சினத்தவர் முடிக்கும் | திருப்புகழ் | திருத்தணிகை | Sooryanarayanan

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2022
  • An Official UA-cam Channel Of "Soorya Narayanan"
    Song : #சினத்தவர்முடிக்கும்
    #திருப்புகழ்
    Composer: #அருணகிரிநாதர்
    சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்
    செகுத்தவர் ருயிர்க்குஞ் ...... சினமாகச்
    சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
    திருப்புகழ் நெருப்பென் ...... றறிவோம்யாம்
    நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
    நிசிக்கரு வறுக்கும் ...... பிறவாமல்
    நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
    நிறைப்புக ழுரைக்குஞ் ...... செயல்தாராய்
    தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
    தகுத்தகு தகுத்தந் ...... தனபேரி
    தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்
    தளத்துட னடக்குங் ...... கொடுசூரர்
    சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்
    சிரித்தெரி கொளுத்துங் ...... கதிர்வேலா
    தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்
    திருத்தணி யிருக்கும் ...... பெருமாளே.
    ......... சொல் விளக்கம் .........
    சினத்தவர் முடிக்கும் ... முருகன் அடியார்களை கோபிப்பவர்களது
    தலைக்கும்,
    பகைத்தவர் குடிக்கும் ... அவர்களைப் பகை செய்தவர்களது
    குடும்பத்திற்கும்,
    செகுத்தவர் உயிர்க்கும் ... அவர்களைக் கொன்றவர்களது உயிருக்கும்,
    சினமாகச் சிரிப்பவர் தமக்கும் ... அவர்களைக் கண்டு கோபமாகச்
    சிரிப்பவர்கட்கும்,
    பழிப்பவர் தமக்கும் ... அவர்களைப் பழிக்கும் தன்மையினர்க்கும்,
    திருப்புகழ் நெருப்பென்று ... திருப்புகழே நெருப்பாகி (அடியோடு
    அழிக்குமென)
    அறிவோம்யாம் ... யாம் நன்கு அறிவோம்.
    நினைத்தது மளிக்கும் ... (அடியார்களாகிய யாம்) எதை நினைக்கினும்
    அதனை நினைத்தவுடனேயே தரவல்லதும்,
    மனத்தையு முருக்கும் ... (பாடுவோர், கேட்போரின்) மனதையும்
    உருக்குவதும்,
    பிறவாமல் ... மீண்டும் ஒரு தாய் வயிற்றில் பிறவாதவண்ணம்
    நிசிக்கரு வறுக்கும் ... இருள் நிறைந்த கருக்குழியில் விழும் துயரை
    அறுப்பதும்,
    நெருப்பையு மெரிக்கும் ... அனைத்தையும் எரிக்கவல்ல நெருப்பையே
    எரிப்பதும்,
    பொருப்பையு மிடிக்கும் ... மலையையும் இடித்தெறிய வல்லதுமாகிய,
    நிறைப்புகழ் ... எல்லாப் பொருள்களும் நிறைந்த திருப்புகழை
    உரைக்குஞ் செயல்தாராய் ... பாடுகின்ற நற்பணியைத் தந்தருள்வாய்.
    தனத்தன தனத்தந்
    திமித்திமி திமித்திந் தகுத்தகு தகுத்தந்தன ... (அதே ஒலியுடன்)
    பேரி ... பேரிகைகள் முழங்கவும்,
    தடுட்டுடு டுடுட்டுண் டென ... (அதே ஒலியுடன்)
    துடி முழக்கும் ... உடுக்கைகள் முழங்கவும்,
    தளத்துட னடக்கும் ... சேனைகளுடன் போருக்கு அணிவகுத்து வந்த
    கொடுசூரர் சினத்தையும் ... கொடிய சூராதி அசுரர்களின்
    கோபத்தையும்,
    உடற்சங் கரித்தம லைமுற்றும் ... அறுத்தெறிந்த பிணமலைகள்
    யாவையும்,
    சிரித்தெரி கொளுத்தும் ... புன்னகை புரிந்தே அதிலெழுந்த
    அனற்பொறியால் எரித்துச் சாம்பலாக்கிய
    கதிர்வேலா ... ஒளிமிக்க வேற்படையுள்ள வீரனே,
    தினைக்கிரி குறப்பெண் ... தினைப்பயிர் விளையும் மலைக்
    குறவள்ளியை
    தனத்தினில் சுகித்து ... மார்புற அணைத்து இன்புற்று,
    எண் திருத்தணி யிருக்கும் பெருமாளே. ... உயர்ந்தோர்
    மதிக்கும் திருத்தணியில் வீற்றிருக்கும் பெருமாளே!!
    sinaththavar mudikkum pagaiththavar kudikkum
    seguththavar uyirkkum ...... sinamAga
    sirippavar thamakkum pazhippavar thamakkum
    thiruppugazh neruppendr ...... aRivOm yAm
    ninaiththadhum aLikkum manaththaiyum urukkum
    nisikkaru aRukkum ...... piRavAmal
    neruppaiyum erikkum poruppaiyum idikkum
    niRaippugazh uraikkum seyal ...... thArAy
    thanaththana thanaththan dhimithdhimi dhimiththin
    thaguththagu thaguththan ...... thana bEri
    thaduttudu duduttuN denaththudi muzhakkun
    thaLaththudan adakkum ...... kodusUrar
    sinaththaiyu mudaRsang ariththa malai mutrunj
    siriththeri koLuththung ...... kadhir vElA
    thinaiggiri kuRappeN thanaththinil sukiththeN
    thiruththaNi irukkum ...... perumALE.

