Це відео не доступне.
Перепрошуємо.

ஓஹோ நிலா ராணி உள்ளம் கவர்ந்தாய் நீ பாடல் |Oho Nila Rani |Seerkazhi Govindarajan |Chitor Rani Padmini

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2023
  • #tamilsongs #lovesongs #romantic #sad #sivaji #padmini #4koldsongs
    ஓஹோ நிலா ராணி உள்ளம் கவர்ந்தாய் நீ பாடல் |Oho Nila Rani |Seerkazhi Govindarajan |Chitor Rani Padmini . Tamil Lyrics in Description .
    Movie : Chitor Rani Padmini
    Music : G. Ramanathan
    Starring : Sivaji Ganesan, Vyjayanthimala
    Song : Oho Nila Raani
    Singers : Seerkazhi Govindarajan
    Lyrics : Ku. Ma. Balasubramaniam
    ஓஹோ நிலா ராணி உள்ளம் கவர்ந்தாய் நீ
    எழில் ஊற்றாகவே இளங் காற்றாகவே
    இன்பம் மூட்டும் ரூபவாணி
    ஓஹோ நிலா ராணி உள்ளம் கவர்ந்தாய் நீ
    எழில் ஊற்றாகவே இளங் காற்றாகவே
    இன்பம் மூட்டும் ரூபவாணி
    நீல ஓடையில் அல்லியைப் போலே
    நீந்தும் பெண் அன்னமே
    நீல ஓடையில் அல்லியைப் போலே
    நீந்தும் பெண் அன்னமே
    உனை சூழும் எண்ணிலாஆஅ..
    உனை சூழும் எண்ணிலா தாரகை எல்லாம்
    தோழி மாதர் தானோ
    உனை சூழும் எண்ணிலா தாரகை எல்லாம்
    தோழி மாதர் தானோ
    உலகம் யாவுமே உன்னாசையாலே
    உலகம் யாவுமே உன்னாசையாலே
    உள்ளம் சுழன்றாடுதே
    ஓஹோ நிலா ராணி உள்ளம் கவர்ந்தாய் நீ
    எழில் ஊற்றாகவே இளங் காற்றாகவே
    இன்பம் மூட்டும் ரூபவாணி
    புதுமை ஒளி வெள்ளமாய்
    ஹாஆஅ.ஆஅ.
    பூலோகமெங்குமே
    பொழிகின்ற அமுத மழையே
    ஹாஆஅ.ஆஅ.ஆஅஹாஆஅ..
    புதுமை ஒளி வெள்ளமாய் பூலோகமெங்குமே
    பொழிகின்ற அமுத மழையே
    நீ முதலிரவு பெண் போலே முகிலென்ற திரையிலே
    முகத்தை மறைப்பதேனோ ஏனோ..
    வானவீதியில் ஊர்வலம் போலே
    வந்த பெண் தெய்வமே
    வானவீதியில் ஊர்வலம் போலே
    வந்த பெண் தெய்வமே
    உனை காணும் என்னையே தண்ணொளி என்னும்
    கைகள் தீண்டலாமோ
    அழகின் ஜோதியே உன்னால் என்னுள்
    ஆவல் அலை மோதுதே
    ஓஹோ நிலா ராணி உள்ளம் கவர்ந்தாய் நீ
    எழில் ஊற்றாகவே இளங் காற்றாகவே
    இன்பம் மூட்டும் ரூபவாணி

КОМЕНТАРІ • 39

  • @chandrasekarankarumbayiram423
    @chandrasekarankarumbayiram423 6 місяців тому +3

    சிவாஜிக்கு சீர்காழியாரின் குரலும் கூட வெகு பொருத்தமாய் தான் உள்ளது!

    • @perukkaranai
      @perukkaranai 6 місяців тому +1

      Not at all. Sirgazhi is miserable in lower octaves.

