பணக்கஷ்டம் நீங்க வாழ்வில் ஒரு முறையாவது தரிசனம் செய்ய வேண்டிய நன்னிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர்

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025
  • பணப்பற்றாக்குறை போக்கும் குபேரனின் குமாரர்கள் வழிபட்ட நன்னிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம்
    மூலவர்: சுந்தரேஸ்வரர்
    அம்பாள்: மீனாட்சி
    புராண பெயர்: சென்னிவாய்க்கால்
    ஊர்: நன்னிமங்கலம்
    தலவிருட்சம்: பொன்வில் சாரம்
    பொது தகவல்
    நன்னிமங்கலம் கோவில்
    சண்முகர் சன்னிதியில் மயில் தலை சுவாமிக்கு இடது
    புறம் இருக்கும் முருகன் சூரபத்மனை வதம்செய்தபின் கோபம் தணிந்து சாந்தநிலைஅடையும்தருணம் .இவரை வழிபடுவோர் வாழ்வில் மனக்கிலேசங்கள் நீங்கப் பெற்று மனம் அமைதி பெறும்.
    நாக லோக அதிபதி
    அஸ்தீக சித்தர் தினமும் ககனயாத்திரையில் இவ்வாலயம் வந்து சிவனை மானசீகமாக பூஜை செய்வதாக ஐதீகம் இவருடைய சிலை விநாயகர் கோபுரத்தில் சப்தரிஷிகள் சிலைகளுடன் உள்ளது. இதனால் இக்கோவிலில் நாகங்களின் நடமாட்டம் அதிகம்
    ஆவுடையார் கோமுகம் சுவாமியின் வலதுபுறத்தில் உள்ளது
    பச்சை நிறம் புதனின் அம்சம்புதன் கல்விக்கு அதிபதி மாணவ மாணவிகள் பரீட்சை சமயத்தில் திரளாக வருவர் இறையருள்பெற.
    திருவண்ணாமலையார் அருள் வழி காட்ட குபேரனின் புதல்வர்கள், பொன்வில் சாரத்தின் ரகசியத்தையும் மகிமையையும் உணர்ந்து வழிபட்ட ஆலயம் இது.
    தலவரலாறு
    பொன்னாலாகிய மூன்று வில்வ தளங்களை உடைய பொன் வில்வ சாரம் எந்த தேவலோகத் திலும் கிடைக்காத அருமை பெருமைகளை உடையது. எந்த ஒரு சுயம்பு லிங்கத்தின் மீது வைத்து ‘ஓம் நமசிவாய’ என்று ஓதி ஒரு முறை அர்ச்சித்து வழிபட்டால் உடனே அது பன்மடங்காகப் பெருகி பிரகாசித்து நிறைந்த செல்வத்தைத் தரும் அற்புதம் உடையது.
    யோக தவ ஜப சக்திகளைப் பெற்றிருப்பவர் களைத் தவிர, இந்த பொன்வில்வ சாரம் எவர் கண்களுக்கும் தென்படாது. எவர் கரங்களிலும் நிலைத்து நிற்காது. இவ்வளவு மகிமையுடைய பொன் வில்வ சாரத்தை சிவபெருமான் குபேரனிடம் அளித்தார். குபேரன் இதை தன் குமாரர்களான மணிக்ரீவன், நளகூபன் இரு வரிடமும் அளித்து, பூலோகம் எங்கும் உள்ள சுயம்பு லிங்க மூர்த்திகளிடம் வைத்து வழிபட்டு இதன் மகிமையை அறிந்து வரும்படி கட்டளையிட்டார்.
    சுயம்பு லிங்க பூஜையில் சிறப்பு பெற்றவர்கள் குபேரனின் குமாரர்கள். சிறந்த சிவ சேவகர்கள். எனவே அவர்கள் கண்களில் பொன் வில்வ சாரம் பட்டது. கரங்களில் நிலைத்து நின்றது. இதைக் கண்ட குபேரனுக்கு ஏக மகிழ்ச்சி.
    மணிக்ரீவன், நளகூபன் இருவரும் புறப்பட்டனர். பொன்வில்வ சாரம் எந்த சிவாலயத்தில் பல மடங்கு ஒளி வீசும் என்ற தேவ ரகசியத்தை அறிய வேண்டுமே.
    பூலோகமெங்கும் உள்ள சிவாலயங்களில் உள்ள சுயம்பு லிங்க மூர்த்திகளின் மீது வைத்து குபேரனின் குமாரர்கள் வழிபட்டனர். இந்த பொன்வில்வசாரம் பல இடங்களில் பசுமையாக சாதாரண வில்வ தளம் போல் காட்சி தர, சில இடங்களில் மறைந்தும் காணப்பட்டது.
