கதை கேட்க வாங்க | ஜெயமோகன் - கைதிகள் | பவா செல்லதுரை | Bava Chelladurai

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • கதை கேட்க வாங்க - பவா செல்லதுரை
    ஜெயமோகனின் - "கைதிகள் "
    Bava Chelladurai
    Jeyamohan - Kaithigal
    This video made exclusive for UA-cam Viewers by Shruti.TV
    Follow us : shrutiwebtv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Mail id : contact@shruti.tv
    WhatsApp : +91 9444689000

КОМЕНТАРІ • 323

  • @cvk4860
    @cvk4860 Рік тому +9

    மிக நன்றாக கதை சொன்னார். கடைசி 10 வினாடிகளில் அவரே மிகவும் உணர்ச்சிவசப் பட்டுவிட்டார்.

  • @rethinamswamy7181
    @rethinamswamy7181 2 місяці тому +1

    அருகில் இருந்து பார்ப்பவனால்கூட இப்படி கதை சொல்ல முடியாது பவா பாராட்டுகள் வாழ்த்துக்கள்

  • @drchandru4529
    @drchandru4529 Рік тому +3

    ஐயா பாவா நீ கதை சொல்லி மனிதன் மட்டுமே இல்லை. உனது ஒவ்வொரு ஒரு கதையிலும் உயிர் உள்ளிருந்து வெளியே வருகிறது

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu 4 роки тому +83

    பவா சார் நீங்கள் நன்றாக இருக்கனும்.... உங்கள் உடல் நல்ல ஆரோக்கியத்துடன் எப்போதும் இருக்கட்டும்.வாழ்க வளமுடன்.

  • @prajeetkumar3966
    @prajeetkumar3966 4 роки тому +51

    எல்லோராலும் கதை சொல்ல முடியும் ஆனால் கதையில் உயிர் ஓட்டத்தையும் அதன் உணர்வையும் கேட்பவர் உணரும்படி உங்கள் ஒருவரால் மட்டுமே சொல்ல முடியும்

  • @thanikesan.balasundaram7237
    @thanikesan.balasundaram7237 4 роки тому +74

    கதையின் முதன்மை பாத்திரமாக தன்னை உணர்ந்து முதன்மை பாத்திரமே கதை சொல்லல்..புது அனுபவம்... நல்லாயிருக்கு பவா..

  • @BalaMurugan-pz3qy
    @BalaMurugan-pz3qy 11 місяців тому +3

    மனதில் அவ்வபோது தோண்றும் எண்ணங்கள் மறைந்து. இந்த கதையை கேட்ட இரண்டு மணி நேரமாக இதை மட்டுமே மனசு அலசி கொண்டே இருந்தது

  • @kavithaathaikuttieskathaig2168
    @kavithaathaikuttieskathaig2168 4 роки тому +54

    சொரணையற்று சுகமாய் வாழும் நமக்காக இன்றும் மண்ணுள் துடித்துக்கொண்டிருக்கும் ஆன்மாக்களின் அலறலை உணர்ந்தேன். திரையில் கதாநாயகனைத் தேடும் கேடுகெட்ட இனம் நாம் எனக் குறுகி நிற்கிறேன்.கனத்த இதயத்துடன்...நன்றி ஜெயமோகன் மற்றும் மனம் கரைக்கும் பவா ஐயா

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 2 роки тому +2

      ஊழல் செய்து கோடி கோடி ஆக சொத்து சேற்பவனுக்கும் சேர்த்துத்தான் இந்திய இராணுவத்தில் நூற்று கணக்கான இளைஞர் கள் உயிரை கொடுக்கிறார்கள். முதல் முத்தம் கிடைப் பதற்கு முன்பாக கூட அவன் முதல் துப்பாக்கி குண்டை முத்தமிட கூடும் .ஜெய் பாரத்?!

