Urimai Kural Movie MGR நூற்றாண்டு விழாவில் 200 நாள் ஓடி வெற்றி வாகை சூடிய உரிமைகுரல்.

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2025

КОМЕНТАРІ • 18

  • @sulaimansulaiman3510
    @sulaimansulaiman3510 4 роки тому +4

    Very very nice very geret movie

  • @rajp459
    @rajp459 4 роки тому +2

    Great movie s

  • @DJ1990-fxh
    @DJ1990-fxh 7 років тому +6

    super movie

  • @thavamanijambulingam6955
    @thavamanijambulingam6955 7 років тому +3

    enakku migaum pidittha padal

    • @jayverru6856
      @jayverru6856 3 роки тому

      @@krithick6525 😁😁😉😉 you I5😉 Ire 🙄 and

  • @selvavasthu4035
    @selvavasthu4035 4 роки тому +4

    Super cenima

  • @rathnavel65
    @rathnavel65 8 місяців тому

    லதாவின்
    "மலரும் நினைவுகள்"
    உலகம் சுற்றும் வாலிபனில் அறிமுகமாகி 'சிரித்து வாழ வேண் டும்','நேற்று இன்று நாளை' என தொடர்ந்து எம்.ஜி.ஆருடன் நடித்த லதாவுக்கு 'உரிமைக்குரல்' 4-வது படம்.
    இந்த படத்தில் நடித்தது மறக்க முடியாத இனிமையான நாட்கள் என்றும், ஸ்ரீதருடன் இணைந்து பணியாற்றியது நல்ல அனுபவம் என்றும் அவர் தனது "மலரும் நினைவுகளை" பகிர்ந்து கொண்டார்.
    'உரிமைக்குரல்' படத்தின் வெளிப்புற படப்பிடிப்புகள் மைசூர், சிக்மகளூரில் நடந்ததாக கூறிய அவர், "விழியே கதை எழுது" பாடல் இரு முறை படமாக்கப்பட்ட புதிய தகவலையும் தெரிவித்தார்.
    இதுபற்றி அவர் கூறுகையில், "முதலில் இந்த பாடல் மைசூர் பகுதியில் சாதாரண பாடலாகத்தான் படம் பிடிக்கப்பட்டது.
    ஆனால் அதில் முழு திருப்தி அடையாத எம்.ஜி.ஆர்., இந்த அருமையான பாடலை கனவுப்பாடலாக எடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று ஸ்ரீதரிடம் கூற, அதை அவர் ஏற்றுக் கொண்டார். அதன்பிறகு பிரமாண்டமான 'செட்' அமைக்கப்பட்டு "விழியே கதை எழுது" பாடல் கனவுப் பாடலாக எடுக்கப்பட்டது" என்று தெரிவித்தார்.
    இதனால்தான் அந்த பாடல் இன்றளவும் எல்லோராலும் விரும்பி ரசிக்கப்படுவதாக வும், எம்.ஜி.ஆருடன் நடித்ததால் இப்போதும் தன்னை எல்லோரும் "எம்.ஜி.ஆர். லதா" என்றே அழைப்ப தாகவும் பெருமையுடன் கூறினார்.
    நடிகை சச்சுவின் அனுபவம்
    இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகை சச்சு கூறியதாவது:-
    குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியான என்னை தனது 'காதலிக்க நேர மில்லை' படத்தில் நகைச்சுவை நடிகையாக ஸ்ரீதர் அறிமுகப்படுத்தினார். அந்த படம் தொடங்கி 'ஊட்டி வரை உறவு', 'சிவந்த மண் உள்ளிட்ட அவரது பல படங்களில் நான் நடித்திருக்கிறேன்.
    சிறிது கால இடைவெளிக்கு பிறகு
    'உரிமைக்குரல்' படத்தில் நடிக்க அவர் அழைத்த போது, நான் தயங்காமல்
    ஒப்புக்கொண்டேன். இந்த படத்தின் நகைச்சுவை காட்சிகள் சென்னையில் அப்போது இருந்த விக்ரம் 'ஸ்டூடியோ'வில் படமாக்கப்பட்டன. நானும் நாகேஷ், தேங்காய் சீனிவாசனும் செய்யும் நகைச்சுவை ரகளைகள் ரசிக்கும்படியாக இருக்கும். எனது இயற்பெயர் சரஸ்வதி. வீட்டில் என்னை சச்சு என்றுதான் கூப்பிடுவார்கள். அதுவே சினிமா பெயரும் ஆகிவிட்டது. ஆனால் நாகேஷ் பெரும்பாலும் என்னை சரஸ்வதி என்றுதான் அழைப்பார்.
    உரிமைக்குரலுக்கு பின் நான் மிகவும் 'பிசி'யாகி விட்டேன். இந்த படத்துக்கு பிறகு மீனவநண்பனிலும் நான் நடித்தேன் என்றார்.
    -நன்றி "தினத்தந்தி"
    19.5.2024

