ஏதோ நினைவுகள் கனவுகள்

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • இதயம் தொட்ட பாடல் - ஏதோ நினைவுகள் கனவுகள்
    ஒரு மழைநாளின் மதியம் இன்பா தொலைபேசியில் அழைத்தான்.
    போனேன்.
    பழைய ஒளிப்படத் தொகுப்புகளுடன்(photo albums) உட்கார்ந்திருந்தான்.
    "இந்த ஃபோட்டோ உனக்கு ஞாபகம் இருக்கா?"
    அந்தத் தொகுப்பு முழுக்க இன்பா, நண்பர்களுடன் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எடுத்த ஒளிப்படங்களால் நிரம்பியிருந்தது.
    ஒவ்வொருவரிடம் உள்ள ஒவ்வொரு தொகுப்பும் சிறிது இடைவெளி இட்டுப் பார்க்கையில் பழைய சம்பவங்கள் பாசமாய் எட்டிப் பார்க்கும். உறைந்த சிற்பங்கள், மனத்துள் உயிர் பெற்று எழும்.
    இன்பா சுட்டிக்காட்டிய படத்தைப் பார்த்தேன். சாளரத் திரைக்குக் காற்று உயிர் கொடுத்த மாதிரி ஒரு சலனம். இன்பாவுடன் விண்ணரசி இருந்த படம். அந்தப் படம் நான் எடுத்தது.
    பஃபேலா விண்ணரசி. பெயருக்கு இருந்த வசீகரம் அவளுடைய சிரிப்புக்கும் இருந்தது.
    இன்பாவுக்கு அவளை விண்ணரசி என்று கூப்பிடுவதே பிடிக்கும்.
    மொட்டு அவிழும் கணத்தைக் கணிக்க முடியாத மாதிரி, அவர்களுக்குள் காதல் ஏற்பட்ட கணத்தை என்னால் கணிக்க முடியவில்லை. ஆனால் உணர முடிந்தது.
    மலைச் சாரல் ஊரில், மலையருவி அருகில் இருவரையும் ஒளிப்படம் எடுத்தேன். ஒளிப்படம் எடுத்த நேரம், எதேச்சையாக வந்த மின்னல் மாதிரி எதிர்பாராதது. விண்ணரசியின் வெட்கத்தையும் இன்பாவின் புன்சிரிப்பையும் கருவியில் பதித்து வைத்த கணத்தில், அவர்களது காதலை உணர்ந்தேன்.
    ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, கார்ல் மார்க்ஸ், சுந்தர ராமசாமி, சத்யஜித் ராய், எக்சிஸ்டென்ஷியலிஸம்… என்று பேசிக்கிடந்த நட்புகள் மத்தியில் பேசாமல் கிளர்ந்த காதல் அது.
    மேசை முன் வைக்கப்பட்ட காபியின் வாசனையில் பழைய நினைவுகள் கரைந்து போயின.
    ஏதோ நினைவுகள் … ஏதோ கனவுகள் …
    கிளம்பும் கடைசி நொடியில் இன்பாவிடம் கேட்டேன்…
    "கடைசி வரை நீங்கள் இருவரும் உங்கள் காதலைச் சொல்லிக்கொள்ளவே இல்லை, இல்லை?”
    _^^^_
    _^^^_
    சுத்த தன்யாசி இராகத்தின் ஹிந்துஸ்தானி சொந்தக்காரி மதுகெளன்ஸ். அவளை மறுபடி நம் தமிழ்ச் செவ்வியலிசைக்கு அழைத்து வந்து சுமனேசரஞ்சனி என்னும் பெயரில் உலவ விட்டிருக்கின்றனர். காதலின் மெல்லுணர்வுகளையும் மென்சோகத்தையும் சமைத்துக் கொடுக்கும் அழகான இராகம் இது. எவ்வளவு சந்தோஷ மெட்டிலும் சின்னதாய் ஒரு சோகம் அந்த இராகத்தில் தொனிக்கும்.
    இந்த நூற்றாண்டுக்கான இசை மேதை இளையராஜா, நமது பயணத்தின் வழித்துணைவன் மட்டும் இல்லை. வாழ்க்கைத் துணைவனும் கூட!
    இன்பாவின் வீட்டிலிருந்து நான் கிளம்பும் போது தொலைக்காட்சியில் ஒலித்த பாடல் …
    அகல்விளக்கு (1979) என்ற திரைப்படத்தில், இசைஞானியின் இசையில்,
    இயேசுதாஸ், ஷைலஜா பாடிய பாடல் …
    " ஏதோ நினைவுகள் கனவுகள் மலருதே”
    என்றென்றும் இதயத்தில் இசைஞானியின் பாடல்களுடன்
    உங்கள் இசைரசிகன்.
    (பாடல்களின் உரிமை இசைஞானிக்கு!
    கேட்கும் உரிமை இசை நெஞ்சங்களுக்கு!)

КОМЕНТАРІ • 1