அகர முதலென - திருப்புகழ் | Agara Mudhalena - Thiruppugazh | Nithyasree Mahadevan

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • Agara Mudhalena - Thiruppugazh | Singer : Nithyasree Mahadevan | Lyrics : Arunagirinathar | Music : Rajkumar Bharathi | Tamil Devotional Song | Amutham Music
    அகர முதலென - திருப்புகழ் | குரலிசை : நித்யஸ்ரீ மஹாதேவன் | அருளியவர் : அருணகிரிநாதர் | இசை : ராஜ்குமார் பாரதி | தமிழ் பக்தி பாடல் | அமுதம் மியூசிக்
    பாடல் வரிகள் :
    அகரமுத லெனவுரைசெய் ஐம்பந்தொ ரக்ஷரமும்
    அகிலகலை களும்வெகுவி தங்கொண்ட தத்துவமும்
    அபரிமித சுருதியும டங்குந்த னிப்பொருளை எப்பொருளு மாய
    அறிவையறி பவரறியும் இன்பந்த னைத்துரிய முடிவை
    அடி நடுமுடிவில் துங்கந்த னைச்சிறிய அணுவையணுவினின்
    மலமு நெஞ்சுங்கு ணத்ரயமு மற்றதொரு காலம்
    நிகழும்வடி வினைமுடிவி லொன்றென்றி ருப்பதனை
    நிறைவுகுறை வொழிவறநி றைந்தெங்கு நிற்பதனை
    நிகர்பகர அரியதைவி சும்பின்பு ரத்ரயமெ ரித்தபெரு மானும்
    நிருபகுரு பரகுமர என்றென்று பத்திகொடு
    பரவஅரு ளியமவுன மந்த்ரந்த னைப்பழைய நினதுவழி
    அயடிமையும்வி ளங்கும்ப டிக்கினிது ணர்த்தியருள் வாயே
    தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு
    டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு
    குதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத தத்ததகு தீதோ
    தனதனன தனதனன தந்தந்த னத்ததன
    டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுண்டு டுட்டுடுடு
    ரரரர ரிரிரிரிரி யென்றென்றி டக்கையுமு டுக்கையுமி யாவும்
    மொகுமொகென அதிரமுதி ரண்டம்பி ளக்கநிமிர்
    அலகைகர ணமிடவுல கெங்கும்ப்ர மிக்கநட
    முடுகுபயி ரவர்பவுரி கொண்டின்பு றப்படுக ளத்திலொரு கோடி
    முதுகழுகு கொடிகருட னங்கம்பொ ரக்குருதி
    நதிபெருக வெகுமுகக வந்தங்கள் நிர்த்தமிட
    முரசதிர நிசிசரரை வென்றிந்தி ரற்கரச ளித்த பெருமாளே
    நினதுவழி யடிமையும்வி ளங்கும் படி
    இனிது ணர்த்தியருள் வாயே அரச ளித்த பெருமாளே . . .
    இந்தி ரற்கரச ளித்த பெருமாளே . . .
    Music Download & Streaming
    Apple Music : / thiruppugazh-nithyasre...
    Amazon Music :music.amazon.i...
    Google Play Store : play.google.co...
    Spotify : open.spotify.c...
    Napster : us.napster.com...
    Wynk :wynk.in/music/...
    Jio Saavan : :www.jiosaavn.c...
    #Amuthammusic#Nithyashreemahadevan#thiruppugazh
    For More Videos: / @amuthammusicsanskrits...
    Facebook : / amuthammusicofficial
    / @sudharagunathan-theso...
    : / amuthammusic
    Pinterset : / hub

КОМЕНТАРІ • 97

  • @pachaiyappankariyan729
    @pachaiyappankariyan729 Рік тому +25

    திருப்புகழை அருணகிரிநாதப் பெருமான் பாடவில்லை!!!!??? பின்???? அந்த முருகப்பெருமானே ?????!!! பாடியவைதான் திருப்புகழ் அருணகிரிப்பெருமானை ஒரு கருவியாக்கிக் கொண்டு பாடியவையே திருப்புகழ் அருணகிரிப்பெருமானுக்கு அனைத்து ஞானமும் அளித்து அவர் மூலம் திருப்புகழ் எனும் மகாமந்திரப் பாடல்கள் 16000/1334 மட்டுமே நமக்கு கிடைத்திட்ட பொக்கிஷம் திருப்புகழ் எந்த ஒரு மனித இனத்திற்கும் எந்த ஒரு மொழிக்கும் கிடைக்காத பெருமை நமக்கு பெருமை கொள்வோம் கர்வம் கொள்வோம்

