Thiruponnoosal /திருப்பொன்னூசல், திருவாசகம்,, Thiruvasagam, சீரார் பவளங்கால், ponnusal

Поділитися
Вставка
  • Опубліковано 12 лис 2020
  • மாணிக்கவாசகர் சுவாமிகள் அருளிய
    #அன்புடன்_செல்வன் #Subagaran
    பாடியவர் N. subagaran
    இசை #கோ_சத்தியன்
    ஒலிப்பதிவு #ஸப்தமி_கலையகம்
    தயாரிப்பு சுப்பையா பாஸ்கரன்
    1)சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக
    ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து
    நாரா யணன் அறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்கு
    ஊராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை
    ஆரா அமுதின் அருள்தா ளிணைபாடிப்
    போரார் வேற்கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ.
    போருக்கு அமைந்த கூரிய வேலையொத்த கண்களையுடைய பெண்களே! மேன்மை பொருந்திய பவளம் கால்களாகவும், முத்து வடம் கயிறு ஆகவும் உடைய, அழகு பொருந்திய பொன்னாலாகிய ஊஞ்சல் பலகையில் ஏறி இனிமையாய் இருந்து, திருமால் அறியாத அன்றலர்ந்த தாமரை போலும் திருவடியை நாய் போன்ற அடியேனுக்கு உறைவிடமாக தந்தருளிய திருவுத்தர கோச மங்கையில் எழுந்தருளியிருக்கிற தெவிட்டாத அமுதம் போன்ற வனது அருளாகிய இரண்டு திருவடியைப் புகழ்ந்து பாடி நாம் பொன்னாலாகிய ஊஞ்சலில் இருந்து ஆடுவோம்
    2)மூன்றங் கிலங்கு நயனத்தன் மூவாத
    வான்தங்கு தேவர்களுங் காணா மலரடிகள்
    தேன்தங்கித் தித்தித் தமுதூறித் தான்தெளிந்தங்கு
    ஊன்தங்கி நின்றுருக்கும் உத்தர கோசமங்கைக்
    கோன்தங் கிடைமருது பாடிக் குலமஞ்ஞை
    போன்றங் கனநடையீர் பொன்னூசல் ஆடாமோ.
    மயிலைப் போன்ற சாயலைப் பெற்று, அன்னத்தைப் போன்ற நடையையுடைய பெண்களே! விளங்குகின்ற மூன்று கண்களை உடையவனும், கெடாத விண்ணுலகில் தங்கி யிருக்கும் தேவர்களும் காணமுடியாத தாமரை போன்ற திருவடி தேன் கலந்தது போன்று இனித்து அமுதாய் ஊற்றெடுத்து அது விளங்கி உடலில் பொருந்தி உருக்குகின்ற திருவுத்தர கோச மங்கைக்குத் தலைவனுமாகிய இறைவன் எழுந்தருளி இருக்கும் திருவிடை மருதூரைப் பாடி நாம் பொன்னாலாகிய ஊஞ்சலில் இருந்து ஆடு வோம்
    3)முன்னீறும் ஆதியு மில்லான் முனிவர்குழாம்
    பன்னூறு கோடி யிமையோர்கள் தாம் நிற்பத்
    தன்னீ றெனக்கருளித் தன்கருணை வெள்ளத்து
    மன்னூற மன்னுமணி யுத்தர கோசமங்கை
    மின்னேறு மாட வியன்மா ளிகைபாடிப்
    பொன்னேறு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ.
    பொன் பொருந்திய ஆபரணங்கள் அணிந்த முலை களையுடைய பெண்களே! நினைக்கப்பட்ட முடிவும் முதலும் இல்லாத வன் முனிவர் கூட்டமும் பல நூறுகோடி விண்ணவரும் காத்து நிற்க, தனது திருநீற்றை எனக்கு அளித்து, தனது அருள் வெள்ளத்திலே, மிகு தியாக யான் ஆழ்ந்து கிடக்கும்படி எழுந்தருளியிருக்கின்றவனுடைய அழகிய உத்தரகோச மங்கையில் மாடங்களையுடைய அகன்ற கோயி லைப் பாடி நாம் பொன்னாலாகிய ஊஞ்சலில் இருந்து ஆடுவோம்
    4)நஞ்சமர் கண்டத்தன் அண்டத் தவர்நாதன்
    மஞ்சுதோய் மாடமணி உத்தரகோசமங்கை
    அஞ்சொலாள் தன்னோடுங் கூடி அடியவர்கள்
    நெஞ்சுளே நின்றமுத மூறிக் கருணைசெய்து
    துஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ்பாடிப்
    புஞ்சமார் வெள்வளையீர் பொன்னூசல் ஆடாமோ.