  • @prabakarans1972
    @prabakarans1972 7 місяців тому +2

    கலையும் அரசியலும் தற்போது படு கேவலமாகிவிட்டது.😢

  • @sivalingam2176
    @sivalingam2176 5 місяців тому +1

    "இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க'🎉🎉🎉
    " உலகம் வாழ்க'🎉🎉🎉🎉
    "ஓ ஹோ நிலா ராணி! 🎉
    👌 சூப்பர் அருமையான பாடல்👍🎉🎉🎉🎉🎉
    வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊👍
    "நன்றி🙏💕🎉🎉🎉🎉🎉
    அன்பன்.
    ச. சிவலிங்கம்.

  • @karnamparasuramandhamu3256
    @karnamparasuramandhamu3256 6 місяців тому +2

    முழுக்க முழுக்க கலப்படமற்ற கர்நாடக சங்கீத மெட்டு.
    GR is great.

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 7 місяців тому +2

    அதிமனோஹரம்

  • @hariharansr9074
    @hariharansr9074 6 місяців тому +1

    வணக்கம்
    இந்த பாடலைக்‌ கேட்டதேயில்லை‌!
    முதல் தடவையாக க்‌
    கேட்கின்றோம்
    என்னே வர்ணிப்பு‌!
    இசைமேதையார்‌
    ஜிராமனாதனாரின்‌
    மெல்லிசைசையில்‌
    இசை மணி சங்கீதவித்வான்சீர்காழியாரின் மென்குரலி‌
    லினிமை‌
    மறக்கமுடியாது.
    பாராட்டுக்கள் நன்றிகள்
    எஸ் ஆர் ஹரிஹரன்

  • @premachakku1031
    @premachakku1031 6 місяців тому +1

    Wonderful song! Vaijayanthi looks very beautiful. Hats off to the lyricist, Sivaji and the music director. Sivaji's acting and sirgazhi Govindarajan's voice compete with each other.

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 3 місяці тому

    சீர்காழியாரின் அற்புதக் குரலில் மனதை நெகிழ்விக்கும் காதல் கீதம். நடிகர் திலகத்தின் காதல் பாவங்கள் மிகவும் தரமானவை. வைஜயந்தி அழகோ அழகு.
    இதே பாடலை TMS ஐயா சிவாஜிக்காக தன் பிரத்தியேகக் குரலில் பாடியிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற எண்ண ஓட்டத்தை தவிர்க்க முடியவில்லை.

  • @GanesanDEARVMVSWEETSLIKEHONEY
    @GanesanDEARVMVSWEETSLIKEHONEY 4 місяці тому

    அற்புதமான பாட்டு பாட்டிற்கு ஏற்ற அழகு... அதை வர்ணிதுப்பாடும் சீர்கா ழி அவர்களின் குரலும் அதற்கு ஏற்ற நடிகர் திலகத்தின் நடிப்பும்..... எல்லாம் அதிசயம்...! இதைபார்த்து பரவசம் அடைந்த நாம் கொடுத்துவைத்தவர்கள்
    முனைவர் அக்ரி டி. பி. கணேசன் (SBI) சேலம்

  • @vanithapulidevan5367
    @vanithapulidevan5367 4 місяці тому

    Sivaji is great

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 8 місяців тому +3

    G, ramanathan,,music, Awesome amazing mesmerizing, fantastic excellent rendition of sirgali,
    Beauty,queen,vaihjayantjhi
    And,actior emperor,sivaji

  • @user-pl2wb7ui5l
    @user-pl2wb7ui5l 7 місяців тому +2

    Wonderful. Thank you very much😊

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 8 місяців тому +2

    Nadigar thilagam. 🙏S. G ayah 🙏

  • @MrSvraman471
    @MrSvraman471 7 місяців тому +1

    Hearing this for the first time

  • @dharmarajanv4913
    @dharmarajanv4913 6 місяців тому

    கேட்டிராத பாடல் TMS குரல் அருமையோ அருமை.நடிகர் திலகம்
    நடிப்பு ரொம்ப அருமை.