    • @jothimani5115
      @jothimani5115 8 місяців тому

      😊😊

    • @rajeshkumarks8601
      @rajeshkumarks8601 Місяць тому

      அதில் எத்துனை சம்ஸ்கிருத சொல் உண்டு தெரியுமா

  • @kannanramarao3716
    @kannanramarao3716 9 місяців тому +7

    கணீரென்று தொய்வின்றி நல்ல தமிழில் பாடியதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

  • @saralaanu3862
    @saralaanu3862 3 роки тому +12

    தமிழினிமையை தங்கள் குரல் உச்சஸ்தாயில் கேட்க எம் அழகனின் அருள் உள்ளம் புகுந்து குளிர்விக்கிறது.நண்றி சகோதரி.

  • @swathisweth6931
    @swathisweth6931 2 роки тому +13

    Wooooow .!
    சிற்ப்பியின் சிறப்பைக் காட்டும்
    சிற்பத்தை போல..
    இந்தப் பாடலைக் கேட்டால்
    முருகனே மயங்கி விடுவான் போல.!

  • @greenkalaminterior
    @greenkalaminterior 9 місяців тому +7

    ஓம் முருகா.. என்னே இந்த பாடல் ஓசை.. அருணகிரிநாதர் திருவடிகளை வணங்குகிறேன். நித்ய ஸ்ரீ அக்கா அவர்களின் குரல் வளமும் தமிழ் உச்சரிப்பும் மெய் சிலிர்க்க வைக்கிறது.. கந்தன் அருள் இருப்பவர்கள் மட்டுமே இந்த பாடலை பாட முடியும்... நன்றி..

  • @brpjana8080
    @brpjana8080 3 роки тому +13

    Fantastic, THE best rendition of the song... it appears she sang the mid section of the song starting தகுதகு the next 4 verses 4 times each in single breath without break and without missing a beat ... unbelievable ... divine.. no words

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 роки тому +8

    மிக்கநன்றி சகோதரி நித்யஶ்ரீ மஹாதேவன் உங்கள் இனிமையான குரலைகேக்கும்போது
    எவளவே இனிமையாகயிருக்கின்றது வாழ்கபல்லாண்டு காலம் வாழ்க வளமோடு ❤️❤️❤️

  • @jayasinghadhasbama6937
    @jayasinghadhasbama6937 Рік тому +6

    👌👌👌🙏🙏🙏
    முருகன் மயிலில் ஆடி வருவது போல் உள்ளது.🙏🙏🙏

  • @sivakami2511
    @sivakami2511 4 роки тому +10

    ஆஹா மிழ் வாழ்க
    தமிழிசை தந்தஇசை வாணி வாழ்க வாழ்க
    அருமை
    தமிழமுதம்

  • @lakshmilogu2870
    @lakshmilogu2870 3 роки тому +25

    அம்மா தங்களது தமிழ் உச்சரிப்புக்கு இந்த பாடல் சிறந்த உதாரணம். என்ன ஒரு ஞானம் அம்மா உங்களுக்கு. மிக்க நன்றிகள் பல.....

  • @sivakami2511
    @sivakami2511 4 роки тому +5

    ஆஹா
    செந்தமிழின் இனியழகைத் தன் இனிய குரலில்
    மிகத்தெளிவான உச்சரிப்பில் பாடி அசத்திய
    செந்தமிழ் இன்னிசைச் சொல்லழகியின் பாவம் அருமை
    வாழ்த்துக்கள்
    ஓம் சரவணபவாய நமஹ

  • @vijayalakshmimohan3737
    @vijayalakshmimohan3737 10 місяців тому +2

    அடிமை என்று வருவதை அயடிமை என்று பாடல் வரிகளில் வருவதை மாற்றவும். நித்ய ஸ்ரீ ஒழுங்காகப் பாடுகிறார்.❤

  • @lathasridharan2522
    @lathasridharan2522 4 роки тому +7

    Wah wonderful thirupugazh what a clear diction . Muruga will appear listening to this rhytmatic rendition

  • @kalyanasundaramrangasamy9404
    @kalyanasundaramrangasamy9404 9 місяців тому +3

    I never heard such a Tone (81 years) .

  • @Chozhan213
    @Chozhan213 9 місяців тому +2

    🙏தமிழ் கடவுள் முருகபெருமானே 🌹போற்றி.. 🙏சகோ அருமை..

