முருகன் பாடல் | 2022 New Year Murugan Song Tamil | Aaru Padai | Kovai Kamala | Vijay Musicals

Поділитися
Вставка
  • Опубліковано 30 гру 2021
  • Song : Aaru Padai Veedum
    Album : Theertham
    Singer : Kovai Kamala
    Lyrics : Kaviya
    Music : V Kishorkumar
    Video : Kathiravan Krishnan
    Recorded @ Iyya Studio Chennai
    Mixed & Mastered By Dinesh
    Production : Vijay Musicals
    #murugansongs#vijaymusicals
    #tamildevotionalsongs
    பாடல் : ஆறுபடை வீடும்
    ஆல்பம் : தீர்த்தம்
    பாடியவர் : கோவை கமலா
    கவியாக்கம் : காவியா
    இசை : V கிஷோர்குமார்
    காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
    தயாரிப்பு : விஜய் மியூஸிக்கல்ஸ்
    பாடல்வரிகள் :
    நாவல் பழம் தந்து ஞானத் தமிழ் கேட்ட
    கந்தா வடிவேலா என்னப்பனே முருகா
    உனக்காக தமிழ் பாடல் பல பாடினேன்
    இருந்தாலும் இதமாக நீ கேட்க
    ஒரு பாடல் இப்போது நான் பாடுவேன்
    பாடுவேன் முருகா . . .
    ஆறுபடை வீடும் அருள் வழங்கும் முருகா
    அருகே நீ ஓடோடி வா
    மூவிரண்டு முகம் ஜொலிக்க
    ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா
    ஈசன் மகனே எனைக்காக்க இங்கே
    உனையின்றி வேறாரய்யா
    நெஞ்சார நான் நினைக்க பஞ்சாமிர்தம் கொடுக்கும்
    ஒரு தெய்வம் நீதானய்யா
    தெய்வானை வள்ளியுடன் மணக்கோலம் கொண்டு
    திருப்பரங்குன்றம் வாழ்கின்றவன்
    நீ தேவர்களைக் காத்திடவே வீரமுடன் வேலெடுத்து
    செந்தூரில் ஆள்கின்றவன்
    மாங்கனிக்கு கோபங்கொண்டு பார்புகழும் பழனியிலே
    ஆண்டியென கோலம் கொண்டவன்
    நீ தத்துவத்தின் சாறெடுத்து சுவாமிமலை எல்லையிலே
    தகப்பனுக்கு பாடம் சொன்னவன்
    காவலென நின்று பெரும் சினந்தணிந்து தணிகையிலே
    கண்குளிரக் காட்சி தந்தவன்
    நீ பாங்குடனே அருள் தரவே பழம் முதிரும் சோலையிலே
    பரஞ்சோதியாய் நின்றவன் . . பரஞ்சோதியாய் நின்றவன்
    கருணை மணம் கமழுமந்த அருணகிரி தமிழில் மனம்
    மகிழ்ந்தாடி நின்ற முருகன்
    கிழவியிவள் புலமை கண்டு அழகுமிகும் குழந்தையென
    மயிலேறி வந்த குமரன்
    ஆதிசிவன் பிள்ளையென ஆனைமுகன் தம்பியென
    ஞானப்பழமான முதல்வன்
    நீ பாடும் குரல் வளம் கொடுக்கும்
    பனிமலையில் வாழுமந்த பார்வதியின் இளைய புதல்வன்
    தேனெடுத்து தினைவளர்க்கும் சிறுகுறத்தி வள்ளியவள்
    சிந்தையிலே நின்ற மன்னவா
    நீ நாடிவரும் பக்தர்களின் நாட்டமதை தணித்தருளும்
    ஞானகுரு நாதனல்லவா . . நாதனல்லவா
    நினைக்கின்ற பொழுதெல்லாம்
    நிகரில்லா பக்திரசம் தருகின்ற சக்தி வேலன்
    நீ துதிக்கின்ற கணமெல்லாம் இனிக்கின்ற
    இதயம்தனை அளிக்கின்ற வெற்றிவேலன்
    அழகான அவதாரம் அழியாத புகழ் செல்வம்
    அன்புக்கு ஒரு தெய்வம் நீ
    சிறுகுறையேதும் இல்லாமல் குலம்காத்து
    எந்நாளும் அருள்செய்யும் பெரும்வள்ளல் நீ
    மலைதோறும் படைவீடு இருந்தாலும்
    முருகா என் மனவீடு வந்து அமர்வாய்
    நீ மயிலேறி விளையாடி சுவையான தமிழ்பாடல்
    கனிவோடு தந்து அருள்வாய் . . கனிவோடு தந்து அருள்வாய்
    தேவைகளை பூர்த்தி செய்யும் தேன்சொரியும்
    மூன்றுதமிழ் குமரா உன் கோவிலாகும்
    தினம் தேடிவரும் பக்தர்களின் தெளிவான
    முதிர்ந்த மனம் முருகா உன் மயிலுமாகும்
    வேடன் உருக்கொண்டு பெரும் வேங்கைமரமாகி நின்ற
    வெண்ணீறு அணிந்த முருகன்
    நீ வாடுகின்ற உள்ளமதில் வற்றாது அருள்சேர்க்கும்
    வானோர்கள் போற்றும் தலைவன்
    நீரெடுத்த மேனியுடன் ஆறெழுத்தில் பேரெடுத்து
    நினைவெல்லாம் இனிக்கின்றவன்
    நீ ஓரெழுத்து ஆயுதமாய் ஓளிர்கின்ற வேலெடுத்து
    உறுதுணையாய் வருகிறவன் எனக்கு உறுதுணையாய் வருகிறவன்
    குளிர்ச்சித் தரும் தென்றலிலே மகிழ்ச்சியுடன் விண்ணதிலே
    பறக்கும் உந்தன் சேவற்கொடியே
    மனதழற்சியின்றி தனைமறந்து மலர்ச்சியுடன்
    தணிகையிலே நடம்புரியும் தோகை மயிலே
    பன்னீரில் அபிஷேகம் வெண்நீறில் அலங்காரம்
    அதிரூபம் கொண்ட முருகன்
    நீ புரியாமல் அடியேனும் பிழைநூறு செய்தாலும்
    பொருத்தருளும் செல்வக்குமரன்
    ஒய்யார மயிலேறும் உன்காட்சி எழில்யாவும்
    ஒளிவீசும் தெய்வாம்சமே
    பொய்யான என் வாழ்க்கை புவி மீது நிலையாக
    அருள் செய்ய வரவேணுமே . . நீ அருள் செய்ய வரவேணுமே
    இகழ்தலையும் புகழ்தலையும் ஒருமுகமாய் கருதும்படி
    செவி உரைத்த முத்துக்குமரன்
    நீ வறுமையையும் வளமையையும் சமநிலையாய்
    உணரும்படி மதிகொடுத்த செல்வக்குமரன்
    தடைநூறு வந்தாலும் செயல்வெற்றியாக்கித் தரும்
    தாராள குணம் கொண்டவன்
    நீ வலைவீசும் அறிவுக்கு தொலைவான வானாகி
    மாறாது அருள் செய்பவன்
    தீராத காதலொடு திருவடியை தொழுபவர்க்கு
    திரவியமே தருகின்றவன்
    நீ தாராள உள்ளமொடு தவக்கோலம் கொண்டுவரும்
    தார்மீக பொருள் தந்தவன் . . தார்மீக பொருள் தந்தவன்
    சினம் கொண்ட என்மனதை இனம்கண்டு அருள்செய்து
    வளமாக வைத்த முருகன்
    நீ பசுதேடும் கன்றெனவே பசியோடு வந்தஎனை
    பரிவோடு காத்த குமரன்
    படியேறி கால்நடக்க காவடிகள் தோள்சுமக்க
    துணையெனவே வந்த முருகன்
    படிப்பறிவும் எழுத்தறிவும் குறைந்தஎனை உலகிலின்று
    புலமைப் பெறச்செய்த குமரன்
    தோல்விகண்டுத் துவளாத வெற்றுக்கண்டும் மகிழாத
    மனம் கொடுத்த அன்பு முருகன்
    நீ தேடிவந்த பகையாவும் திசைமாறி போகச்செய்து
    எனையாளும் செந்தில்குமரன் . . எனையாளும் செந்தில்குமரன்
    கல்லாகக் கிடந்த மனம் பூவாக மலர்ந்த விதம்
    கந்தா உன் கருணையன்றோ
    நான் எல்லாம் இழந்த பின்னும்
    ஜீவன் இருப்பதிங்கே வேலா உன்னருளாலன்றோ
    கோடிபணம் இருந்தாலும் மேலுமதை தேடுகின்ற
    மானிடர்கள் கூட்டம் நடுவே
    மனம் தேடி உனைத்திரிந்தபடி திருப்புகழை பாடுமெனை
    நாடி வந்து காத்த குருவே
    ஆசையெனும் தூண்டிலிலே மாட்டிக்கொண்ட என்மனதை
    இதமாக மீட்ட முருகா
    மோகமெனும் தீச்சுழலில் முங்கிவிட இருந்தஎனை
    முழுதாக காத்த இறைவா . . முழுதாக காத்த இறைவா
    விழுந்தவர்கள் எழுவதுவும் எழுந்தவர்கள் விழுவதுவும்
    முருகா உன் செயலாலன்றோ
    இங்கு அழுதவர்கள் சிரிப்பதுவும் சிரிப்பவர்கள் அழுவதுவும்
    குமரா உன் தயவாலன்றோ
    அந்திபகல் எப்பொழுதும் தங்குதடையில்லாமல்
    உந்தன் முகம் கண்ணிலாடும்
    தினம் எந்த நிலை கொண்டாலும்
    கந்தன் துணையென்றாலே வந்த வினை மெல்ல ஓடும்
    பணம் பதவி தேவையில்லை பொன்பொருளும் நாடவில்லை
    முருகா உன் அருள் போதுமே
    உயிர் வாழுகின்ற காலமெல்லாம் மாளிகையில் நாட்டமில்லை
    குமரா உன் நிழல் போதுமே . . குமரா உன் நிழல் போதுமே