    • @sakthimaths1649
      @sakthimaths1649 10 місяців тому

      நல்ல சொல்லாடலை பயன்படுத்தி கதையைக் கேட்பவர்கள் கதைக்குள் சென்று கதாபாத்திரங்களாகவே மாறிவிட்டோம். மிக சிறப்பாக கதையைக் கூறிய பவா ஐயா அவர்களுக்கும் இந்த கதையை மிக அற்புதமாக எழுதிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இது கதை அல்ல கேட்கின்ற போது கதைக்குள்ளேயே சொல்லப்படுகின்ற முருகேஷ் ,நாராயணன், பெருமாள்சாமி மற்றும் டிஎஸ்பி இந்த கதாபாத்திரம் எல்லாம் உண்மையிலேயே இன்றும் நமது ஊர்களில் உலாவிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அப்பு போன்ற மனிதர்கள் இன்றும் இருக்கிறார்களா என்ற கேள்வி மனதில் எழுகிறது. மிக அற்புதமான மனிதர்கள் எல்லாம் தன்னை இழந்து அழகான வாழ்க்கை நாம் பெற்றிருந்தும் இன்னும் தேவை என்று அழைந்து கொண்டிருக்கின்ற எண்ணத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

  • @pugalenthi0077
    @pugalenthi0077 3 роки тому +4

    அற்புதமான கதை.அப்புஎன்றும் நினைவில் நிற்பான் சல்யூட்

  • @amudhat7005
    @amudhat7005 3 роки тому +3

    அருமை தோழர் பவா.... நன்றிகள் பல..
    அந்த கருங்குருவி போல என்னுடைய மனம் இன்னமும்....

  • @arivazhagana2933
    @arivazhagana2933 4 роки тому +5

    அடிமையின் குரல்
    நான் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் கொத்தடிமையல்ல
    பண்ணை வீட்டில் அடைப்பட்டு கிடக்கும் பரம்பரை
    அடிமையுமல்ல
    நானே தேர்ந்தெடுத்த நிலை தான் இது
    வெளி உலகிற்கு எங்களின் அடிமைத் தனம்
    தெரிவதில்லை நாங்கள் காட்டிக்கொள்வதுமில்லை
    நான் தான் காவல்துறையின் கடைநிலை ஊழியன்
    நாங்கள் துப்பாக்கின் தோட்டாக்கள் போல்
    நாங்கள் செல்லும் திசையை நாங்கள் தீர்மானிப்பதில்லை...
    அடி பணிவதே எங்களின் பணியாகிவிடுகிறது
    நாங்கள் மனதில் நினைக்கும் பல விசயம்
    எங்களின் தொண்டையையே தாண்டியதில்லை
    நாங்கள் முடிவுகள் எடுப்பதில்லை
    கட்டளைகள் முடிப்ப தோடு எங்கள் பணி முடிகிறது
    ஆனால் எங்களில் யாருமே அடிமைத்தனத்தை
    எதிர்கும் நக்சலைட்டுகளாக மாறியதில்லை
    எனது ஓய்வு காலத்தில் அசைப் போட இருக்கும்
    அடிமைத்தனத்தை எண்ணி பயப்படுகிறேன்......

    • @arivazhagana2933
      @arivazhagana2933 4 роки тому +2

      இந்த கதையின் தாக்கத்தில் உருவானான கவிதை

  • @babuswiss1
    @babuswiss1 3 роки тому +9

    நெஞ்சு கனக்கிறது பவா Sir. ஈழத்தில் நாம் பட்ட, படுகின்ற வலி......இதேதான்.

  • @sivaprakasht7298
    @sivaprakasht7298 4 роки тому +11

    கதை கேட்டு இரு தினங்கள் கடந்தாலும், மனதில் நிஜ நிகழ்வாக மிக கணமாக நிலைத்திருக்கிறது.....வாழ்த்துக்கள் ஐயா...