  • @chandranchandran204
    @chandranchandran204 Місяць тому

    இந்த பாடல் வயலூர் முருகன் கோவிலில் எழுதி இருந்தது இதை முதன்முதலில் படித்தபோது என்னை அறியாமலே என் கண்ணில் கண்ணீர் வழிந்தது

  • @ponerulan.1986
    @ponerulan.1986 Місяць тому

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    ஓம் முருகா போற்றி போற்றி
    ஓம் சரவண பவ போற்றி போற்றி
    கருணை கடலே கந்தா போற்றி போற்றி
    ஓம் சண்முகா சரணம் போற்றி போற்றி
    ஓம் கந்தா சரணம் போற்றி போற்றி
    கந்த வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
    திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோகரா அரோகரா
    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா
    பழனி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
    சுவாமி மலை முருகனுக்கு அரோகரா அரோகரா
    திருத்தணி முருகனுக்கு அரோகரா அரோகரா
    பழமுதிர் சோலை முருகனுக்கு அரோகரா அரோகரா
    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 4 роки тому +4

    முருகா சரணம் கந்தா சரணம் கடம்பா சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @NallaManasu
    @NallaManasu 3 місяці тому

    உங்கள் குரல் தெய்வீக குரல் முருகன் அருள் பெற்ற தாயே உங்களை பணிந்து வணங்குகின்றேன்

  • @Sharm_man
    @Sharm_man 2 місяці тому

    I want all Tirupughal meaning in english,where can I get all 1300 songs with meaning also in order.I used to hear all Tirupughal but without meaning From Andhra Pradesh.

  • @kichumulu6101
    @kichumulu6101 3 роки тому +2

    Super nithya keep it up.may lord muru bless u and ur family.ungalukku unmaiyil saraswathi kadasham nir
    Iya ullathu yenbathi nan unarugiren

  • @jagadeesanr3108
    @jagadeesanr3108 Рік тому +7

    கந்தனே உங்கள் வடிவில் வந்து அவதறித்து பாடியது போல் உணர்கிறேன் சகோதரி, தாங்கள் நூறு ஆண்டுகளுக்குமேல் வாழ்ந்து முருகனை பாடிக்கொண்டே இருக்கணும், மக்கள் தேன் இசையை கேட்டுக்கொண்டே இருக்கனும் முருகா 🙏🙏🙏🙏🙏

  • @ஓம்முருகாசரணம்ஓம்சரவணபவநம

    ஓம் முருகா சரணம் பாம்பன் சாமிகள் திருவடிகள் சரணம்
    ஓம் அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி
    அருமை அம்மா

    • @venujayavenujaya7844
      @venujayavenujaya7844 3 роки тому +1

      ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ

  • @pranavzlife1033
    @pranavzlife1033 3 роки тому +4

    Brings tears to the eyes ...so divine....speechless

  • @Sharm_man
    @Sharm_man 2 місяці тому

    English meaning and Tiruphal number pls.

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 роки тому +1

    மிக்கநன்றி வணக்கம் நித்தியஶ்ரீ உண்மையில் உங்கள் குரல்லை. கேக்கும் போது
    இன்பமாகவும் ஆனந்தமாகவும் கணீர்என்றா குரல்வளங்கள் கேட்டுக்கொண்டெ
    இருக்கவேண்டும்போலிருக்கிறது உண்மையில் சொல்போனால் நீங்கள் 🌹🌹🌹So
    Sweet voice Thank you have a great day ❤️❤️❤️

  • @NallaManasu
    @NallaManasu Місяць тому

    திருப்புகழுக்கும் உங்கள் தெய்வீக குரலுக்கும் வாழ்நாளஅடிமை

  • @abdhulahathu9214
    @abdhulahathu9214 3 роки тому +1

    Semmaiya padirukinga akka
    Super
    Ninga paduratha ketutea irukalam pola irukku
    Antha alaukku tamil ucharippu paaduringa

  • @bathmaahsupaya2369
    @bathmaahsupaya2369 4 роки тому +1

    Unnai Kaatti kodu uthamane.Intha ulagai kaati ennai yeikkaathe.✌👌🙏🙏🙏

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 роки тому +1

    ஓம் முருகா வெற்றி வேல் முருகா

  • @Mari-ix4vd
    @Mari-ix4vd 5 місяців тому

    ஓம் சரவண பவ ஓம்....❤

  • @nandhu10ify
    @nandhu10ify 3 роки тому +2

    வாழ்க தமிழ்

  • @pazhaniarjunan9793
    @pazhaniarjunan9793 3 роки тому +3

    Super

  • @kurinjinaadan
    @kurinjinaadan 4 роки тому +1

    அருமை. அபாரம். அட்டகாசம். அபூர்வம்.அழகு.