КОМЕНТАРІ • 3,1 тис.

  • @trichynaveen740
    @trichynaveen740 Рік тому +1245

    நீங்க முருகன் பக்தன் இருந்தால் like போடுங்க 🙇🙏

    • @user-xu3tm4xk1t
      @user-xu3tm4xk1t 2 місяці тому +12

      👍👍👍👍

    • @Vannan4738
      @Vannan4738 Місяць тому +11

      முருகன் எங்கள் குல தெய்வம்....!🌹🌹🌹🌹🙏🙏🙏🙏💯

    • @Vannan4738
      @Vannan4738 Місяць тому +4

      முருகன் எங்கள் குல தெய்வம்....!🌹🌹🌹🌹🙏🙏🙏🙏💯

    • @mala7745
      @mala7745 Місяць тому +1

      🎉

    • @SarojiniSaro-oh2gc
      @SarojiniSaro-oh2gc Місяць тому

      yessssss me too,,❤❤❤❤

  • @user-eh4zb9cv1l
    @user-eh4zb9cv1l 3 місяці тому +710

    இந்த முருகன் பாடலை நான் கேப்பேன் இந்த வருஷம் 2024 இந்த பாடலை யார் கேப்பிங்கா சொல்லுங்கா எனக்கு பிடிக்கும் 🙏🙏🙏🙏

    • @muthuselvimuthuselvi8826
      @muthuselvimuthuselvi8826 2 місяці тому +7

      நா ketten

    • @r.mr.m7702
      @r.mr.m7702 2 місяці тому +9

      நான் கேட்கிறேன்

    • @ponkarunakaran3353
      @ponkarunakaran3353 2 місяці тому

      Q ​@@muthuselvimuthuselvi8826

    • @priyuu_art
      @priyuu_art 2 місяці тому +8

      Nan 2024 la than intha song ah 1st time kekuren ithuku munnala kettathu illa 😂😢 Kettathula irunthu thirumba thirumba ketkanum pola iruku🥹😌🫠😍

    • @aruljustin5853
      @aruljustin5853 2 місяці тому +3

      அருமையான பாடல்

  • @kponnambalam5523
    @kponnambalam5523 4 місяці тому +337

    கோவை கமலா அம்மாவின் வாழ் நாள் சாதனை இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத தேவாமிர்தம்.

    • @sharmilabalaji1916
      @sharmilabalaji1916 2 місяці тому +1

      True

    • @palanini5292
      @palanini5292 Місяць тому +2

      முருகனின் முழு ஆசி பெற்றவர் என்று நம்புகிறேன்

    • @mesnathan4967
      @mesnathan4967 5 днів тому

      உண்மை 100% வாழ்க ஆன்மிக இசை தொண்டு 🙏🙏🙏🙏 ஓம் முருகா 🙏🙏🙏

    • @gayatrisatya7709
      @gayatrisatya7709 2 дні тому

      Yes. உண்மை

  • @RIS_vlogs957
    @RIS_vlogs957 17 днів тому +35

    பணம் பதவி தேவையில்லை
    பொன் பொருளை நாடவில்லை
    முருகா உன் அருள் போதுமே............🛐

  • @onemanarmy7808
    @onemanarmy7808 Рік тому +1468

    பணம் பதவி தேவையில்லை பொன்பொருள்ம் நாடவில்லை முருகா உன் அருள் போதும்மே உயிர் வாழ்கின்ற காலமெல்லாம் மாளிகையில் நாட்டம் இல்லலை குமரா உன் நிழல் போதுமே 🙏🙏🙏🙏💫 my favorite line putichavanga like போடுங்க 🙏

  • @vijayamurugan406
    @vijayamurugan406 Рік тому +676

    வேல் பிடித்த தெய்வத்தின்
    கால் பிடித்து உயிர் விட ஆசை 😔🙏🙏 முருகா......

    • @mahalakshmi2266
      @mahalakshmi2266 Рік тому +17

      வேல்பிடி த்த வேல ன்கால்பிடி த்துஅவனிடம் உயிர்சேர ஆசைமுருகா

    • @nandakumarp6754
      @nandakumarp6754 Рік тому +6

      Muruga uyir katkamatta unga anba mattum katoan

    • @nandakumarp6754
      @nandakumarp6754 Рік тому +3

      Vetrivel muruganuku arogara

    • @RANJITHKUMAR-lt2qw
      @RANJITHKUMAR-lt2qw Рік тому +3

      ennoda virupammum athuthan

    • @Saran-jj5fb
      @Saran-jj5fb 2 місяці тому +2

      Nee vazha vendum muruganai thuthikka💐

  • @SJ.Priya1212_Cooking.
    @SJ.Priya1212_Cooking. 3 місяці тому +56

    மனசு கஷ்டம் இருக்கும் போது இந்த பாடல் கேட்கும் போது ஒரு தெளிவு வரும் ❤

  • @sonaimuthu4736
    @sonaimuthu4736 2 місяці тому +167

    கோவை கமலாம்மாக்கு முருகனின் ஆசீர்வாதம் கிடைக்க பெறட்டும்

    • @Kattumaram339
      @Kattumaram339 Місяць тому +2

      ஆசீர்வாதம் கிடைத்து விட்டது. அதனால் தான் இந்த கம்பீர குரலும் இசை ஞானமும் ❤❤

  • @sramamoorthimoorthi4373
    @sramamoorthimoorthi4373 Рік тому +387

    இந்த பாடலை கேட்கும் வாய்பளித்த பிரபஞ்சத்திற்கு நன்றிகள் ஓம்முருகா .....