  • @priyaraja5274
    @priyaraja5274 6 років тому +4

    Semma movie

  • @rathnavel65
    @rathnavel65 8 місяців тому

    பொன்விழா ஆண்டில் "உரிமைக்குரல்"
    தமிழ்நாட்டில் அரசியல் அனல் தகித்துக் கொண்டிருந்த பரபரப்பான சூழ்நிலையில், 1974-ம் ஆண்டு நவம்பர் 7-ந் தேதி வெளியாகி 25 வாரங்கள் ஓடி வெள்ளிவிழா கண்ட உரிமைக்குரலுக்கு எம்.ஜி.ஆரின் சாதனைப்படங்களில் பட்டியலில் முக்கியமான இடம் உண்டு.
    மக்களின் அமோக வரவேற்புடன் மாபெரும் வெற்றி பெற்று வசூலை வாரிக்குவித்த 'உரிமைக்குரல்' வருகிற நவம்பர் மாதம் பொன்விழா கொண்டாட இருக்கிறது.
    புதுமை இயக்குநர் என்று பெயர் பெற்ற ஸ்ரீதரும், மக்கள் திலகமும் இணைந்த முதல் படம் இது.
    உணர்வுபூர்வமான-நளினமான காதல் கதைகளுக்கும், 'சென்டிமென்ட்' காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ஸ்ரீதர் இந்த படத்தை இயக்கியது அப்போது பலருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 'உரிமைக்குரல்' படத்துக்காக அவர் தனது பாணியை மூட்டை கட்டி வைத்துவிட்டு, எம்.ஜி.ஆர். பாதைக்கு வந்தார். இதனால் 'உரிமைக்குரல்' முழுக்க முழுக்க எம்.ஜி.ஆர். படமாகவே அமைந்தது.
    ஏழைகளை பணக்காரர்கள் சுரண்டுவது, அப்பாவிகளை அதிகாரம் படைத்தவர்கள் ஆட்டிப்படைப்பது போன்ற சமுதாய அவலங்களை எம்.ஜி.ஆர்.
    தோலுரித்து சவுக்கடி கொடுக்கும் காட்சிகள் படத்தில் ஆங்காங்கே உண்டு.
    படம் முழுக்க வேட்டி-சட்டையில் எம்.ஜி.ஆர்., புது மாப்பிள்ளை போல் உற்சாகமாக வருவார். அது போதாதா ரசிகர்களுக்கு... படத்தை கொண்டாடி விட்டார்கள்.
    கிராமத்து காதலில் உள்ள உறுதி, பரஸ்பர
    சீண்டல்கள், நையாண்டி, ஊடல் என அத்தனை
    அம்சங்களையும் எம்.ஜி.ஆரும், லதாவும் நன்றாக வெளிப்படுத்தி இருப்பார்கள்.
    எம்.ஜி.ஆருக்கு லதா எண்ணெய் தேய்த்து குளிக்க வைக்கும் காட்சியில் ஒருவரையொருவர் செய்து கொள்ளும் பரிகாசம் கிராமிய காதலர்களுக்கு மலரும் நினைவுகள்.
    "பொண்ணா பொறந்தா” பாடலில் எம்.ஜி.ஆரின் இளமைத் துள்ளலுடன் கூடிய குறும்புகளை
    ரசிகர்கள் ரொம்பவே ரசித்தார்கள்.
    சண்டைக் காட்சிகளிலும் வழக்கம்போல் வேகம் காட்டி, எத்தனை ஆண்டுகளானாலும் தான் ஓர் 'ஆக்சன் ஹீரோ' தான் என்பதை நிரூபித்திருந்தார். ஒரு சிங்கத்துடன் இன்னொரு சிங்கம்தான் மோத முடியும் என்பது போல், எம்.ஜி.ஆருக்கு ஏற்ற சரியான வில்லன் நம்பியார்.
