நான் கூப்பிட்ட குரலுக்கு குமரா நீ பாடல் | Naan koopitta | Susheela |Vani Jayaram | Yamirukka Bayamen

Поділитися
Вставка
  • Опубліковано 25 чер 2024
  • #tamilsongs #lovesongs #romantic #sad #saritha #4koldsongs
    நான் கூப்பிட்ட குரலுக்கு குமரா நீ பாடல் | Naan koopitta kuralukku song | Susheela | Vani Jayaram | Yamirukka Bayamen . Tamil Lyrics in Description .
    Movie : Yamirukka Bayamen
    Music : M. S. Vishwanathan
    Starring : Vijayakumar, Saritha
    Song : Naan koopitta kuralukku kumara nee
    Singers : P. Susheela and Vani Jayaram
    Lyrics : Vaali
    பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் பி. சுஷீலா
    இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
    பெண் : தேடிக் கிடைத்த பிள்ளை
    தென்பட்ட வேளை
    வாடிக் கிடப்பதென்ன வடிவேலா
    உன்னருளை நாடி கதறுகையில்
    நோக்காமல் உன் விழிகள்
    மூடிக் கிடப்பதென்ன
    சிவபாலா சிவபாலா சிவபாலா…
    பெண் : நான் கூப்பிட்ட குரலுக்கு குமரா நீ
    வாராமல் குன்றேறி நின்றென்ன புண்யம்
    நான் கூப்பிட்ட குரலுக்கு குமரா நீ
    வாராமல் குன்றேறி நின்றென்ன புண்யம்
    என் குழந்தைக்கு உயிர் பிச்சை கொடுக்காமல்
    இருந்தால் உன் கருணைக்கு விளையாதோ பாவம்
    என் குழந்தைக்கு உயிர் பிச்சை கொடுக்காமல்
    இருந்தால் உன் கருணைக்கு விளையாதோ பாவம்
    பெண் : தேனாயிரம் பாலாயிரம்
    குடம் கொண்டு நீராட்டினேன்
    தேனாயிரம் பாலாயிரம்
    குடம் கொண்டு நீராட்டினேன்
    மாணிக்கமும் வைடூரியமும்
    நகை செய்து நான் பூட்டினேன்
    பெண் : வண்ணமுடி சூட ஒரு வைரமுடி தந்தேன்
    நாள் முழுதும் காவடிகள் நான் சுமந்து வந்தேன்
    வண்ணமுடி சூட ஒரு வைரமுடி தந்தேன்
    நாள் முழுதும் காவடிகள் நான் சுமந்து வந்தேன்
    பெண் : பிஞ்சு முகம் கண்விழிக்க
    பெற்ற மனம் வேண்ட
    அஞ்சு முகம் பாராமல் ஆறுமுகம் என்ன
    பிஞ்சு முகம் கண்விழிக்க
    பெற்ற மனம் வேண்ட
    அஞ்சு முகம் பாராமல் ஆறுமுகம் என்ன
    பெண் : நீயில்லை என்றால் நிலத்தில் தோன்றும்
    பயிர் குலம் தழைப்பதுண்டோ உன்
    நிழல் இல்லையென்றால் கருவில் விளையும்
    உயிர் குலம் பிழைப்பதுண்டோ
    பெண் : நீயில்லை என்றால் நிலத்தில் தோன்றும்
    பயிர் குலம் தழைப்பதுண்டோ உன்
    நிழல் இல்லையென்றால் கருவில் விளையும்
    உயிர் குலம் பிழைப்பதுண்டோ
    பெண் : தாய்க்கொரு தாயாய் தணிகை வாழும்
    தலைவா நீ வருக இந்த
    சேய் உயிர் பிழைக்க என்னுயிர் தருவேன்
    இறைவா அருள் புரிக
    சேய் உயிர் பிழைக்க என்னுயிர் தருவேன்
    இறைவா அருள் புரிக
    பெண் : ஈராறு கண் ஈராறு கை
    இருந்தென்ன உபகாரமோ
    ஊரார்க்கு நீ உதவாவிடில்
    தெய்வீக அவதாரமோ
    பெண் : ஈராறு கண் ஈராறு கை
    இருந்தென்ன உபகாரமோ
    ஊரார்க்கு நீ உதவாவிடில்
    தெய்வீக அவதாரமோ
    பெண் : மையிருளில் மூழ்காமல்
    மண்டபங்கள் மின்ன
    நெய் விளக்கு நான் ஏற்றி கண்ட பலன் என்ன
    உன்னுடைய சன்னதியில் ஒளி வீசும் ஜோதி
    என் வாழ்வில் இருண்டாலோ
    இது என்ன நீதி இது என்ன நீதி
    பெண் : பாபங்கள் செய்த ஏழை என் மீது
    கோபத்தை களைந்து விடு
    பாபங்கள் செய்த ஏழை என் மீது
    கோபத்தை களைந்து விடு
    உந்தன் எல்லை இல்லாத கருணையை காட்டி
    பிள்ளையை பிழைக்க விடு
    உந்தன் எல்லை இல்லாத கருணையை காட்டி
    பிள்ளையை பிழைக்க விடு
    பெண் : வேல் கொண்ட முருகா விழி நீரால் உன்
    பாதத்தை கழுவுகிறேன் தாய்
    வேண்டிய வண்ணம் மழலையை காக்க
    வாய் விட்டு கதறுகிறேன்
    வேல் முருகா மால் மருகா ஆதரிப்பாய் ஆறுமுகா
  • Розваги

КОМЕНТАРІ •