  • @nithiyairudhayaraj425
    @nithiyairudhayaraj425 10 місяців тому +246

    நான் ஒரு RC Roman catholic. ஆனாலும் நான் கல்லூரி படிக்கும் போது இருந்து என் அப்பன் முருகன் மிகவும் பிடிக்கும். திருமணம் முடிந்து கணவன் கொடுமை.வீட்டில் மாமியார் ஓரகத்தி மாமனார் நாத்தனார் எல்லாரும் சேர்ந்து பொய்யான பலி என்மேல் சுமத்தி ஒதுக்கி வைக்கப்பட்ட நிலை. ஆனாலும் என் அப்பன் முருகன் என்னை நான் இருக்கேன் என்று என்னை மீட்டுகொண்டார் . முருகா இந்த பாடல் வரிகள் கேட்டு ஒரே அழுகை.என்னை என் பையன் பொண்ணு 3 perium உன் அருகில் வைத்துகொள் முருகா

    • @user-cy9ix5dy7o
      @user-cy9ix5dy7o 2 місяці тому +6

      Kavalaipadatha sahoothari ellam appan muruga paarthukkolvar

    • @user-hi2qk2bn8y
      @user-hi2qk2bn8y 2 місяці тому +2

      😢😊

    • @valarmathisachithanandhan4855
      @valarmathisachithanandhan4855 2 місяці тому +10

      அப்பன் முருகன்
      என்றும் துணை
      வருவார் வருத்தம்
      வேண்டாம்
      குட்டிமா
      கந்தன் இருக்க
      கவலை ஏன்
      கந்தன் கருணை
      எந்தன் பெருமை
      உந்தன் செழுமை
      🎉🎉🎉🎉🎉🎉🎉
      ஓம் சரவணபவ

    • @rajendransrinivasan8866
      @rajendransrinivasan8866 2 місяці тому +6

      ஆறுமுகன் அருளினால் அனுதெனமும் ஏறுமுகம்

    • @sudhabats
      @sudhabats 2 місяці тому +5

      God bless

  • @user-vp6fj2op5x
    @user-vp6fj2op5x 24 дні тому +8

    இந்த காலத்திற்கு கிடைத்த கே பி சுந்தராம்பாள் அவர்கள் ஓம் முருகா 🙏🙏🙏

  • @sathamusen.
    @sathamusen. Місяць тому +21

    நான் ஒரு இஸ்லாமியன் ஆக இருந்தாலும் பக்தி பாடல் கேட்பதற்கு மதம் ஒரு தடை அல்ல ... என்ன ஒரு அர்ப்புதமான வரிகள் ...
    இந்த ஒரு voice இருக்கே ... paaaaaa❤

  • @thavasimouni6195
    @thavasimouni6195 2 роки тому +187

    இந்த பாடலை கேட்க என்ன புண்ணியம் செய்தேனோ....வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...
    🙏🙏🙏...
    நன்றி கூற வார்த்தை இல்லை...

  • @dr.a.ismailabdhulkathar6997
    @dr.a.ismailabdhulkathar6997 Рік тому +2933

    நான் ஒரு முஸ்லிம் ஆனால் இப்பாடலை கேட்கும் போது மன ஆறுதல் கிடைக்கிறது ஓம் முருகா வேல் வேல் வெற்றி வேல்

  • @dhanalakshmigeetha1038
    @dhanalakshmigeetha1038 5 днів тому +17

    🙏🏿 முருகா கொடுத்த குழந்தையை எடுத்து கொண்டாய், நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுளோட என் மகளுக்கு ஒரு பிள்ளை குடுப்பா கமெண்ட் பார்க்கும் எல்லோரும் என் மகளுக்காக வேண்டி கொள்ளுங்கள் 🙏🏿🙏🏿🙏🏿

    • @selvarani5665
      @selvarani5665 День тому

      கண்டிப்பாஉங்களுக்குபேரன் பேத்திசீக்கிரம்கிடைக்கும்முருகன்சீக்கிரம்அருள் புரிந்து விடுவார்நானும் வேண்டிக்கொண்டேஇருக்கேன்

    • @JSJO676
      @JSJO676 23 години тому

      முருகன் அருளால் தங்களுக்கு அழகான பேத்தி கிடைக்கும்.

    • @dhanalakshmigeetha1038
      @dhanalakshmigeetha1038 23 години тому

      @@JSJO676 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

    • @maheshwari3485
      @maheshwari3485 23 години тому

      இன்னும் நான்கு மாதங்களில் குழந்தை பேறு உண்டாகும் வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 என் அப்பன் முருகனையும் உண்டு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @dhanalakshmigeetha1038
      @dhanalakshmigeetha1038 21 годину тому

      @@selvarani5665 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @kishore.i6443
    @kishore.i6443 4 місяці тому +202

    முருகா என் தம்பி பழையபடி எழுந்து நடக்க வைங்க முருகா இன்னும் செயற்கை சுவாசத்தில் தான் உள்ளான் அவனை காப்பாற்றுங்கள் உங்கள் அடிமையாக்குங்கள் முருகா இனி அவன் திருந்தி நல் வாழ்கை வாழ அருள் புரிவாயாக நீண்ட ஆயுளை தாருங்கள் நோய் நோடியில்லாமல் வாழ வேண்டும் நீங்கள் தான் எப்போதும் என் தம்பிகளுடன் துணை நிற்க வேண்டும் கந்தா 🧠🫀🫁👁️👁️🤕🙏🙏🙏

    • @verrappangrups5335
      @verrappangrups5335 2 місяці тому +9

      கருணை கடல் அவன் முருகன் இருக்க பயமேன் அண்ணா கவலைப்படாதே

    • @user-praba
      @user-praba 2 місяці тому +6

      உங்கள் தம்பி நன்றாகி விட்டானா

    • @kishore.i6443
      @kishore.i6443 2 місяці тому +11

      @@user-praba மிக்க நன்றி பிரபா ... செயற்கை சுவாசத்தில் இருந்து வந்து விட்டார்... தலையில் இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்து விட்டனர் மறுபடியும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் முருகனிடம் வேண்டிக்கொள்ளுங்கள் பிரபா ஒரு பெண்ணாக இருந்து பார்த்து கொள்வது கடினமாக உள்ளது முருகன் அருளால் என் தம்பி எழுந்து வருவான் அடுத்த வருடம் என் தம்பி இந்த படத்தில் உள்ளவாறு போடுவேன் வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா..🙏🛐 யாம் இருக்க பயமேன்...🙏🛐🐓🦚🛐🙏

    • @user-praba
      @user-praba 2 місяці тому

      @@kishore.i6443 கண்டிப்பாக ஈசனின் அருளால் நல்லதே நடக்கட்டும்... ஓம் நமசிவாய

    • @kishore.i6443
      @kishore.i6443 2 місяці тому +5

      @@verrappangrups5335 நன்றி சகோ நீங்களும் முருகனிடம் வேண்டிக்கொள்ளுங்கள் 🙏

  • @inivevetha3205
    @inivevetha3205 11 місяців тому +272

    நான் பிறப்பால் கிறிஸ்தவ குடும்பம்..ஆனால் என் அப்பன் தமிழ்க்கடவுள், தமிழ்க்குடி காத்த மாமன்னன் முருகப்பெருமானின் இந்த தாயின் குரலில் கேட்கும்போது...அப்பனின் உயர்வு பெருங்கருணை..வணங்குகிறேன் முருகா...பாடல் பாடிய அம்மாவுக்கு ஒளைவை தாயின் ஞானம் மேலோங்க அருள் புரிவாய் அய்யா...
    உன் பாதம் சரணடையும் இந்த மன்னின் பொய்யாய் பறைசாற்றும்....அனைத்தும் ஒழிந்தே நீயே அரசாள்வாய் தெய்வமே!!