    தொகுதியாகப் பொருந்திய, வெண்மையான வளையலை அணிந்த பெண்களே! விடம் தங்கிய கண்டத்தை யுடையவனும், தேவலோகத்தவர்க்குத் தலைவனும், மேகங்கள் படிகின்ற மேல் மாடங்களையுடைய அழகிய திருவுத்தர கோச மங்கை யில் இனிய மொழியையுடைய உமாதேவியோடு கூடியவனும் அடி யாரது மனத்துள்ளே நிலைத்து நின்று அமுதம் சுரப்பவனும் இறப்புப் பிறப்புகளைத் தவிர்ப்பவனுமாகிய தூய்மையானவனின் புகழினைப் பாடி நாம் பொன்னாலாகிய ஊஞ்சலில் இருந்து ஆடுவோம்.
    5)ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர்
    காணாக் கடவுள் கருணையினால் தேவர்குழாம்
    நாணாமே உய்யஆட் கொண்டருளி நஞ்சுதனை
    ஊணாக உண்டருளும் உத்தர கோசமங்கைக்
    கோணார் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவிப்
    பூணார் வனமுலையீர் பொன்னூசல் ஆடாமோ.
    ஆபரணங்கள் நிறைந்த அழகிய முலைகளை யுடைய பெண்களே! ஆண் இனமோ, அலி இனமோ, பெண் ணினமோ, என்று அயன் மாலாகிய இருவரும் காண முடியாத கட வுளும் தன் பெருங்கருணையால் தேவர் கூட்டம் நாணம் அடையாமல் பிழைக்கும்படி அடிமை கொண்டருளி, பாற்கடலில் தோன்றிய ஆலகால விடத்தை உணவாக உண்டருளியவனும், திருவுத்தர கோச மங்கையிலுள்ள, வளைவுள்ள பிறையணிந்த சடையையுடையவனு மாகிய இறைவனது குணத்தைத் துதித்து நாம் பொன்னாலாகிய ஊஞ்சலில் இருந்து ஆடுவோம்.
    6)மாதாடு பாகத்தன் உத்தர கோசமங்கைத்
    தாதாடு கொன்றைச் சடையான் அடியாருள்
    கோதாட்டி நாயேனை ஆட்கொண்டென் தொல்பிறவித்
    தீதோடா வண்ணந் திகழப் பிறப்பறுப்பான்
    காதாடு குண்டலங்கள் பாடிக் கசிந்தன்பால்
    போதாடு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ.
    அரும்பு போன்ற அணிகளோடு கூடிய முலைகளையுடைய பெண்களே! மங்கை தங்கு பங்கையுடையவனும், திருவுத்தர கோச மங்கையிலுள்ள, மகரந்தங்களையுடைய கொன்றை மாலையை அணிந்த சடையையுடையவனும், தன்னடியார்களுள்ளே நாய் போன்ற என்னைச் சீராட்டி அடிமை கொண்டு என் முற்பிறப்பில் உண்டாகிய வினை மேலெழுந்து பற்றாதபடி, யான் ஞானத்தோடு விளங்கப் பிறவித் தளையை அறுப்பவனுமாகிய இறைவனது திருச்செவிகளில் ஆடுகின்ற குண்டலங்களைப் பாடி, அன்பால் உருகி நாம் பொன்னாலாகிய ஊஞ்சலில் இருந்து ஆடுவோம்.
    7)உன்னற் கரியதிரு வுத்தர கோசமங்கை
    மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்புகழே
    பன்னிப் பணிந்திறைஞ்சப் பாவங்கள் பற்றறுப்பான்
    அன்னத்தின் மேலேறி ஆடுமணி மயில்போல்
    என்னத்தன் என்னையும் ஆட்கொண்டான் எழில்பாடிப்
    பொன்னொத்த பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ.
    8)கோலவரைக்குடுமி வந்து குவலயத்துச்
    சால அமுதுண்டு தாழ்கடலின் மீதெழுந்து
    ஞால மிகப்பரிமேற் கொண்டு நமையாண்டான்
    சீலந் திகழுந் திருவுத்தர கோசமங்கை
    மாலுக் கரியானை வாயார நாம்பாடிப்
    பூலித் தகம்குழைந்து பொன்னூசல் ஆடாமோ.
    9)தெங்குலவு சோலைத் திருஉத்தர கோசமங்கை
    தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி
    எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொள்வான்
    பங்குலவு கோதையுந் தானும் பணிகொண்ட
    கொங்குலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப்
    பொங்குலவு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 9

