Gladys Aylward - Short Biography - Tamil - கிளாடிஸ் அயில்வார்ட்

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024
  • கிளாடிஸ் அயில்வார்ட் (பிப்ரவரி 24, 1902 - ஜனவரி 3, 1970) இலண்டனில் பிறந்து சீனா, ஹாங்காங், தைவான் ஆகிய நாடுகளில் சீனர்களிடையே ஊழியம் செய்த ஒரு மிஷனரி.
    இளமைப் பருவத்தில், கிளாடிஸ் ஒரு வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்தார். தேவன் தன்னைச் சீனாவிற்கு மிஷனரியாகச் செல்லுமாறு அழைத்த அழைப்பைத் தொடர்ந்து, அவர் China Inland Mission மூலமாக சீனாவிற்குச் செல்ல முயன்றார். ஆனால், அவரால் சீன மொழியைக் கற்கமுடியாததால் அவரை யாரும் மிஷனரியாக ஏற்றுக்கொள்ளவில்லை.
    அவர் தன் வாழ்நாள் முழுவதும் சேமித்த பணத்தைக்கொண்டு இரயிலில் மூன்றாம் வகுப்பில், 1932 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி, சீனாவின் ஷாங்சி மாநிலத்தில் உள்ள யாங்செங்கிற்குப் புறப்பட்டார். ஆபத்தான பயணம். சைபீரியாவில் யுத்தம் நடந்துகொண்டிருந்தது. ரஷ்யர்களால் கைதுசெய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். உள்ளூர்காரர்களின் உதவியோடு, ஜப்பானிய மீன்பிடிக் கப்பலில் ஜப்பானுக்குச் சென்று, பின் மற்றொரு கப்பலில் சீனாவுக்குச் சென்றார்.
    சீனாவில் ஒரு வயதான மிஷனரியான ஜீனி லாசனுடன் இணைந்து ஊழியம் செய்தார். அவர்கள் அங்கு ஒரு சத்திரத்தை அமைத்து அந்த ஊருக்கு வந்த கோவேறு கழுதைகளுக்கும், கழுதைகளை ஒட்டி வந்தவர்களுக்கும் விருந்தோம்பல் வழங்கினார்கள். அங்கு தங்கியவர்களுக்கு கதைகளைச் சொல்லி நற்செய்தி அறிவித்தார்கள். சில காலம் கிளாடிஸ் "கால் ஆய்வாளராக"ப் பணியாற்றினார், கால்களைக் கட்டும் பழக்கத்துக்கு எதிரான புதிய சட்டத்தை அமல்படுத்துவதற்காக கிராமப்புறங்களில் சுற்றுப்பயணம் செய்தார்.
    கிளாடிஸ் அயில்வார்ட் சீன மக்களிடையே மிகவும் மரியாதைக்குரியவர். அனாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்தார். ஒரு கொந்தளிப்பான சிறைக் கலவரத்தில் தலையிட்டு, அதைத் தீர்த்துவைத்தார். தேவைப்படுபவர்களுக்கு உதவுவதற்காக தன் உயிரைப் பலமுறை பணயம் வைத்தார். 1938 ஆம் ஆண்டில், ஜப்பானிய படையெடுப்பின்போது அவர் 100க்கும் மேற்பட்ட அனாதைக் குழந்தைகளை மலைகளின்வழியாகப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றார். நோய்வாய்ப்பட்டபோதிலும், அவர் தன் இலக்கிலிருந்து திசைமாறவில்லை.
    17 ஆண்டுகள் அங்கு ஊழியம் செய்தபின், அவர் 1949இல் இங்கிலாந்துக்குத் திரும்பினார். இறுதியாக 1958 இல் அவர் தைவானில் குடியேறினார், அங்கு, அவர் 1970இல் இறக்கும்வரை ஊழியம்செய்தார்.
    tamil.tot.org.in/ என்ற என் இணையதளத்தில் transcript, audio தனித்தனியாக உள்ளன.

КОМЕНТАРІ • 60