  • @csedurgadevim2173
    @csedurgadevim2173 8 місяців тому +192

    நான் விபத்தில் விழுந்து வந்திருக்கிறேன்.. என் முகம் அடிபட்டு face structure மாறிவிட்டது.. என் பழைய முகத்தை குடுப்பாயாக முருகனை மனம் உருகி தாழ்ந்து கேட்கிறேன்....🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏

    • @mahaletchumymahaletchumy6201
      @mahaletchumymahaletchumy6201 4 місяці тому +9

      unggal mugam maarinaalum, unggal manam maaravillaiyeh...

    • @SRVMANNMANAM
      @SRVMANNMANAM 3 місяці тому +17

      உஙகள் வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்

    • @annaisai1
      @annaisai1 3 місяці тому +8

      We all will pray for u, don't worry

    • @kathirsugan7621
      @kathirsugan7621 3 місяці тому +4

      Kandippa palaya Mari agum Nalla murugana vendunga

    • @sivakamiksivakami774
      @sivakamiksivakami774 3 місяці тому +4

      கண்டிபாக கிடைக்கும்....

  • @arunsarasvathi4976
    @arunsarasvathi4976 Місяць тому +20

    திருக்கோவை கமலா அவர்கள் பாடிய முருகன் பாடல் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது நன்றிமா கோவை கமலா

  • @perfectengineerings2238
    @perfectengineerings2238 2 місяці тому +40

    என்ன எழுத்து...
    என்ன அர்த்தங்கள்...
    என்ன இசை...
    என்ன ஒரு குரல் நயம்
    இன்று அவ்வையார் இருந்தால் இப்படித்தான் இருக்கும்.
    ஓம் ஶ்ரீ சரவணபவ❤

  • @chockkalingamchidambaram3342
    @chockkalingamchidambaram3342 Рік тому +203

    என் வாழ்கையில் என் அப்பன் முருகன் இல்லையேல் நான் இல்லை...இனி எத்தனை ஜென்மம் இருப்பினும் அய்யா முருகா நானும் எனது குடும்பமும் உனக்கு அடிமை 🙏🙏🙏

    • @kannadasan5962
      @kannadasan5962 Рік тому

      🙏🙏🙏🙏🙋🙋🙏

    • @thirumurugan8885
      @thirumurugan8885 Рік тому

      இந்த பாடல் கேட்டு என் வாழ

    • @pesukirarkalpeopletalkrani7525
      @pesukirarkalpeopletalkrani7525 Рік тому

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @dhamakumar4194
      @dhamakumar4194 9 місяців тому +2

      அம்மா,கண்மூடி கேட்கையிலே கந்தனவன் முன்வந்து என் கண்ணீரை துடைப்பது வாய் உணர்கிறேனே!😂🙏

    • @c.manikandan2211
      @c.manikandan2211 7 місяців тому

      🥺🥺🥺🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ganapathisiva1061
    @ganapathisiva1061 Рік тому +210

    மலை தோறும் படைவீடு இருந்தாலும் முருகா என் மன வீடு வந்து அமர்வாய் 🙏🙏🙏🔥🔥

  • @siyamalasubramanian2934
    @siyamalasubramanian2934 2 місяці тому +57

    இந்த பாடல் முடியும் வரை என் கண்ணீரை அடக்க முடியவில்லை 😢😢🙏🏻

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 2 місяці тому +25

    இப்படி ஒரு👍 அழகான❤முருகன் பாடல்🎤.. என் வாழ்நாளில் கேட்டதில்லை❤

  • @nageswari7638
    @nageswari7638 Рік тому +170

    நீண்ட நாள் கழித்து முருகன் எனக்காக அனுப்பி வைத்த பாடல்

  • @leelavathy8096
    @leelavathy8096 Рік тому +376

    உண்மையில்....என் அப்பன் முருகன் மேல் உள்ள பக்தியில்... கண்கள் கலங்கி.. கைகள் தானாக கூப்பின.. இந்த பாடலை கேட்க செய்த தாயே... 🙏🙏

  • @sivakavi3895
    @sivakavi3895 2 місяці тому +38

    முருகா என் மகள் 10 வது தேர்வில் 480 மார்க் வாங்க வேண்டும் நீ தான் அருள் புரிய வேண்டும் முருகா. ஓம் சரவண பவ .

    • @bharathdeva8525
      @bharathdeva8525 Місяць тому +2

      நடக்கும் நன்புங்கள்

  • @sampathgeetha4910
    @sampathgeetha4910 23 дні тому +18

    🙏🏻🙏🏻ஆறு படை வீடு அமர்ந்தாலும் என் மனவீட்டில் வந்து அமர்வாய் வரிகள் அடிமை அம்மா நான் உங்க பாட்டுக்கு தேசிய விருது கொடுக்கணும் அதுதான் என்னோட ஆசை இதுபோல் ஆணித்தரமான பாடல் ஒன்று விநாயகருக்கும் நீங்கள் பாடணும்னு என்னோட ஆசை அம்மா❤🙏🏻🙏🏻👌

  • @srinivasanrs5811
    @srinivasanrs5811 Рік тому +68

    நான் ஒரு முருகன் (அடிமை) பக்தான்.. இவ்வளவு காலம் இந்த பாடல் என் கண்களுக்கு தெரியாமலே இருந்தது.
    இப்பொழுது தான் பார்தேன்.. முருகன் அருளை பெற்றதற்க்கு சமமாக நினைக்கிறேன் ..அருமை. உன் நாவில் முருகன் இருக்கிறன் தாயே..நன்று நண்மை உண்டாகட்டும்... ஓம் சரவணபவாய நமஹ.

  • @murugamatrimony3996
    @murugamatrimony3996 Рік тому +495

    பாடியவருக்கும், பாடலாசிரியருக்கும் முருகன் அருள் உண்டு. இசையமைத்தவருக்கும், கேட்கும் அனைவருக்கும் அவனருள் நிச்சயம் உண்டு

    • @umakamaraju7753
      @umakamaraju7753 Рік тому +9

      Murugan arul irunthal mattum ithu pondra paadalgal paadamudiyum, eluthamudiyu

    • @rameshvramesh6801
      @rameshvramesh6801 9 місяців тому +1

      TV cf

    • @akshairaja7359
      @akshairaja7359 6 місяців тому

      🙏🙏🙏🙏🙏

    • @s123r123i123
      @s123r123i123 6 місяців тому

      Started with kanada ragam

    • @eesan3995
      @eesan3995 5 місяців тому +1

      Super padal ..vetrivel Muruga!

  • @mk-realtors1741
    @mk-realtors1741 Місяць тому +16

    இப்படி பாடுவது நீங்கள் இல்லை அந்த சண்முகநாதன் உங்க உடலில் இருந்து ஆட்டுவிக்கிறான் 🙏🙏🙏

  • @santhiloga5143
    @santhiloga5143 Місяць тому +12

    முருகா நான் வியாதியால் கஷ்டப்பட்டு வருகிறேன். உன்னை நம்பி இருக்குறேன என்னை காப்பற்றி அருள வேண்டும். ஆறு படை முருகனுக்கு ஆரோகரா, ஆரோகரா, ஆரோகரா, வெற்றி வேல் முருகனுக்கு ஆரோகரா, ஆரோகரா ஆரோகரா
    ஆராகரா.