КОМЕНТАРІ • 148

  • @radhavijayaraghavan88
    @radhavijayaraghavan88 Рік тому +45

    எப்படி இப்படி கடினமான
    தமிழ் சொற்றொடர்கள் நிறைந்த திருப்பகழை உச்சரித்து ,பாடவும் முடிகிறது இந்த சிறு வயதில்.
    ஆச்சர்யம் அற்புதம்
    வாழ்க பல்லாண்டு
    வளர்க்க உன் திறமைகள்

  • @moganasiva71
    @moganasiva71 23 дні тому +2

    முருகா சரணம்
    வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று சகல செல்வ யோக மிக்க பெருவாழ்வு வாழ்க

  • @selvarajduraisamy897
    @selvarajduraisamy897 8 місяців тому +12

    கடினமான சொற்களையும் எளிமையாக பாடும் தெய்வீக குழந்தை வாழ்க பல்லாண்டு.

  • @ssanthamani1500
    @ssanthamani1500 Рік тому +16

    இறைவா! இந்தக் குழந்தை நீண்ட ஆயுளும் நிறை செல்வமும் பெற்று நீடுழி வாழ வேண்டும் என்று மனதார வேண்டுகிறேன்

  • @neelamanishamugam9670
    @neelamanishamugam9670 Рік тому +13

    நூறாண்டு காலம் வாழ்க வளமுடன். திகட்டாத தெள்ள முதம் உன் பாட்டு.

  • @sekarchinnathambi1450
    @sekarchinnathambi1450 5 місяців тому +2

    Om Saravana bhava 🌹🌹🌹🌹🙏🙏

  • @natarajvenkataraman8559
    @natarajvenkataraman8559 8 місяців тому +2

    முருகாமுருகா

  • @vejayakumaranjaganathan6690
    @vejayakumaranjaganathan6690 Місяць тому +2

    சிவ சிவ ❤

  • @gowriramakrisnin1327
    @gowriramakrisnin1327 2 місяці тому +2

    Om Saravanabhava Om

  • @LUCK8434
    @LUCK8434 2 місяці тому +2

    Om saravana bava 🔱💖

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Рік тому +10

    🙏💐திருநீலகண்டம்🌸🍀🥭ஆரூரா... தியாகேசா🔥🥭🙏💦அன்னைக்கா அண்ணலே போற்றி 🐄 🥀அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி🔱🙏Murugaa saranam🌹🙏🙏🙏🙏🙏

  • @varalakshg
    @varalakshg Рік тому +12

    Today's திருப்புகழ் was sweet and pure joy! Listening to your singing made me feel happy and blessed. Thank you Soorya.

  • @karthikeyanj4979
    @karthikeyanj4979 Рік тому +4

    ஓம் அருணாகிரி பெருமானே போற்றி 🙏🙏🙏

  • @krremiya69
    @krremiya69 Рік тому +3

    கடவுளின் அருள் உனக்கு கிடைக்கட்டும்.பல்லாண்டு காலம் வாழ்க.