КОМЕНТАРІ • 28

  • @crouton2.06
    @crouton2.06 2 роки тому +6

    மிக அருமையான இசை
    அமைதியான இதமான நாதஸவர இசை
    உண்மையில் இறைவன் துயின்று இருப்பார் இந்த இசையில்
    மிகவிரைவில் இறைவனை துயில் எழுப்ப இதற்கு ஈடான திருப்பள்ளி எழுச்சிப்பாடல் பாடவேண்டும்

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 3 місяці тому +2

    ஓம் திருவாகி நின்ற திறமே போற்றி போற்றி.

  • @solai1963
    @solai1963 3 роки тому +11

    ஒரு வாசகம் என்றாலும்..
    அது திருவாசகமென்றால்
    உள்ளங்கள் உவகை கொள்ளுமே...
    ஈசனருள் கிடைத்த திருப்தி பாடலை கேட்பவர்களுக்கு கிடைக்கும்...
    நன்றி..

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 роки тому +5

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼 திருச்சிற்றம்பலம் 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹🌹🌹ஓம் சரவண பாவா🌹🙏உலகமெங்கும் உள்ள சிவன் அடியார்களுக்கு என் நமஸ்காரம்🥀🌷

  • @babukannan6451
    @babukannan6451 3 роки тому +5

    Thanks .... ஓம் நமசிவாய வாழ்க... நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க....

  • @sakthivelramasamy9388
    @sakthivelramasamy9388 2 роки тому +4

    மிக அற்புதமான பாடல். நேர்மறை எண்ணங்களை நன்றாகக் கொடுக்கிறது. சிவ சிவ, திருச்சிற்றம்பலம்...

  • @user-ko8px1ob5e
    @user-ko8px1ob5e Рік тому +2

    சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக
    ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து
    நாரா யணன் அறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்கு
    ஊராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை
    ஆரா அமுதின் அருள்தா ளிணைப்பாடிப்
    போரார்வேற் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ

  • @user-ez2wf6qe6u
    @user-ez2wf6qe6u 3 роки тому +4

    Om Namasivaya

  • @rajalakshmikumaravel8575
    @rajalakshmikumaravel8575 3 роки тому +4

    நாராயணா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @UmaIndraS
    @UmaIndraS 3 роки тому +5

    Thanks a lot. Mikka nandri.

  • @subashinikanagambaram1084
    @subashinikanagambaram1084 3 роки тому +3

    Om namashivaya

  • @rakivela1126
    @rakivela1126 3 роки тому +2

    சிவ சிவ.நன்றி.

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 Рік тому +1

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.

  • @ashwinarunish3003
    @ashwinarunish3003 3 роки тому +3

    Good morning அப்பா

  • @user-rk3cd1pr8k
    @user-rk3cd1pr8k 3 роки тому +2

    அருமை கரன் அண்ணா

  • @cs3662
    @cs3662 3 роки тому +2

    அருமை அருமை

  • @parithranayasadunavinasaka1153
    @parithranayasadunavinasaka1153 3 роки тому +2

    சிறப்பு

  • @user-zi4nl1xz6j
    @user-zi4nl1xz6j 3 роки тому +2

    அருமை ஓம் நமசிவாய

  • @sambathkumar8564
    @sambathkumar8564 Рік тому +2

    Nandraka ullathu thiruvasakam patri indru than threindu konden

  • @dineshthalavell3979
    @dineshthalavell3979 Рік тому

    Thanks Alot. soothing to the ears

  • @thulasirao9139
    @thulasirao9139 3 роки тому +3

    🙏

  • @sruthijana4936
    @sruthijana4936 2 роки тому

    Arumai

  • @gurusamyk4044
    @gurusamyk4044 Рік тому +1

    Padali konjam eluthil pathividungal please

    • @Anbudanselvan
      @Anbudanselvan  Рік тому +1

      பாடலின் கீழ் வரிகள்(subtitles) அமைத்துள்ளேன்
      மேலும் விபரத்தில் இப்போது பாடலைச் சேர்த்துள்ளேன்

  • @sasitharan212
    @sasitharan212 2 роки тому +2

    Om Namasivaya

  • @007kesa
    @007kesa Рік тому

    🙏