தைஅமாவாசை சகலபிணி தீர்க்கும் வைத்ய வீரராகவர் Thai Amavasai Thiruvallur Vaidya Veeraragavar Vrudham

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • #thaimasam #thai #thaiamavasai #amavasai #thiruvallur #vaidyaveeraragavaperumal #veeraragavan
    #தை #அமாவாசை யில்
    சகலபிணி தீர்க்கும் #மருத்துவக்கடவுள் #திருவள்ளூர்
    #ஸ்ரீ #வைத்யவீரராகவப்பெருமாள்
    மஹிமையும் இந்த பதிகம் கேட்பவரது
    பிறவிப்பிணிகள், மனக்குறைகள்,
    ஜென்மாந்திர பாவங்கள் அனைத்தும்
    தொலையும்.
    #ஶ்ரீவீரராகவவிருத்தம்
    திருவ மர்ந்துறை சீரெழில் மார்பனை
    அருள்ம லர்ந்தொளிர் அங்கண் அழகனைத்
    திருவெவ் வுள்கிடந் தானையெம் சிந்தையில்
    மருவு மாலினை வாழ்த்தி வணங்குவாம்.
    பதம் பிரித்து:
    திரு அமர்ந்து உறை சீர் எழில் மார்பனை,
    அருள் மலர்ந்து ஒளிர் அங்கண் அழகனை,
    திரு எவ்வுள் கிடந்தானை, எம் சிந்தையில்
    மருவும் மாலினை வாழ்த்தி வணங்குவாம். 1
    எவ்வு யிர்க்குமி ருந்துணை யேயெனச்
    செவ்வ னேதொழுஞ் சிந்தை யுடையவர்
    எவ்வு டற்பிணி யெய்தினு மஃதற
    எவ்வு ளீசனி ணையடி காக்குமே. **
    பதம் பிரித்து:
    ‘எவ் உயிர்க்கும் இரும் துணையே!’ எனச்
    செவ்வனே தொழும் சிந்தை உடையவர்,
    எவ் உடல் பிணி எய்தினும் அஃது அற
    எவ்வுள் ஈசன் இணையடி காக்குமே! 2
    எண்ண ருஞ்சுவை யோடரு ளீந்திடும்
    பண்ண மர்தமிழ்ப் பாசுர மானவன்
    நண்ண ரும்பதம் நல்கிடு மெவ்வுளெம்
    அண்ணல் என்னவ ழிந்திடு மல்லலே.
    பதம் பிரித்து:
    ‘எண்ண அரும் சுவையோடு அருள் ஈந்திடும்
    பண் அமர் தமிழ்ப் பாசுரம் ஆனவன்;
    நண்ண அரும் பதம் நல்கிடும் எவ்வுள் எம்
    அண்ணல்’ என்ன அழிந்திடும் அல்லலே. 3
    ‘காக்க!’ என்ற கரியின் கடுந்துயர்
    போக்க வந்த பொருதிற லாழியான்
    நீக்க மின்றித் திருநிறை யெவ்வுளூர்
    சீர்க்க நின்ற திகழொளிச் செல்வனே.
    பதம் பிரித்து:
    ‘காக்க!’ என்ற கரியின் கடும் துயர்
    போக்க வந்த பொரு திறல் ஆழியான்,
    நீக்கம் இன்றித் திரு நிறை எவ்வுளூர்
    சீர்க்க நின்ற திகழ் ஒளிச் செல்வனே. 4
    பேரொ ராயிரத் தானெம்பி ரான்பரன்
    ஏரு டைத்திரு வெவ்வுளி றையவன்
