திருகோணமலையில் பறிபோகும் தமிழர் பிரதிநிதித்துவம்

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024

КОМЕНТАРІ • 11

  • @ThamrajaThamraja
    @ThamrajaThamraja 14 годин тому +2

    இளைஞர்களே!
    நீங்கள் அனைவரும் நாட்டை வழி நடத்த வேண்டியவர்கள் நாங்களே என்று பல திசைகளிலும் விழிப்ப டைந்து வருகிறீர்கள். அனைவர்க் கும் பாராட்டுகள் நன்றிகள்.
    உங்கள் தந்தை நான் பெயர், புகழ் விரும்பாத "யாரோ ஒருவன்" ஆக உங்களிற்காக சில அரசியல் கருத் துகுகளை அதிகளவு சமூகவலைத் தளங்களில் பதிவிடுகிறேன்.
    சிலர் நீக்கிவிடுகிறார்கள். அதிகமா னோர் பதிவிடுகிறார்கள்.
    அண்ணன் அமிர்தலிங்கம் காலத் தின் பின்னரே தமிழ் மனங்களில், தீவிர இனவாத, மொழிவாத சிந்த னைகள் உயிரோட்டம் பெற்றது.
    தற்கால தமிழரசு கட்சி தலைவர் மாவை ஐயா, டக்ளஸ் ஐயாவும் ஏனைய சில போராட்ட குழுக்களின் தலைவர்களும், அமிர்தலிங்கம் காலத் தின் பின்னர் உணர்ச்சியூட்ட பட்ட அரசியல் வாதிகள்.
    தமிழரசு கட்சி தலைவர்களாக தாமே தங்களை கருதும் சுமந்திரன், ஸ்ரீதரன் இருவருடன், கிழக்கின் அரசியல் நாயகனாக கருதும் மகன் சாணக்கியனும் போராளிகளின் வாழ்வை அறியாது வாய் வீச்சால் வயிறு வளர்ப்பவர்கள்.
    தற்போதுள்ள 60 வயதிற்கு மேற்பட்ட அரசியல் வாதிகள் இது வரை காலமும் சொந்த இனத்துக் குச் செய்த பாவங்களை போக்குவ தற்கு காசிக்கு சென்று கங்கையில் மூழ்குவது அவர்களுக்கு நல்லது.
    திரும்பவும் தேர்தலில் மூழ்கி தோல்வி அடைவதுடன் உங்கள் தலையில் பாவ மூட்டையை அதிக ரிக்காதீர்கள்.
    40 வயதிற்கு மேற்பட்டவர்கள் உங்கள் வாழ்வின் 2/3 பாகம் முடித்துவிட்டீர்கள். நீங்கள் உங்கள் வீட்டில் பேரக்குழந்தைகளுடன் விளையாடுங்கள். மக்களின் உயிர் களுடன் வாழ்ந்தது போதும்.
    40 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு அரசியல் வேண்டியதில்லை. எதிர் கால தங்கள் வாரிசுகளிற்காக தாங்களாகவே விட்டுச் செலுபவர் கள் சான்றோர் என போற்றப்படுவர்.
    தற்போது , வாழவேண்டியவர்களும், தங்கள் குழந்தைகளை வாழவைக்க வேண்டியவங்களான 18-- 40 வயதி ற்கு இடைப்பட்ட இளைஞர்களிற் கானதே அரசியல். இதில் 40 வயதி ற்கு மேற்பட்டவர்கள் பங்கு கேட்பது நல்லதல்ல.
    இளைஞர்களே உங்களுக்காகவும் உங்கள் எதிர்கால சந்ததிக்காகவும், நீங்கள் எங்கிருந்தாலும் ஒரு தலை மையின் கீழ் ஒன்றுபட வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.
    1948 முதல் இன்றுவரை 75 வருடங்க ளிற்கு மேலாக மேட்டுக் குடி வல்லா திக்க வலதுசாரி முதலாளித்துவ ஆட்சியே நிலவி வருகிறது.
    J.V.P .கட்சியினர் 25 வருட வலதுசாரி முதலாளித்துவ ஆட்சிக்கு எதிராக 1972ல் தொழிலாளர் வர்க்கப் புரட்சி செய்து தோல்வி அடைந்தனர். அது இனவாத யுத்தம் அல்ல.
    J.V.P யில் இருந்த சில இனவாதிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டபின், 2 தசாப்தங்களாக அகில இலங்கை இடதுசாரி (தொழிலாளர்) கட்சியாக N.P.P தங்களை வளர்த்து வந்தனர்.
    என்றாலும் மாறி மாறி ஆட்சிக்கு வந்த வலதுசாரி முதலாளித்துவ ஆட்சியாளர்களால் இவர்கள் இன வாதிகள் என்றும் பயங்கர வாதிகள் என்றும் கூறி மக்களை பயமுறுத்தி வந்தனர்.
    வடக்கு, மேற்கு மேட்டுக்குடி முதலா ளித்துவ அரசியல் கட்சிகளும், அரசி யல்வாதிகளுமே உண்மையான இனவாதிகள் என்பது கடந்த 75 வருட இலங்கையின் அரசியல் வரலாறு சாட்சியாக மாறியுள்ளது.
    இந்த ஜனாதபதி தேர்தலில், தெற்கு மக்கள் மேட்டுக்குடி முதலாளித்துவ இனவாதிகளிற்கு எதிராக ஒன்று திரண்டு வந்துள்ளனர்.
    அடுத்த பாராளுமன்ற தேர்தலி்ல் வடக்கு மக்கள்,வடக்கில் உள்ள முதலாளித்துவ, ஊழல் வாத இனவாத அரசியல கட்சிகளிற்கும் அரசியல் வாதிகளிற்கும் எதிராக ஒன்று திரண்டு தென் இலங்கை இடதுசாரி (தொழிலாளர்) கட்சி N.P.P ஐ 150 ஆசனங்களிற்கு மேலாக வெற்றி பெற வைப்போம்.
    இளைஞர்கள் ஒற்றுமையை விரும்பு பவர்கள். பல பாடங்களை கற்ற இவர்கள் பழைய அரசியல்வாதிகள் போல் பிரிவினையை விரும்பாத வர்கள். இருந்தாலும், பழைய அரசி யல் வாதிகளை அரசியலில் இருந்து கலைக்க யார் முன் வருவார்கள் என்பது தெரியாது, குழுக்களாகப் பலரும் முன் வந்துள்ளனர். நன்றி.
    இளைஞர்களே! அன்பான வேண்டு கோள்:--- நீங்கள் குழுக்கள் பலராக இருந்தாலும், சகல குழுக்களும் ஒன்றுபட்டு கலந்துரையாடி, உங்களுக்குள் சிறந்த குழுவை தெரிவு செய்து இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்வீர்களாக.
    யாரோ ஒருவன் 03/10/2024

  • @mmohamedfaisal4230
    @mmohamedfaisal4230 14 годин тому

    சிறு பான்மை கட்சிகளிடையே...திண்டாட்டம்😂😂😂

  • @SelvarajahRamalingam-ct9wj
    @SelvarajahRamalingam-ct9wj 2 години тому

    dei dei mafia🐖🐖🐆🐆

  • @ramanthankugaseelan1646
    @ramanthankugaseelan1646 3 години тому

    No more

  • @ashrafb.saheeb519
    @ashrafb.saheeb519 13 годин тому

    Ellarum akd Ku serungal 😂😂 azu tan Tamil makkalukkum nanmai tarum