Deva Sitham Niraivera - தேவ சித்தம் நிறைவேற
Вставка
- Опубліковано 22 гру 2024
- தேவ சித்தம் நிறைவேற என்னையும் ஒப்படைக்கிறேன்
தேவ சத்தம் என்னுள்ளம் பலமாக தொனிக்குதே
1. முட்களுக்குள் மலர்கின்றதோர்
மக்களை கவரும் லீலி புஷ்பம் போல்
என்னையுமே தம் சாயலாய்
என்றென்றும் உருவாக்குவார்
2. முன்னறிந்து அழைத்தவரே
முன்னின்று நலமுடன் நடத்துவார்
சகலமும் நன்மைக்கென்றே
சாட்சியாய் முடித்திடுவார்
3. பொன்னைப் போல புடமிட்டாலும்
பொன்னாக விளங்குவேன் என்றென்றுமே
திராணிக்கு மேல் சோதித்திடார்
தாங்கிட பெலன் அளிப்பார்
4. கஷ்டமெல்லாம் தொலையும் ஓர் நாள்
கண்ணீரும் கவலையும் நீங்கும் அந்நாள்
இரட்டிப்பான பங்கை பெற
இரட்சகர் அழைத்திடுவார்