  • @user-saba-siddhu-448
    @user-saba-siddhu-448 4 роки тому +21

    உயிர் பயம் உறவு பின்னல்களால் உதயமாகிறது. போராளிகளுக்கு மரணம் என்பதே இல்லை.
    பேரன்புகள் பவா. 😍 😘

  • @venki3babu
    @venki3babu 4 роки тому +6

    ஒரு புத்தகம் தரும் உணர்வு இது... 🙏🙏🙏
    கண்களில் நீர், தொண்டை குழியில் ஓர் முழுங்க முடியா துயரம்... 😢

  • @TheSasikumar1982
    @TheSasikumar1982 4 роки тому +4

    வார்த்தைகளைத் தாண்டி உணர்வுகளும் புரிந்தது நன்றி

  • @meemanikandan
    @meemanikandan 4 роки тому +19

    படித்தவர்கள்தான் இப்படிச் செய்கிறார்கள் என்றபோது கொஞ்சம்
    கதை படிக்கத்தான் வேண்டும் என்று சொல்கிறது நெஞ்சம்!
    ...மணிமீ

  • @sowmichlm
    @sowmichlm 4 роки тому +1

    Romba aazhamana kadhai.. kadhai nu solla mudiyla.. romba nerama ithaye yosichitu iruken.. ♥️

  • @iswarya5852
    @iswarya5852 4 роки тому +10

    கண்ணில் நீர் தழுதழுக்கிறது.நன்றிகள் பவா அய்யா..

  • @selva3ctube133
    @selva3ctube133 Рік тому +1

    இது தான் "ரத்த சாட்சி" திரைப்படம் ❤

  • @user-maha5820
    @user-maha5820 4 роки тому +6

    கதையும் சொல்லிய விதமும்.... பல நாட்களுக்கு மனதை அலைக்கழிக்கும்...... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா....

  • @goutham4648
    @goutham4648 4 роки тому +28

    சில்லிட்டு போனது இதயம்....
    சேகுவேரா கண்களில் தோன்றி மறைந்து போனார்

  • @mmuthu-di1kf
    @mmuthu-di1kf Рік тому

    பாவா இது கதை அல்ல போராளிகளுக்கு நிகழும் நிகழ்வை நிஜமாகவே நெஞ்சை உருக்கும் உங்கள் கதையாடல் ;வாழ்க நீர் தமிழ் வாழும் வரை.

  • @nagaraniv6214
    @nagaraniv6214 4 роки тому +10

    கனத்த இதயத் தோடு கதையை கேட்கும் போதே மனம் பதறுகிறது அடுத்து அது நிகழ்ந்து விடக்கூடாது என்று, ஆனால்..... நானும் ஒரு பென்னாகரம் வாசி ஐயா.

  • @surulimanipalanivel
    @surulimanipalanivel 4 роки тому +17

    என்னுடைய தந்தைக்கு நிகரான அய்யா பவா செல்லத்துரை அவர்களின் குரலில் கேட்டதன் பின் இரண்டு நாட்கள் பதட்டமான மனநிலையிலிருந்து மீளவே முடியவில்லை...

  • @vijayaragavand9474
    @vijayaragavand9474 3 роки тому +5

    மனதை நெகிழச்செய்த சிறப்பான கதை.

  • @p.j.dhilipadvocate3280
    @p.j.dhilipadvocate3280 4 роки тому +1

    ஐயா உங்கள் பேச்சி கேட்டால் எனக்கு மிகவும் பிடிக்கும்.

  • @sarsonsar0
    @sarsonsar0 4 роки тому +12

    Excellent Narration Bava. This is why I don't read Jeyamohan. You need to go to sleep after reading a book. Mostly you read before going to sleep only. But JeMo and his characters will haunt you for days, months, and sometimes years after reading his book. That handicapped mother and son from 'Ezhaam ulagam' still haunt me now and then.

