என் கதையை படிச்சாலே திமிர் புடிச்சவனு சொல்லுவாங்க | Writer Ramanichandran Interview | Kumudam

Поділитися
Вставка
  • Опубліковано 8 жов 2024
  • என் கதையை படிச்சாலே திமிர் புடிச்சவனு சொல்லுவாங்க | Writer Ramanichandran Interview | Kumudam
    Ramanichandran is a highly skilled romance novelist from Tamil who is well-known for being the best-selling writer in the language.
    #tamilwriters #womenwriters #ramanichandran #ramanichandrannovels #ramanichandrantamilnovels #books #kumudam #ramanichandraninterview #ramanichandranspeech #ramanichandranexclusiveinterview #tamilpoet #tamilbooks #writerramanichandran #kumudam
    ஆச்சி யின் புதிய அறிமுகமான ஆச்சி ஹோட்டல் சாம்பார் மற்றும் ஆச்சி இடிச்சி சாம்பார் வகைகள் இப்பொழுது 50 g ரூபாய் 20 மட்டும். Shop online at www.aachifoods.com
    meenakshi college
    For more details click - www.maher.ac.in
    Stay tuned for exciting content! 🎬✨ Don't miss the updates and exclusives. Subscribe now! 🍿🎥 👉 / @kumudamdigital
    Follow us ⤵️
    ________________________________________
    Facebook - / kumudamonline
    Instagram - / kumudamonline
    Twitter - www.x.com/kumu...
    Website - www.kumudam.com
    ________________________________________
    Other Channels ⤵️
    _________________________________________________
    Kumudam Cinema 👉 / @kumudamcinemaa
    Kumudam Reporter 👉 / @reporterkumudam
    Kumudam Bakthi 👉 / @kumudambakthi
    Kumudam Snehidhi 👉 / @kumudamsnegithi
    _________________________________________________
    📧 Contact: digital@kumudam.com

КОМЕНТАРІ • 242

  • @revathip4938
    @revathip4938 3 місяці тому +147

    திருமணத்திற்கு முன் பருவ வயதில் இவருடைய நாவல்களை படிக்கும் போது இனிய கனவு போல் இருக்கும். அந்த மாதிரி ஒரு வாழ்க்கைத் துணையை நினைத்து பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கும். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் 1சதவீதம் கூட ஆண்கள் அவ்வாறு இருப்பார்களா என்பது சந்தேகமே.

    • @chitramurugesan7457
      @chitramurugesan7457 3 місяці тому +5

      உண்மை

    • @srinidhis6610
      @srinidhis6610 3 місяці тому +3

      Very true

    • @selvashanthi8851
      @selvashanthi8851 2 місяці тому +35

      இப்படித் தான் நானும் ஒரு
      கற்பனை உலகில் வாழ்ந்தேன் . நடைமுறைக்கு
      சாத்தியமில்லை . ஆனாலும்
      அந்த ஏகாந்த கற்பனைதான்
      இன்று நிறைய கஷ்டங்களை
      மறக்கடிக்க முடிந்தது . தப்பாக
      சிந்திக்க வைக்காமல் மற்றவர்களைப் பார்த்தால்
      பொறாமைப்படத் தோன்றாமல் எனக்கென்று
      தனி உலகத்தில் சினிமா
      மெல்லிசைப் பாடல்களைக்
      கேட்டு எல்லாவிதமான
      துன்பங்களையும் தாங்கிக்
      கொண்டு வாழ்கிறேன் .
      எனக்கென்று ஒரு கற்பனையான உலகத்தை
      எனக்கென்று உண்டாக்கி
      வாழ இந்தம்மாவும் ஒரு
      காரணம் . அதற்கு
      இவர்களுக்கு நன்றி.
      அடுத்தவர்களுக்கு கெடுதி
      செய்யாத கற்பனை
      உலகத்தை நான் உருவாக்க
      காரணம் இவர்கள்தான்
      காரணம் . கண்ணுக்குத்
      தெரியாத மாய அந்த
      உலகம் டென்ஷன்
      இல்லாதது. அதற்கு நன்றி.

    • @revathip4938
      @revathip4938 2 місяці тому +18

      கற்பனையிலாவது நம் விருப்பப்படி வாழலாமே.

    • @shankariravi9462
      @shankariravi9462 2 місяці тому

      Yes ma​@@selvashanthi8851

  • @Santhi1962-wq2dm
    @Santhi1962-wq2dm 3 місяці тому +72

    அம்மா ரமணிச்சந்திரன் அவர்களின் நாவல்களுக்கு நான் அடிமை.😊🙏

  • @priyasivasubramaniyam3087
    @priyasivasubramaniyam3087 2 місяці тому +8

    எனது பருவ வயதுகள் வன்னியில் போர் காலங்களில் கழிந்த போது எனக்கும் என் தங்கைக்கும் இருந்த ஒரே பொழுது போக்கு புத்தகங்கள் வாசிப்பது. அப்போது வன்னி பகுதியில் மின்சாரம் இல்லை. So no Tv or any other electronic devices. ஆனாலும் எங்கள் வாழ்கை யை அழகுப்படுத்தியதில் உங்கள் புத்தகங்களுக்கு பெரும் பங்கு உண்டு. என்னிடம் உங்களின் புத்தகங்கள் 100 க்கு மேல் இருந்தன. இறுதி யுத்தத்தில் அவற்றை இழந்தோம். இருந்தும் உங்கள் எழுத்துக்கள் தந்த யாபகங்கள் இப்போதும் உள்ளது. நன்றி அம்மா. வாழ்க வளமுடன்.