  • @vijisrinivasan8219
    @vijisrinivasan8219 Рік тому +4

    அதிசயம் மகனே சூர்யா 🌷🌷

  • @ckraj5406
    @ckraj5406 Рік тому +3

    No ward to praise you my soul !!!!

  • @aarem2880
    @aarem2880 Рік тому +7

    அழுத்தமான உச்சரிப்பு மிக அழகு.... கடவுள் உனக்கு நல்லாசிகள் என்றும் வழங்குவார் !!!

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 9 місяців тому +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @sangeethaprabhu76
    @sangeethaprabhu76 Рік тому +4

    வாழ்க வளமுடன்! முருகன் அருள் முன்னிற்கும்..

  • @omnamashivaya5090
    @omnamashivaya5090 Рік тому +2

    சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பென்று அறிவோம் யாம்!

  • @nirmalaravindranathan4617
    @nirmalaravindranathan4617 Рік тому +2

    Vaazhga valamudan kuzhandaye

  • @abiramisubramaniyan98
    @abiramisubramaniyan98 Рік тому +3

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🦚🙏

  • @lalithannk6114
    @lalithannk6114 Рік тому +6

    அருமையான பாடல் மற்றும் குரல் வளம் ஆண்டவன் அனுகிரகம் இந்த குழந்தைக்கு

  • @annamalai8635
    @annamalai8635 11 місяців тому +3

    ❤திருத்தனி இருக்கும் பெருமாளே❤

  • @user-oq2bz7ht9d
    @user-oq2bz7ht9d Рік тому +6

    ஓம் ஸ்ரீ அருணகிரிநாதர் அருளுக்கு தேர்வான ஆன்மா சிறப்பு

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  Рік тому +1

      மிக்க நன்றி 🙂🙏

    • @user-oq2bz7ht9d
      @user-oq2bz7ht9d Рік тому

      ராசா தங்கள் தொலைபேசி எண் தாருங்கள் தயவு

  • @saravanan5640
    @saravanan5640 5 місяців тому +2

    ஓம் முருகா
    திருப்புகழின் மேன்மையை சொல்ல வார்த்தை இல்லை
    எல்லாம் வல்ல முருகப்பெருமானின் அருளால் இந்த குழந்தை
    எல்லா வளமும் நலமும் பெற்ற வாழ்வாங்கு வாழ எம் அண்ணனை பிரார்த்தனை செய்கிறேன்
    வாழ்க வளமுடன்
    நன்றிகள் பல பல
    வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏🙏🙏🙏

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  5 місяців тому

      மிக்க நன்றி 🙂🙏

  • @jshankar1098
    @jshankar1098 Рік тому +3

    சிலிர்ப்பு! சூரிய நாராயணன் எங்கள் வீட்டுக் மழலைகளுக்கு ஒரு நட்சத்திரம்!

  • @santhiraj6871
    @santhiraj6871 Рік тому +6

    குரு-அருள் பரிபூரணமாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @chandini.p.s
    @chandini.p.s Рік тому +5

    Tamil is just dancing in the form of flawless Thirupugaz in the voice of the divine kid awesome . Keep singing my child

  • @subramanians2170
    @subramanians2170 Рік тому +3

    அருமை தெய்வீக குழந்தை
    ஞானகுழந்தை

  • @kullothuingans7805
    @kullothuingans7805 Рік тому +4

    ஞானக் குழந்தை சீரும் சிறப்பு டன் நீண்டு வாழ வாழ்த்துக்கள்

  • @parvathamveeraraghavan1633
    @parvathamveeraraghavan1633 Рік тому +6

    Simply listening with tears no words to express fabulous

  • @usharavi4152
    @usharavi4152 Рік тому +2

    Sooryanarayana Namaskaram 🙏
    Om Mukambika Devi Thunai 🙏🙏🙏

  • @sensual1410
    @sensual1410 8 місяців тому +2

    Lord muruga is making him like this

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 Рік тому +1

    Ohm Saravanabhava! Ohm.

