Meettaar Tham Uthirathaal - Tamil Christian Song - மீட்டார் தம் உதிரத்தால்

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024
  • மீட்டார் தம் உதிரத்தால்
    Tamil Christian Song
    Lyrics by Merlin Rajendram and Milton Rajendram
    1. மீட்டார் தம் உதிரத்தால், பாவம் சாபம் நீக்கினார்;
    மன்னித்தார் தம் தயவால், பெலவீனம் தாங்கினார்;
    கழுவினார் தம் வார்த்தையால், ஜீவன் தந்து இரட்சித்தார்;
    பூரணர் தம் சுபாவத்தால் தூய்மையாக மாற்றுவார்;
    மாற்றுவார் என்னை மாற்றுவார், தம்மைப்போல் மாற்றுவார்;
    மாறுவேன் நான் மாறுவேன், இயேசுவைபோல் மாறுவேன்.
    2. நம்போல் மாம்சம் இரத்தத்தில் தம்மை வெளியாக்கினார்;
    நம்மேல் அன்புகூர்ந்ததால் தம்மைப் பலியாக்கினார்;
    தம் ஆவி பொழிந்ததால் நம்மில் வாசம் செய்கிறார்;
    நம்மில் பாய்ந்தோடுவதால் தம் சாயலாய் ஆக்குவார்;
    ஆக்குவார் என்னை ஆக்குவார், தம்மைப்போல் ஆக்குவார்,
    ஆகுவேன் நான் ஆகுவேன், இயேசுவைபோல் ஆகுவேன்.
    3. தேவ ரூபமானவர், அடிமை ரூபமானார்;
    தேவனுக்கொப்பானவர் சிலுவைவரை தாழ்ந்தார்;
    பிதாவின் வார்த்தையே பேசி, பிதாவின் மகிமைக்காய்,
    பிதாவின் வேலை செய்தார், தேவ திட்டம் சேவித்தார்;
    சேவித்தார் அவர் சேவித்தார், அடிமையாய் சேவித்தார்,
    சேவிப்பேன் நான் சேவிப்பேன், இயேசுவைப்போல் சேவிப்பேன்.
    4. இராஜாவாய் ஆண்டவராய், சரீரத்தின் தலையாய்,
    பரிந்துரைப்பவராய், நியாயாதிபதியுமாய்,
    தாவீதின் வேர் வம்சமாய், ஆதியும் அந்தமுமாய்,
    செம்மறி மணாளனாய், இருப்போரைச் சாற்றுவேன்;
    சாற்றுவேன் பறை சாற்றுவேன், உலகெங்கும் சாற்றுவேன்,
    பாடுவேன் நான் பாடுவேன், இயேசு புகழ் பாடுவேன்.

КОМЕНТАРІ • 4