இதயம் தொட்ட பாடல் - வெள்ளைப் புறா ஒன்று

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • இதயம் தொட்ட பாடல் - வெள்ளைப் புறா ஒன்று
    எல்லாரும் ஒரே மாதிரிதான் காதலிக்கிறார்கள்.
    ஆனால் எல்லாக் காதலும் ஒரே மாதிரி இருப்பதில்லை!
    காதலிப்பவர்கள் பூங்காக்களில் நடந்தால் பூக்களும் அவர்கள் கூடவே நடக்கின்றன. மதியம் மூன்று மணி வெயிலில்கூட தென்றல் வீசும்!
    குற்றாலச் சாரல் தெளிக்கும்!
    பாழடைந்த பகுதிகளில் இருக்கும் வெளவால் எச்சமும் நறுமணமாய் மாறும்!
    அன்று ஒரு நாள் அந்தப் பழைய புராதனக் கோவிலில் அவர்கள் இருவருக்கும் நறுமணம் வீசியது.
    விடலைப் பருவத்தின் விளிம்பில் அவனும் அவளும்.
    அந்தப் பழைய கோவிலின் உட்பிரகாரத்தின் பின்பக்கத்தில் சிறிதே வெளிச்சம் கசிந்தது. சுற்றிலும் ஏகாந்தம். புறாக்களின் குனுகல் ஒலி, கோபுரத்திலிருந்து கசிந்தது. வெளவால்களின் எச்சமணமும் மட்கிக் கருகிய, விளக்கில் ஏற்றி அணைந்த தீபத்தின் எண்ணெய் மணமும் அந்த இடத்தைச் சூழ்ந்திருந்தன. விடலைக் காதலின் மெளன சாட்சியாய் நந்தி வாகனம் அரையிருட்டில் …
    "சாமிநாதா, வேணாண்டா. பயமாருக்குடா. யாராவது பாத்துடப் போறாங்க.”
    " யாரும் வர மாட்டங்கடி. ஒண்ணே ஒண்ணு கொடுடி."
    " மாட்டேன். அந்த ஓட்டை வழியா சூரிய வெளிச்சம் விழறது பார். உன்னோட நிழல் இந்தத் தூணில் தெரியறது. அதுல முத்தம் கொடுக்கிறேன். எடுத்துக்கோ.”
    தூணுக்கு முத்தம் தந்துவிட்டுக் கொலுசொலிக்க விலகி நின்றாள்.
    சாமிநாதன் அவள் முத்தம் தந்த இடத்தைச் சுற்றிக் கல்லால் அழுத்தி வரைந்தான்.
    "பெரியவனாகி, வேலைக்குப் போயி, உன்னைக் கல்யாணம் பண்ணிட்டு, இதே இடத்துக்கு உன்னைக் கூட்டிட்டு வந்து முத்தம் கேப்பேன்."
    "பார்க்கலாம், பார்க்கலாம்..." ஓடிவிட்டாள்.
    காலம் காதலுக்காகக் காத்திருப்பதில்லை.
    ஓடிக்கொண்டேயிருக்கும்.
    ஓடியது…
    சாமிநாதன், அவளை அந்தக் கோவிலுக்குக் கூட்டிக்கொண்டு வந்தானா?
    அவள் முத்தம் தந்தாளா?
    … தெரியாது.
    அந்தப் புராதனக் கோவிலின் உட்பிரகாரத் தூணில் முத்தமிட்ட வட்டக் குறி இன்னமும் அப்படியே இருந்தது. சூரியன் வெளிச்சக் கசிவை அனுப்பிக்கொண்டிருந்தது.
    கோபுரப் புறாக்களின் குனுகல் ஒலிகள், வெளவால்களின் எச்சம், அணைந்த தீபத்தின் மணம், எவையும் மாறவில்லை!
    வந்தார்களா அவர்கள் என்று அந்த நந்திக்குத்தான் தெரியும்.
    கைநழுவிப்போகும் வெள்ளைப் புறாக்களைப் பார்த்தபடியே காலம் செல்லும்.
    தமிழிசையின் பழைய மரபில் மேற்செம்பாலை என்று அழைக்கப்படும் பண், இன்றைய செவ்வியல் இசையில் கல்யாணி என்றழைக்கப்படும் இராகம்.
    இசையின் அழகு முழுவதும் கொட்டிக் கொடுத்த மாதிரி உருவெடுத்த இராகம் கல்யாணி.
    ஏழு சுரங்களும் அமையப் பெற்ற முழுமையான இராகம்.
    பக்தி, காதல், சோகம் என்று அனைத்து உணர்வுகளுக்கும் உயிர் கொடுக்கும் இராகம்.
    தேர்ந்த சௌந்தர்ய உபாசகனிடம் தேவதை அகப்பட்ட மாதிரி, தேர்ந்த இசைக்கலைஞன் இசைஞானியிடம் கல்யாணி தேவதை சிருங்காரமாகச் சிணுங்குகிறாள்.
    இயேசுதாஸும் ஜானகியம்மாவும், புதுக்கவிதை என்ற படத்தில் பாடிய பாடல் .. .
    என்றென்றும் இதயத்தில் இசைஞானியின் பாடல்களுடன்
    உங்கள் இசைரசிகன்.
    (பாடல்களின் உரிமை இசைஞானிக்கு!
    கேட்கும் உரிமை இசை நெஞ்சங்களுக்கு!)

КОМЕНТАРІ •