  • @kalaivani5124
    @kalaivani5124 3 місяці тому +68

    ரொம்ப தேங்க்ஸ் சகோதரி ரமணி சந்திரன் அவர்களை பேட்டி எடுத்தது அவங்களின் அனைத்து நாவல்களையும் படித்துள்ளேன் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐💐💐💐💐

    • @tamilarasi7790
      @tamilarasi7790 3 місяці тому

      Nanum 80 books padichitaen

    • @shanthiselvakumar1797
      @shanthiselvakumar1797 2 місяці тому

      Na more then 150 novel padichu iruken.. Ella e books um laptop la iruku..

  • @vijir2170
    @vijir2170 2 місяці тому +42

    அம்மா நலமா..? என் வாழ்க்கையின் நல்வழிப்படுத்துதலில், ஒழுக்கம் பற்றிய என் வரையறைகளில் உங்களுக்கு, உங்களின் மந்திர எழுத்துக்களுக்கு முக்கியப் பங்குண்டு..
    என் வாழ்க்கையின் பெரும்பான்மையான சந்தர்ப்பங்களை ஆக்கிரமித்தவர் நீங்கள்..
    குடும்பத்தை வழி நடத்தும் வித்தை கற்பித்தவர் நீங்கள்.. என் பெண்ணுக்கு நான் பாலோடு புகட்டிய முக்கிய அறிவுரை "இந்த உலகில் இலவசமாய்க் கிடைப்பது எதுவும் கிடையாது" என்பதே..
    ஓரிரு மாதங்கள் முன்பு என் மகள் சொன்னாள்.. அம்மா உங்கள் அன்பு தெரியாமலே போய்விடக்கூடும் ரமணிம்மா அவர்களுக்கு.. எனவே உங்கள் வாழ்க்கையில் அவர்களுக்குண்டான இடம் குறித்து அனைவரையும் தாண்டிய முக்கியத்துவம் குறித்து ஒரு மெயிலாவது அனுப்புங்கள் என்றாள்..
    அம்புலிமாமா, காமிக்ஸ், ராஜேஷ்குமார் என என் வாசிப்பின் ஆரம்ப நாட்கள் அமைந்திருந்தாலும்
    பதினான்கு வயதில் நான் வாசித்த "எல்லோருக்கும் ஆசை உண்டு" க்குப் பிறகு நாவல் என்றால் நீங்கள் தான்.. பிறகு காஞ்சனா ஜெயதிலகர் அம்மாவும்.. உங்கள் சாயல் அவர்களிடம் நிறையவே உண்டு, மிகவும் அன்பான பிள்ளை மனம் கொண்டவர் தான் KJ-ம்மா அவர்களும்..
    இத்தனைக்கும் கல்கி, லக்ஷ்மி, ஜெயகாந்தன், வேதவியாசர், லாசரா, திஜா, ஜேகே, உதயமூர்த்தி என கவர்ந்த எழுத்தாளர்களின் பட்டியல் நீளக்கூடும் தான், ஆனால் மயக்கிய வாழ்வுடன் இணைந்த எழுத்தாளர் நீங்கள்..
    எனக்கு நிம்மதி.. நீங்கள் இதைப் படித்தால் போதுமானது, உங்களை நேசிக்கும் பல லட்சம் பெண்களில் நானும் ஒருத்தி என்பதை உணர்வீர்களே..
    என் கணவர், மகள் மற்றும் மகனுடன் அமர்ந்து இந்த செய்தியை உங்களுக்கு அனுப்புகிறேன்.. என் நன்றியுடன் என் குடும்பத்தினரின் மகிழ்வான வணக்கங்களும் உங்களுக்கு..
    நன்றி அம்மா..
    ~விஜி,ஈரோடு..

    • @rajakani2279
      @rajakani2279 2 місяці тому +1

      same

    • @jebaseelithamburaj2726
      @jebaseelithamburaj2726 2 місяці тому +2

      காஞ்சனா ஜெயதிலகர் என் வகுப்பு, கல்லூரி தோழி. ரமணி சந்திரன் அம்மாவின் கதைகள் ரொம்ப பிடிக்கும். கடைக்குப் போனால் அவர்கள் எழுதிய புத்தகங்களைத் தான் கேட்டு வாங்குவேன்.

  • @thilagavathybabu2472
    @thilagavathybabu2472 3 місяці тому +30

    மதுமதி நான் படித்த முதல் நாவல் அன்றிலிருந்து அவங்களுடைய தீவிர ரசிகை தேடி தேடி அவங்க நாவல்களை வாங்கி படித்து விடுவேன் அத்தனையும் என்னிடம் உள்ளது அம்மா நீங்க பேசும்போது தாய் தந்தை பற்றி பேசியது பெருமையாக உள்ளது இந்த வயதிலும் அப்பா அம்மா என்று நீங்கள் சிறந்த மகள்தான் எங்களுக்கு பிடித்த மிக சிறந்த கதாசிரியரின் பேட்டி கேட்டு மிகவும் மகிழ்ச்சி உங்களையும் உங்கள் கதைகளையும் எங்களால் என்றுமே மறக்க இயலாது👌👏👍😀😊

