பூமியின் சொர்க்கம் இதுதான் சொன்னவர் டைட்டானிக் ஹீரோ | ராமக்கல் மேடு | TRAVELS NEXT
Вставка
- Опубліковано 7 лют 2025
- ராமர் வனவாசம் சென்ற காலங்களில், சீதை ராவணனால் கடத்தப்பட்டப் பிறகு இந்த மலைப் பகுதியில் ராமர், லட்சுமணன் இருவரும் சீதையை தேடி அலைந்ததாக கூறப்படுகிறது. ராமரின் பாதம் பட்டதால் இந்த பகுதிக்கு 'ராமக்கல்' என்று பெயர் வந்ததற்கு பெயர்க் காரணமும் இருக்கிறது. 'ராமரின் கல்' என்ற பெயரே காலப்போக்கில் ராமக்கல் என்று மாறியது. இந்தப் பகுதி மலை மீது இருக்கும் சிறிய குன்று போல் காட்சியளிப்பதால் ராமக்கலுக்கு பின் மேடு என்று பெயரை சேர்த்துவிட்டனர். பெயர் எப்படி வந்திருந்தாலும் இதுவொரு அட்டகாசமான இடம் என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை.
2015-ம் ஆண்டு வரை இந்த இடத்திற்கு வர சரியான சாலை வசதி கிடையாது. இது தமிழகம் மற்றும் கேரளாவின் எல்லையாக இருப்பதால் இரண்டு மாநில அரசுகளுமே இந்த இடத்தின் மீது எந்த அக்கறையும் எடுக்கவில்லை. அதன்பின்தான் கேரள அரசு இதை சுற்றுலாத் தலமாக அறிவித்தது. முதல் வேலையாக நல்ல சாலை வசதியை ஏற்படுத்தி தந்தது. இன்றைக்கும் அந்த சாலைகள் பிரமாதமாக இருக்கின்றன.
முன்பெல்லாம் கடைகளே பார்க்க முடியாத இந்த இடத்தில் தற்போது கடைகள் வந்துள்ளன. இந்தக் கடைகளிலும் டீ, காபி, குளிர்பானம், சிற்றுண்டி வகைகளே கிடைக்கும். உணவு வகைகள் கிடைக்காது. அதனால், சாப்பாட்டை கையோடு எடுத்துச் செல்வதுதான் நல்லது.
ராமக்கல் மேடு மட்டும் பார்த்துவிட்டு திரும்புவது என்றால் உங்களுக்கு ஒரு மணி நேரம் தாராளம். அதேவேளையில் எதிரே இருக்கும் ஆமை மலை சென்று வரவேண்டும் என்றால் கூடுதலாக இரண்டு மணி நேரம் தேவைப்படும். அதற்கேற்ப திட்டமிட்டு குடிநீர், தின்பண்டங்கள் எடுத்துக்கொள்வது நல்லது.
உயரமான அந்த இடத்தில் இருந்து அதாவது கடல் மட்டத்திலிருந்து 3,500 அடி உயரம் கொண்ட இந்த இடத்திலிருந்து பார்க்கும்போது மேற்குத் தொடர்ச்சி மலை வளத்தையும் பள்ளத்தாக்கின் அழகையும் ஒரு சேர பார்க்கமுடிகிறது. அதோடு ராமக்கல் மேடின் குளிர்ச்சியான தட்பவெப்பநிலையும் நம்மை வேறோர் உலகத்துக்கு அழைத்துச்செல்கிறது.
#TravelsNext #tourism #touristplace #touristspot #சுற்றுலா #ramakkalmedu #kerala #tamilnadu
இந்தக் காணொலியை வரி வடிவமாக எங்களது வலைத்தளத்தில் வாசிக்கலாம்.
www.thagaval36...
-----------------------------------------------------------------
Subscribe and hit the bell to see a new video
Subscribe here ► goo.gl/PWixWj
► SPS MEDIA: goo.gl/QNBEHC
► HEALTH & BEAUTY PLUS: goo.gl/UX1yQo
Facebook : / travels-next-188384645...
Twitter :
/ senthilmsp
-------------------------------------------------------------------
Song: Erik Lund - Summertime (Vlog No Copyright Music)
Music promoted by Vlog No Copyright Music.
Video Link: • Video
தமிழனாய் இருந்தால் Like போடு 👍😁
👍👍👍👌👌👌👌👌👌
First photo from the back of Kuravan Kurathy is a COPYRIGHT VIOLATION. This was shot by Tranquil Greens and the photo taken from our website. Also wrong information provided that there are no eating places here.
Ramakkalmedu is a crown jewel of Idukki tourism in Kerala and there are a lot of good restaurants and resorts in the area. Our property Tranquil Greens is amongst the biggest and most popular resorts. Please don't provide wrong information.