    "கெட்டவர்களை தனிமனிதன் தண்டிக்கக்கூடாது; சட்டத்துக்குத்தான் அந்த உரிமை உண்டு” என்பதை இந்த படத்திலும் எம்.ஜி.ஆர். வலியுறுத்தி இருப்பார்.
    கடைசி காட்சியில் ஊர் மக்கள் முன் குற்றவா ளியாக நிற்கும் துரைசாமியை, “இவனை அடித்துக் கொல்லவேண்டும்" என்று கூட்டத்தினர் ஆவேசப்பட, அவர்களை சமாதானப்படுத்தும் எம்.ஜி.ஆர்., "அக்கிரமம் ரொம்ப நாள் நீடிக்காது; நியாயமும், தர்மமும் தோற்காது... என்பதற்கு இந்த தொரசாமி ஒரு நல்ல உதாரணம்" என்று ஓர் அருமையான செய்தியை கூறி, அவனை போலீசாரிடம்
    ஒப்படைப்பார். இப்படி கிராமத்து மக்களின் வாழ்க்கை முறையைச் சுற்றி கதை பின்னப்பட்டு இருந்ததால், ஏதோ ஓர் அழகிய ஊருக்கு சென்று அங்குள்ள மக்களோடு சில நாட்கள் இருந்துவிட்டு உணர்வை ஏற்படுத்தியது 'உரிமைக்குரல்'.
    இந்த படத்தின் பல காட்சிகள் சென்னை முகலிவாக்கம், நடிகர் கே.பாலாஜியின் தோட்டம் மற்றும் கர்நாடக மாநிலம் மைசூரையொட் டிய பகுதிகளில் படமாக்கப்பட்டன. “என்ன..! முகலிவாக்கத்தில் எம். ஜி.ஆர். படப்பிடிப்பா?" என்று ஆச்சரியமாக இருக்கலாம். ஆம்...அப்போது முகலிவாக்கம் ஒரு சிறிய கிராமமாகத்தான் இருந்தது. படத்தின் டைட்டிலிலேயே "முகலிவாக்கம் கிராம மக்களுக்கு நன்றி" என்று போடுவார்கள். இதேபோல் பாலாஜிக்கும் நன்றி தெரிவித்து இருப்பார்கள்.
    எம்.ஜி.ஆர். படங்கள் எப்போதுமே மக்கள்
    பிரச்சினையை பேசுவதோடு அவர்களுக்கு
    நீதியை பெற்றுத் தருவதாகவும், அதிகார வர்க்கத்தின் ஆணவத்தையும், அக்கிரமங்களையும் அம்பலப்படுத்தி அவர்களுக்கு
    சட்டப்படி தண்டனை வாங்கித்தருவதாகவே இருக்கும். உரிமைக்குரலும் இதற்கு விதிவிலக்கு அல்ல.
    குரலற்றவர்களின் குரலாக விளங்கும் எம்.ஜி.ஆரின் 'உரிமைக்குரல், அவர் சொன்னது போல் இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும். அதில் சந்தேகமில்லை.
    -நன்றி "தினத்தந்தி"
    19.5.2024

  • @jancyrani5927
    @jancyrani5927 3 роки тому

    Superb movie

  • @KumarRaj-fm2te
    @KumarRaj-fm2te 3 роки тому

  • @Karthi-ro2vj
    @Karthi-ro2vj 3 роки тому +1

    40 நிமிடம் படத்தை காணோம்.. என்ன இது.. இதுக்கு அப்லோட் செய்யாமல் இருக்கலாம்

  • @ramkumarradios3983
    @ramkumarradios3983 Рік тому

    Super movie