  • @sivasubramaniamk1112
    @sivasubramaniamk1112 Рік тому +80

    தாயே உன் குரலுக்கு தமிழ் முருகனே அடிமை அருமையான வரிகள் அருமையான குரல் கேட்பதற்கு இதமான பாடல்

  • @savithirirasu5503
    @savithirirasu5503 Рік тому +57

    எனக்கு இப்பாடலை கேட்க்க இப்பொலுதுதான் முருகன் அருள்புரிந்தான் மிகவும் அருமை

  • @subasuba5350
    @subasuba5350 3 місяці тому +20

    எனக்கு உன் அருள் கிடைத்து விட்டது திருச்செந்தூர் முருகா...🙏🙏🙏🦚🦚🦚⚜️⚜️⚜️

  • @R_kgaming....8744
    @R_kgaming....8744 2 місяці тому +26

    அப்பா முருகா இந்த விதவையின் பிள்ளைகளுக்கு படிக்க பணம் உதவி செய்யுங்கள்

    • @aquariumfishramk7902
      @aquariumfishramk7902 2 місяці тому +1

      Gpay no sollunga amma

    • @R_kgaming....8744
      @R_kgaming....8744 28 днів тому

      நீங்கள் எனக்கு உதவி செய்ய மனம்வந்தற்க்கு நன்றி நீங்கள் நீண்ட காலம் காத்திருந்த ஒரு நல்ல செய்தி வரும் உங்களுக்கு வசதி இருந்தால் எனக்கு உதவி செய்யுங்கள் இல்லை என்றால் வேண்டாம் ஏன் என்றால் நீங்கள் கஷ்டப்பட்டு எனக்கு உதவி செய்ய வேண்டாம் ரொம்ப ரொம்ப நன்றி வாழ்க வளமுடன்

    • @R_kgaming....8744
      @R_kgaming....8744 26 днів тому

      illa pa

  • @g.vendagovindhan3887
    @g.vendagovindhan3887 Рік тому +114

    அம்மா உங்கள் குரலில் இந்த பாடலை கேட்க்கும்போது என் உடல் சிலிர்த்து விடுகிறது... என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வந்து விடுகிறது.... நீங்கள் இன்று போல் என்றும் இதே குரல் வளத்துடன் அருமையான பாடல்கள் தர வேண்டும் என்று உங்களை நான் சிரம் தாழ்ந்து கேட்டுக்கொள்கிறேன் நீங்கள் உடல் ஆரோக்கியத்துடன் இன்று போல் என்றும் நலமாக இருக்க நான் வணங்கும் திருப்போரூர் கந்தசுவாமியை வேண்டி கொள்கிறேன் தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @baskarangovindaswamy4919
    @baskarangovindaswamy4919 Рік тому +128

    ஆஹா என்ன அருமையான மெட்டமைப்பு..சிவரஞ்சனி ராகத்தில் சிவகுடும்பத்தையே கட்டி இழுத்துவிட்டாய் தாயே...பெங்களூர் ரமணியம்மாவையும்‌கந்தரவக்குரலினி அம்மையார் கே.பி.சுந்தராம்பள் எனும் இருபதாம் நூற்றாண்டு ஔவையையும் ஒருசேர மீண்டும் நினைக்கவைத்த கோவை கமலா அம்மாவிற்கு கோடான கோடி.நன்றி.முருகனருள் முழுமையாய் உமக்கு கிட்டட்டும் தாயே...உன் குரல் இனிமைக்கு சிவகுடும்பமே அடிமை...கல்மனதையும் கரைய வைக்கும் சிவரஞ்சனி ராகம் உங்கள்குரலில் அனைத்து தெய்வங்களையும் தேவர்களையும்‌ஒரு சேர கட்டியிழுத்து வரும் என்பதில் துளி அளவும் ஐயமில்லை வாழ்க நின் தமிழ்கடவுள் முருகனின் பக்திப் பாடலுக்கு முருகனே அடிமை.....

    • @lovelyanimals5777
      @lovelyanimals5777 Рік тому +1

      Om saravanabhava

    • @tamilselviayyasamy5634
      @tamilselviayyasamy5634 8 місяців тому +4

      அப்பனே முருகா நின் திருவடியே சரணம்

    • @kuttykutty4543
      @kuttykutty4543 11 днів тому

      Appa muruga .Amma Kamala Amma en kannerukku.....ungal padal pothum

  • @Kattumaram339
    @Kattumaram339 Місяць тому +21

    இன்று இரவு 12 மணி அளவில் தற்செயலாக இந்த பாடலை முதன் முறையாக கேட்கிறேன். பிறந்ததின் பயனை உணர்ந்த நேரம். குரல் வைரம். பாடல் மாணிக்கம்.இசை மரகதம் .கண் கசிகிறது ஆனந்தத்தில்

  • @gajtravelsmassbusesintamil3779
    @gajtravelsmassbusesintamil3779 3 місяці тому +13

    தற்போது மருதமலை அடிவாரத்தில் மேலே சென்று வர பஸ்ஸிற்காக காத்துக்கொண்டுள்ளேன்... பஞ்சாமிர்த கடையில் பாடிக்கொண்டுள்ளது,,, பாட்டின் முதல் வரியை கேட்டு தேடி கண்டுபிடித்து தற்போது கேட்டுக்கொண்டுள்ளேன்.. ❤

  • @priyatharsininarmathan7722
    @priyatharsininarmathan7722 Рік тому +87

    எனக்கு முருகன் என்றால் உயிர் இந்த பாடலை கேட்ட பிறகு என் கவலைகளை என் துன்பங்களை எல்லாம் கொட்டி அழுது விட்டன். நல்ல அருமையான பாடல் முருகன்ட்ட அருள் உள்ளவர்களால் தான் இந்த பாடலை எழுத முடியும் பாட முடியும்

  • @jayaramjayaram3658
    @jayaramjayaram3658 Рік тому +80

    என் மன கஷ்டங்கள் கலைந்த தருணத்தை தந்த குரல் வளமும் எம் பெருமான் முருக பெருமானின் அருளும் கிடைத்த மகிழ்சி வெளிநாட்டிலிருந்து தனிமையில் கேட்கும் சுகமே தனித்துவமே முருகா எமையும் இவ்வுலகையும் காத்தருள்வாய் அப்பனே 🙏🙏🙏

  • @muruganjaya807
    @muruganjaya807 3 місяці тому +25

    இறைவனுடைய அருள் இருந்தால்தான் இதுபோன்ற பாடலுக்கான வாய்ப்பாக கொடுப்பார் நல்ல தரமான குரல் வளம் வாழ்க வளர்க சிறப்பாக திருமதி கோவை கமலா

  • @senthilkrishnan.a.v2461
    @senthilkrishnan.a.v2461 27 днів тому +3

    இந்த பாடலை கேட்கும் போது முருகனை கும்பிடா தவரையும் கும்பிடவைக் கும் பாடல்.

  • @sureshsankaran3404
    @sureshsankaran3404 Рік тому +246

    நான் சாகும் வரை இந்த பாடல் தினமும் ஒலிக்கும்... மண அமைதி கிடைக்குது அம்மா..... நன்றி

  • @hatricboy703
    @hatricboy703 Рік тому +119

    பாடல் வரிகள் கேட்க கேட்க முருகனையே நேரில் பார்த்தது போல இருந்தது என் கண்களை கலங்க வைத்தன 🦚🦚🦚🦚
    🙏 வெற்றி வேல் முருகனுக்கு🙏
    🙏 அரோகரா 🙏

    • @baskarangovindaswamy4919
      @baskarangovindaswamy4919 Рік тому +2

      பொய்யான என் வாழ்க்கை புவி மீது நிலையாக அருள்செய்ய வரவேண்டுமே..நீ அருள் செய்ய வரவேண்டுமே..மண்மீது நான் விழுந்து விண்மீது உனைக்காண பண்மீது பயணம் செய்தேன்.உன்மீது நான் கொண்ட பொன்னான எண்ணங்கள்‌ பண்ணாக வருகின்றதே...முருகா உன் செயலாலன்றோ..முத்துக்குமரா உன் கண்ணான அருளாலன்றோ.. 🙏

  • @rameshsanmargam8927
    @rameshsanmargam8927 4 місяці тому +15

    நான் எல்லாம் இழந்த பின்னும்...வரிகள் அ௫மை

  • @sivanmarimari9112
    @sivanmarimari9112 24 дні тому +7

    ❤முருகா❤ இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் அப்பன் முருகப்பெருமான் என் மனதுக்குள் இருந்து ஆறுதல் அளிக்கிறது. ஆனந்த கண்ணீருக்கு அளவே இல்லை.