  • @ezhilkaruna952
    @ezhilkaruna952 2 місяці тому +5

    வணக்கம்.உங்கள் கதைகளைபதினேழுவயதில்.பள்ளிவிடுமுறை நாட்களில் படிக்க ஆரம்பித்து.முப்பதுவருடங்களை கடந்து விட்டது.படித்த கதையை பலமுறை படிப்பேன்.வாழ்க்கையில் வலியும் துன்பமும் வரும் போது எப்போதுமாறும் என்று தெரியாது.ஆனால்நம்பிக்கை ஒருபெண்ணுக்கு. வேண்டும் .என்பதைஉங்கள் கதைகளில் உணரமுடியும்.நிறையபேர் உங்கள் கதைகள் ஒரே மாதிரி உள்ளது என்று கூறுவார்கள்.ஆனால் எனக்குபிடிக்கும் என்றென்றும்.எத்தனை எழுத்தாளர்கள் வந்தாலூம் உங்கள் இடம்தனித்துவம் வாய்ந்தது.நன்றி.

    • @atchayakarunakaran6327
      @atchayakarunakaran6327 2 місяці тому +2

      I agree ❤

    • @abithakarunakaran42
      @abithakarunakaran42 2 місяці тому +2

      I don't have the habit of reading Novels but My mom suggested her novels and I started reading Ramanichandran madam's novels Now She is my one and only favourite ❤

  • @loganathansinnasamy6300
    @loganathansinnasamy6300 2 місяці тому +25

    ரமணி சந்திரன் அம்மா அவர்களின் தீவிர ரசிகை நான்...நான் மட்டுமல்ல எனது அக்காக்கள், சிநேகிதிகள் அனைவரும்... எனது அக்கா இவர்களின் கதைகளில் மயங்கி தனது பெண்ணிற்கு மதுமதி என்று பெயரிட்டு மகிழ்ந்தாள்... நானும் பைத்தியமாக இவரின் கதைகளில் மயங்கி இருக்கிறேன்... இப்பொழுதும் நாவல்கள் என்னிடம் உள்ளது... ஆனால் ஓரு வருத்தம்... இவரின் கதைகளில் கதாநாயகி... கதாநாயகன் எவ்வளவு தவறு செய்தாலும்... கதாநாயகி மயங்கி அவனிடம் தஞ்சம் ஆவார்கள்... இல்லையெனில் கதாநாயகன்... கதாநாயகியை திருமணத்திற்கு முன்பே அடைவான்...பண கஷ்டத்திற்காக வீட்டில் உள்ள அப்பா சித்தி பேச்சை கேட்டு கல்யாணம் நடக்கும்... திடீரென வில்லன் கதாநாயகன் ஹீரோ கதாநாயகன் ஆவான்... திருமணத்திற்கு முன்பே குழந்தை ‌பிறக்கும்.... இல்லை என்றால் கல்யாணத்திற்கு பிறகு எங்காவது கண்காணாத இடத்திற்கு போய் குழந்தை பெறுவாள்...ஓரே மாவில் இட்லி, தோசை,ஊத்தாப்பம், பணியாரம் சூடுவாங்க...20வயதில் பிடித்தது...40 வயதில் கொஞ்சம் யோசிக்க வைக்குது...

    • @GroceryXpressPteltd
      @GroceryXpressPteltd 2 місяці тому

      Innaikku namakku puriyaradhu appave purinji irundhu valkai theliva irundhu irukkum .evanga novels Padichi false image manasila valaryhukittu oru unsatisfied life .

    • @dawnm6327
      @dawnm6327 2 місяці тому

      You are right in describing the way she wrote her female characters. I read a novel called Devadhai of hers when I was a pre-teen and it put me off. Haven't read any other novels of hers after that.
      The mindset and the perpetuation of abusing women in the name of heroism or entitlement to being loved once they turn a new leaf even after doing grace injustices towards a woman is prevalent in her writings.
      Why is she being celebrated??

  • @sivalekshmi3594
    @sivalekshmi3594 2 місяці тому +4

    ரமணி அம்மா உங்க நாவல்கள் முதலில் வெளிவந்த உடனேயே வாங்குவேன் ... நான் எனக்காக எனக்கு பிடிதது செலவு செய்த நேரங்களும் பணமும் இது தான் அம்மா... நான் வாங்கி படிப்பதைப் பார்க்கும் என் கணவர் ஒரு நாள் சண்டையில் ரமணிசந்திரனை நெனைச்சிட்டே இருக்கிறாய் என்று அடித்து விட்டார்... எனது எல்லா தடைகளையும் தாண்டி தன்னம்பிக்கையுடன் வாழ வழிகாட்டியது இந்த நாவல்கள்.. இன்றும் உங்களின் ரசிகை தான்... இப்பவும் 160 புத்தகங்கள் நாவல்லீடர் மங்கையர் நாவல் இப்படி நிறைய வச்சிருக்கேன் எல்லா நாவல் களையும் படிச்சிட்டு அழுதிருக்கிறேன்... என்னோட வலிநிவாரணி உங்கள் நாவல்கள் தான்மா... நான் உங்களை ஆணாகவே நினைத்தேன்..என் கனவு நாயகன் நீங்கள் தான்.. பிறகு ஒன்பது வருடங்களுக்கு முன் நான் வேலைக்கு சென்ற இடத்தில் என்னைப் போல் புத்தகத்தில் ஆர்வமாக ஒருவரிடம் என் கணவர் என்னை தப்பா பேசி அடித்ததை சொன்னபோது அவர் நெட் செண்டர் போய் உங்களது புகைப்படங்கள் பிரிண்ட் எடுத்து தந்தார்.. அன்று நான் அடைந்த சந்தோசம் இன்னும் அப்படியே இருக்கிறது... என்னால் திருப்பி பேசமுடியும் என்று அன்றுதான் எனக்கும் தெரியும்.... உங்களது புத்தகங்கள் எனது. திருமண வாழ்க்கையை நீட்டிக்க கணவரின் அனைத்து தவறுகளையும் மன்னித்து விட்டுக்கொடுத்து வாழவழிகாட்டியது.. எனது பாசமிகு மூன்று பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து அன்பு தாயாக நல்ல முறையில் வளர்க்க நம்பிக்கை ஊட்டியது.... வாழ்த்துக்கள் அம்மா...