  • @ramkumarr8837
    @ramkumarr8837 4 роки тому +23

    முதல் முதலாக பவா அவர்கள் கதை கேட்கும் ஒருவர் பவாவை உண்மையிலேயே " போலீஸ்காரர் முருகேசன் " என நினைக்க தோன்றும்

  • @historyandstorytellingchan9900
    @historyandstorytellingchan9900 4 роки тому

    கனத்த இதயம் மற்றும் கலங்கிய கண்களுடன்...பா.முத்துவீரன்....! எனக்கு இலக்கியம் தெரியாது. ஆனால் தங்கள் உரையாடல் மூலம் அனுபவித்து வருகின்றேன். விரைவில் வாசிப்பு என்னை ஆட்கொள்ளும்... நன்றி ஐயா பவா செல்லத்துரை அவர்களே....😭😭😭😭😭😭😭😭😭

  • @mohammedgousegouse5654
    @mohammedgousegouse5654 4 роки тому +4

    இந்தக் கதையை நான் ஏற்கனவே படித்திருக்கிறேன். மிக நிச்சயமாக யூகித்தேன், கண்ணீர் இன்றி இந்த கதையை உங்களால் முடிக்க முடியாது என்று.

  • @dakshinahasini5578
    @dakshinahasini5578 3 роки тому +6

    மனிதர்களை விலங்குகளாக மாற்றும் இடம் தான் இராணுவம் மற்றும் போலீஸ் கூடம் -ஓஷோ

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 Рік тому

    ஐயா ஏன் இப்படி என்னை துன்பத்து இட்டு வந்தீர்கள்? கதை கூறும் விதமே ஒரு தனித்துவமாக இருந்தது பாராட்டுகள்

  • @poonkuzhali1730
    @poonkuzhali1730 4 роки тому +3

    நான் இந்த கதையை ஏற்கனவே படித்திருந்தாலும், கனத்த இதயத்துடன் மீண்டும் நன்றி பவா சார்

    • @nawazs8427
      @nawazs8427 3 роки тому

      Can you tell me the book name please. I need to buy this book

    • @poonkuzhali1730
      @poonkuzhali1730 3 роки тому +1

      @@nawazs8427 Jeyamohan's வெண்கடல்
      வம்சி பதிப்பகம்.
      Address-19.D.M.Saron,Tiruvannamalai 606-601,,Cell 9445870995,04175-235806.
      email id-vamsibooks@yahoo.com
      Website- www.vamsibooks.com

    • @nawazs8427
      @nawazs8427 3 роки тому

      @@poonkuzhali1730 superb bro ...thanks for your valuable reply.
      பத்து லட்சம் காலடிகள் which book bro

  • @arunsashmith5930
    @arunsashmith5930 4 роки тому +3

    நன்றி பாவா

  • @elangovanganapathy6466
    @elangovanganapathy6466 4 роки тому +5

    பவா அண்ணா. கதையில் நடந்த நிகழ்ச்சியும் அதை தாங்கள் சொன்ன விதமும் மனதை ஈரமாக்கியது.....

  • @balaaa4u
    @balaaa4u 11 місяців тому +1

    இந்த கதையின் கடைசி வரிகளை நான் வாசிக்கும் போது கண்ணீர் விட்டிருக்கிறேன்.
    அதிகாரத்தின் பிடியில் அடிமைகளாக இருப்பவர்களின் கஷ்டங்களை சாவின் விளிம்பில் உள்ள தோழர் கூட தெரிந்து கொள்வார்கள். ✊✊

  • @subramaniamsadayandi480
    @subramaniamsadayandi480 3 роки тому +1

    I wait for your story telling ,i am like amagnetic listening to your stories ,iwas mesmerised.Dear Bava,you are gifted ,Briliant.your beloved listener.Subra .malaysia tq.

  • @francismoto
    @francismoto 4 роки тому +3

    பல அரசியல் இக்கதையில் இருக்கின்றன. ஒரு நொடி வெற்றிமாறனின் விசாரணை கண்முன் தோன்றியது. கருப்புசட்டையில் போராளியை பற்றிய கதை சொல்லல் சிறப்பு அம்சம். மனிதன் இரக்கமற்ற போது இயற்கை அந்த மரணத்திற்கு தன்னுடைய எதிர்ப்பை காட்டியது என் மனதை வாட்டியது. பல சமயங்களில் மனிதநேயத்தை கழற்றிவிட்டு தான் நாம் அலைகிறோம். மற்றுமொரு கதைக்கு நன்றி பவா அய்யா. அன்பும் பாசமும்.