  • @tamilsenthiran2817
    @tamilsenthiran2817 25 днів тому

    ஓம் முருகா

  • @govindsridhar1446
    @govindsridhar1446 3 роки тому +2

    Hats off.... thanks

  • @SuperSriRanjani1
    @SuperSriRanjani1 9 місяців тому

    What ragam is this?

  • @premasekaran8479
    @premasekaran8479 Рік тому

    Appadiye DKPattammal Polave Thamizh Pronounciation Exelent.(Grandmavin Sayal in her song)👌👏👏👍💐

  • @rajendranp5688
    @rajendranp5688 4 роки тому +2

    Excellent performance. Thanks Madam

    • @thavarajahthangarajah4943
      @thavarajahthangarajah4943 2 роки тому

      இறைவன் கொடுத்த இசையமுதம் தங்கள் இச்சிறப்பான பாடலுடன் இன்னும் சிறப்பாகிவிட்டது..என்னும் இதுபோன்ற நல்ல கூதங்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கும் உங்கள் ப்ரம் ரசிகன்

  • @ajishac1388
    @ajishac1388 Рік тому

    அற்புதமான பாடல். கம்பீரமான குரல். People who didn't/can't find this song, will miss such an outstanding version...👍🌹

  • @krishnanlakshmy2952
    @krishnanlakshmy2952 4 роки тому +2

    Super voice and song

  • @charanaroopa4972
    @charanaroopa4972 3 роки тому +1

    Amazing, pleasant, word less🙏👏🙌

  • @sanjaikrish5754
    @sanjaikrish5754 3 роки тому +1

    Enna thalam?

  • @jayanthip5572
    @jayanthip5572 2 роки тому

    Solla vaarthaigal podhadhu.ketka irandu sevigal podhavillai. Arumaiyilum arumai Amma.milka nandri. .Murugan arul ungalukku abarimidhamaga kidaikkattum

  • @baskars60
    @baskars60 2 роки тому +1

    Superb, I like very much

  • @jayasankar6779
    @jayasankar6779 Рік тому

    நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க...

  • @raviravi-sq2so
    @raviravi-sq2so 2 роки тому

    திருப்புகழ் முழுவதும் பாடுங்கள் தழிழே

  • @VeeraMani-sf5he
    @VeeraMani-sf5he Рік тому +1

    Very nice voice sivayanama

  • @rajendrand8313
    @rajendrand8313 2 роки тому

    Paadubavaral thirupugazhukku perumaiya thirupugazhalal paadubavaruukku perumaiya

  • @banurekas7983
    @banurekas7983 2 роки тому +1

    அற்புதம்!🌹🙏💐⭐

  • @raradhaponnan.5993
    @raradhaponnan.5993 2 роки тому

    நித்யஶ்ரீ மஹாதேவன் தேன் குரல் வாழ்கபல்லாண்டு

  • @amudhalingam1778
    @amudhalingam1778 2 роки тому +1

    No words to describe!!!!!!!!!!!!!!!!!!

  • @ganeshank3824
    @ganeshank3824 3 роки тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @arulraj7050
    @arulraj7050 2 роки тому

    Intha padalai ketkum pothu etharkku matham marinom endru varunthukiren

  • @lifeisgood722
    @lifeisgood722 3 роки тому +1

    #ௐ

  • @1940Krishnan
    @1940Krishnan 3 роки тому +1

    fantastic performance- hats of to her

  • @subasree4512
    @subasree4512 4 роки тому +1

    A good tongue twister song .Divine to hear

  • @palanip5738
    @palanip5738 4 роки тому +1

    அற்புதம்

  • @chandrans3626
    @chandrans3626 3 роки тому +1

    What ragam?