  • @avadivuaravind8859
    @avadivuaravind8859 3 місяці тому +31

    நான் ஒரு புத்தக பைத்தியம் உங்களோட நாவல் எனக்கு ரொம்ப புடிக்கும்

  • @leenapeter5403
    @leenapeter5403 2 місяці тому +9

    கல்லூரி விடுதியில் உங்கள் கதைப்புத்தகங்ளை தோழிகள் வாசிப்பதைப் பார்த்து நானும் வாசித்துப் பழகினேன். குறிப்பேட்டில் கதை நாயகன் நாயகி பெயர்களைக் குறித்து வைப்பேன். நான் வாசித்ததே உங்கள் கதைகளும் 45 வயதிற்குப் பின் கல்கி கதைகளும் தான். உங்கள் பேட்டி பார்த்ததும் மனம் 1990 ம் ஆண்டிற்குச் சென்று விட்டது. மகிழ்ச்சி❤❤😂😂

  • @natchammaimahesh1242
    @natchammaimahesh1242 2 місяці тому +24

    ரமணி சந்திரன் அவர்களின் நாவலில் வரும் கதாநாயகன் போல் கணவன் அமைவது லட்சத்தில் ஒருவருக்கே அமையும். என் வாழ்க்கையில் திருமணம் ஆன நாளில் இருந்தே பிரச்சனைகள் மட்டுமே, சராசரிப் பெண்ணுக்கு கிடைக்கக் கூடிய எந்த சந்தோஷமும் சாதாரணமாக எனக்கு கிடைத்துவிடவில்லை. போராட்டம் மட்டுமே வாழ்க்கையாக இன்று வரை இருக்கிறது. இவருடைய கதைகள் மட்டுமே என்னுடைய புண்பட்ட மனதுக்கு மருந்து. அவர் கதைகளில் வரும் கதாநாயகியாக என்னை கற்பனை செய்து கொண்டு கனவுலகில் மட்டுமே சந்தோஷமாக வாழ்கிறேன்.

    • @eses1929
      @eses1929 2 місяці тому

      நானும் தான் சகோ 👍👍👍👍👍😭😭😭😭😭😭

    • @rathikasekar7131
      @rathikasekar7131 2 місяці тому

      Yes I agree with you ❤

  • @dinamera8812
    @dinamera8812 2 місяці тому +2

    One of my favourite writers is Ma... Ramani Chandran. Her novels are truly one-of-a-kind and can't be compared to anyone else's. She's a unique writer with a special gift. Her writing style, the flow of her stories, etc., Made our days so much more meaningful. I learned many good qualities from her novel. Thank you, Ma.

  • @amuthaa87
    @amuthaa87 Місяць тому +1

    நான் எனது பதினாறு வயதில் தொடு கோடுகள் என்ற இவரது நாவலை வாசித்தேன், அன்று முதல் இன்றுவரை இவரது நாவலை விரும்பி படிக்கிறேன் ❤😊🎉

  • @neerajamanjunathan4569
    @neerajamanjunathan4569 2 місяці тому +1

    I love ramanima... Those who have read all your books can alone relate, enjoy and love this interview... I may not meet you or you may not read this comment but seeing so many friends who feel the same like me ❤❤ great job kumudam

  • @mohammedmursheed5882
    @mohammedmursheed5882 3 місяці тому +8

    Enakku unga kadhaigal romba pidikum I love writer 12yearsla erundu ungada story book's tan ennoda hobby eppa anda age 40years eppa varaykum ungada story book's tan nega 100age varaykum erukanum mam❤❤❤

  • @riya45896
    @riya45896 Місяць тому +1

    My favourite writer forever 🤩🤩🤩

  • @muthurajan9723
    @muthurajan9723 3 місяці тому +19

    நான் முதன் முதலில் படித்த நாவல் உறங்காத கண்கள். அதில் ஆரம்பித்து ரமணி சந்திரன் அம்மாவுடைய எல்லா நாவல்களையும் படித்து விட்டேன் என்றே நினைக்கிறேன்...