  • @gane010
    @gane010 3 роки тому

    அப்பாடா இப்படி ஒரு சேனல் இருப்பதே இப்போதான் தெரியும்.கடவுளுக்கும் பாவா வுக்கும் நன்றிகள் கோடி...கண்களில் கண்ணீர் வர வைத்து விட்டீர்கள்.இதுவே உங்களுக்கான வெகுமதி மற்றும் உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி👍👍👍

  • @kc5658
    @kc5658 4 роки тому +4

    Very touching and delivered with class.

  • @sureshsanthosh1703
    @sureshsanthosh1703 4 роки тому +1

    Appu is a great man....... Bhavaa Sir neenga pavam pannitinga..... Unmaiya thakka samayathil maraipathum...... Kutram than..... Ungal unmai thanmai velipattathu.... Perumai migu santhosam bhavaa sir.....

  • @vanithaeswaran3682
    @vanithaeswaran3682 3 роки тому +4

    Cried a lot after listening this

  • @karthicklijo
    @karthicklijo 4 роки тому +1

    அருமையான கதை

  • @hariatpushparaj5738
    @hariatpushparaj5738 2 роки тому +1

    Wow what a naration, I would able see appu eyes thru bava sir. That last line is haunting me, iam still in a shock what kind of society we are living. Hats off bava sir

    • @thinkpositive8234
      @thinkpositive8234 Рік тому

      நெஞ்சு தழுதழுத்து.தோழர்

  • @mithunravishankar3992
    @mithunravishankar3992 4 роки тому +1

    Vera level thala .......bava Chella durai . narration plus jayamohan story pakka combination .....

  • @SIVAKUMAR-FARMS007
    @SIVAKUMAR-FARMS007 3 роки тому

    பாவா சார் வணக்கம்....
    நீங்க அந்த சூழலில் இருந்து கதை சொல்லும் போது நானும் கற்பனை செய்து கொண்டு அந்த சூழலுக்கு மாறிவிட்டேன்.
    கனமான ஒரு பெரிய உணர்வில் என்னை தொலைத்து விட்டேன் சில நிமிடங்களில்.
    நன்றி அய்யா.
    🙏🙏🙏🙏

  • @kamarajrajamanikkam8057
    @kamarajrajamanikkam8057 3 роки тому

    நீங்கள் என்னைப்போன்ற வாசகர்களுக்கு கிடைத்த வரம் ஐயா.

  • @arunravir4404
    @arunravir4404 3 роки тому +1

    Manam valikiradhu .. thanks for sharing

  • @villageexcellence3728
    @villageexcellence3728 4 роки тому +1

    Super sir....your narration... mesmerizing...its very emotional... உங்கள் ரசிகன் நான்...

  • @vijayanand6526
    @vijayanand6526 4 роки тому +6

    கண்ணீருடன் பவா அப்பாவிற்க்கு அன்பு ❤️ முத்தங்கள்.

  • @MrRameshdharmar
    @MrRameshdharmar 4 роки тому +5

    Sir, the way you tell the stories are amazing!. Thanks a lot for this excellent contribution to Tamil community.

    • @rajasekar6932
      @rajasekar6932 3 роки тому

      ua-cam.com/video/E17VxIKuck0/v-deo.html

  • @sabthasenthil
    @sabthasenthil 4 роки тому +3

    Thanks for this story. Amazing 👌👌👌👌👌

  • @princesamuel8799
    @princesamuel8799 3 роки тому +1

    Great.

  • @kameshkamesh9953
    @kameshkamesh9953 4 роки тому +2

    Wonderful storytelling... Thank you so much sir.

  • @yeskay3211
    @yeskay3211 4 роки тому +13

    கண்ணீர் ஆறாக பெருகுவதை தடுக்க முடியல தோழர்

  • @thanikesan.balasundaram7237
    @thanikesan.balasundaram7237 4 роки тому +22

    பவா கருப்பு சட்டை மிகப் பொருத்தமாக உள்ளது..

