உணர்வுநிலையின் விரிவாக்கம் | Guided Meditation on Expansion of Consciousness | YSS

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • “உணர்வுநிலையை விரிவாக்குதல்”-ன் மீதான வழிகாட்டப்பட்ட தியானம், பரமஹம்ஸ யோகானந்தருடைய “Metaphysical Meditations” எனும் நூலிலிருந்து ஒரு சங்கல்பத்தைப் பயன்படுத்துகிறது. எளிய விஞ்ஞானரீதியான தியான வழிமுறைகள் மற்றும் சங்கல்பத்தின் மூலமாக, உங்கள் அகத்தே உறையும் முடிவற்ற பேரின்பத்தை அனுபவிப்பதற்காக - உடல் மற்றும் மனத்தின் எல்லா வரையறைகளையும் கடந்து -உங்களது உணர்வுநிலையை ஸ்தூல பொருட்கள் மற்றும் மனத்திற்கு அப்பால் விரிவடையச் செய்வதற்கான வழிமுறையை நீங்கள் அறிந்துகொள்ள முடியும்.
    நமது தியானத்தைத் தொடங்கும் முன், தியான வேளையின்போது நீங்கள் தனிமையிலும், தொந்தரவு செய்யப்படாமலும் இருக்க முடிவதற்காக ஓர் அமைதியான, நிசப்தமான இடத்தைக் காண்பது முக்கியம். நீங்கள் ஒரு நேரான நாற்காலியின் மீதோ அல்லது திடமான பரப்பின் மீது சப்பணமிட்டோ அமரலாம். சரியான தியான நிலையில் அமர்வதற்காக, உங்கள் முதுகுத்தண்டு நேராகவும், முகவாய்க்கட்டை தரைக்கு இணையாகவும், உடல் அசையாமலும் தளர்த்தப்பட்டும் வைத்துக்கொள்ளப்படுவதை உறுதி செய்துகொள்ளுங்கள். உங்களது கண்களை மூடி, பார்வையை மெதுவாக மேல்நோக்கி சிரமின்றி, புருவங்களுக்கு இடையில் - ஒருமுகப்படுதல் மற்றும் ஆன்மீகக் கண் அல்லது இறை உணர்வின் இருக்கை - உயர்த்துங்கள். உடலைப் பற்றிய எல்லா எண்ணங்களையும் ஒதுக்கிவிட்டு, பார்வையை ஆன்மீகக் கண்ணில் குவித்து வைத்திருப்பதை நினைவில் வைத்தவாறு கவனத்தை உள்ளுக்குள் கொண்டுவாருங்கள். எல்லாப் பொறுப்புகளையும் கவலைகளையும் கைவிட்டு, அகத்தே அமைதியை உணருங்கள்.
    பரமஹம்ஸ யோகானந்தருடைய போதனைகளைப் பற்றி இன்னும் அதிகமாக அறிந்துகொள்ள எமது வலைத்தளத்தைப் பார்வையிடவும்: www.yssofindia...
    பரமஹம்ஸ யோகானந்தருடைய தியான விஞ்ஞானம் பற்றிய வீட்டுக் கல்விப் பாடத் திட்டம், யோகதா சத்சங்கப் பாடங்களுக்குப் பதிவு செய்துகொள்வதற்கு பார்வையிடவும்: www.yssofindia...
    சங்கல்பங்களின் மூலமாக உடல் மற்றும் மனத்தைக் குணமாக்கும் அறிவியலைப் பற்றி இன்னும் அதிகமாக அறிந்துகொள்வதற்கு பரமஹம்ஸ யோகானந்தருடைய “Metaphysical Meditation” அல்லது அவரது “Scientific Healing Affirmations,” -ஐப் படிக்கவும். இவ்விரண்டும் yssofindia.org... -ல் கிடைக்கப் பெறும்.
    #வழிகாட்டப்பட்ட தியானங்கள்
    உணர்வுநிலையை விரிவாக்குதல்:
    #யோகானந்தர்
    #யோகதாசத்சங்கசொஸைடிஆஃப்இந்தியா
    #யோகத் தியானம்
    #ஒய்எஸ்எஸ்
    #GuidedMeditations
    #ExpansionOfConsciousness
    #Yogananda
    #YogodaSatsangaSocietyOfIndia
    #YogaMeditation
    #YSS

КОМЕНТАРІ • 5

  • @Jagan_Theerthan
    @Jagan_Theerthan 4 місяці тому

    Wonderful sir,,,,namaste

  • @pramilanarasimhan9493
    @pramilanarasimhan9493 Рік тому

    இந்த பயிற்சி எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மிகவும் நன்றி. ஜெய் குரு 🙏🙏🙏🙏

  • @anantharajana2859
    @anantharajana2859 Рік тому +1

    Super

  • @babur3273
    @babur3273 Рік тому

    அருமை ஐயா

  • @snigdhamaiti1326
    @snigdhamaiti1326 11 місяців тому

    Please tell me can I get all books in Bengali language, please please help me