  • @krashyadevi9770
    @krashyadevi9770 2 місяці тому +4

    இளமை,இனிமை,இயல்பு,துணிவு, துள்ளல், வனப்பு,புதுமை, புரட்சி பாத்திரங்கள்,இவர் எழுத்துகளின் ஜாலங்கள்.அழகு பாத்திரங்களை படைக்கும் எழுத்து பிரம்மா.நாயகன்,நாயகியை அழகாய் செதுக்கும் சிற்பி.உள் ஓடும் என் கற்பனைகள் சில உங்கள் நாவல்களில் தவழ்ந்தோடும்.உங்கள் ரசிகை நான்.வணங்குகிறேன்🙏.

  • @cpnalini6100
    @cpnalini6100 3 місяці тому +8

    My one favourite wrirer of All Times! Luv ur writings...my daily dose of Vitamin!🙏🙏

  • @geethaananth9301
    @geethaananth9301 3 місяці тому +6

    உங்கள் நாவல்கள் போலவே உங்கள் பேட்டியும் அருமை இனிமை🎉🎉🎉🎉🎉

  • @Vlakshmi-zh6fg
    @Vlakshmi-zh6fg 2 місяці тому +3

    I am a mad of your novels. Your novels inspired me a lot. your novels give me new energy, strengh, self confidence. it leads me in the right path in the society . it seeds self-discipline in me. I love you, Ramani Chandran Amma. Really, you are a great Amma.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @priyadharashinigunasekaran198
    @priyadharashinigunasekaran198 3 місяці тому +8

    ரமணிச்சந்திரன் அம்மா நாவல்கள் எனக்கு ரொம்ப❤❤🎉🎉

  • @thirunilathirunila9500
    @thirunilathirunila9500 2 місяці тому +3

    மிக மிக மிக பிடித்த எழுத்தாளர் ரமணி சந்திரன் அம்மா❤❤❤

  • @seeniselvis62
    @seeniselvis62 3 місяці тому +14

    விடியலை தேடும் பூபாளமாய், பெண்ணவள் தேடும் வாழ்வின் வழி சொன்ன ஆரணங்கு! நன்றி அம்மா, உங்கள் வார்த்தைகள் என்றும் பெண்ணவள் பலம்! நன்றி. மகிழ்ச்சி, சந்தோசம்....

  • @anuaadhifun9369
    @anuaadhifun9369 2 місяці тому +1

    எனக்கு ரொம்ப பிடித்த எழுத்தாளர் என் அம்மாவும் நானும் அம்மா வின் தீவிர ரசிகைகள் அம்மா என்றும் நலமுடன் வாழ வேண்டும். i love u ரமணிசந்திரன் அம்மா

  • @ManimozhiRamar
    @ManimozhiRamar 3 місяці тому +12

    I am big fan of ramanichandran amma

  • @subathirak5909
    @subathirak5909 2 місяці тому +2

    அம்மா உங்களின் நாவல்களை நான் மிகவும் விரும்பி வாசிப்பேன் 84 நாவல்கள் என்னிடம் உள்ளது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺♥️♥️💐💐♥️♥️💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹

  • @gunarathika3024
    @gunarathika3024 2 місяці тому +1

    நான் மிகவும் நேசிக்கும் எழுத்தாளர் முதன்மையானவர் அம்மா நீங்கள் வணக்கம் நன்றிகள் பல ❤

  • @bhuvanat1726
    @bhuvanat1726 2 місяці тому +3

    ரமணி அம்மா உங்கள் நாவலுக்கு நான் என்றும் அடிமை அவைகளை படிக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கும்❤❤❤❤❤❤❤

  • @Jayanthisrinivasan08
    @Jayanthisrinivasan08 2 місяці тому +3

    My❤favourite writer.... இவர் நாவலில் கதாநாயகி எல்லாரும் சுயமரியாதை அதிகமாக உள்ளவராக இருப்பார்கள்....

  • @umaranim7449
    @umaranim7449 3 місяці тому +6

    Ramanichandranai padikka arampitha piragu pathinma vayathil vandha matrangal sollil adangaa,vasikkum pothu varigalai rasithathum aalumaiyum, anbum, pasamum, nesamum, veruppum,vidithirthu povathum vardhaigalin jalam, nitharsanamana unmaiyum anupavithu padditha naatkal azhagaanavai❤

  • @srimathibalakrishnan8110
    @srimathibalakrishnan8110 3 місяці тому +5

    Enakku unga kadhaigal romba pidikum ungalai pRthathu ungal kuralai kettadhu ellam romba magizchi. Thank you very much for your vedio

  • @mnvn
    @mnvn 2 місяці тому +2

    Super interview!!. Nalla amaithiya pesuraanga. So soothing voice and calm demeanour ❤

  • @shanvisaran6364
    @shanvisaran6364 3 місяці тому +4

    இன்று நானும் எழுத்தாளராக அறியப்படுகிறேன் என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் நீங்கள் தான் அம்மா ❤❤❤❤ உங்களை நேரில் சந்திக்க ஆவலாக உள்ளேன் அம்மா . குமுதத்திற்கு நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏

  • @bambachi23
    @bambachi23 3 місяці тому +12

    மயங்குகிறாள் ஒரு மாது
    Yenna oru naval 🎉

  • @naguhari2639
    @naguhari2639 2 місяці тому +1

    அம்மா நான் உங்கள் ரசிகை....உங்கள் கதைகளின் கதாநாயகி பாத்திரம் ரொம்ப பிடிக்கும்..அவர்களின் பெயர் செலக்ஷன். ரொமான்ஸ்...பிடிக்கும்...

