Om Ena Olithathu || Thirupalli Ezhuchi || P Susheela || Tamil Kadavul Murugan Songs || Vijay Musical

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • Om Ena Oliththathu || Saravanana Sannadhi || Singer : P Suseela || Tamil Lyrical Video || Vijay Musicals || Thirumurugan Thiruppalli Ezhuchi || Music: Surumbiyan || Video Kathiravan Krishnan
    Lyrics:
    ஓம் என ஒலித்தது வைகறைச் சேவல்
    உடன் குரல் தந்தன புல்லினம் யாவும்
    மாமயில் நடந்தது மலைநிலம் எங்கும்
    மலரெனத் தவழ்ந்தது தரைமிசைத் தென்றல்
    தீமலைச் சாரலின் சிவந்தது வானம்
    தேன்சுரம் வார்த்தது இன்னிசை வண்ணம்
    பூமுக வேலவனே முருகா என்
    பொன்மணியே பள்ளி எழுந்தருளாயே
    வெள்ளியும் முளைத்தது விரைந்தது காலம்
    வீதிகள் எங்கணும் பலவகைக் கோலம்
    துள்ளின கன்றுகள் தாயிடம் அன்பால்
    தொகைமிகு ஆவினம் சுரந்தனத் தாய்ப்பால்
    உள்ளமும் மகிழ்ந்திட மலர்ந்தது சோலை
    ஓவிய வடிவல்லவோ இளங்காலை
    வள்ளியின் காதலனே முருகா என்
    வடிவழகா பள்ளி எழுந்தருளாயே
    வெண்பனி விலகின இன்னிரவோடு
    வெளிச்சமும் பரவின உன்னருளோடு
    தண்பொழில் தாமரை நிமிர்ந்தது பாராய்
    தாவிடும் குயில்களும் கூவின சீராய்
    விண்ணக மீன்களும் தம்மொளிமங்கும்
    விரிகடல் கதிர்வரும் களிப்பினில் பொங்கும்
    கண்ணுதலோன் மகனே முருகா என்
    தலைமுதலே பள்ளி எழுந்தருளாயே
    நீர்தர தொடங்கிடும் ஏரியின் மதகு
    நிலத்திடை உலவின குறத்தியர் கால்கள்
    ஆரமிழ்த்தூட்டிடும் அன்னையர் குரல்கள்
    அருந்திடும் மழலைதம் அரைகுறை மொழிகள்
    காரிருள் எனும்திரை கலைந்தது மண்ணில்
    கதிரொளி படிந்தது மலைமுடி தன்னில்
    பேரருள் மழைமுகிலே முருகா என்
    பெருமானே பள்ளி எழுந்தருளாயே
    ஆற்றினில் பொய்கையில் ஆடினார் மாந்தர்
    அனைத்துயிர் கூட்டமும் மலர்ந்தன கண்கள்
    ஏற்றங்கள் இயங்கின மேலொடு கீழும்
    ஏர் நடையிட்டது வயல்வெளி தோறும்
    நீற்றினை அணிந்துணை புகழ்தனர் நல்லோர்
    நினைந்துணை பணிந்துளம் நெகிழ்தனர் பல்லோர்
    ஆற்றறியா இறைவா முருகா என்
    மாமணியே பள்ளி எழுந்தருளாயே
    கரைந்தன பறந்தன காகங்கள் விண்ணில்
    காலத்தில் ஒலித்தன ஆலயமணிகள்
    உரைத்தனர் அடியவர் உன்திருப்பெயர்கள்
    ஒன்றிட இசைத்தன குழலுடன் யாழும்
