TAMIL OLD--Vaan mazhai poley(vMv)--AMARA KAVI 1952

Поділитися
Вставка
  • Опубліковано 24 лип 2024
  • "வான்மழை போலே"...
    அமரகவி (1952)
    பாடலாசிரியர் : 'உவமைக்கவிஞர்' சுரதா
    இசை : ஜி. ராமநாதன்
    பாடியவர் : எம்.கே.தியாகராஜ பாகவதர்
    பாடலுக்கான நடிப்பு : எம்.கே.தியாகராஜ பாகவதர், டி.ஆர். ராஜகுமாரி
    *************************************************************
    1934 ஆம் ஆண்டு பவளக்கொடி என்கிற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிய பாகவதர் சுமார் 14 தமிழ்த் திரைப்படங்களில் நடித்தார்.
    1934- பவளக்கொடி, 1936- நவீன சாரங்கதாரா ,1936- சத்யசீலன் ,1937- சிந்தாமணி,1937- அம்பிகாபதி,1939- திருநீலகன்டர்,1941- அசோக்குமார், 1942- சிவகவி , 1944- ஹரிதாஸ் , 1948-ராஜமுக்தி , 1953-அமரகவி , 1953-சியாமளா, 1957-புது வாழ்வு , 1960- சிவகாமி
    பவளக்கொடியில் தொடங்கிய பாகவதரின் வெற்றிப் பயணம் ஹரிதாஸ் படத்தில் விண்ணைத் தொட்டது. லட்சுமி காந்தன் கொலைவழக்கிற்குப் பின் சிறை சென்று மீண்டு வந்து நடித்த ராஜமுக்தி முதாலான படங்கள் தோல்வியைத் தழுவின.
    அசோக்குமார்(1941) படத்தில் பாகவதரின்சேனாதிபதியாக நடித்தவர் எம்.ஜி.ஆர்.
    எம்.ஜி.ஆரும் ஜானகியும் ராஜமுக்தியில்(1948) நடித்த பொழுது காதல் ஏற்பட்டுத் திருமணம் செய்து கொண்டனர்.
    சிந்தாமணி படத்தின் நாயகி அஸ்வத்தமா பெயர் தான் அன்றைய காலத்து விளம்பரங்களில் கொட்டை எழுத்தில் போட்டிருக்கிறார்கள். இதைக் கண்ட பாகவதருக்கு கோபமோ ஈகோவோ ஏற்படவில்லை.
    அம்பிகாபதியில் தலையை இழப்பது போலவும் , ஹரிதாஸ் படத்தில் கால்கள் இழப்பது போலவும் நவீன சாரங்கதாரா படத்தில் கைகளை இழப்பது போலவும் , அசோக்குமார் படத்தில் கண்களை இழப்பது போலவும்
    நடித்த பாகவதருக்கு சிவகாமி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது உண்மையிலேயே கண் பார்வை பறிபோனது. சிவகாமி(1960) படம் பாகவதரின் மறைவிற்குப்(1959) பின் வெளிவந்தது.
    பாகவதர் என்ற சொல்லிற்கு பக்திக்கதைகளை இசையுடன் பாடுபவர் என்று பொருள்
    இசைக்குள் சொர்க்கத்தை விதைத்த பாகவதர்...தன் இறுதிக்காலத்தை வறுமைநரகத்தில் கழித்தது...தமிழ் சினிமாவின் சொல்லமுடியா சோகம்...

КОМЕНТАРІ • 39

  • @rangasamyk4912
    @rangasamyk4912 2 роки тому +3

    அமுதம் குடித்த திருப்தி கிடைத்தது பாடல் கேட்டதில்

  • @manickam9811
    @manickam9811 2 роки тому +4

    இவ்வளவு அற்புதமான பாடல்கள் இப்போது வருவதில்லை என்று வருத்தமாக உள்ளது....

  • @varatharajan607
    @varatharajan607 2 роки тому +2

    Super Star MKT Arumaiyana Padal 👌👌👌sirappu

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 3 роки тому +3

    தியாகராஜ பாகவதர் டி ஆர் ராஜகுமாரி அருமையாக பாடியுள்ளனர் ஜி ராமநாதன் இசை வெகு அருமை. காணொளி அருமை பாகவதர் டி ஆர் ராஜகுமாரி நன்றாக நடித்துள்ளனர் நன்றி மணிவண்ணன்

  • @thangapushpam3561
    @thangapushpam3561 5 років тому +6

    பாடலே வான்மழையாக பெய்தது போல இருந்தது என்ன அருமை மிக நன்றி ஐயா

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 2 роки тому +2

    Picture: Amarakavi (1952), Lyrics: Uvamai Kavignar Suratha, Music Composer: Isai Chakravarthi G Ramanatha Iyer, Singers and Actors: Mayavaram Krishamurthy Theagaraja Bhagavather and T R Rajakumari.

  • @VelMurugan-nw5pz
    @VelMurugan-nw5pz 3 роки тому +3

    T.R.ராஜ குமாரி செம்ம அழகு பா...
    வேற லெவல்...

  • @saba6601
    @saba6601 3 роки тому +4

    A lovely song by MKT. Regards Dr Sabapathy.

  • @balantamilnesan7805
    @balantamilnesan7805 4 роки тому +7

    பாகவதர் பற்றிய தங்களின் விளக்கம் நன்று.

  • @jesmarjoearul
    @jesmarjoearul 9 років тому +10

    O what a song ! Simply superb!

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому +4

    பாகவதர் டிஆர் ராஜக்குமாரி வெரி நைஸ் ஜோடீ!!