  • @rajalakshmig600
    @rajalakshmig600 2 місяці тому +2

    Thank you so much for this interview of Writter Ramani chandran Ma'am,such a good, elegant story writer,Her stories are mainly around heroine oriented subjects which motivate many women

  • @vijumanickathu3899
    @vijumanickathu3899 2 місяці тому +2

    😊😊Amma, naan Tamil kathukkittathu through ungal novels vazhi thaan. I am basically from kerala, settled in coimbatore.
    En kitte ungal anaithu books undu. I have a library in my home.
    Love you Amma....❤🥰🥰

  • @R.VivithaTharun.-dm8wj
    @R.VivithaTharun.-dm8wj 3 місяці тому +5

    My loveable writer. I love you so much amma❤❤❤❤❤....

  • @jesindavictor2691
    @jesindavictor2691 2 місяці тому +14

    பேட்டி அருமை , இவரது நாவலை வாசிக்க தொடங்கினால் இடையில் நிறுத்தவே முடியாது .

    • @mozhiyal-o5v
      @mozhiyal-o5v 2 місяці тому

      உண்மை…..உறக்கமே வராது……படித்து முடிக்கும் வரை…

  • @mozhiyal-o5v
    @mozhiyal-o5v 2 місяці тому +1

    நான் இவர்களுடைய மிகப்பெரிய ரசிகை…..இவர்களுடைய கதைகள் அனைத்தும் அற்புதமா இருக்கும்….ரமணிச்சந்திரன் அது ஒரு வித உணர்வு……❤

  • @marystella4520
    @marystella4520 2 місяці тому +1

    I like your novels very much. Since 40 YRS I am reading your novels.

  • @karthikganesh7300
    @karthikganesh7300 2 місяці тому +2

    Wow thanks for interview amma unga kathaigal rombha pidikkum thirumba thirumba padippen vani, kadhal yenum solaiyile , nandhini inuum sollite pogalam yennai nane partha mathiri

  • @Sriswathimaharaj
    @Sriswathimaharaj 2 місяці тому +1

    My first novel I heard❤❤❤❤

  • @hemasubramanian5528
    @hemasubramanian5528 3 місяці тому +3

    I love you ma'am l read all your stories each and every time I am waiting to purchase that now also I am having all the books

  • @vairavaeswari5207
    @vairavaeswari5207 2 місяці тому +1

    ரமணிச்சந்திரன் அம்மா உங்கள் தீவிர ரசிகை நாள் 80 90 களில் நான் படித்த நாவல்கள் இன்று மனதில் இருக்கின்றன இன்றும் அந்த கதைகளில் வரும் கதாநாயகியாக உணருகிறேன் உங்களைப் பார்த்தது மிகவும் மகிழ்ச்சி

  • @akhilaa9423
    @akhilaa9423 2 місяці тому +1

    Kadal patriya neradi anubhavam sooper, niraya kadhaigal padichadhu undu, ninaivilai, nandri❤

  • @suganya5206
    @suganya5206 3 місяці тому +8

    அம்மா கதைகள் எல்லாமே திரும்ப திரும்ப எத்தனை தடவை சகோதரிகள் நாங்க இருவரும் படித்திருப்போம் என்று கணக்கில்லை சகோ.மன அழுத்தத்தில் இருந்து விடுபட அருமருந்து இவங்களோட கதைகள். இன்னும் அதிகமான கதைகள் எழுதவேண்டும் அம்மா.வாழ்த்துகள் மா🎉🎉🎉🎉.

  • @vanithabaskar9332
    @vanithabaskar9332 2 місяці тому +1

    I'm very very big fan of ramanichandran amma❤❤❤❤

  • @reethagunaseeli1026
    @reethagunaseeli1026 2 місяці тому +1

    அம்மா ரமணி சந்திரன் வணக்கம். உங்கள் கதைகளை இளம் வயதில் படித்து என் வாழ்க்கை இப்படி த்தான் இருக்கும் என நினைத்துக் கொண்டிருந்தேன்.ஆனால் , நிஐவாழ்க்கையில் ஒரு கதாநாயகனைக் கூட சந்திக்க முடியவில்லை..❤

  • @puvaneswary5650
    @puvaneswary5650 3 місяці тому +4

    I'm from Malaysia, I'm very very big fan of ramani mam, my first novel of mam is "Paalai Pasungeluye " superb. Until now i got collection novels of mam more than 100+++.I'm proud of mam.

  • @kayalvizhikpa980
    @kayalvizhikpa980 2 місяці тому +1

    Ennoda favourite novels ellame ammavoda novels na ungaloda payangaramana fan mam ❤

  • @KanmaniTeacher
    @KanmaniTeacher 2 місяці тому +2

    My favourite story narrator.happy to see u mam👌👌💐💐👏👏🙏

  • @visalakshi71
    @visalakshi71 3 місяці тому +2

    Thanks to media. My favourite writer. Still I had collection of her novels. . 🙏🙏🙏🙏

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 3 місяці тому +5

    Ennoda favourite writer..❤❤❤..I just have read all her novels .wowo❤❤

  • @yesodhaandal1560
    @yesodhaandal1560 2 місяці тому +1

    Rammani Amma ungal kathaigal ellam paditharuken romba romba romba pidikum

  • @vairavaeswari5207
    @vairavaeswari5207 2 місяці тому +1

    ராமச்சந்திரன் அம்மா நான் மிகப்பெரிய தீவிர ரசிகை 90 80 களின் நான் படித்த நாவல் என்னை கதாநாயக உணவுச் செய்து இன்றும் உங்கள் கதையை படித்துக் கொண்டிருக்கிறேன் படுத்துக் கொண்டிருக்கிறேன்

  • @dhanalakshmijayakumar3542
    @dhanalakshmijayakumar3542 3 місяці тому +3

    ❤❤❤❤. Loads of love to you RC mam. You are always a super star..