  • @anandakumar3920
    @anandakumar3920 Рік тому +110

    சிரம் தாழ்ந்து தலை வணங்குகிறேன்..
    கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் பெருகுகிறது..
    முருகா முருகா முருகா... 💐💐🙏🙏❣️😍💕🙏🙏💐💐

    • @bavanibavani6850
      @bavanibavani6850 Рік тому +2

      சொல்லா வார்தை இல்லை அம்மா 🙏🙏🙏🙏முருகா 🌹🌹🌹

    • @muthulakshmik1637
      @muthulakshmik1637 Рік тому +2

      கண்களில் கண்ணீர் வழிந்தது

    • @ravisankar924
      @ravisankar924 5 місяців тому

      ​@@bavanibavani6850❤❤❤❤❤❤

  • @kpandiduraipombur5352
    @kpandiduraipombur5352 2 роки тому +98

    வரிகள் அத்தனையும் வைரங்கள்💎💎💎

  • @devap8413
    @devap8413 Місяць тому +10

    கண்களை மூடி இந்த பாட்ட கேளுங்க ஆனந்த கண்ணீர் வரும்

  • @rajagopalthiyagarajan5421
    @rajagopalthiyagarajan5421 Місяць тому +12

    அம்மா தாயே வணக்கங்கள் பல
    முருக வாழ்த்துக்கள்

  • @vijayasanjai5364
    @vijayasanjai5364 Рік тому +57

    இப்போது தான் இந்த பாடலை முதன் முதலில் கேட்கிறேன்.அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை.இப்போது இந்த பாடல் தான் என் சுவாசமாய் உள்ளது.இப்பாடலை பாடியவரும் இதற்காக உழைத்த அனைவருக்கும் மனதார நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

    • @rathinakumar4418
      @rathinakumar4418 Рік тому

      தமிழ் கடவுள் முருகனின் மனதையே கொள்ளை கொள்ளும் பாடல் வரிகள் 🙏🙏🙏

    • @KesavanEllumalai-fh7ss
      @KesavanEllumalai-fh7ss 10 місяців тому

      ​@@rathinakumar4418🎉🎉🎉cmmmmmmmmmmmmxnnnm

    • @challa.pullasudhan122
      @challa.pullasudhan122 5 місяців тому

      JioFry​@@rathinakumar4418

  • @nagarathna9617
    @nagarathna9617 Рік тому +30

    முருகா நீ மட்டும் தான் துணை எனக்கு அழுகை தான் வருகிறது

  • @kumarsvkumar4212
    @kumarsvkumar4212 Місяць тому +13

    முருகா என் நண்பன் குமார் அவர் குடும்பம் நல்ல இருக்க அருள் கொடுத்து ஆசி வழங்குங்கள் அவர் இல்லா குறை நீங்கள் தீர்த்து வையுங்கள் ஓம் சரவணபவ அரோகரா.

    • @ragupathi1716
      @ragupathi1716 Місяць тому

      க விளையாட்டு ஒரு செக்கர்ஸ் ஆன்லைன் விளையாட்டு ஒரு கட்சி ஃபேஷன் பிடித்த உணர்வு கொண்ட இந்த மலை மீது வழக்கு தொழில்நுட்ப சேவைகள் தனியார் நோட்டரி தனியார் பாதுகாப்பு😊.😊

  • @gnanambigais.ambiga2029
    @gnanambigais.ambiga2029 5 місяців тому +84

    விளம்பரம் எதுவும் இல்லாமல் இப்பாடலை கேட்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது... முருகா சரணம்...❤❤❤

  • @SakthiSakthi-tn4fr
    @SakthiSakthi-tn4fr 2 роки тому +140

    பாடல் வரிகளும் உங்கள் குறள்வளமும் கேட்க்கும்போது முருகப்பொருமானை நம் உள்ளத்தில் நிற்ப்பதுபோன்றே உனர்வு தோன்றுகிறது ஓம் சரவணபவ

    • @sudars4517
      @sudars4517 Рік тому

      TV

    • @thavakumaranthavakaran3629
      @thavakumaranthavakaran3629 Рік тому

      குறள் இல்லை குரல்

    • @baskarangovindaswamy4919
      @baskarangovindaswamy4919 Рік тому +3

      முருகனருள் இருந்தால் மட்டுமே..இப்படியான வரிகள் வந்துவிழும் முதல்வணக்கம் பாடலாசிரியர்க்கு.
      ..

    • @revathijashmitha7330
      @revathijashmitha7330 Рік тому

      Semma voice Amma inthà kural valàm ennai meiselirka vaukirathu athil Ulla vaŕigal ellamae uyir ullathu

    • @MeenaMadhi
      @MeenaMadhi Рік тому

      @@sudars4517 0

  • @muthulakshmi5575
    @muthulakshmi5575 25 днів тому +3

    என் மனது எப்போதேல்லாம் கஷ்டத்தில் உள்ளதோ அப்போம் எல்லாம் முருகர் பாடல் கேட்பேன். மனது லேசாகி விடும்.

  • @umamaheswari5850
    @umamaheswari5850 18 днів тому +4

    முருகா உன்னை அத்தனை உருவத்திலும் பார்த்த மாதிரியே உள்ளது.. கண்களில் கண்ணீர் வருகிறது. பாடல் வரிகள் அத்தனையும் உணர்ச்சி வார்த்தைகள்... யார் கேட்டாலும் முருகனை நேசிக்க தொடங்கி விடுவார்கள்... கோவை கமலா அம்மா முருகன் அருள் முழுமையாக கிடைக்கச் செய்கிறார்கள்... மனதிற்கு இதமாக இருக்கிறது. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @sivakalaia384
    @sivakalaia384 Рік тому +64

    இந்த இனிமையான குரலுக்கு சொந்தக்காரர்...கோவை கமலா... அவர்களுக்கு கோடி..நமஹ்காரம்🙏🙏🙏🙏🙏

  • @akannankanna3998
    @akannankanna3998 6 місяців тому +40

    கே பி சுந்தராம்பாள் அம்மா ஞாபகம் வருகிறது
    ஓம் முருகா முருகா முருகா

  • @evergreensrathanam1245
    @evergreensrathanam1245 3 місяці тому +11

    எல்லா புகழும் எம் முருகனுக்கே என்ன ஒரு அற்புதமான குரல் வளம் கொடுத்த முருகனுக்கு கோடன கோடி நன்றி

    • @evergreensrathanam1245
      @evergreensrathanam1245 2 місяці тому +1

      எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் இருந்ததாலும், அனைத்து செல்வங்களையும் பெற்று இருந்தாலும், இந்த பாடலுக்கு நிகர் எதுவும் இல்லை, எல்லா புகழும் எம் அப்பன் முருகனுக்கு சமர்ப்பணம் ,,

  • @VelMurugan-dj6zo
    @VelMurugan-dj6zo Місяць тому +5

    கருணைக்கடலே கந்தா போற்றி போற்றி போற்றி

  • @pathmini95soniya83
    @pathmini95soniya83 Рік тому +174

    கண்களில் கண்ணீர் பெருக்கெடுது ஓடுகிறது 😭😭😭 ⚜️முருகா⚜️உன் அருள் நிறைந்த இந்த பாடல் வரிகளை கேட்டு மனம் உயிர் உள்ள வரை உன் காலடியில் மண்டியிட்டு கிடக ஆசைகொள்கிறது 🙏🙏🙏🙇🙇🙇என் ஆருபடை குமரா ⚜️⚜️⚜️🌸🌸🌸🌸🌸😓😓😓😓😓