    முறையுடன் தொடங்கிடும் முதல்வழிபாடு
    முகமலர் மலர்ந்ததின் தாய்திருநாடு
    நிறைவளம் தரும் நிலவே முருகா என்
    நித்திலமே பள்ளி எழுந்தருளாயே
    பூவிரிசோலையின் மலர்மணம் நீயே
    புரண்டிடும் உலகெனும் பெரும்நிலம் நீயே
    தீவிரித்தேத்திகள் செங்கதிர் நீயே
    திசையற பரவிய விண்வெளி நீயே
    மேவிநின்றசைந்திடும் காற்றனல் நீயே
    மேகத்தின் பரிசெனும் வான்மழை நீயே
    ஆவை தெய்வானைதன் துணை முருகா என்
    பாவலனே பள்ளி எழுந்தருளாயே
    உவமைகள் கடந்திடும் ஓர் இறை நீயே
    ஒருதுணை இருமையும் தருவதும் நீயே
    தவழ்ந்திடும் நற்காலமும் நீயே
    தரைவழிதரும் திசை நான்கெனல் நீயே
    சுவைத்தரும் ஐந்துமெய் உணர்வுகள் நீயே
    சுடர்மிகு ஆறறிவாம் திறம் நீயே
    சிவையெனும் உமை மகனே முருகா என்
    செம்பொருளே பள்ளி எழுந்தருளாயே
    மெய்யென விளங்கிடும் திருவருள் துணையே
    வேலவர் நெஞ்சினில் மேவிடும் கனியே
    பொய்யெனத் துயர் இருள் போக்கிடும் ஒளியே
    புகழ்மொழி ஓம் என பாடிய கிளியே
    செய்யநின் தாமரை சேவடிபணிந்தோம்
    சேத்திருக்கைகளும் குவித்துனை தொழுதோம்
    ஐயப்பனின் அண்ணனே முருகா என்
    ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே
    வரைநிலம் குறிஞ்சியின் ஆலயக்குமரா
    வயல்நிறை மருதமும் வாங்கிடும் அழகா
    இறைமிகு நெய்தலும் உடையச் செந்தூரா
    பிரண்டிடும் முல்லையின் தேட்டுவர் தலைவா
    வரண்டிடும் பாலைக்கும் வளம் தரும் துணைவா
    வாழ்வுறப் பிறவியை வழங்கிய இறைவா
    கரிமுகனின் தம்பியே முருகா என்
    கண்மணியே பள்ளி எழுந்தருளாயே
    புன்முகம் தந்திடும் புலகிடை வளங்கள்
    உன்விழி மலர்ந்திட மலர்ந்திடும் உயிர்கள்
    உன்னருள் தரும் பதி எங்களின் எல்லை
    உன்வழி நடந்திட ஏதங்கள் இல்லை
    உன்பெயர் ஓதிடும் அடியவர்கூட்டம்
    உன் பதமலர் நிழல் அமைதியின் கோட்டம்
    தன்னருட் பெருங்கடலே முருகா என்
    தவமணியே பள்ளி எழுந்தருளாயே
    எவ்வுயிர்க்கும் நலம் உனதருள் விருந்து
    இடும் திருநீறது பிணிகளின் மருந்து
    கைவடிவேல் பகை யாவையும் அழிக்கும்
    கனிந்த நின் தாய்மனம் நெடுவளம் கொடுக்கும்
    இவ்விடம் இக்கணம் பெரும்துணை நீயே
    எம்முயிர் உடல்பொருள் காத்தருள்வாயே
    செவ்விதழ் நகைத்திருவே முருகா என்
    சிவமணியே பள்ளி எழுந்தருளாயே

