்து ஒருதிவரவரைகும் பொம்பளைங்க சகவாசம் போத கா டு போரவரைகும்...

  • @rameshkumaran8693
    @rameshkumaran8693 3 роки тому +2

    Verithanam, Arumaiyana Tamil Padal, Vazhlthukal Tamil Pulavare

  • @STP24
    @STP24 3 роки тому +31

    மீண்டும் வைரமுத்துவின் வைர வரிகள்😍👍🔥

  • @kumarkumaran9894
    @kumarkumaran9894 Рік тому +9

    Archana padura version nalla iruku

  • @jayasubramaniyan7615
    @jayasubramaniyan7615 3 роки тому +19

    Krithiga mam direction and vaira muthu sir lyrics sema

  • @mahalingamrathinam
    @mahalingamrathinam 3 роки тому +2

    இந்த பாடலை நான் பலமுறை கேட்டு விட்டேன். ஆனால் ஒவ்வொரு முறையும் இந்த பாடல் கேட்டு முடியும் தருணம் எனது கண்களிலிருந்து விழி துளிகள் எட்டி பார்க்குதய்யா!!!.
    எனது மனம்
    இந்த பாடலை ஆரம்பத்தில் கேட்கும் போது லேசாகுதய்யா. ஆனால் முடியும் தருவாயில் மனம் கணத்து போகுதய்யா!!!

  • @sekargunasekaran9463
    @sekargunasekaran9463 3 роки тому +5

    இந்த பாடலை தினமும் கேட்கிறேன்

  • @pinky6720
    @pinky6720 3 роки тому +2

    Vagu akka singing Amazing spr....🤩...kiruthika mam direction spr....😍💞

  • @maduraimanninmainthargal8596
    @maduraimanninmainthargal8596 3 роки тому +14

    அற்புதமான வரிகள் ,வரிகளுக்கு ஏற்ற இசை, இசைக்கு ஏற்ற குரல் அருமை., அருமை., ஔிப்பதிவு கண்களுக்கு குளுமை, பாடல் உருவான விதம் தாெகுத்து வழங்கியது " நாட்படு தேறல் " க்கு மற்றுமாெரு மணிமகுடம்.
    வாழ்த்துக்கள் ஐயா !

  • @thanamlakshmi1906
    @thanamlakshmi1906 3 роки тому +1

    Pothuva tamil padal nale super aa irukkum.ithu vera level naaku chevanthavare.so...beauty full.😄😄😄😄

  • @EllamSivam
    @EllamSivam 3 роки тому +15

    ஆம்பளைக சகவாசம்
    அடுத்தொருத்தி வாரவரைக்கும்
    பொம்பளைக சகவாசம்
    புதகாடு போரவறைக்கும் 👌👌👌

  • @raghavn9398
    @raghavn9398 3 роки тому

    கேட்ட கேள்விகள் காதலித்த ஆணுக்கு சவுக்கடி.புதுமையாய் உள்ளது.படமாக்கப்பட்ட விதம் அருமை,இசையும் நல்ல நயம்....

  • @Chef_statement
    @Chef_statement 3 роки тому +5

    அருமையான பாடல்
    தமிழால் மட்டுமே
    பூக்கிறது
    வாழ்க தமிழ்

  • @mkmotivationedits5016
    @mkmotivationedits5016 3 роки тому

    கேட்க கேட்க இனிக்கும் பாடல் இது... எத்தனை முறை கேட்டேன்னு எனக்கே தெரியல பா..."பாடல் வரிகள், இசை,காட்சி,கதை" அத்தனையும் அவ்வளவு அழகு 👌

  • @thanigaivelkarthikeyan7034
    @thanigaivelkarthikeyan7034 3 роки тому +13

    மிக அருமையான பாடல்.
    முழுவதும் ஐ போனில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது என்பது பிரமிப்பாக உள்ளது.

    • @l.prakashm.loganathan8084
      @l.prakashm.loganathan8084 3 роки тому

      26 hhhyyfxr %//
      ER66P7YFZ XV J K I7737UUVXXXCFXCDW FB TTR1TFD€%

    • @thanigaivelkarthikeyan7034
      @thanigaivelkarthikeyan7034 3 роки тому

      @@l.prakashm.loganathan8084 டேய் லுசா நீ!!!!!???

    • @l.prakashm.loganathan8084
      @l.prakashm.loganathan8084 3 роки тому

      @@thanigaivelkarthikeyan7034 டேய் பைத்தியம் புடிச்ச கிருக்கு முட்டா பயலே இந்த பாட்டு கேக்கும் போது பாக்கெட்ல இருந்துச்சு அப்ப எதோ automaticஅ type ஆகிருக்கும் போல நானே இப்பதான் பாக்குறேன் டா முட்டா பயலே

    • @l.prakashm.loganathan8084
      @l.prakashm.loganathan8084 3 роки тому

      @@thanigaivelkarthikeyan7034 இனிமே rly போடும் போது மரியாதையா போடு யாருக்கா இருந்தாலும் சரி

    • @thanigaivelkarthikeyan7034
      @thanigaivelkarthikeyan7034 3 роки тому

      @@l.prakashm.loganathan8084 உன் பதிலை பார்க்கிற எவருக்கும் இப்படித்தான் இருக்கும்.

  • @skmoorthysubbiah7108
    @skmoorthysubbiah7108 3 роки тому +1

    Aambalinga saga vasam aduthu oruthi .varum varaikum , pommbalinga sagavasam podha kuliyil pogum varai super

  • @sellappillai6100
    @sellappillai6100 3 роки тому +23

    Lyrics+music+singer+ location all really sprbbbb ....😍😍😘 அழகான வரிகள்+ஆழமான அர்த்தம் wow fantasticc..😇🤩😍😘

  • @durairajdurai24
    @durairajdurai24 3 роки тому

    வைரத்தால் உருவாகிய
    வைர வரிகள்..
    அருமை அருமை..
    வைரமுத்து அய்யா.

  • @nandhiniveeramani6624
    @nandhiniveeramani6624 Рік тому +21

    After bigg boss yarathu pakka vandhingala?

  • @livethelife7530
    @livethelife7530 3 роки тому +1

    திரைக்கதை செம்ம...குரல் செம்ம...27 முறை பாடலைக் கேட்டும் சலிக்காத. ..பாடல்,இசை,வரிகள்...

  • @vediyappan1
    @vediyappan1 3 роки тому +9

    வரிகளில் தொன்மை, இசையில் புதுமை. நாட்படு தேறலில் நான் பருகும் முதல் மிடறு அருமை.

  • @shivagirikshivagirik4783
    @shivagirikshivagirik4783 3 роки тому +1

    இந்தப் பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது

  • @Ramesh-ib7kd
    @Ramesh-ib7kd Рік тому +4

    How many of them seeing this video after watching vj Archana singing this song in Bigg Boss 7

  • @sriguru710
    @sriguru710 3 роки тому

    அருமையான பாடல். நல்ல வரிகள். ரசிக்க தெரிந்தவர்கள். ரசிக்க கூடிய பாடல்.