  • @kpmanivel4991
    @kpmanivel4991 3 місяці тому +19

    மயங்குகிரால் ஒரு மாது நான் முதன் முதலில் படித்தது ❤❤

    • @umakarunya2514
      @umakarunya2514 2 місяці тому

      Me too

    • @mozhiyal-o5v
      @mozhiyal-o5v 2 місяці тому

      அருமையான ஒரு படைப்பு

    • @bhuvaneshwarianand1186
      @bhuvaneshwarianand1186 2 місяці тому +1

      நக்கிற நாய்க்கு செக்காச் சிவலிங்கமா தெரியுமா?? மறக்க முடியாத வசனம்

  • @PaviPavi-rh3he
    @PaviPavi-rh3he 2 місяці тому +1

    Am fan of her books... its really addictive once start panita padichute irupom❤

  • @monapriya3361
    @monapriya3361 2 місяці тому +1

    Myyyu fvrt writter... Love u maaa... Unga novels ellame super..... Ungala oru time meet panna nalla irukkum.

  • @kayalsaravanan4999
    @kayalsaravanan4999 2 місяці тому +2

    I have collected a lot of Ramani Chandhran novel. Usually my son and daughter will gift me her novels for my birthday

  • @ramanaeswar3225
    @ramanaeswar3225 2 місяці тому +1

    உங்கள் அனைத்து நாவல்களையும் படித்துள்ளேன்

  • @vigeshraj4859
    @vigeshraj4859 3 місяці тому +2

    Ramani madam ennoda favrt writer
    Valai osai devi sikappu roua oh mane mane
    Raman thediya seethai
    Vidiyal thedum poobalam
    My favrt novels
    mam oda ella novelsum I was read
    So cute mam

  • @priyap2457
    @priyap2457 3 місяці тому +2

    Nice interview, interviewer has done a wonderful job. She could relate to most of ramani chandran novels.

  • @muruga666
    @muruga666 2 місяці тому +2

    Thanks fr her interview ❤

  • @priyadivakaran3284
    @priyadivakaran3284 3 місяці тому +4

    A pioneer of tamil novels...❤

  • @prenavivlogs3950
    @prenavivlogs3950 3 місяці тому +2

    My favorite writer..thanks for the interview🎉

  • @rajiviswanathan3091
    @rajiviswanathan3091 3 місяці тому +18

    ரமணிச்சந்திரன் மேம், உங்களுடைய கதைக்கு நான் அடிமை, ❤️,

  • @bhavanipugazh4812
    @bhavanipugazh4812 2 місяці тому +2

    One of my favorite writers❤

  • @gaurav-vc3yf
    @gaurav-vc3yf 3 місяці тому +5

    நான் முதன் முதலில் படித்த நாவல் காதலெனும் சோலையிலே. பிறகு லாவண்யா. பிறகு அனைத்து நாவல்களும் படித்து இருக்கிறேன் பல முறை 👌👌💐😊😊😊👏👏✅✅🎉🎊👍👍🥰🥰

    • @Vibhavijay1
      @Vibhavijay1 2 місяці тому +1

      Me too. My first novel is kadhalenum solaiyil🎉

    • @gaurav-vc3yf
      @gaurav-vc3yf 2 місяці тому

      @@Vibhavijay1 superb. 👌👌👏👏😊💐💐👍👍🙌

  • @PadmaManjula-u5y
    @PadmaManjula-u5y 3 місяці тому +3

    My favourite writer ❤️Ramani chandran❤❤❤❤

  • @lakshmikg210
    @lakshmikg210 2 місяці тому +1

    அம்மா ரமணிசந்திரன் அவர்களின் நாவல் ரசிகை நான்.வணக்கம் அம்மா!

  • @pushpalathapushpalatha4634
    @pushpalathapushpalatha4634 2 місяці тому +2

    உங்கள் கதைகளை விரும்பி படிக்கும் வாசகி நானும் என்மகளும் உங்களுடைய நாதசுர ஓசையிலே, மீரா லாவண்யாமுதலியன மறக்க முடியாத நாவல்கள்

  • @nimmyisaac6097
    @nimmyisaac6097 3 місяці тому +3

    My 1st novel I read was devi. All her novels women characters are very good.

  • @ilakkiyabalaannakodi8901
    @ilakkiyabalaannakodi8901 2 місяці тому +1

    My best stress buster, I will buy the book , prepare coffee and will start reading or take an already read novel and read back.