КОМЕНТАРІ • 59

  • @periyamariyammansevasangam2812

    இது பழனி முருகனுக்காக எழுதப்பட்ட திருப்பள்ளி ஏழுச்சி பாடல். தினமும் கேட்க அன்றைய நாள் சிறப்பாக இருக்கிறது.

  • @ayyapparajpayyapparajp4032
    @ayyapparajpayyapparajp4032 5 років тому +39

    இந்த பாடல் நான் பழனி பகுதிக்கு பால் வண்டியில் வேலை செய்யும் பொழுது அதி காலை வேளையில் இப்பாடலை பழனி மலையிலிருந்து ஒளிபரப்பு செய்வார்கள் குறைந்த ஒலியில் காலை வேளையில் கேட்க அவ்வளவு அருமையாக இருக்கும்

    • @amutharaniamutha5726
      @amutharaniamutha5726 4 роки тому +1

      Ayyapparajp Ayyapparajp

    • @sathieshkumar5815
      @sathieshkumar5815 Рік тому

      😊😊😊😊😊😊😊

    • @AkkaThangachiAK
      @AkkaThangachiAK Рік тому +2

      ஆமா இந்த பாடல் பழனி மலையில் நாள்தோறும் காலை வேலையில் பாடும்... இந்த பாடலைக் கேட்டுகிட்டே மலை ஏறுவது ஆனந்தமே ஆனந்தம்❤❤

    • @manickamsuthi
      @manickamsuthi Рік тому +2

      எங்கே இருந்தாலும் சரி தினமும் ஒரு தடவை இந்த பாடலை கேளும்❤

    • @user-li4mh7dm3t
      @user-li4mh7dm3t 10 місяців тому +2

      நான் இப்போது தான் கேட்டேன்...

  • @murugan5973
    @murugan5973 2 місяці тому +1

    Om saravana bava

  • @ganesh-qz6kk
    @ganesh-qz6kk Місяць тому

    திருஆவினன்குடி பழனியில் மலைக்கோவிலில் ஞான தண்டாயுதபாணி திருப்பள்ளியெழுச்சி

  • @sena3573
    @sena3573 Рік тому +3

    அழகு ததும்பும் பாடல். பதிவு இட்ட தற்கு பாராட்டுக்களும் நன்றி களும்

  • @vimalrajselvaraj735
    @vimalrajselvaraj735 5 років тому +7

    அருமையான உச்சரிப்பு. சுசீலா அம்மா அவர்களால் தமிழ் அழகு பெற்றது

  • @user-di7po6zk9b
    @user-di7po6zk9b Рік тому +1

    இந்த பாடலை பழநியில் கேகட்டேன் இனி ௭ப்போதும் ௮திகாலை கேட்பேன் மிக ௮ருமையான பாடல் நல்ல இசை

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 роки тому +1

    மிக்கநன்றி வணக்கம் P சுசீலா அம்மா வாழ்க பல்லாண்டுகாலம் வாழ்க
    நலமோடு வாழ்க வையகம் 🌹🌹🌹 Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦😡😡😡

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 роки тому +2

    மிக்கநன்றி வணக்கம் ஆணைமுகன் தம்பிஆறுமுகன் போற்றி வெற்றிவேல் முருகனுக்கு
    அரகரோகரா வாழ்க பல்லாண்டுகாலம் வளமோடு நோயின்றி நீண்டாஆயுள்லுடன்❤️❤️❤️
    உங்கள்குடும்பதொடு வாழ்க வையகம் கந்தப்பெருமானை சொந்தப்பெருமானக வணங்கவும்
    அவர் உங்களுடன் தான் இருப்பார் 🌹🌹🌹🌺🌺🌺

  • @kumares8552
    @kumares8552 10 місяців тому +1

    நல்ல குரல் வளம் இசை மற்றும் தொகுப்பு

  • @sellarkugathasan5966
    @sellarkugathasan5966 2 роки тому +1

    ஓம் முருகா சரவணபனே சண்முகனே சடாச்சரகோனே சத்தியத்தின் தலைவனே சாந்தரூபனே போற்றி போற்றி போற்றி

  • @vijayalakshmi-io2fr
    @vijayalakshmi-io2fr Місяць тому

    Enna punniyam seithomo avlo arumai amithiya irukkum morning Palani malaila antha Palani aandavanuku podunga intha paath❤intha padala ketal entha ninaipum varathu

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 роки тому

    மிக்கநன்றி வணக்கம் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் வாழ்க
    நலமோடுபல்லாண்டுகாலம் வாழ்க 🌺🌺🌺

  • @dr.m.iniyaniniyanflute9773
    @dr.m.iniyaniniyanflute9773 6 років тому +3

    Fantastic

  • @sbsabari6554
    @sbsabari6554 2 місяці тому

    Om muruga

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 роки тому

    மிக்கநன்றி வணக்கம் வாழ்க பல்லாண்டுகாலம் வாழ்கவயகம் 🌹🌹🌹

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 роки тому

    மிக்க,நன்றி வணக்கம் வாழ்க பல்லாண்டு காலம் வளமோடு வாழ்க வையகம் 🌹🌹🌹

  • @mothermediastudio
    @mothermediastudio Рік тому

    Vetrivel Muruga veeravel Muruga..