  • @artgamingdrama4878
    @artgamingdrama4878 3 роки тому +1

    பவா சார் நீங்கள் கதை சொல்லும் பாங்கு என்னை வெகுவாக கவர்ந்து விட்டது இது கதை அல்ல சாத்தான் குளம் சம்பவம் போன்ற உண்மை சம்பவம் தானோ என தோன்றுகிறது

  • @joetv533
    @joetv533 Рік тому

    super

  • @kettapaiyansirinthakli9596
    @kettapaiyansirinthakli9596 Рік тому

    💔..உடைந்து ..சுக்குநூறாய்போனேன்..

  • @mageshchinnaiya8606
    @mageshchinnaiya8606 3 роки тому

    நன்றி ஜெயமோகன் மற்றும் மனம் கரைக்கும் பவா ஐயா....

  • @senthilkumar-rh5sz
    @senthilkumar-rh5sz 4 роки тому +1

    வாழ்த்துக்கள் அய்யா... அருமை...

  • @manoharsingh5704
    @manoharsingh5704 4 роки тому +1

    I like the way you say story .

  • @srinivasanpartha3826
    @srinivasanpartha3826 2 роки тому +1

    அது கதை அல்ல கிட்டதிட்ட உண்மை நிகழ்வு. அப்புவும் பாலனும் இப்படி தான் வேட்டையாடப்பட்டு சிதைத்து கொல்லப்பட்டனர். ஜெயமோகனின் எழுத்தும் பவா அவர்களின் கதை சொல்லும் திறனும் கண்ணீர் வரவழைத்து விட்டது!

  • @bluishsunnyk
    @bluishsunnyk 4 роки тому +2

    Excellent narrator.

  • @prabhudeva1977
    @prabhudeva1977 4 роки тому +3

    nan sindhiya kaneer indha mannil makkalukkaga thadam theriyamal maraindhu pona yalla thozhargalukkum samarpanam...... lal salam.......

  • @muruganp8235
    @muruganp8235 3 роки тому +3

    ஐயா இது உண்மையா, என்னால் என் கண்களில் நீர் வருவதை நிறுத்த முடிய வில்லை.

  • @bharathiyartv1511
    @bharathiyartv1511 4 роки тому +5

    Pava sir u told every story excellent. U will tell a lot of story. I will see. I like u.

  • @KS-wj4bc
    @KS-wj4bc 4 роки тому

    இந்தக் கதையோடு கரைந்த பின் எப்படி லைக் போட முடியும். ஈழத்தில் இது இலட்சத்தில் ஒன்று.

  • @MrMDoss-cz3kv
    @MrMDoss-cz3kv 4 роки тому +1

    வழக்கம் போல் பவா அருமை

  • @செல்வஜெயக்குமார்

    கதையில் பயணம்
    செய்து வந்த அனுபவம்..
    நல்லாயிருக்குங்க சார் வாழ்த்துக்கள்..

  • @logusundarp813
    @logusundarp813 4 роки тому +7

    பவா அப்பா 😘 😘 😘 😘 😘 😘 😘 😘 😘 😘.......

  • @manojasokan8735
    @manojasokan8735 4 роки тому +10

    நீண்ட காலம் கடந்து ஒரு கதையின் கதாநாயகன் முழுவதுமாக பேசிய அந்த ஒற்றை வரிகள் வலியை தந்தது பவா !

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 4 роки тому +1

    Vanakkam sir

  • @subashbe8381
    @subashbe8381 Рік тому

    This story has been released as a film.... movie name.Raatha satchi... excellent movie

  • @m.jayakumar9872
    @m.jayakumar9872 4 роки тому +19

    சொல்ல முடியல அழுகை வருது..பல பேர் இப்படி இறந்து போயிருக்கார்கள்

  • @rammohan9447
    @rammohan9447 3 роки тому +1

    Bava you are incomparable...

  • @venkatesans8339
    @venkatesans8339 3 роки тому +2

    நெஞ்சு கனக்கிறது,கண்ணீர் ஆறாக பெருகுவதை தடுக்க முடியல

  • @Edm310
    @Edm310 4 роки тому +1

    Excellent title for the story.. as usual pull into the story as a narrator..