    நார ணன்பட நாகணை யானருள்
    வீர ராகவன் மெய்யடி யோங்களே.
    பதம் பிரித்து:
    பேர் ஒர் ஆயிரத்தான், எம் பிரான், பரன்,
    ஏர் உடைத் திரு எவ்வுள் இறையவன்,
    நாரணன், பட நாக அணையான், அருள்
    வீர ராகவன் மெய் அடியோங்களே. 5
    சொற்ப தங்கள் கடந்தொளிர் சோதியைப்
    பொற்பொ ருப்பினைப் பொற்புறு ரூபனை
    விற்பெருந் திறல் வீரனைப் பேரெவ்வுள்
    பற்ப நாபனைப் பாடிப் பணிவனே.
    பதம் பிரித்து:
    சொல் பதங்கள் கடந்து ஒளிர் சோதியைப்
    பொன் பொருப்பினைப் பொற்பு உறு ரூபனைக்
    வில் பெரும் திறல் வீரனைப் பேரெவ்வுள்
    பற்ப நாபனைப் பாடிப் பணிவனே. 6
    என்பெ லாமுள் ளுருகவெ ழுந்திடும்
    அன்பி னாலகத் தாழ்ந்தருள் பாடுவார்
    துன்பெ லாம்துடைக் கும்சுடர் நேமியான்
    இன்பு லாவடி வெவ்வுள் இறைவனே.
    பதம் பிரித்து:
    என்பு எலாம் உள் உருக எழுந்திடும்
    அன்பினால் அகத்து ஆழ்ந்து அருள் பாடுவார்
    துன்பு எலாம் துடைக்கும் சுடர் நேமியான்
    இன்பு உலாவு வடிவு எவ்வுள் இறைவனே. 7
    அஞ்சி றைப்பற வையது தாங்கிடும்
    கஞ்ச வார்கழல் கைதொழு வாரவர்
    நெஞ்ச மேவி நிறைந்தருள் வார்த்திடும்
    மஞ்ச னாரிடம் வண்புகழ் எவ்வுளே.
    பதம் பிரித்து:
    அம் சிறைப் பறவை அது தாங்கிடும்
    கஞ்ச வார் கழல் கை தொழுவார் அவர்
    நெஞ்சம் மேவி நிறைந்து அருள் வார்த்திடும்
    மஞ்சனார் இடம் வண் புகழ் எவ்வுளே. 8
    தடவ ரைதனைத் தாங்கிநின் றாமையாய்க்
    கடல்க டைந்தக ளைப்புக்கொ லோதிரு
    இடமெ னக்கொண்டெவ் வுள்கிடந் தெம்பிரான்
    படவ ரவ்வணைப் பையத் துயின்றதே!
    பதம் பிரித்து:
    தட வரை தனைத் தாங்கி நின்று ஆமையாய்க்
    கடல் கடைந்த களைப்புக் கொலோ திரு
    இடம் எனக் கொண்டு எவ்வுள் கிடந்து எம்பிரான்
    பட அரவு அணைப் பையத் துயின்றதே! 9
    இரவு நண்பகல் எப்பொழு தும்முன்றன்
    குரைக ழற்புகழ் கூறுவன் எவ்வுளாய்!
    அரவ மெல்லணைப் பள்ளிகொண் டாயருள்
    பரவு மென்மனப் பள்ளியெந் நாள்கொலோ!
    பதம் பிரித்து:
    இரவும் நண்பகல் எப்பொழுதும் உன்றன்
    குரை கழல் புகழ் கூறுவன் எவ்வுளாய்!
    அரவ மெல் அணைப் பள்ளிகொண்டாய்! அருள்
    பரவும் என் மனப் பள்ளி எந்நாள் கொலோ! 10