    பல நூறு ஆண்டுகள் தல யாத்திரை மேற்கொண்ட அவர்கள், பலநூறு சுயம்பு லிங்க மூர்த்திகளை தரிசித்தனர். பின்னர், பிரபஞ்சத்தின் தெய்வீக மையமாகத் திகழும் திருவண்ணாமலை வந்தடைந்தனர். பவுர்ணமி அன்று கிரிவலம் வந்து பொன்வில்வ சாரத்தை அண்ணாமலை ஆண்டவன் பாதங்களில் வைத்து ‘ஓம் நமசிவாய’ என்று ஓதினர். இதன் மகிமையையும் தெய்வீக ரகசியத்தையும் தங்களுக்கு உணர்த்துமாறு வேண்டி நின்றனர்.
    அண்ணாமலையாரிடம் வில்வதளம் சொர்ணமாகப் பிரகாசித்தது. சென்னிவளநாடு செல்லும்படி அவர்களுக்கு அண்ணாமலையார் அசரீரியாய் வழி காட்டினார். குமாரர்கள் இருவரும் தென் திசை நோக்கி பயணமானார்கள். சோழ நாட்டிற்கு வந்து சேர்ந்தனர். திருத்தவத்துறை எனப் பெயர் கொண்ட தற்போதைய லால்குடியில் உள்ள சப்தரிஷீஸ்வரர் ஆலயத்தின் சிவகங்கை தீர்த்தத்தில் மூழ்கி நீராடினர்.நீராடி எழுந்த அவர்கள் தாங்கள் வேறொரு ஆலயத்தில் இருப்பதை உணர்ந்தனர். தங்கள் கரத்திலிருந்த பொன்வில்வசாரம் மறைந்து போனது கண்டு பதறினர். எழுந்து அந்த ஆலயத்தின் கருவறை நோக்கிச் சென்றனர்.
    அங்கே அவர்கள் ஓர் அதிசயத்தைக் கண்டனர். கரும்பச்சை வண்ணத்தில் ஜொலிக்கும் சுயம்பு லிங்கத் திருமேனியில் தாங்கள் கொண்டு வந்த பொன் வில்வசாரம் பொங்கிப் பொங்கி பன் மடங்காகப் பெருகி ஒளிவீசக் கண்டனர். இருவரும் மெய் சிலிர்த்து ‘ஓம் நமசிவாய’ என ஓதி அர்ச்சிக்க அது மேலும் மேலும் பொங்கி பன்மடங்கு ஒளி வீசத் தொடங்கியது. புதல்வர்கள் இருவரும் மனம் நிறைந்து மனம் நிறைய பூரிப்போடு தேவலோகம் சென்றனர்.
    தன் புதல்வர்கள் பொன்வில்வ சாரத்தின் மகிமையையும், தேவரகசியத்தையும் உணர்ந்ததை அறிந்த குபேரன் மனம் மகிழ்ந்தார். தனக்கு கிட்டாத பாக்கியம் தன் புதல்வர்களுக்கு கிடைத்ததை எண்ணி மெய்சிலிர்த்தார். சோழநாட்டில் உள்ள சென்னி வள நாட்டிற்கு வந்து மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபட்டார். பவுர்ணமி அன்று இந்த ஆலயம் வந்து மீனாட்சி சுந்தரேஸ்வரரை வலம் வந்து வழிபடும் பக்தர்கள், சகல நன்மைகளையும், பொருட்களையும் பெற குபேரன் அருள்பாலிக்கிறார்.
    பிராத்தனை
    பவுர்ணமி அன்று தலவிருட்சமான பென்வில்வ மரத்திற்கு, அரைத்த சந்தனம், மஞ்சள், குங்குமம் சாத்தி, அடிப்பிரதட்சனம் செய்து இறைவன், இறைவியை வழிபட்டால் குபேரன் மற்றும் லட்சுமி தேவியின் அருளைப் பெறலாம்.
    அமைவிடம்
    திருச்சியிலிருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ள நன்னிமங்கலம் என்ற கிராமத்தில் இருக்கிறது, இந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 80A என்ற நகரப்பேருந்து லால்குடி வழியாக ஆனந்தி மேடு செல்லும். இந்த பேருந்தில் ஏறி சென்னிவாய்க்கால் சிவன் கோவில் என்ற நிறுத்தத்தில் இறங்கினால் அருகேயே உள்ளது ஆலயம். லால்குடியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஆலயம் செல்ல ஆட்டோ வசதியும் உண்டு.
    கோயில் Google Map Link
    maps.app.goo.g...
    ஆலய Trustee தொலைபேசி எண்
    +9 19486597484
    மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்
    +91 7994347966
    if you want to support us via Google pay phone pay paytm
    9655896987
    Join Our Channel WhatsApp Group
    chat.whatsapp....
    Join this channel to get access to perks:
    / @mathina
    தமிழ்