  • @rameshbabu-ej6xb
    @rameshbabu-ej6xb 6 років тому +4

    Only one ...
    Ever green super star .....
    Our grate legend MKT only.
    Ever green super actress ....
    Our TRR.

  • @subbiahsivasubramaniyam6310
    @subbiahsivasubramaniyam6310 2 місяці тому

    எங்கள் ஊர் பாட்டுக்காரன் படத்தில் இந்தக் காட்சியை தான் பார்த்து எடுத்து இருப்பார்கள் போல 🎉

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 3 роки тому +2

    Excellent excellent . Thanks comrarade manivannan

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 6 років тому +13

    நம்பமுடியவில்லை இது பழைய படம் இல்லை .... T.R. ராஜகுமாரி இவ்வளவு அழகான சின்னப் பெண்ணா?! அவரின் பார்வையில் காதலின் உரிமை தெரிகிறது ...
    காணக்கிடைக்காத (நான் பார்த்திராத ) அரிதான அழகான திரை காதல் காட்சி ..... இது போன்ற முத்துக்களை ஆசையுடன் எதிர்நோக்கும் ...ரசிகன் ....

    • @krisi7562
      @krisi7562 2 роки тому +2

      Old Tamil actresses like T.R. Rajakumari and M.N. Rajam were beauties, no doubt. Among the Telugu actresses, Banumathi, Anjali Devi, Savitri were all good looking ladies. Everyone I have named above were beautiful, with or without make up. Many oldies have told me so !!!!
      Have you seen M.N. Rajam, dancing for the song, 'Kalai vayasu, kattana size-u, kalangamilla manasu', her beauty there is enough to make one faint.........!!!

  • @jeyaramah1475
    @jeyaramah1475 Рік тому +1

    GR சார் இசையமைப்பில் பாகவதர் மற்றும் டி ஆர் ராஜகுமாரி பாடிய அற்புதமான பாடல். இவர்கள் அமரர்கள் ஆகிவிட்டாலும் அவர்கள் குரல்கள் எப்போதும் அமரத்துவம் பெற்றவை. 🙏

  • @raghvendraraosethumadhavan6034
    @raghvendraraosethumadhavan6034 3 роки тому +2

    All old gems even to day known live songs Chandralekha famous &Katchadevyani T.R.RAJAKUMAR.&GANDRAVA GANA M.K.T.BAGAHAVATHER. for preserving hats off.

  • @nithyanandan3097
    @nithyanandan3097 2 роки тому +2

    என்ன ராகத்தில் யாருடைய இசையமைப்பில் பாடப்பட்டது என்று விவரம் கொடுத்தால் மிகவும் சிறப்பு

  • @kumcha3
    @kumcha3 9 років тому +7

    This was new style of music for M K Thyagaraja Bhagavathar by G.Ramanathan, but so easy and effortless for him.T.R .Rajakumari blends well with him.They look a nice couple, acted in few films together.

  • @ravigurumoorthy9361
    @ravigurumoorthy9361 3 роки тому +4

    ஏழிசை மன்னன் தமிழர்களின் அண்ணன்

  • @vaseer453
    @vaseer453 4 роки тому +2

    ஜி.ராமநாதன் இசையமைப்பில் பாகவதரும் ராஜகுமாரியும் பாடும் பாடல் மயக்குகிறது. பதிவுக்கு நன்றி வேம்பாரே!
    ஆ.ராஜமனோகரன்.

  • @sivagnanammariappan
    @sivagnanammariappan 9 років тому +10

    காண கிடைக்காத இந்த பாடலை இங்கு ஏற்றி, அருமையான தகவல்கள்
    தந்த VM அவர்களுக்கு நன்றி. இளமை துள்ளும் T.R.இராஜகுமாரி ஐ பாவாடை தாவனியில் பார்ப்பதற்கு அருமை. பாகவதரின் எளிய நடிப்பு அற்புதம்.

  • @nadesmanickam
    @nadesmanickam 7 років тому +6

    பாடலே வான் மழையாக பொய்து விட்டது மணி ஐயா. நன்றி

  • @soundarapandians.7991
    @soundarapandians.7991 4 роки тому +6

    எம்கேடி குரலைக்கேட்டால் சோறு வேண்டாம் தண்ணீர் வேண்டாம்!

  • @Bagava2010
    @Bagava2010 8 років тому +4

    What a beautiful song.. Thanks Vembar Manivannan ji...

  • @nithyanandan3097
    @nithyanandan3097 5 років тому +4

    உங்களை பாராட்ட வார்த்தையில்லை

  • @revsankaran
    @revsankaran 9 років тому +5

    What a beautiful song !! sung so beautifully!simplicity in action!! Thank you VM!

  • @sarobatson
    @sarobatson 9 років тому +3

    So Beautiful T R Rajakumari lov the song too

  • @jayavinayakan7574
    @jayavinayakan7574 4 роки тому +2

    Evarudaya Ella Padalum poodungal rompavum nantti

  • @naturelubtn-7511
    @naturelubtn-7511 4 роки тому +2

    ❤️T.R.Rajakumari✨Alagu sila....INDIAN Marlin mandro...

  • @mariajeganathan999
    @mariajeganathan999 7 років тому +2

    dear v m sir van Malai polka u r work thank u so much

  • @manoptk1989
    @manoptk1989 8 місяців тому

    Fantastic

  • @manoptk1989
    @manoptk1989 8 місяців тому

    மருதகாசி

  • @m.jegannathanmuthusami9542
    @m.jegannathanmuthusami9542 Рік тому

    T.R.ராஜகுமாரி நம் அப்பாக்களின் கனவுக் கன்னி..

  • @bibyjan4721
    @bibyjan4721 3 роки тому

    B