КОМЕНТАРІ • 36

  • @lightningzoldyck2974
    @lightningzoldyck2974 10 днів тому +4

    உங்கள் சேவை தொடரட்டும் அம்மா🙏

  • @RamaaNarasimhan
    @RamaaNarasimhan 11 днів тому +5

    ஸ்ரீ வீரராகவர் திருவடிகள் மற்றும்
    ஸ்ரீ கனகவல்லி தாயார் திருவடிகளே
    சரணம் சரணம் 🙏🏻🪷🙏🏻
    பதிவுக்கு நன்றி
    சகோதரி 😇

  • @bhavadharanisivapavithra6523
    @bhavadharanisivapavithra6523 11 днів тому +1

    ஓம் ஸ்ரீ வீரராகவப்பெருமாள் நமஹா🙏🙏🙏🙏🙏 🕉🕉🕉🕉🕉🔯🔯🔯🔯🔯..............................................

  • @mohanana5694
    @mohanana5694 10 днів тому +2

    தைஅமாவாசையில்இந்தபாசுரம்சொல்லுங்கள் நோற்றநோன்பிலேன்நுண்ணறிவிலேன்ஆகிலும்இனிஉன்னைவிட்டொன்றும்ஆற்றற்கின்றிலேன்அரவின்அணைஅம்மானேசேற்றுத்தாமரைசெந்நெல்ஊடுமலர்சிரீவரமங்கலநகர்வீற்றிருந்தயெந்தாய்உனக்குமிகைஅல்லேன்அங்கே🙏

  • @chandrakalaravi4095
    @chandrakalaravi4095 10 днів тому +2

    அம்மா உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்

  • @thirumarainathan
    @thirumarainathan 10 днів тому +1

    நல்ல பதிவு
    இறைவன் அருள் உடன் நீடுவாழி

  • @bhavanigovindaraajan2023
    @bhavanigovindaraajan2023 10 днів тому +1

    ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ❤❤❤❤❤❤❤

  • @lightningzoldyck2974
    @lightningzoldyck2974 10 днів тому +2

    அருமை அம்மா மிக்க நன்றி 🙏🙏🙏

  • @ganeshram110
    @ganeshram110 11 днів тому +1

    Om Namo Narayana 🙏❤️🙏

  • @shanthisampath3450
    @shanthisampath3450 11 днів тому +1

    Wow wow wow thank you so much and I got dharshan today morning to you tube video

  • @radhakannan1457
    @radhakannan1457 10 днів тому +1

    ஓம் நமோ நாராயணா யா நமஹா

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 11 днів тому +1

    Nandrigal Kodi Sagothari ❤

  • @Srun-x7g
    @Srun-x7g 11 днів тому +1

    Today ur speech clarity more sound coming more powerful amma. God is with u ❤❤❤❤ may i praygod bless ur family more 🙏

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 11 днів тому +1

    Thankyou🎉

  • @sundaralakshmisathyamurthy4102
    @sundaralakshmisathyamurthy4102 10 днів тому +1

    Om sri vira Raghava perumal Thiruvadigaley saranam kanaka valli Thayar potri potri Namaskaram Amma vazgha valamudan om Namo Narayana

  • @JayamadhiPalanisami
    @JayamadhiPalanisami 11 днів тому +1

    OmGovinthaPotri🙏🙏🙏🌺💐🌹🍓🍇🥭🍊🍎⭐🌟⭐🌜🌜🌜🌺🙏

  • @indrat6128
    @indrat6128 11 днів тому +1

    Aum Sri maha periyava saranam 🙏

  • @muthuraman27
    @muthuraman27 11 днів тому

    Thank you❤❤❤

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 11 днів тому +1

    அதிஅற்புதமானபதிவுதாயேகோடாணகோடிநன்றிகள்தாயே ஓம்ஸ்ரீகருடாழ்வார்ஐயாபோற்றிபோற்றி ஓம்ஸ்ரீவீரராகவப்பெருமாள்மூர்த்திஐயாபோற்றிபோற்றி ஓம்ஸ்ரீநமோநாராயணர்மூர்த்திஐயாபோற்றிபோற்றி ஓம்ஸ்ரீமஹாலஷ்மிதாயேபோற்றிபோற்றி 🌿🌺🌹🌻🌸🌼🏵💐🍌🍌🍇🍋🍍🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🕉🔱🔔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ravichandranchandrakesavan3311
    @ravichandranchandrakesavan3311 11 днів тому +2

    🙏

  • @pushpavathiashok9368
    @pushpavathiashok9368 11 днів тому +1

    ,🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmimuralidaran3930
    @lakshmimuralidaran3930 10 днів тому +1

    Om Namo Narayana 🙏🏻

  • @nagasubramaniankns4379
    @nagasubramaniankns4379 10 днів тому +1

    🙏🙏🙏

  • @lightningzoldyck2974
    @lightningzoldyck2974 10 днів тому +2

    🙏🙏🙏