  • @shanmugavadivu9245
    @shanmugavadivu9245 3 місяці тому +10

    One and only favourite ezhuthalar

  • @pushpavenkat7046
    @pushpavenkat7046 2 місяці тому +1

    My favourite writer. Devi, Mayangukiral oru mathu, valai oasai 80 's novels 👌🏻👌🏻👌🏻

  • @nandhinikaran8652
    @nandhinikaran8652 2 місяці тому +3

    அம்மா ....என்னோட இன்ஸ்பிரேஷன் ...உங்கள யூட்யூப்ல பார்க்க ரொம்ப சந்தோஷம் ...காலேஜ்ல இருந்து இப்போ வரைக்கும் உங்க நாவல்தான் ..திரும்ப திரும்ப படிக்கிறேன்

  • @pushpakk2049
    @pushpakk2049 3 місяці тому +11

    ரமணி சந்திரன் அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sagayamaryarputham1906
    @sagayamaryarputham1906 3 місяці тому +4

    அவுங்க கதை மானே மானே நான் முதன்முதலில் படித்தது. செம்ம நான் தீவர ரசிகை நான்.

  • @safanasheiksheik9205
    @safanasheiksheik9205 2 місяці тому +1

    A lovely lady ...my favourite writer ❤

  • @KalaSekar-e6u
    @KalaSekar-e6u 3 місяці тому +2

    உங்கள் கதைகளை தொடர்ந்து online ல போடுங்க

  • @gnanasoundari2973
    @gnanasoundari2973 2 місяці тому +2

    I am addicted

  • @santhi75
    @santhi75 2 місяці тому +3

    For the last 38 yrs
    I am your fan
    Now iam 49 yrs old

  • @sivasankari1082
    @sivasankari1082 3 місяці тому +3

    Happy to see you mam❤🙏

  • @vaidehisiva2894
    @vaidehisiva2894 3 місяці тому +14

    சாந்தினி,சிகப்பு ரோஜா,தேவி, வளை ஓசை, தீப ஒளி, குமாரி ராதா, லாவண்யா,ரோஜா முள்,பால் நிலா இன்னும் அனேக ஸ்டோரி❤

    • @geethasrinivasan4329
      @geethasrinivasan4329 3 місяці тому +2

      All are same stories. Mills and boon

    • @geethasrinivasan4329
      @geethasrinivasan4329 3 місяці тому +3

      All are same stories. Mills,and boon. The only writer I Don't like.

    • @vaigaitamilnovels
      @vaigaitamilnovels 3 місяці тому +1

      Ammaavoda sirippu ❤❤❤

    • @RalliR-l9u
      @RalliR-l9u 2 місяці тому +1

      I personally feel she has been highly influenced & inspired by Mills and Boon, Georgette Heyer, and Barbara Cartland novels.

  • @BrindhaThanjavur
    @BrindhaThanjavur 3 місяці тому +2

    உயிராய் இருக்க வருவாயா?????? மறக்க முடியாத ஒன்று❤❤❤❤❤❤❤

    • @mozhiyal-o5v
      @mozhiyal-o5v 2 місяці тому

      உண்மை…..அருமையான படைப்பு

  • @muthurajan9723
    @muthurajan9723 3 місяці тому +7

    என் வாழ்க்கையில் இருந்து பிரிக்க முடியாத ஒருவர்....

  • @Mahi-nv3ws
    @Mahi-nv3ws 2 місяці тому

    Thank you Kumudam.. Pls take interview of Kanchana Jeyathilagar mam too..

  • @user-db4iq5kw6o
    @user-db4iq5kw6o 3 місяці тому +1

    I read theerkul viralai vaithal back in 1970s when I was 9 yr old, first novel I read, love to read that again

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 3 місяці тому +6

    அரு மையான எழுத்தாளர்

  • @Bharathi85676
    @Bharathi85676 3 місяці тому +13

    Rich guy, poor girl with self respect, in the middle one villi. This is the only concept in all her stories.

    • @alliswell5256
      @alliswell5256 2 місяці тому +1

      Exactly

    • @madhig2205
      @madhig2205 2 місяці тому

      Yes

    • @Bharathi85676
      @Bharathi85676 2 місяці тому +4

      One thing must be appreciated in her novels. Heroines never leave their self respect and honesty.

  • @vijayalakshmibala6797
    @vijayalakshmibala6797 3 місяці тому

    Mam nan ungal rasigai. Ungal naval collectionil irundhu navalagalai eththanai murai padithirupen endru theriyadhu. Ungal naval enaku oru boost. Enakku 73 vayadu nadakiradhu. En paiyan ketpan ethanaimurai padithadhe padipI endru. Attai kizhindalum paper karanuku podavidamaten. Avvalavu pidikum ungal navalgal🎉❤

  • @rajeswarik3501
    @rajeswarik3501 3 місяці тому

    Madam Ramanichandran eluthukal valimai anavai.innum niraya eluthavendum .Madam needuli vala vendum

  • @venmathii
    @venmathii 3 місяці тому +5

    அம்மாவோட கதைகளைப் படிப்பதற்காகவே நூலகத்தில் உறுப்பினரா சேர்ந்தேன்.தேடித்தேடிபடிப்பதே வழக்கமாக வச்சுகிட்டேன்.

    • @PRTG671
      @PRTG671 2 місяці тому

      Ungal novel very nice mam

  • @suryakala569
    @suryakala569 2 місяці тому

    My favourite writer all time Amma,❤

  • @sudham7221
    @sudham7221 3 місяці тому +1

    Alagu mayil aatum my first story reading rc mam novel

  • @saigeetha850
    @saigeetha850 2 місяці тому

    Iam big fan of Ramanichandran novels