அன்பாக வந்து I அதல சேடனாராட I திருப்புகழ்

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024
  • _______________________________________________
    அன்பாக வந்து (திருச்செங்கோடு)
    _______________________________________________
    தந்தான தந்த தந்தான தந்த
    தந்தான தந்த ...... தனதான
    ......... பாடல் .........
    அன்பாக வந்து உன்றாள் பணிந்து
    ஐம்பூத மொன்ற ...... நினையாமல்
    அன்பால் மிகுந்து நஞ்சாரு கண்க
    ளம்போரு கங்கள் ...... முலைதானும்
    கொந்தே மிகுந்து வண்டாடி நின்று
    கொண்டாடு கின்ற ...... குழலாரைக்
    கொண்டே நினைந்து மன்பேது மண்டி
    குன்றா மலைந்து ...... அலைவேனோ
    மன்றாடி தந்த மைந்தா மிகுந்த
    வம்பார் கடம்பை ...... யணிவோனே
    வந்தே பணிந்து நின்றார் பவங்கள்
    வம்பே தொலைந்த ...... வடிவேலா
    சென்றே யிடங்கள் கந்தா எனும்பொ
    செஞ்சேவல் கொண்டு ...... வரவேணும்
    செஞ்சாலி கஞ்ச மொன்றாய் வளர்ந்த
    செங்கோ டமர்ந்த ...... பெருமாளே.
    _______________________________________________
    அதல சேடனாராட (பொதுப்பாடல்கள்)
    _______________________________________________
    தனன தான தானான தனன தான தானான
    தனன தான தானான ...... தனதான
    ......... பாடல் .........
    அதல சேட னாராட அகில மேரு மீதாட
    அபின காளி தானாட ...... அவளோடன்
    றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட
    அருகு பூத வேதாள ...... மவையாட
    மதுர வாணி தானாட மலரில் வேத னாராட
    மருவு வானு ளோராட ...... மதியாட
    வனச மாமி யாராட நெடிய மாம னாராட
    மயிலு மாடி நீயாடி ...... வரவேணும்
    கதைவி டாத தோள்வீம னெதிர்கொள் வாளி யால்நீடு
    கருத லார்கள் மாசேனை ...... பொடியாகக்
    கதறு காலி போய்மீள விஜய னேறு தேர்மீது
    கனக வேத கோடூதி ...... அலைமோதும்
    உததி மீதி லேசாயு முலக மூடு சீர்பாத
    உவண மூர்தி மாமாயன் ...... மருகோனே
    உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ
    னுளமு மாட வாழ்தேவர் ...... பெருமாளே.

КОМЕНТАРІ • 27

  • @diwakarsrinath.azhagesan
    @diwakarsrinath.azhagesan 14 днів тому +2

    ஓம் சரவணபவ முருகா சரணம்

  • @shayisharma1008
    @shayisharma1008 12 годин тому +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏

  • @bhuvaneswaris5572
    @bhuvaneswaris5572 3 місяці тому +1

    அருமை! திருப்புகழ் நாளும் பாடி நலம்!வளம் பெற்று "வாழ்க பல்லாண்டு"!.

  • @balajisubramaniyams5691
    @balajisubramaniyams5691 3 місяці тому +2

    Om Saravanabhava🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

  • @indiraindira8188
    @indiraindira8188 3 місяці тому +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏

  • @omsivasivaom
    @omsivasivaom 3 місяці тому +2

    தெளிவான தமிழ்

  • @vshankar2182
    @vshankar2182 3 місяці тому +3

    திரு செங்கோட்டு வேலனுக்கு அரோகரா! 🙏🙏🙏😊

  • @ranjinisekaran4091
    @ranjinisekaran4091 3 місяці тому +1

    முருகா 🙏🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏

  • @kannansrinivasan-up8kr
    @kannansrinivasan-up8kr 3 місяці тому +2

    Very good,tambi.😢.my heart got filled with emotions.at this age,, reciting thirupugazh,is really something precious.🙏

  • @umalakshman855
    @umalakshman855 3 місяці тому +2

    அருமையான குரல். கேட்க இனிமையாக உள்ளது. இன்னும் பல பாடல்கள் பாட வேண்டும். வாழ்த்துக்கள்

  • @arivazhagiarivazhagi3255
    @arivazhagiarivazhagi3255 3 місяці тому +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🌺🙏

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 3 місяці тому +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏

  • @meenaldevaraajan2509
    @meenaldevaraajan2509 3 місяці тому +2

    வாழ்கவளமுடன்!எம்பிரான் முருகன் அருள் கிடைக்கட்டும்!!

  • @nithyavaidya2719
    @nithyavaidya2719 3 місяці тому +1

    நல்ல தமிழ் உச்சரிப்பு, இனிய குரல் , வாழ்க வளமுடன்.

  • @veeravel8221
    @veeravel8221 3 місяці тому +2

    அருமை

  • @karthickv7197
    @karthickv7197 3 місяці тому +1

    சத்தியமாவது சரவணபவவே🙏

  • @saravanakumara5514
    @saravanakumara5514 3 місяці тому +1

    ஓம் சரவண பவ

  • @priyasdeliciouscuisine437
    @priyasdeliciouscuisine437 2 місяці тому +1

    Nice voice 😊and clear singing tone❤..Waiting to hear more!!😘God bless you✨👍

  • @rubanthiruraj2655
    @rubanthiruraj2655 3 місяці тому +1

    Tiruchendur murugaruku arohara❤❤❤

  • @kamakshirajagopalan237
    @kamakshirajagopalan237 3 місяці тому +1

    Arumai 🎉🎉

  • @archanaar9595
    @archanaar9595 3 місяці тому +1

    Romba super thambi voice and words are super👌👌
    Valga valamudan

  • @jayaramanraman2440
    @jayaramanraman2440 3 місяці тому +1

    Super bless you dear grandson

  • @rajalakshmi1068
    @rajalakshmi1068 3 місяці тому +1

    Siva siva........muruga perumale

  • @shobisamy1111
    @shobisamy1111 3 місяці тому +1

    அருமை தம்பி 🎉

  • @praveenpriya2967
    @praveenpriya2967 3 місяці тому +1

    Semma therupokal ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @devanathan2384
    @devanathan2384 3 місяці тому +1

    ❤❤🙏🙏

  • @PadmaManjula-u5y
    @PadmaManjula-u5y 3 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏🎉🎉