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 2 роки тому +1

    Excellent 👌

  • @sivamuthukumarp4192
    @sivamuthukumarp4192 2 роки тому

    Siva siva muruga muruga miga sirappu arputham

  • @vidyasagar3194
    @vidyasagar3194 4 роки тому +1

    🕉️🕉️ Divine

  • @cmouli
    @cmouli 2 роки тому

    Can anyone tell in which thalam please

  • @muruganv6118
    @muruganv6118 8 місяців тому

    தமிழ் பாடல் என்றும் இனிமை

  • @muthukumarkumar4200
    @muthukumarkumar4200 2 роки тому

    🙏🙏🙏🙏👏👏👏👏👍👍👍👌👌👌

  • @bhasskars2881
    @bhasskars2881 2 роки тому

    Excellent no words om muruga

  • @muruganv6118
    @muruganv6118 8 місяців тому

    ❤❤❤❤❤❤

  • @premalathasenthilkumar9330
    @premalathasenthilkumar9330 6 місяців тому

    Om muruga potri

  • @kannising
    @kannising 2 роки тому

    🙏🏼🙏🏼🙏🏼

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 2 роки тому

    🙏🙏🙏

  • @kannising
    @kannising 2 роки тому

    🙏🏼🙏🏼✍

  • @bhuvana43
    @bhuvana43 2 роки тому

    🙏

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 роки тому

    மிகவும் அருமை.

  • @saimusic2009
    @saimusic2009 2 роки тому

    அருமை அருமை

  • @prabhakaranspeaks6913
    @prabhakaranspeaks6913 3 роки тому +5

    ஓம் முருகா.. தெய்வீக குரல்.. அருணகிரிநாதர் பாதம் போற்றி!!