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 роки тому

    மிக்கநன்றி வணக்கம் வாழ்கபல்லாண்டு காலம் வாழ்க வையகம் 🌺🌺🌺

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 роки тому +1

    Thank you very much you have a great day 🌹❤️🌹God Bless you and your family 🌺❤️🌺

  • @pubg-tr5xq
    @pubg-tr5xq 5 місяців тому

    Om Muruga Om Saravana Om sanmuka potri potri potri potri potri potri potri potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaiselvi7189
    @kalaiselvi7189 Рік тому +1

    This is the first song played in Palani early morning

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 роки тому +1

    சக்திகணபதிதுணை தம்பி ஆறுபடைக்குமரன் போற்றி வள்ளிஅம்மை தெவானை அம்மை❤️
    மணவாளானே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஆறுமுகம்போற்றி🌹🌹🌹

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 роки тому

    Thank you very much you have a great day 🍓🍓🍓 God Blessings you and your family 🍎🍎🍎

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 роки тому

    Thank you very much you have a great day 🌹🌹🌹 God Bless you and 🌷🌷🌷
    Your family very well ❤️❤️❤️Canada 🇨🇦🇨🇦🇨🇦Toronto 🌺🌺🌺👍👍👍

  • @vijaykumarsukumar8772
    @vijaykumarsukumar8772 Рік тому

    முருகா சரணம்

  • @selvammadurai535
    @selvammadurai535 4 роки тому +2

    இந்த வீடியோவை டவுன்லோட் செய்வது எப்படி.. அண்ணா

  • @chuppiahpackiaraja4719
    @chuppiahpackiaraja4719 5 років тому

    Rendition ls very appealing ,When Singer like P. Suseela takes over.......

  • @kirubhagarankirubhagaran8610
    @kirubhagarankirubhagaran8610 5 місяців тому

    Om muruga potri potri potri om🙏🙏🙏🙏🙏

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 роки тому

    Thank you very much you have a great day 🌺🌺🌺

  • @lathakishore5557
    @lathakishore5557 4 місяці тому

    Kakarathuku Kuduthu vachurukanum muruga

  • @PushpaRamesh-my1iy
    @PushpaRamesh-my1iy 5 місяців тому

    Om muruga 🙏

  • @geethaudhai5035
    @geethaudhai5035 4 роки тому

    My favourite song voice lovely madam💐💐💐💐🌹🌹🌹

  • @chuppiahpackiaraja4719
    @chuppiahpackiaraja4719 5 років тому

    Tamil is spoken as it is....Very welcomable when others fail in pronunciation

  • @satheeshkumar8666
    @satheeshkumar8666 6 місяців тому

    my favourite song om

  • @selvaselvaraja6754
    @selvaselvaraja6754 Рік тому

    ஓம்

  • @r.rradhakrishna632
    @r.rradhakrishna632 5 років тому

    Om murga om murga om murga om murga om murga om murga

  • @dharshiniab3637
    @dharshiniab3637 4 роки тому

    Goodsongs

  • @jackandjill9244
    @jackandjill9244 3 роки тому

    இதனை இயற்றியவர் யார்

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 роки тому

    மிக்கநன்றி வணக்கம் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் வாழ்க
    நலமோடுபல்லாண்டுகாலம் வாழ்க 🌺🌺🌺

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 роки тому

    Thank you very much you have a great day 🌹❤️🌹God Bless you and your family 🌷❤️🌷

  • @kirubhagarankirubhagaran8610
    @kirubhagarankirubhagaran8610 5 місяців тому

    Om muruga potri potri potri om🙏🙏🙏🙏🙏

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 роки тому

    Thank you very much you have a great day 🌺🌺🌺

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 роки тому

    மிக்கநன்றி வணக்கம் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் வாழ்க
    நலமோடுபல்லாண்டுகாலம் வாழ்க 🌺🌺🌺

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 роки тому

    Thank you very much you have a great day 🌹🌹🌹God Bless you and your family 🌺🌺🌺

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 роки тому

    Thank you very much you have a great day 🌹🌹🌹God Bless you and your family 🌺🌺🌺