ஒரே கடவுளை நம்புகிறேன் Ore Kadavulai nambugiren நீசே நம்பிக்கை அறிக்கை புதியபாடல் Nicene creed song

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • #ஒரே கடவுளை நம்புகிறேன் #நீசே - கான்ஸ்டான்டி நோபில் #நம்பிக்கை அறிக்கை புதிய பாடல் #Nicene creed song, (ராக மாளிகையில்) #பாடல் வடிவாக.
    கத்தோலிக்க விசுவாச மகிமையை கொண்டாட ஞாயிற்றுக்கிழமைகளிலும் பெரு விழாக்களிலும் இந்த விசுவாச முழக்கத்தை அறிக்கையிடுவோம். ஆமென்
    WORD STRUCTURE
    & MUSICAL COMPOSITION:
    FR. A. FELIX PHIIP
    MUSIC & ORCHESTRATION:
    D.JOSEPH
    SINGERS:
    A. PRIYADHARSHINI & RUBIYAA GRACIOUS
    EDITING:
    JOSEPH @ NESAR STUDIO
    நீசே - கான்ஸ்டாண்டி நோப்பிள் நம்பிக்கை அறிக்கை- பாடல்
    :===============================================
    ஒரே கடவுளை நம்புகிறேன்.
    விண்ணையும் மண்ணையும் காண்பவையும் காணாதவையும் யாவும் படைத்த
    எல்லலாம் வல்ல தந்தை அவரே.
    கடவுளின் ஒரே மகனாய் உதித்த
    ஒரே ஆண்டவர் இயேசு
    கிறிஸ்துதுவை நம்புகிறேன்.
    காலங்களுக்கெல்லாம் முன்பே -இவர்
    தந்தை யிட மிருந்து பிறந்தார்.
    கடவுளி னின்று கடவுளாக,
    ஒளியினின்றி ஒளியாக,
    உண்மைக் கடவுளினின்று
    உண்மைக் கடவுளாய் உதித்தவர்-இவர்
    உதித்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர்
    தந்தையோடு ஒரே பொருளானவர்-இவர்
    வழியாகவே யாவும் படைக்கப்பட்டன.
    மனிதர் நமக்காக-நம் மீட்புக்காகவும்
    விண்ணகம் இருந்து இரங்கினார்.
    தூய ஆவியால் கன்னி மரியிடம்
    திரு உடல் எடுத்து மனிதர் ஆனார்.
    மேலும் நமக்காகப் பொந்தியு பிலாத்தின்
    அதிகாரத்தில் சிலுவையிலே
    அறையப்பட்டுப், பாடுபட்டு,
    இறந்து, அடக்கம் செய்யப்பட்டார்.
    மறைநூல் களின்படி மூன்றாம் நாள்
    உயிர்த்தெழுந்தார். விண்ணகத்திற்கு
    எழுந்தருளி, எல்லாம் வல்ல
    தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார்.
    வாழ்வோரையும், இறந்தோரையும்
    தீர்ப்பிட, மாட்சி யுடனே
    மீண்டும் வர இருக்கின்றார்.
    அவரது ஆட்சிக்கு என்றுமே முடிவு இராது.
    தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும்
    புறப்படும் ஆண்டவரும்
    உயிர் அளிப்பவரும்
    தூய ஆவியாரை நம்புகிறேன் -இவர் தந்தையோடும்
    மகனோடும் ஒன்றாக
    ஆராதணையும் மாட்சிமையும்
    பெறுகின்றார். இறைவாக்கினர்கள்
    வாயிலாகப் பேசியவர் இவரே.
    ஒரே புனித, கத்தோலிக்க,
    திருத் தூதர்கள் வழி வரும்
    திரு அவையை நம்புகிறேன்.
    பாவ மன்னிப்புக்கான
    ஒரே திருமுழுக்கை ஏற்றுக் கொள்கிறேன்.
    இறந்தோரின் உயிர்ப்பையும்,
    வரவிருக்கும் மறுஉலக
    வாழ்வையும் நம்பிக்கையோடு எதிர் பார்க்கிறேன். ஆமென்…

КОМЕНТАРІ • 41

  • @ArockiyamSelvamary
    @ArockiyamSelvamary 17 днів тому

    பங்கு தந்தை அவர்களுக்கு மிக்க நன்றி.. இந்த பாடலை அற்புதமாக தூய ஆவியின் வல்லமையால் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை எங்கள் கண்முன் கொண்டு வந்த உங்களை ஆண்டவர் ஆசிர்வதித்து இன்னும் பல பாடல்களை வெளியிட வாழ்த்துகிறேன்...