  • @kamalavenijagannathan1118
    @kamalavenijagannathan1118 Рік тому +3

    அருமை குட்டி வாழ்க வளமுடன் 👍🙏💐💐💐

  • @UmaaKanna
    @UmaaKanna Рік тому +3

    அருமை👏👏👏 வாழ்த்துகள் 💐💐💐💐

  • @usharavi4152
    @usharavi4152 Рік тому +1

    Om Mukambika Devi Thunai 🙏

  • @maniganesh1340
    @maniganesh1340 11 місяців тому

    மிகவும் எளிதாக பாடி..... வியக்கவைக்கும் முருகக் குழந்தை நீயப்பா....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤔🤔💯💯💯💯💯

  • @karthikselvam3326
    @karthikselvam3326 4 місяці тому

    அருமை ஐயா

  • @ganeshsreenivaasan4714
    @ganeshsreenivaasan4714 Рік тому +3

    Special dedication on memorising the lyrics... Always a bliss .. 👌🙏😇

  • @kabilesha3060
    @kabilesha3060 Рік тому

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.... 🙇🏼‍♂️✡️

  • @jayalakshmibalakrishnan555
    @jayalakshmibalakrishnan555 Рік тому +1

    அருமை

  • @narmadhaarumugam6291
    @narmadhaarumugam6291 Рік тому +1

    அருமை! அருமையோ அருமை!🙏🙏👌

  • @umarajnagpurraj9854
    @umarajnagpurraj9854 Рік тому +1

    Excellent singing dear, very tough song, keep it up

  • @hemaravi7197
    @hemaravi7197 Рік тому +2

    You're a blessed soul...we are, to listen to your Divine Music

  • @user-ue1bc6cc5c
    @user-ue1bc6cc5c Рік тому

    ஓம் சரவணபவ
    💐🙏🏻🙏🏻🙏🏻💐

  • @kalaimathysivanantha2291
    @kalaimathysivanantha2291 7 місяців тому

    Excellent

  • @maheswarankandiah8897
    @maheswarankandiah8897 7 місяців тому

    Fantastic beautiful singing very good performance very sweet voice blissful vibration super pranaùnciation congratulations God bless you always and your entire family members ❤❤❤❤❤❤

  • @GiridharRanganathanBharatwasi

    Om Shri Subramanya Swaminae Namaha.

  • @dthirumangai7592
    @dthirumangai7592 Рік тому

    மிக மிக அருமை வாழ்க பல்லாண்டு

  • @venkatram134
    @venkatram134 Рік тому +1

    Excellent rendition. Long live my dear boy. God bless you.

  • @jayavishwanathanjayavishwa6867

    ஓம் முருகா சரணம் 🙏❤️🙏

  • @jayavatsan1954
    @jayavatsan1954 Рік тому

    Migavum arumai....
    Athbhuthamaana kural valam
    Touching our heart, when we hear his voice....🙏🙏🙏🙏

  • @ramachandrannayar5979
    @ramachandrannayar5979 Рік тому

    மிக,மிக, மிக, மிகவும் அருமை.

  • @balakumarmuthusami8713
    @balakumarmuthusami8713 10 місяців тому +1

    அருமை ❤❤🥰❤❤

  • @aparnaalai78
    @aparnaalai78 Рік тому +1

    Soulful rendition soorya🙏

  • @shanmugavallir972
    @shanmugavallir972 Рік тому

    Super

  • @ramachandrannayar5979
    @ramachandrannayar5979 Рік тому

    மிக,மிக,மிகவும் அருமை.

  • @sasikalabalakrishnan6060
    @sasikalabalakrishnan6060 Рік тому

    வாழ்க வளமுடன்ஃ செல்லம்

  • @mrsThangamaniRajendran839
    @mrsThangamaniRajendran839 Рік тому +1

    அருமை!,அருமை!!

