திருக்குருகாவூர் வெள்ளடைநாதர்| இத்தனை யாமாற்றை அறிந்திலேன் எம்பெருமான் பாடல் பற்றிய செய்தி.

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ •

  • @Creator3966
    @Creator3966 Рік тому

    Nice mam thank you very much

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 роки тому +1

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹🙏சிவ சிவ🌿🌷திருச்சிற்றம்பலம்🌹ஓம் சரவண பாவா🌺🌷

  • @lavanyadamotharan6280
    @lavanyadamotharan6280 3 роки тому +3

    This is true, I have experienced many positive things please everyone should say this every single day

  • @muraliseshasayee435
    @muraliseshasayee435 4 роки тому +1

    OM NAMASIVAYA OM NAMASIVAYA OM NAMASIVAYA....

  • @shayisharma1008
    @shayisharma1008 3 роки тому


    பாடல்;தேவாரம் ;இத்தனை யாமாற்றை
    7ம் திருமுறை.
    அருளியவர்;சுந்தரமூர்த்தி நாயனார்
    ராகம்;பந்துவராளி
    பந்துவராளி 51 வது மேளம் "பிரம்ம" 9 வது சக்கரத்தில் 3வது இராகம். இவ்விராகமே என்றும் காமவர்த்தனி, காசிராமக்கிரியா எனவும் கருநாடக இசையினல் அழைக்கப்படுகின்றது. இது ஒரு பழமையான புராதன இராகம். காந்தாரத்தை அசைக்காமல் பாட வேன்டும்,அது இதன்சிறப்பு. பக்தி,கருணைச் சுவையை வெளிப்படுத்தும் சர்வகாலராகம். 15வது மேளம் மாயாமாளவகௌளையின் நேர் பிரதி மத்திம இராகம் ஆகும். பண்டைத்தமிழிசையில் "நட்டராகம்" எனவும் "சாதாரிப்பண்" எனவும் என்றழைக்கப்பட்டது.மூர்ச்சனாகாரக மேளம்.
    பண்;நட்டராகம்
    தாளம்;ஆதி
    ஸ்தலம்;குருகாவூர் வெள்ளடை
    ஆரோகணம்: ஸ ரி1 க3 ம2 ப த1 நி3 ஸ்
    அவரோகணம்: ஸ் நி3 த1 ப ம2 க3 ரி1 ஸ
    குறிப்பு;இப் பதிகத்தை மஹாபெரியவா தன் அபிமான சிஸ்யனான அவரால் 64ம் நாயனார் எனவும் பிரதோஷம் எனவும் செல்லமாக அழைக்கப்படட பிரதோஷம் வெங்கட்ராமையர் என்கிற பிரதோஷம் மாமாவிடம் சொல்லி மிகவும் பிரபல்யம் ஆனது இவ் தேவார பதிகம் . இப்பாடல் மிக அரிய நோய் தீர்க்கும் பாடல் ஆகும்
    திருச்சிற்றம்பலம்

    இத்தனை யாமாற்றை
    அறிந்திலேன் எம்பெருமான்
    பித்தரே என்றும்மைப்
    பேசுவார் பிறரெல்லாம்
    முத்தினை மணிதன்னை
    மாணிக்கம் முளைத்தெழுந்த
    வித்தனே குருகாவூர்
    வெள்ளடை நீயன்றே. 1
    . உ
    ஆவியைப் போகாமே
    தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்
    வாவியிற் கயல்பாயக்
    குளத்திடை மடைதோறுங்
    காவியுங் குவளையுங்
    கமலஞ்செங் கழுநீரும்
    மேவிய குருகாவூர்
    வெள்ளடை நீயன்றே. 2
    பாடுவார் பசிதீர்ப்பாய்
    பரவுவார் பிணிகளைவாய்
    ஓடுநன் கலனாக
    உண்பலிக் குழல்வானே
    காடுநல் லிடமாகக்
    கடுவிருள் நடமாடும்
    வேடனே குருகாவூர்
    வெள்ளடை நீயன்றே. 3
    வெப்பொடு பிணியெல்லாந்
    தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்
    ஒப்புடை ஒளிநீலம்
    ஓங்கிய மலர்ப்பொய்கை
    அப்படி அழகாய
    அணிநடை மடவன்னம்
    மெய்ப்படு குருகாவூர்
    வெள்ளடை நீயன்றே. 4
    . உ
    வரும்பழி வாராமே
    தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்
    சுரும்புடை மலர்க்கொன்றைச்
    சுண்ணவெண் ணீற்றானே
    அரும்புடை மலர்ப்பொய்கை
    அல்லியும் மல்லிகையும்
    விரும்பிய குருகாவூர்
    வெள்ளடை நீயன்றே. 5
    பண்ணிடைத் தமிழொப்பாய்
    பழத்தினிற் சுவையொப்பாய்
    கண்ணிடை மணியொப்பாய்
    கடுவிருட் சுடரொப்பாய்
    மண்ணிடை அடியார்கள்
    மனத்திடர் வாராமே
    விண்ணிடைக் குருகாவூர்
    வெள்ளடை நீயன்றே. 6
    போந்தனை தரியாமே
    நமன்தமர் புகுந்தென்னை
    நோந்தன செய்தாலும்
    நுன்னல தறியேன்நான்
    சாந்தனை வருமேலுந்
    தவிர்த்தென்னை ஆட்கொண்ட
    வேந்தனே குருகாவூர்
    வெள்ளடை நீயன்றே. 7
    . உ
    மலக்கில்நின் னடியார்கள்
    மனத்திடை மால்தீர்ப்பாய்
    சலச்சல மிடுக்குடைய
    தருமனார் தமரென்னைக்
    கலக்குவான் வந்தாலுங்
    கடுந்துயர் வாராமே
    விலக்குவாய் குருகாவூர்
    வெள்ளடை நீயன்றே. 8
    படுவிப்பாய் உனக்கேயாட்
    பலரையும் பணியாமே
    தொடுவிப்பாய் துகிலொடுபொன்
    தோலுடுத் துழல்வானே
    கெடுவிப்பாய் அல்லாதார்
    கேடிலாப் பொன்னடிக்கே
    விடுவிப்பாய் குருகாவூர்
    வெள்ளடை நீயன்றே. 9