    • @perukkaranai
      @perukkaranai 6 місяців тому +1

      It is not TMS, it is Sirgazhi.

  • @geetharavi6036
    @geetharavi6036 6 місяців тому

    First time kekuren.ketathe illai.enna film.music Seergazhi sir padiyathu arumai.Nadigar Thilagam solave vendam.Azhgu style nadipu vai asaipu etc.Asathal.Soooo....perrrr.Vijainthimala Woww.dance azhagu.
    Black n white padathulaye ivargal beautiful etc.etc.😊❤

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 8 місяців тому +2

    Nadigar thilagam beautiful ❤

  • @mnisha7865
    @mnisha7865 8 місяців тому +1

    Voice and 🎶 super 1.12.2023

  • @helenpoornima5126
    @helenpoornima5126 8 місяців тому +5

    இதைநான் கேட்டதேயில்லை! ஆஹா சீர்காழியும்சிவாஜுயும்என்னைக்கூப்புடுறாங்களே!!!!என்னை வர்ணிக்கிறாங்களே!ஆமா என்னைவர்ணிக்கத்தானே வேணும் நானில்லாமிரவுவருமா என்ன?!?!?! பூர்ணிமா அர்த்தம் முழுநிலா !ஆஹா என்அன்புஅம்மா எனக்கிட்டிந்நப்பேர்ஒலகத்திலேயாருக்குமே இல்லை நன்றீமேடம் ❤😂❤😂❤😂❤😂😊

    • @pramekumar1173
      @pramekumar1173 8 місяців тому +2

      ஆமாம் பூர்ணிமா ,நானும் இந்த பாடலை கேட்டதில்லை. சீர்காழி ஐயா மென்மையமான குரலில் சிவாஜி ஐயாவுக்காக பாடியுள்ளார். சூப்பராக இருக்கிறது உங்கள் விமர்சனம் பூர்ணிமா. ❤❤❤❤

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 8 місяців тому +2

      நிறைய பேருக்கு பூர்ணிமா என்ற பெயர் இருக்கிறது.
      ஹெலன் பூர்ணிமா என்பது
      அபூர்வ பெயர்!!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 8 місяців тому +2

      ​@@balasubramaniansubramanian3671உண்மைதான் டியர் மேன்!எங்கப்பா அம்மா எனக்கு ஆசையாவச்சபேர்கள் ஹெலன் பூர்ணீமா!ஹெலன்ஆஃப் டிராய் ஹீரோயினை அப்பாக்குப்புடிக்கும் அதுனால நா பெறந்த்தும் அதை வச்சாங்க எங்கம்மாவுக்கு பூர்ணிமாங கறதுபுடிக்கும்அதுனால அதைவச்சாங்க!நா பெறக்குறப்போ வெள்ளைவெளேர்னூநிலாமாதீயேஇருந்தேனா அன்னிக்கு பெளர்ணமீ வேறயா!அதுனால இந்தப்பேரு பொருந்தீடுச்சு ! ரொம்பசந்தோஷம் சுப்ரமணீ 👸❤😂❤😂❤😂❤😂💃

    • @helenpoornima5126
      @helenpoornima5126 8 місяців тому +2

      ​@@pramekumar1173ம் ஆமா! ப்ரேம் 👸❤😂❤😂❤😂💃

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 8 місяців тому +1

      @@helenpoornima5126 என்னுடைய பதில்களை நீ நினைவுபடுத்திக் கொண்டால்,2019ல், உனக்கு நான் போட்ட ஒரு பதிலுக்கு ஒரு பெண் Aa என்று comment அளித்திருந்தார்.
      என்ன அர்த்தம் எனக்கேட்டதற்கு, "அன்பு அண்ணன்" ஆக இருக்கலாம்."நான் இல்லப்பா" என பதிலளித்திருந்தாய். பதிலுக்கு நான் உன் பெற்றோர் ஆங்கில இலக்கியம் படித்திருக்க வேண்டும்.குறிப்பாக "Helen of Troy"படித்திருக்க வேண்டும்.மேலும் நீ பௌர்ணமியன்று பிறந்திருக்க வேண்டும் என பதிவிட்டிருந்தேன்.
      இன்று அதற்கு பதில் கிட்டியுள்ளது.
      நலமுடனும்,வளமுடனும் வாழ்கவே பல்லாண்டு!