  • @vanisree8621
    @vanisree8621 Рік тому

    👌 👌 thangam 🥰😘🙏🏽🙏🏽🙏🏽

  • @sureshkannan1622
    @sureshkannan1622 Рік тому +3

    திருச்சிற்றம்பலம்

  • @RameshKumar-re4zs
    @RameshKumar-re4zs Рік тому +1

    Very pleasant and bhava-yuta rendition. Chi Sooryanarayanan face raditing innocent glow. Nandri for yet another enthralling singing

  • @momthegreatest
    @momthegreatest Рік тому +3

    தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம்
    தனத்தன தனத்தம் ...... தனதான
    ......... பாடல் .........
    சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்
    செகுத்தவர் ருயிர்க்குஞ் ...... சினமாகச்
    சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
    திருப்புகழ் நெருப்பென் ...... றறிவோம்யாம்
    நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
    நிசிக்கரு வறுக்கும் ...... பிறவாமல்
    நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
    நிறைப்புக ழுரைக்குஞ் ...... செயல்தாராய்
    தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
    தகுத்தகு தகுத்தந் ...... தனபேரி
    தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்
    தளத்துட னடக்குங் ...... கொடுசூரர்
    சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்
    சிரித்தெரி கொளுத்துங் ...... கதிர்வேலா
    தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்
    திருத்தணி யிருக்கும் ...... பெருமாளே.
    ......... சொல் விளக்கம் .........
    சினத்தவர் முடிக்கும் ... முருகன் அடியார்களை கோபிப்பவர்களது
    தலைக்கும்,
    பகைத்தவர் குடிக்கும் ... அவர்களைப் பகை செய்தவர்களது
    குடும்பத்திற்கும்,
    செகுத்தவர் உயிர்க்கும் ... அவர்களைக் கொன்றவர்களது உயிருக்கும்,
    சினமாகச் சிரிப்பவர் தமக்கும் ... அவர்களைக் கண்டு கோபமாகச்
    சிரிப்பவர்கட்கும்,
    பழிப்பவர் தமக்கும் ... அவர்களைப் பழிக்கும் தன்மையினர்க்கும்,
    திருப்புகழ் நெருப்பென்று ... திருப்புகழே நெருப்பாகி (அடியோடு
    அழிக்குமென)
    அறிவோம்யாம் ... யாம் நன்கு அறிவோம்.
    நினைத்தது மளிக்கும் ... (அடியார்களாகிய யாம்) எதை நினைக்கினும்
    அதனை நினைத்தவுடனேயே தரவல்லதும்,
    மனத்தையு முருக்கும் ... (பாடுவோர், கேட்போரின்) மனதையும்
    உருக்குவதும்,
    பிறவாமல் ... மீண்டும் ஒரு தாய் வயிற்றில் பிறவாதவண்ணம்
    நிசிக்கரு வறுக்கும் ... இருள் நிறைந்த கருக்குழியில் விழும் துயரை
    அறுப்பதும்,
    நெருப்பையு மெரிக்கும் ... அனைத்தையும் எரிக்கவல்ல நெருப்பையே
    எரிப்பதும்,
    பொருப்பையு மிடிக்கும் ... மலையையும் இடித்தெறிய வல்லதுமாகிய,
    நிறைப்புகழ் ... எல்லாப் பொருள்களும் நிறைந்த திருப்புகழை
    உரைக்குஞ் செயல்தாராய் ... பாடுகின்ற நற்பணியைத் தந்தருள்வாய்.
    தனத்தன தனத்தந்
    திமித்திமி திமித்திந் தகுத்தகு தகுத்தந்தன ... (அதே ஒலியுடன்)
    பேரி ... பேரிகைகள் முழங்கவும்,
    தடுட்டுடு டுடுட்டுண் டென ... (அதே ஒலியுடன்)
    துடி முழக்கும் ... உடுக்கைகள் முழங்கவும்,
    தளத்துட னடக்கும் ... சேனைகளுடன் போருக்கு அணிவகுத்து வந்த
    கொடுசூரர் சினத்தையும் ... கொடிய சூராதி அசுரர்களின்
    கோபத்தையும்,
    உடற்சங் கரித்தம லைமுற்றும் ... அறுத்தெறிந்த பிணமலைகள்
    யாவையும்,
    சிரித்தெரி கொளுத்தும் ... புன்னகை புரிந்தே அதிலெழுந்த
    அனற்பொறியால் எரித்துச் சாம்பலாக்கிய
    கதிர்வேலா ... ஒளிமிக்க வேற்படையுள்ள வீரனே,
    தினைக்கிரி குறப்பெண் ... தினைப்பயிர் விளையும் மலைக்
    குறவள்ளியை
    தனத்தினில் சுகித்து ... மார்புற அணைத்து இன்புற்று,
    எண் திருத்தணி யிருக்கும் பெருமாளே. ... உயர்ந்தோர்
    மதிக்கும் திருத்தணியில் வீற்றிருக்கும் பெருமாளே.