  • @maragathavallisethuraman621
    @maragathavallisethuraman621 Рік тому +90

    மிகவும் அருமையான பாடல்🎶🎵🎤🎶🎤🎤🎵 உண்மை என்னவென்றால் ?அனைவருக்குமே ஆனந்த கண்ணீர் வரவழைத்த பாடல் ,என் அப்பன் முருகனின் பாடல்🎶🎵🎶🎵🎶🎵 அயனின் அருள் அனைவரின் இருளையும் அகற்ற வேண்டும் அப்பனே முருகா முருகா🙏🙏🙏🙏

  • @TN_HAMMER_HANDS
    @TN_HAMMER_HANDS 20 днів тому +4

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @SMEENAPONNU-tw7bt
    @SMEENAPONNU-tw7bt 3 місяці тому +23

    இந்த பாடலில் என் அப்பன் முருகனை காண்கிறேன்

  • @rangarajsenthilkumar7111
    @rangarajsenthilkumar7111 Рік тому +67

    மனம் கஷ்டம் இருக்கும்போது இந்த பாடலை ஒரு முறை கேட்டால் போதும், மிக ஆறுதல் தரும் 🙏 முருகா உன் அருள் போதும் ஐயா 🙏🙏🙏

  • @user-ki2rm5hh3y
    @user-ki2rm5hh3y Рік тому +292

    தாயே தங்களின் குரலில் இந்த பாடலை கேட்கும் போது மனதில் உள்ள வலிகள் அனைத்தும் கண்ணீராய் கண்கள் வழியாக வெளியேறி மனதிற்கு இதமாக இருக்கிறது நன்றி

    • @kohilavanivani5247
      @kohilavanivani5247 Рік тому +1

      Amma muruganukakave unka kural entha patal kekumpothu manathukul enampureyatha anantha.sukamaka ullathu kannel neer otukerathu murukanukum enakum ulla antha pakthei unkal patalin valiyaka velipatathu

    • @ramakrishnan7646
      @ramakrishnan7646 Рік тому

      Om muruga namasthe by.s.visnu

    • @anurajini3538
      @anurajini3538 Рік тому

      Na solla nenaachaathum athuthan

    • @anurajini3538
      @anurajini3538 Рік тому

      Enoda Vali poguthumuruga entha kekum pothu

    • @seramesh1977
      @seramesh1977 Рік тому +1

      So meaningful lyrics ,wonderful pronunciation in singing voice so devotional and the music is very very nice with devotional music, one amoung the best song in my favorite [mukkani suvai ma pala vazhai ]

  • @funvideosfromkoushik3197
    @funvideosfromkoushik3197 16 днів тому +3

    முருகன் அருள் அனைவருக்கும் உண்டு

  • @kavithaikoodal7418
    @kavithaikoodal7418 21 день тому +3

    இந்த பாடலை எழுதிய கவிஞர் காவியா அம்மாவிற்கு முதல் வணக்கம்..

  • @gopalakrishnan5060
    @gopalakrishnan5060 Рік тому +33

    நீண்ட நாட்களாக நான் தேடிய பாடல் இன்று கிடைத்ததில் மட்டட்ற்ற மகிழ்ச்சி அடைகிறேன் தாயே, உங்கள் குரலில் இந்த பாடலை கேட்டதாலோ, இல்லை என் அப்பன் முருகன் மீது நான் கொண்டுள்ள பற்றினாலோ தெரியவில்லை இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் உன் உடல் சிலிர்த்தே போகின்றது என் முருகனின் சிறப்பே சிறப்பு சொல்ல வார்த்தைகளே இல்லை உலகில் நன்றி 🙏💐

  • @subramanianramachandran8898
    @subramanianramachandran8898 Рік тому +28

    நீண்ட நாட்களாக என் அய்யன் முருகனின் இந்தப் பாடலை தேடிக் கொண்டிருந்தேன் இப்பொழுதுதான் முருகன் அருளால் எனக்கு இந்த பாடல் முழுமையாக கேட்க ஒரு சந்தர்ப்பம் பிடித்தது ஏற்பட்ட பெரும் மகிழ்ச்சி இதுவே🙏🙏

  • @radhas8097
    @radhas8097 19 днів тому +3

    எலப்பாக்கம் ஸ்ரீபாலமுருகன் பால்காவடி பெருவிழாவினை சிறப்பாக நடத்திட்ட முருகா உன் கருணையே கருணை. ஸ்ரீபாலமுருகா போற்றி போற்றி போற்றி!

  • @vidhyabaskaran7660
    @vidhyabaskaran7660 23 дні тому +3

    முருகா போற்றி, தினமும் கேட்டு பரவசம் அடைகிறேன், பாடலை கேட்க செய்த இறைவனுக்கு நன்றி🙏💕.

  • @d.dhinagarandhinagar1807
    @d.dhinagarandhinagar1807 Рік тому +26

    சிரம் தாழ்ந்து தலைவணங்குகிறேன் அம்மா 🙏🙏🙏 முருகனுக்கு அரோகரா🙏🙏🙏

  • @Vijayalakshmi-mt7eq
    @Vijayalakshmi-mt7eq Рік тому +1425

    நீண்ட நாட்களாக நான் இந்த பாடலை தேடிக்கொண்டிருந்தேன் இன்று கிடைத்தது

    • @user-cz7ds8jz5s
      @user-cz7ds8jz5s Рік тому +44

      நான் இதை kp சுந்தரம்பாள் என்று நினைத்தேன் pro

    • @sivalingam5611
      @sivalingam5611 Рік тому +18

      🥰 Naanu 🥰 appadi 🥰 tha 🥰 theditu 🥰 iruntha 🥰. Indraiku 🥰 than 🥰 kidaithathu 🥰. 5 mudra 🥰 keten 🥰 ore 🥰 naalil 🥰

    • @muralikrishnan2375
      @muralikrishnan2375 Рік тому +7

      Nanum tan

    • @sabarirajesh5026
      @sabarirajesh5026 Рік тому +6

      🙏🙏🙏

    • @nithyaramasamy2189
      @nithyaramasamy2189 Рік тому +6

      Yes me too

  • @user-ui1cl7ym8r
    @user-ui1cl7ym8r 22 дні тому +4

    இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது மனதிற்கு அமைதி கிடைக்கின்றது இந்த குரல் மிகவும் அருமை அருமையாக இருக்கின்றது எங்களுக்கு அருள் புரிவாயாக வேல் வேல் வெற்றி வேல்

  • @VelMurugan-cc2uh
    @VelMurugan-cc2uh Рік тому +40

    தாயே உங்கள் குரல் மிக அருமயாக உள்ளது... நான் மெய் மறந்து விட்டேன்..... முருகா சரணம் சரணம் சரணம்....🌺🌺🌺🌺🌺🌺🌺🌸🌸🌸🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏

    • @shanmugamvel7028
      @shanmugamvel7028 Рік тому +2

      முருகன் மீது மனம் உருகி பாடிய பாட்டு, மெய் மறக்க வைக்கிறது. அம்மா நீங்கள் முருகன் மீது வைத்துள்ள பக்தி அவர் அருளால்
      அணைத்து செல்வம்கள் தங்களுக்கு
      கிடைக்கும், என்னுடைய நம்பிக்கை
      நம்பிய வரை கை விடமாட்டார் 🙏

    • @user-py8bd5ve7w
      @user-py8bd5ve7w 3 місяці тому

      OOM SARABANABAVA.YA NAMAHA

  • @snl915
    @snl915 2 роки тому +62

    ஒளவ்வயார் பாடியது போல உள்ளது மெய்சிலிர்க்க வைக்கிறது அருமை கேட்க கேட்க ஆசை திறவில்லை அம்மா நன்றி

    • @KathiravanKrish-officials
      @KathiravanKrish-officials Місяць тому

      ஓளவையாரின் பேத்திதான் இவர்.... கோவைகமலா....