КОМЕНТАРІ • 18

  • @KudavasalNandhini
    @KudavasalNandhini 2 місяці тому +2

    அற்புதமான தலம் இது போன்ற அற்புதமான தலத்தை உங்கள் மூலமாக தரிசனம் செய்தேன் நன்றி

  • @chelladurair3287
    @chelladurair3287 2 місяці тому +1

    🙏🙏🙏சிவாயநம திருச்சிற்றம்பலம்.

  • @senthilnathan6325
    @senthilnathan6325 2 місяці тому +1

    அருமை அருமை ங்க 🌹

  • @ravichandar216
    @ravichandar216 2 місяці тому +1

    அருமையான பதிவு.திருச்சிற்றம்பலம்.

  • @SelvaNathan-cu7gq
    @SelvaNathan-cu7gq 2 місяці тому

    அருமையான பதிவு எனக்கு வழிகாட்டிய தங்களுக்கு நன்றி.

  • @vijayamano642
    @vijayamano642 Місяць тому

    Thank you for information sir🎉

  • @govindv6971
    @govindv6971 2 місяці тому

    ஓம் நமசிவாய. திருச்சிற்றம்பலம்.

  • @s.gogulakrishnan1552
    @s.gogulakrishnan1552 2 місяці тому +1

    Super sir 1

  • @saikumarkhan
    @saikumarkhan 2 місяці тому

    ஓம் திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @d.thumilan3985
    @d.thumilan3985 2 місяці тому

    Super sir 😊😊😊

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram 2 місяці тому +1

    Om namasivaya

  • @balasubramanianganesan6976
    @balasubramanianganesan6976 2 місяці тому +1

    My parents oor . By Padmaja

  • @abiramisekar2158
    @abiramisekar2158 2 місяці тому

    கோயில் திறந்திருக்கும் நேரத்தை தயவு செய்து குறிப்பிடவும்.நன்றி

    • @mathina
      @mathina  2 місяці тому

      கோயில் நடை திறக்கும் நேரம் அறிய Description ல் உள்ள Trustee யை தொலைவில் தொடர் கொள்ளவும்

  • @spicecurriesandmore5898
    @spicecurriesandmore5898 2 місяці тому +2

    Endha ooru indha Kovil anna

    • @mathina
      @mathina  2 місяці тому

      நன்னிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்

    • @RajKumar-yq2ov
      @RajKumar-yq2ov 2 місяці тому

      Trichy lalgudi