  • @sparrowprabhu6019
    @sparrowprabhu6019 4 роки тому +1

    Super narration sir

  • @Udhayking
    @Udhayking 4 роки тому +1

    அருமையான கதை சார்

  • @vasanthv6850
    @vasanthv6850 4 роки тому +1

    என்ன வார்த்தைகளை சொல்லி உங்களையும், கதாசிரியர் ஐயாவையும் பாராட்டுறது

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 Рік тому

    மனதை வருடிய பதிவு.

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd 2 роки тому +1

    வணக்கம் பவா 🙏🏻
    ஐ லவ் யூ பவா ❤️ 😘

  • @RajanTamil17
    @RajanTamil17 Рік тому

    மனிதம் என்னுள் தேடி கொண்டுள்ளேன்....

  • @ilailaya3414
    @ilailaya3414 4 роки тому +1

    அருமை சார்

  • @MohanrajKCdigital-
    @MohanrajKCdigital- 4 роки тому +1

    Super Sir

  • @explore_with_koko
    @explore_with_koko 4 роки тому

    மிக அருமை....

  • @vimalapanimalar3287
    @vimalapanimalar3287 3 роки тому

    சார் இது ஒரு கதை அல்லஉண்மை யாக நடத்தப்படுகின்ற நடதபட்டு கொண் டு இருக்கிற ஒரு நிகழ்ச்சி யாக தான் நான் பார்க்கிறேன்.மனம் மிக வலிக்கிறது

  • @Kovai_Kalai_Kani
    @Kovai_Kalai_Kani 6 місяців тому

    😢😢😢 இதயம் ஏதோ பாரம் ஏந்தியது போல இருக்கிறது

  • @michealnadar2511
    @michealnadar2511 4 роки тому +2

    பவா உங்கள் நினைவாற்றலே தனி அங்கதான் நீங்கள் நிற்கிறீர்கள்

  • @-databee191
    @-databee191 4 роки тому +1

    I am crying. Pavaa

  • @vasanthv6850
    @vasanthv6850 3 роки тому +4

    Viduthalai movie oda story ithu thaano

  • @dhanalakshmis3211
    @dhanalakshmis3211 Рік тому

    Rattha Sachi film mathiri irrukku..... ethaithaan film eduthu irrukkura mathiri irrukku...
    yesterday film parthen....Today kathai kekkuren

  • @artistmani2977
    @artistmani2977 4 роки тому +4

    Thank you sir, I read this .the feel is same from u r storytelling. Thanks.

    • @nawazs8427
      @nawazs8427 3 роки тому

      Dear friend can you tell me the book name. I need this book.is it saperate book or comes under sirukathaigal?

    • @mohanaprabhu5890
      @mohanaprabhu5890 3 роки тому +1

      @@nawazs8427 you will read this story from www.jayamohan.in

    • @nawazs8427
      @nawazs8427 3 роки тому

      @@mohanaprabhu5890
      Thank you bro , thanks for your reply,
      Hard copy is better to store , if possible let me know book name ,

  • @shiharbeauty
    @shiharbeauty Рік тому

    இதயம் கனத்துக் கிடக்கிறது. இன்றைய நாள் என்னால் எனது வேலைகளில் இயல்பாக ஈடுபட முடியும் என்று தோன்றவில்லை!

  • @sureshns5423
    @sureshns5423 2 роки тому

    என் மனம் கலங்கி கண்களில் கண்ணீர் வடிந்து விட்டது

  • @sivaramakrishnankumar7833
    @sivaramakrishnankumar7833 4 роки тому +2

    sir podcasts pannunga sir. Unga kadhai ketka nerya rasigargal irukanga

  • @selvamalarselladurai5408
    @selvamalarselladurai5408 4 роки тому +1

    Imm...my pain. No words..

  • @Nagarajan-sz4yo
    @Nagarajan-sz4yo 3 роки тому

    பவா உங்களால் ஒருவலியை எப்படி இவ்வளவுசாதரணமாக சொல்லமுடிகிறது