ஏ ஜே கே கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மெய் நிகர் காட்சி சார்ந்த தனி படிப்பு மையம் துவங்கப்பட்டது

Поділитися
Вставка
  • Опубліковано 22 тра 2024
  • இந்தியாவிலேயே முதன் முறையாக கோவை நவக்கரை பகுதியில் உள்ள ஏஜேகே கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஏ.ஆர் மற்றும் வி.ஆர்.எனும் மிகைப்படுத்தப்பட்ட காட்சி மெய் நிகர் காட்சி சார்ந்த தனி படிப்பு மற்றும் அதற்கான எக்ஸ்பீரியன்ஸ் மையம் துவங்கப்பட்டது..
    கோவை நவக்கரை பகுதியில் அமைந்துள்ள ஏ.ஜே.கே.கலை மற்றும் அறிவியல் கல்லூரி,தன்னாட்சி தகுதியுடன் தேசியத் தரச் சான்றும் ஏ ப்ளஸ் தர மதிப்பீடும் பெற்று பல்வேறு புதிய துறை சார்ந்த படிப்புகளை அறிமுகம் செய்வதில் தனித்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது…இதன் தொடர்ச்சியாக, மாணவர்களின் நவீன கால தொழில் நுட்ப வளர்ச்சிக்கு உதவும் வகையில், பி.சி.ஏ கணினி பயன்பாட்டியல் மிகைப்படுத்தப்பட்ட காட்சி / மெய் நிகர் காட்சி துறை (ஆக்மென்டட் ரியாலிட்டி (ஏஆர்) விர்ச்சுவல் ரியாலிட்டி (விஆர்) என புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டது.இதில் மாணவர்கள் தங்களது கூடுதல் திறன்களை வளர்த்தி கொள்ளும் விதமாக ஏ.ஆர்,மற்றும் வி ஆர்.சார்ந்த உபகரணங்களை கொண்ட எக்ஸ்பீரியன்ஸ் மையமும் துவங்கப்பட்டது.முன்னதாக நடைபெற்ற இதன் துவக்க விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் ராஜூ அனைவரையும் வரவேற்று பேசினார்.இதில் ஏ.ஜே.கே. கல்லூரியின் செயலர், முனைவர்.பேராசிரியர் அஜீத் குமார் லால் மோகன் விழாவிற்கு தலைமை வகித்து தலைமை உரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், மிக முக்கியமாக வரும் மற்றும் வளரும் தலைமுறைகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற மிகப்பெரிய நோக்கத்தோடுதான் இம்மாதிரியாக தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளை எமது ஏ.ஜே.கே. கலை அறிவியல் கல்லூரி கொண்டுவந்துள்ளது. மாணவர்கள் கல்லூரியின் வகுப்பறை, ஆய்வகம், நூலகம் போன்ற அனைத்தையும் தனித்தனியாக அவர்கள் ஏஆர் விஆர் தொழில்நுட்பத்தில் தெளிவாக பார்த்து அனுபவிக்க முடியும்.
    அன்றாட வாழ்க்கையில் கல்வி, சுகாதாரம், பொழுதுபோக்கு போன்றவற்றில் மாற்றங்களை ஏற்படுத்துதல், மற்றும் டிஜிட்டல் உலகத்துடன் நாம் எவ்வாறு தொடர்பு கொள்கிறோம் என்பதில் புரட்சியை ஏற்படுத்துவது என இதை அனுபவித்தால் மட்டுமே இந்த தொழில் நுட்பத்தின் பயனை புரிந்துகொள்ள முடியும் என்றார்.
    விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக, டெலாய்ட் நிறுவனத்தின் சைபர் ரிஸ்க்,ஆலோசகர்,வேந்தன்,கேப்ஜெமினி நிறுவனத்தின் சைபர் பாதுகாப்பு மேலாளர் பிரியதர்ஷினி , கார்த்திக் ராம்,,டெலாய்ட் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு துறை மேலாளர் கருணாகரன் நாகராஜன், ஆகியோர் கலந்து கொண்டு,ஏஆர்/விஆர் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் மற்றும் நவீன தொழில் நுட்பத்தில் உள்ள தொடர்புகள் குறித்து விரிவாக பேசினர்.குறிப்பாக இளம் தலைமுறை,மாணவர்களின் பல்வேறு விருப்பங்களை நிறைவேற்றும் நோக்கத்தில்,துவங்கப்பட்டுள்ள இந்த படிப்பு தனிபட்ட மற்றும் மாற்றத்தக்க திறன்களை சமூகத்தில் உருவாக்குவதோடு, எதிர்கால தலைமுறையினருக்கு தொழில் முறை பாடங்களாக இது போன்ற துறைகள் உதவும் என தெரிவித்தனர்.
    இதனை தொடர்ந்து ஏர்.ஆர்,மற்றும் வி .ஆர்.துறை படிப்பு சார்ந்த உபகரணங்களை கொண்ட எக்ஸ்பீரியன்ஸ் மையத்தை முதன்மை விருந்தினர்கள் துவக்கி வைத்து விரச்சுவல் ரியாலிட்டி ,அனுபவங்களை நேரடியாக பார்த்தனர்.. நிகழ்ச்சியில் ,கல்லூரியின் துணை முதல்வர், டீன்,துறை தலைவர்கள்,பேராசிரியர்கள்,ஊழியர்கள்,மாணவ,மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்..

КОМЕНТАРІ •