  • @rameshpasupuleti1817
    @rameshpasupuleti1817 Місяць тому +1

    Sing it other wise song may die

  • @vaseer453
    @vaseer453 6 місяців тому

    3:21 இசை மேதை ஜி. இராமநாதன் புதிய பாணியில் இசையமைத்த பாடல் இது . ஆனால் திரைக்கதையில் போதிய வலிமை இல்லாததால் படம் தோல்வியைத் தழுவியது. வைஜெயந்தி மாலாவின் தோற்றம் அருமை .இப்படத்தில் நெ. 1 Song இதுதான்.
    ராஜ மனோகரன்.

  • @rameshpasupuleti1817
    @rameshpasupuleti1817 Місяць тому +1

    Try to sing this song, other wise song may die.

  • @schwaarnkreddy7805
    @schwaarnkreddy7805 7 місяців тому +1

    சிவாஜி என்னாஆஆஆஆ ஸ்டைல்ய்யா
    வைஜூவோட அழகும் சிவாஜியாட ஸ்டைலிஷ் மிடுக்கும் சரி ஜோடி
    ஆனா ரெண்டு பேரும் தனித்தனியா தூரமா இருக்காங்களே
    பொருத வேண்டாமா ரெண்டு காளைகள் மாதிரி...
    என்னத்தப் படம் எடுத்ருக்காய்ங்கெ
    "இரும்பத்திரை"ல எவ்வளவு நெருக்கம் ரெண்டு பேரும்....குறிப்பா வைஜூ பணத்த திருப்பிக்குடுக்ற சாக்குல
    சிவாஜிய சந்திக்க, அவர்ஒக்காருன்னு சொல்ல, ரெண்டு பேரும் மனசுல காதல்பொங்கிப்பொங்கிவழிய வாய்மட்டும் என்னத்தப்பேசுறதுன்னு தெரியாம முழிக்க, சிவாஜிய வைஜு கண்ணால சாப்டுசாப்டுன்னு சாப்ட்றதும், வர்ரபையன்கிட்ட புல்லாங்குழல வாங்கி பண்ற சேஷ்ட்டைகளும் அடடா பத்து கண்ணு வேணுமய்யா ஒவ்வொருத்தருக்கும்... பாத்து மெதக்றதுக்கு...
    யூடியூப்ல இருக்கு அந்த சூப்பர் சீன்!
    இப்பவே பாத்து ஏக்கத்தப் போக்கிக்குங்க!

  • @MrSvraman471
    @MrSvraman471 7 місяців тому

    Close to Amudham thenum etharku

  • @masilamanig6191
    @masilamanig6191 6 місяців тому

    This picture jaminiganasan act saythal super irrugum

  • @ariqeredaxi5568
    @ariqeredaxi5568 2 місяці тому

    Vyjayanthimala is very beautiful and extrem attractive. She's basically an seductive women........

  • @lakshmivenkatrangan129
    @lakshmivenkatrangan129 6 місяців тому

    இந்த படம் வெற்றிப் பெற்றதா?

    • @vaseer453
      @vaseer453 6 місяців тому

      நீண்ட காலம் தயாரிப்பில் இருந்ததாலும் படத்தில் சுவாரஸ்யமான கட்டங்கள் இல்லாததாலும் படம் அப்போது தோல்வி கண்டது.
      ராஜமனோகரன்.