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH 4 роки тому +8

    ......... சொல் விளக்கம் .........
    அகரமுத லெனவுரைசெய ... அகரம் முதல் எழுத்தாக கூறப்படுகின்ற
    ஐம்பந்தொர் அக்ஷரமும் ... (வட மொழியிலுள்ள) ஐம்பத்தி ஒன்று
    எழுத்துக்களும்,
    அகிலகலைகளும் ... உலகத்திலுள்ள எல்லாக் கலைகளும்,
    வெகுவிதங்கொண்ட தத்துவமும் ... பலதரப்பட்ட (96)
    தத்துவங்களும்*,
    அபரிமித சுருதியும் ... அளவிட முடியாத வேதங்களும்,
    அடங்குந்தனிப்பொருளை ... தனக்குள் அடக்கிக் கொண்டுள்ள
    ஒப்பற்ற பரம்பொருளை,
    எப்பொருளும் ஆய ... தன்னைத் தவிர மற்ற எல்லாப் போருள்களும்
    தானே ஆகி விளங்கும்
    அறிவை அறிபவர் அறியும் இன்பந்தனை ... ஞான நிலையை
    அறிபவர் அறிந்து அனுபவிக்கும் பரமானந்தப் பொருளை,
    துரிய முடிவை ... யோகியர் தன்மயமான நிலையில் தரிசிக்கும் முடிவுப்
    பொருளை,
    அடிநடுமுடிவில் துங்கந்தனை ... தொடக்கம், இடைநிலை, இறுதி
    இவை ஏதும் இல்லாத பரிசுத்தப் பொருளை,
    அணுவினின் சிறிய அணுவை ... அணுவைக் காட்டிலும் சிறிய
    அணுவாக விளங்கும் பொருளை,
    மலமு நெஞ்சுங் குணத்ரயமும் ... மும்மலங்களும் (ஆணவம், கன்மம்,
    மாயை), மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகிய நான்கு கரணங்களும்,
    த்வம், ராஜதம், தாமதம் என்ற முக்குணங்களும்,
    அற்றதொரு காலம் நிகழும் வடிவினை ... நீங்கின ஒரு வேளையில்
    துலங்கும் அருள் உருவத்தை,
    முடிவி லொன்றென்றி ருப்பதனை ... ஊழிக்காலம் முடிகின்ற சமயம்
    ஒன்று என்னும் பொருளாக இருப்பதனை,
    நிறைவுகுறைவு ஒழிவற ... நிறைந்தது, குறைந்தது, நீங்கிப் போவது
    என்பது ஏதுமற்று
    நிறைந்தெங்கு நிற்பதனை ... நிறை பொருளாக எல்லா இடங்களிலும்
    நிலைத்து நிற்கும் பொருளை,
    நிகர்பகர அரியதை ... இதற்கு சமம் அதுதான் என வேறொரு
    பொருளை ஒப்புரைக்க இயலாததை,
    விசும்பின்புரத்ரயம் எரித்தபெருமானும் ... வானில் சஞ்சரித்துக்
    கொண்டே இருந்த திரிபுரத்தை சிரித்தே எரித்த சிவபெருமானும்,
    (உன்னை நோக்கி)
    நிருப குருபர குமர என்றென்று ... அரசனே, குருமூர்த்தியே,
    குமரனே, என்றெல்லாம்
    பத்திகொடு பரவ அருளிய ... பக்தியுடனே போற்றித் தொழுதவுடன்
    அவருக்கு அருளிச் செய்த
    மவுன மந்த்ரந்தனை ... மெளன உபதேசமந்திரத்தை**
    பழைய நினது வழியடிமையும் விளங்கும்படிக்கு ... உன் பழைய
    அடிமையாகிய அடியேனுக்கும் புரியும்படி
    இனிது உணர்த்தியருள்வாயே ... இனிமையாக உபதேசித்து
    அருள்வாயாக.
    தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு
    டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு
    தகுதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத தத்ததகு தீதோ
    தனதனன தனதனன தந்தந்த னத்ததன
    டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுண்டு டுட்டுடுடு
    தரரரர ரிரிரிரிரி என்றென்று ... (என்று பலமுறை இந்த ஓசையுடன்)
    இடக்கையும் உடுக்கையுமியாவும் ... இடது கையால் கொட்டும்
    தோல் பறைகளும் உடுக்கை வாத்தியங்களும் பிற எல்லா
    ஒலிக்கருவிகளும்,
    மொகுமொகென அதிர ... மொகு மொகு என்னும் பேரொலியோடு
    அதிர்ச்சி தரும்படி முழங்க,
    முதிர் அண்டம் பிளக்க ... இப் பழமையான முதிர்ந்த பூமி பிளவுபட்டு
    வெடிக்க,
    நிமிர் அலகை கரணமிட ... நிமிர்ந்து நின்று பேய்கள் கூத்தாட,
    உலகெங்கும் ப்ரமிக்க ... உலகம் எங்கிலும் உள்ள மக்கள்
    திகைத்து நிற்க,
    நடமுடுகு பயிரவர் பவுரி கொண்டின்புற ... வேகமாக நடனம்
    செய்யும் பைரவ மூர்த்திகள் கூத்தாடி மகிழ,
    படுகளத்திலொரு கோடி ... அசுரர்கள் இறந்து படும் போர்க்களத்தில்
    கோடிக்கணக்கான
    முதுகழுகு கொடிகருடன் ... முதிர்ந்த கழுகுகளும், காக்கைகளும்,
    கருடன் பருந்துகளும்
    அங்கம்பொரக்குருதி நதிபெருக ... பிணங்களின் அங்கங்களைக்
    கொத்தித் தின்ன, ரத்த வெள்ளம் பெருக,
    வெகுமுக கவந்தங்கள் நிர்த்தமிட ... பலவகையான தலையற்ற
    உடல் குறைகள் கூத்தாட,
    முரசதிர நிசிசரரை வென்று ... முரசு வாத்தியம் பேரொலி முழக்க
    அசுரர்களை வெற்றி கொண்டு,
    இந்தி ரற்கரசளித்த பெருமாளே. ... தேவேந்திரனுக்கு விண்ணுலக
    ஆட்சியைத் தந்த பெருமாளே.
    * 96 தத்துவங்கள் பின்வருமாறு:
    36 பரதத்துவங்கள் (அகநிலை):
    ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.
    ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை):
    மண், தீ, நீர், காற்று, வெளி.
    ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை):
    வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4.
    ** இதே மெளன மந்திர உபதேசம் அருணகிரிநாதருக்கும் கிட்டியதை
    கந்தர் அனுபூதியில் வரும்
    ... சும்மா இரு சொல்லற என்றலுமே
    அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே ...
    ... என்ற வரிகளால் அறியலாம்.

    • @maghajothi6514
      @maghajothi6514 4 роки тому +1

      What a wonderful work ! Saluting all those involved in it.

    • @maghajothi6514
      @maghajothi6514 4 роки тому +1

      on

    • @நல்லவைதெரிவோம்-ழ2ஞ
      @நல்லவைதெரிவோம்-ழ2ஞ 3 роки тому +2

      ஐம்பத்தோர் அட்சரமும் வடமொழியில் இல்லை
      தமிழின் ஆதி எழுத்து 51 எழுத்துக்கள் தான்
      தவறாக பதிவிட வேண்டாம்

  • @dakshanamoorthykannan66
    @dakshanamoorthykannan66 4 роки тому +1

    Arumai Nithya mdm

  • @ramanin.v.s5044
    @ramanin.v.s5044 8 місяців тому

    Amazing rendition . God bless the singer.