  • @naliniselvaraj8535
    @naliniselvaraj8535 Рік тому

    கதிர்வேலா. அருமை முருகா. வார்த்தை இல்லை முருகா உன்னை சீராட்ட.

  • @History_G.O.A.T_7621
    @History_G.O.A.T_7621 7 місяців тому

    Very nice song .God blessed child

  • @revathim3680
    @revathim3680 Рік тому

    ரொம்ப நன்னாளில்,சூர்யா.👌👌👍👏👏

  • @KumarGanapathiramanKallur
    @KumarGanapathiramanKallur Рік тому

    அருமை முருகா

  • @srivarashakthivinayagartem3365

    Super singing all the best wishes from sri varashakthi vinayagar temple nellikuppam cuddalore 👌 🙏🕉

  • @ponmanis4692
    @ponmanis4692 Рік тому

    Supro super chellakuttiiii

  • @karthikrishna9722
    @karthikrishna9722 Рік тому

    Thagam vazka muruga

  • @dhanasekaran5252
    @dhanasekaran5252 Рік тому

    பாடல் அருமையாக பாடினீர்கள்...

  • @lalitharamasubramanian6157
    @lalitharamasubramanian6157 Рік тому

    Very divine Kanna🙏. God bless you🙏

  • @krishnasamyvenkataramanuja3545

    Fabulous by Divine Grace

  • @ramdevk4915
    @ramdevk4915 11 місяців тому

    Excellent pitching!! Divine & blessed voice!

  • @naliniraghunandan728
    @naliniraghunandan728 Рік тому

    Wonderfully sung Kanna. 👌👏👏👏

  • @lathabaskar2079
    @lathabaskar2079 Рік тому

    Arumai

  • @rajeswariramakrishnan8344
    @rajeswariramakrishnan8344 Рік тому

    👌🙏🙌vazhga pallandu chellakutty.

  • @abinayamanojkumar8338
    @abinayamanojkumar8338 Рік тому +2

    Fabulous singing 👌

  • @duraimurugans6415
    @duraimurugans6415 Рік тому +1

    Very nice 👍👍👍

  • @ManjulaManjula-fz3sr
    @ManjulaManjula-fz3sr Рік тому

    super. ma

  • @lakshmirajagopalanchennai124

    Very nice ßurya

  • @esakkiselvan4978
    @esakkiselvan4978 Рік тому

    குமரா குமரா 💚

  • @usharavi4152
    @usharavi4152 Рік тому

    Namaskaram Sooryanarayana 💖 💖 💖

  • @pandiancpm2106
    @pandiancpm2106 10 місяців тому

    ❤❤❤❤❤❤

  • @darshansahasra
    @darshansahasra Рік тому

    🙏🏻🙏🏻

  • @lathanagarajan5712
    @lathanagarajan5712 8 місяців тому

    🎉❤🎉

  • @ponnuthuraichandrakumary7381

    ❤❤❤❤❤❤🎉

  • @mahathianantharaman810
    @mahathianantharaman810 Рік тому

    Aarumai 🙏🏻🙏🏻

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 Рік тому

    muruga!

  • @srinivashd2593
    @srinivashd2593 Рік тому

    👌🙏

  • @ganapathirangaswamy549
    @ganapathirangaswamy549 Рік тому

    Very well sung in haunting kambodhi

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому

    🙏🙏🌼🌼

  • @emayavaramban9373
    @emayavaramban9373 Рік тому

    😍❤️🙏🙏🙏

  • @sivalingamramasamy2115
    @sivalingamramasamy2115 Рік тому

    🙏🙏🙏💚

  • @Sundara39
    @Sundara39 Рік тому

    🙏🙏🙏

  • @sarmas1867
    @sarmas1867 Рік тому

    🙏🙏🙏👍👌👌👌

  • @rathyambigaipagan8250
    @rathyambigaipagan8250 8 місяців тому

    வேலை வணங்குவதே வேலை

  • @akashhsaka2960
    @akashhsaka2960 Рік тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