  • @gnanasekaranannamalai5347
    @gnanasekaranannamalai5347 5 місяців тому +13

    என் மனைவி பெயர் ஞானம் உடல் நலம் பெற்று வீட்டுக்கு ‌செல்ல வேண்டும் எங்களுக்கு குழந்தை நீதான் முருகா
    எங்களை காப்பாற்ற வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏

  • @nivethanivetha-uq6gx
    @nivethanivetha-uq6gx 6 днів тому +1

    நீண்ட நேரம் தேடலுக்குப் பிறகு கிடைத்து விட்டது இந்த பாடல் ❤❤❤

  • @vairamrani9901
    @vairamrani9901 Рік тому +89

    இந்த பாடலை கேட்டாலே கண்களில் கண்ணீர் வந்து விட்டது மிகவும் அருமையான பாடல் அம்மா மனதில் பெறும் அமைதி எவ்வளவு கஷ்டமான நேரத்திலும் இந்த பாடலை கேட்டாலே போதும் மனம் அமைதி காக்கும் கந்தா சரணம்

    • @amsavalliarjunan9593
      @amsavalliarjunan9593 Рік тому +3

      முருகா என்ன சொல்லுறது தெரிய அப்பனே muruga🙏🙏🙏 😭🔱🔱🔱🌹🌹🙏🙏🙏🙏

  • @selvam.cc.selvam6138
    @selvam.cc.selvam6138 Місяць тому +4

    ஓம் முருகா சரணம்

  • @chevalkodiyaan
    @chevalkodiyaan 21 день тому +2

    அப்பனே முருகா..... உருகி போகிறேன் ....

  • @krishnansubramani7622
    @krishnansubramani7622 Рік тому +69

    என் வாழ்க்கையில் நடந்த சம்பாவங்கள் போல இருக்கின்றது . இந்த பாடல் வரிகள் அத்தனையும் அருமையாக இருக்கின்றது.முதல்முறையா கேட்டா போது என்னை மறந்து நான் அழுதுவிட்டேன்.இறைவா முருகா எல்லாம் உன் செயல்கள்

    • @kannadasan5962
      @kannadasan5962 Рік тому

      🙏🙏🙏🙏🙏

    • @Mrvanan084
      @Mrvanan084 Рік тому

      வள்ளிமலை முருகன் எங்கும் நிறைந்தவன்... உனக்கு துணை நிற்பான்... அவனை என்றும் மறவாதே ...🙏🙏🙏

    • @user-th4gg1fv7o
      @user-th4gg1fv7o Рік тому

      Nanum first time keakum pothu aluthu viddean my fav song om murugaaaaa🙏

  • @anbuselvam2362
    @anbuselvam2362 Рік тому +21

    எத்தனை முறை. கேட்டாலும் நிராசை. அடையாது. மனம்

  • @user-fn2zw9kq7p
    @user-fn2zw9kq7p Місяць тому +3

    அம்மா ஒவ்வொரு முறையும் கேட்கும்போது கண்ணில் நீர் வழிகிறது வார்த்தைகள் ஒவ்வென்றும் பஞ்சமிர்தம் நீங்கள் நலமாக இருக்க ஆறுபடை முருகன் அப்பனை வேண்டிக்கொள்கிறேன்❤🙏🙏🙏🙏🙏🙏

  • @jabeznikshan3787
    @jabeznikshan3787 2 місяці тому +7

    Naan oru Christian but intha song enna thookkipoddirushi apdi oru lyrics love this song innaiku date 2024.03.08 sivarathri toda time 11:43 pm but intha song today oru 7 time ku mela keddan but innum kedkanum pola irukku intha music um lyrics um enna addicted alkiddu semma vibes. 07.29 and 07 49 lyrics semma

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 Рік тому +91

    இந்த பாடலை கேட்கும்
    போது மனம் உருகி
    கண்களில் கண்ணீர்
    பெருக்கெடுக்கிறது
    அம்மா உங்கள் குரலில்
    இப்பாடலை கேட்க
    உயிரும் உருகி மனம்
    முருகனின் காலடியில்
    மயங்கி கிடக்கிறது.

    • @Mrvanan084
      @Mrvanan084 Рік тому +1

      அவனை என்றும் மறவாதே...

    • @anthonyrajanthony5400
      @anthonyrajanthony5400 11 місяців тому +1

      பாடல் மற்றும் கோவை கமலா அம்மாவின் குரல் அருமை. முருகன் அருள் 100% உண்டு.

  • @jaanujaanu2675
    @jaanujaanu2675 Рік тому +23

    வார்த்தைகளை நீங்களே சொள்ளின்டிங்க அம்மா....என் மனம், உயிர், ஆத்ம கண்ணீர் சரவணன் காலடியில் சேர்த்த பாடல்....கொடி நமஸ்காரங்கள் உங்களுக்கு

  • @srinivasan74tamilan
    @srinivasan74tamilan 19 днів тому +1

    இந்த பூமியில் பிறவாத வரம் தந்த கந்தா போற்றி போற்றி

  • @Karnankarnan5604
    @Karnankarnan5604 5 днів тому +1

    இந்த பாடலைகோக்க வார்த்தைகள் இல்லை முருகா

  • @maheshselvaraj664
    @maheshselvaraj664 Рік тому +28

    வேல் உண்டு வினை இல்லை ....முருகா 🙏இந்த பாடலை கேட்டுத்தான் காலை வேலை தொடர்கிறது .....கந்தன் உண்டு கவலை இல்லை.முருகா🙏

  • @selvabharathi8828
    @selvabharathi8828 Рік тому +52

    இனிமை, இனிமை!!
    எத்தனைமுறை கேட்டாலும் தித்திக்குதே 🙏🙏🙏💐💐

  • @vinothkannan9110
    @vinothkannan9110 19 днів тому +3

    இந்த பாடல் கேட்கும்பொழுது என்னையே மறந்து முருகனை துதி பாடுகிறது என் மனம்.....

  • @indirasenthilkumarindirase9787
    @indirasenthilkumarindirase9787 Місяць тому +2

    ஆக சிறந்த பாடல்.அருமை.முருகனும், அவ்வையாருமே அகமகிழ்வார்கள்.சிறப்பு.❤

  • @prabhakaranr6583
    @prabhakaranr6583 Рік тому +26

    அம்மா உயிர் உருகும் பாடல் நன்றி ...😥😥😥 முருகா

  • @c.manikandan2211
    @c.manikandan2211 Рік тому +37

    அந்தக் கந்தனே உந்தன் நாவில் வந்து வரி சொல்ல நீங்கள் பாடியது போல் இருக்கிறது அம்மா 🙏

  • @vanithamedia6573
    @vanithamedia6573 25 днів тому +1

    இந்தப் பாடலைக் கேட்டவுடன் மெய் சிலிர்க்கிறது என்ன ஒரு குரல் வளம் முதல் முதலாக இன்று தான் இந்த அம்மாவின் குரலை நான் கேட்கின்றேன் முருகனின் அருள் இந்த அம்மாவிற்கு ஏற்கனவே கிடைத்து விட்டது ஒவ்வொரு அடியும் ஒவ்வொரு வார்த்தைகளும் ஒவ்வொரு குரல் இசையும் செய்யும் மெய்சிலிர்க்க வைக்கிறது