  • @Daniel-mz5oo
    @Daniel-mz5oo Місяць тому +1

    Amen alleluya amen

  • @John_Peter_1979
    @John_Peter_1979 2 місяці тому +2

    நம்பிக்கை அறிக்கையை. .இசையாக தொகுத்து வழங்கிய பங்குதந்தைக்கு. நன்றி🙏இதனை காணொலியில் கான்பது மட்டும்மல்ல இறைவனை கண்டு உணர்தவகளாக அதன்படி வாழ வரம்தாரும். .ஆமென்

  • @Golrya8825
    @Golrya8825 2 місяці тому +2

    Amen Amen
    Amen❤❤❤
    ❤❤❤❤
    ❤❤❤

  • @adaikaladass.p3190
    @adaikaladass.p3190 2 місяці тому +2

    அற்புதம் இசை குரல் எல்லாமே

  • @packiamarypackiamary9857
    @packiamarypackiamary9857 2 місяці тому +2

    Congratulations dear father 🙏

  • @praywithpaul2462
    @praywithpaul2462 2 місяці тому +3

    Congratulations dear father and your team. God bless you and your team with lots of good health and happiness and prosperity and peace 🎉
    A. Paul Montini Servant and
    Catholic Lay Preacher

  • @auxiliyavinnarasi2835
    @auxiliyavinnarasi2835 2 місяці тому +1

    Congrats team🎉🎉🎉Great 👏& Lovely 😍 singing🥳😇. Really it's a visual treat for Eyes 🤩. So Happy and Blessed to watch this apostles' creed song.

  • @amarnathr9562
    @amarnathr9562 2 місяці тому +1

    ஒரு உரைநடையை இவ்வளவு அழகான பாடலாக்கியதை பார்த்து வியந்துபோகிறேன். எல்லாம் ஆண்டவரின் அருள்தான். அருட்தந்தை அவர்களுக்கும் சகோ பிரியதர்ஷினிக்கும் இசைக் குழுவிற்கும் வாழ்த்துக்கள்:)

  • @user-ch4ju7dk1i
    @user-ch4ju7dk1i 2 місяці тому +2

    ❤❤❤❤❤ super

  • @christyxaviermary3057
    @christyxaviermary3057 2 місяці тому +2

    Excellent 🎉Glory to God 🎉

  • @chitramatthew4616
    @chitramatthew4616 2 місяці тому +1

    Beautiful singing & great music.Glory to God!

  • @LifeinlightLeo
    @LifeinlightLeo 2 місяці тому +1

    Congratulations to the team

  • @francisarulanandam2441
    @francisarulanandam2441 2 місяці тому +2

    Excellent effort

  • @christopherjoseph2650
    @christopherjoseph2650 2 місяці тому +2

    @joseph Nice music Uncle

  • @user-su6px5sx2g
    @user-su6px5sx2g 2 місяці тому +1

    Congratulation superb fr❤
    Amen Amen Amen

  • @vincentjoshua3156
    @vincentjoshua3156 2 місяці тому +2

    💐

  • @ynmchannel8701
    @ynmchannel8701 2 місяці тому

    நம்பிக்கை அறிக்கையை மிகவும் இனிமையாக , அழகாக பாடும் வண்ணமாக இசையமைத்து பாடலை வெளியிட்ட தந்தையின் பணி சிறக்க வாழ்த்துக்களும், செபங்களும்

  • @lillyarun6453
    @lillyarun6453 2 місяці тому

    மிகவும் அருமை.
    Praise the Lord.
    Thank u Fr.. 🥰🙏🏻💐

  • @mariakalaadd8845
    @mariakalaadd8845 2 місяці тому

    பக்தியூட்டும் இன்னிசையோடும் அரிய காடசிகளோடும் கூடிய விசுவாச அறிக்கை மிக மிக அருமை .. தங்கள் இன்னிசை இறைபயணம்... என்றும் ,எங்கும் விசுவாச மணம் கமழ வாழ்த்துக்களும், வணக்கங்களும் Fr, , 👌👍💐🎉🎊🙏

  • @GRGraciyous
    @GRGraciyous 2 місяці тому

    Congratulations dear Father Felix Philip for your excellent effort. Glory to God.🙏🙏🙏

  • @chitramatthew4616
    @chitramatthew4616 2 місяці тому

    Congratulations dear Fr.Philip.Excellent work.God bless the team.

  • @catholic-church
    @catholic-church 2 місяці тому

    Congratulations dear father great effort with such a beautiful work thank you fr

  • @mariaantony3443
    @mariaantony3443 2 місяці тому

    Congratulations dear Fr. Philip…an innovative effort….

  • @shylaanish8203
    @shylaanish8203 2 місяці тому

    வாழ்த்துக்கள் fr. உங்களது இறைபயணமும் இசை பயணமும் இறைவனை நோக்கிய பயணம் இந்த பயணம் பலரது வாழ்வுக்கும் ஆன்மீக வழிகாட்டியாக திகழவும் இன்னும் நீங்கள் பல இறை அனுபவத்தை பெற்று அதன் மூலம் நாங்களும் பயனடைய உங்களுக்காக இறைவனிடம் மன்றாடுகின்றேன் .

  • @winsonwinson7008
    @winsonwinson7008 2 місяці тому

    Excellent very nice Fr.

  • @bennybonibose4717
    @bennybonibose4717 2 місяці тому

    ஒரே கடவுளை நம்பும் தங்கள் ஆலயங்களில் எதற்க்கு பல சிலைகள் வைக்கப்பட்டுள்ளன?

  • @fernandosavio8502
    @fernandosavio8502 2 місяці тому

    It is better to arrange some dancers to dance in the altar.

  • @adaikaladass.p3190
    @adaikaladass.p3190 2 місяці тому

    Scale and timing style tell father

  • @jsrajam5119
    @jsrajam5119 2 місяці тому +1

    Very nice...fr