Vaanaga virunthuku vanthu paarungal/வானக விருந்துக்கு வந்து பாருங்கள்/CHRISTIAN SONG/THIRUVIRUNTHU.

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • வானக விருந்து க்கு வந்து
    பாருங்கள்
    வாழ்வினை மாற்றிவிடும்
    சுவைத்துப் பாருங்கள் - 2
    அள்ள அள்ள குறையாது
    அன்பின் தாகம் தணியாது
    - ஆஆஆஆ
    இன்றும் என்றும் மறையாது
    நம்மை விட்டு விலகாது
    -ஆஆஆஆ
    1) அறுசுவை உணவினை
    அடிக்கடி உண்ணும் நீங்கள்
    இறைவனின் உடலை உண்ண
    வாருங்கள் - 2
    மன்னாவை உண்டதால்
    கானான் தேசம் நுழைந்தனர்
    மோட்சம் சேரும் அழியாஉணவு
    உண்ண வாருங்கள் - 2
    தன்னையே கொடுத்தவர்
    நமக்காக உடைந்தவர்
    வாழவைக்க அழைக்கிறார்
    வாருங்கள் - 2
    அன்பு நீதி சமுதாயம்
    படைத்திடுவோம்
    நாம் அவர் வழி
    வாழ்ந்திடுவோம் - 2
    2) சீனாய் மலைதனில்
    காட்சிதந்த ஆண்டவரை
    அப்பமாக நம்மிடையே
    வருகின்றார் - 2
    அனைவரும் இதை வாங்கி
    உண்ணுங்கள் என்று தன்னையே
    முழுமையாய் தருகின்றார் - 2
    மரணத்தை ஜெயித்தவர்
    மனுகுலம் மீட்டவர் வாழவைக்க
    அழைக்கிறார் வாருங்கள் - 2
    அன்பு நீதி சமுதாயம்
    படைத்திடுவோம்
    நாம் அவர் வழி
    வாழ்ந்திடுவோம் - 2

КОМЕНТАРІ • 16