சோளிங்கர் யோக ஆஞ்சேநேயர் கோயில் | Yoga Anjaneyar Temple Sholingur | Drone Shots | 4K Res | Eng Subs
Вставка
- Опубліковано 10 лют 2025
- சோளிங்கர் யோக ஆஞ்சேநேயர் கோயில் | Yoga Anjaneyar Temple Sholingur | Drone Shots | 4K Res | Eng Subs
Hi friends,
I explored about Sholingur Sri Yoga Anjaneyar temple in this video. Used Insta 360 action camera and Dji Mini2 to shoot this place. Explained few details about this temple. Please watch fully with high resolution. You will surely like this video.
அருள்மிகு ஸ்ரீ யோக ஆஞ்சநேயர் திருக்கோவில், சோளிங்கர், தமிழ்நாடு
ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை திவ்யமாக தரிசித்து விட்டு, வெளியே வந்து பெரிய மலையிலிருந்து கீழே இறங்கி சற்றே தூரத்தில் சுமார் இருநூறு அடி உயரமாக காணப்படுவது சிறிய மலை. சிறிய மலை என்று அழைக்கப்படும் அம்மலையின் மேல் ஸ்ரீயோகஆஞ்சநேயருக்கான திருக்கோவில் அமைந்துள்ளது. மேற்கு நேக்கி அமைந்துள்ள இக்கோவிலில் மேற்கு நோக்கி ஸ்ரீயோக ஆஞ்சநேயர் குடிகொண்டுள்ளார். ஸ்ரீஆஞ்சநேயர் ஸ்ரீயோக நரசிம்மரை பார்த்த வண்ணம் யோக நிலையிலுள்ளார்.
நான்கு திருகரங்களுடன் யோக நிலையில் அமர்ந்திருக்கும் ஆஞ்சநேயரின் மேல் இரு திருகரங்களையும் பகவான் ஸ்ரீயோக நரசிம்மரால் கொடுக்கப்பட்ட சங்கும் சக்ரமும் அலங்கரிக்கின்றன.
சன்னதிதின் எதிரில் தெரியும் துவாரத்தின் வழி நோக்கினால் ஸ்ரீயோக நரசிம்மர் குடி கொண்டுள்ள கோவில் தெரியும். நித்யம் பகவானை தியானித்து யோக நிலையிலுள்ள ஸ்ரீயோக ஆஞ்சநேயரை கண் குளிர தரிசிப்போம்.
இங்குள்ள திருகுளத்திற்கு ’ஹனுமத் தீர்த்தம்’ என்பது திருநாமம்.
தலப்புராணம்
ஸ்ரீயோக நரசிம்மருக்கு சோளிங்கரை தவிர பல இடங்களிலும் கோவில்கள் உண்டு. ஆனால் யோக ஆஞ்சநேயருக்கு இங்கு மட்டுமே கோவில். அவர் இங்கு யோக மூர்த்தியாக மட்டுமல்லாமல், அஹிம்சை மார்க்கத்தை நிலை நாட்டியவரும் ஆவார்.
இந்திரதூமன் என்னும் அரசன் ஒருமுறை கவரிமானை வேட்டையாடி அதனை துரத்திக் கொண்டே சோழசிம்மபுரம் காட்டுக்குள் நுழைந்தார். அவர் துரத்தி வந்த மான் அங்கு சின்ன மலையில் ஏறத்தொடங்கியது. மன்னனும் விடாமல் மலை மீது ஏறினான். ஆனால் அவன் கண்முன்னே அந்த மான் ஜோதி ஸ்வரூபமாக மாறி பின் மறைந்துவிட்டது. ஆச்சரியமடைந்த மன்னர் அன்று முதல் அஹிம்சையை பின்பற்றினார். ஸ்ரீயோக நரசிம்மரின் விருப்பப்படி மன்னனை அஹிம்சை பாதையில் திருப்ப, ஸ்ரீயோக ஆஞ்சநேயர் மானை ஆட்கொண்டு ஜோதி ஸ்வரூபமாக மாற்றி இந்த நரசிம்மர் குடியிருக்கும் மலையில் ஏறும் எந்த ஒரு உயிருக்கும் ஶ்ரீஹரியின் வைகுண்டத்தில் இடம் உண்டு முக்தி உண்டு என்று ஶ்ரீ யோக ஆஞ்சநேயர் தோன்றி மன்னருக்கு அருளாசி வழங்கினார்.
சோழசிம்மபுரத்தில் கும்போதரன் என்னும் அரக்கனின் அட்டகாசத்தை மன்னர் இந்திரதூமன், போரிடாமல் அஹிம்சை முறையிலேயே அடக்கி, அந்த ஊருக்கு அமைதியைக் கொணர்ந்தார்.
மலைக்கோவில்களின் உத்ஸவ மூர்த்திகள் இரண்டு கி.மீ. தொலைவில் ஊர் மத்தியில் உள்ள பக்தவத்ஸலம் கோவிலில் உள்ளது. நாயக்கர்கள் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவில் மிக விஸ்தாரமாகவும், அழகாகவும் உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அன்று அருள் மிகு யோக ஆஞ்சநேய சுவாமி சங்கு சக்கரங்களை பெற்று ஸ்ரீ வைஷ்ணவ தீக்ஷை பெற்று பரிபூர்த்தியை அடைந்ததாக சரித்திரம் கூறுகிறது. ஆடிமாத ஏகாதசி அன்று மகான்கள், மடாதிபதிகள், தவஸ்ரேஷ்டர்கள் மூலமாக சங்கு சக்கர தப்த முத்ராதாரணம் செய்து கொண்டால் முக்தி நிச்சயம்.
அந்த சக்கரத்தை சிறிய மலையில் உள்ள புஷ்பகரணியில் (குளம்) திருமஞ்சனம் செய்து அதை பரிக்ரஹித்தார். அந்த குளத்திற்கு இன்றும் ஹனுமத் தீர்த்தம் எனப்பெயர் வழங்கப்பட்டுவருகிறது.
தீர்த்தம் பரிகாரம்:
கார்த்திகை ஞாயிற்றுக்கிழமை ஹனுமத் தீர்த்தத்தில் நீராடி படிக்கட்டுகளில் படுத்து விரதம் இருந்தால் அவர்களுக்க அருள்மிகு யோக ஆஞ்சநேயர் சொப்பணத்தில் காட்சி கொடுத்து விருப்பத்தை நிறைவேற்றுவதை இன்றும் காணலாம். கார்த்திகை மாதத்தில் ஒவ்வொறு ஆண்டும் வெள்ளி ஞாயிறு தினங்களில் பெரிய மலையில் பெருமாளுக்கும் தாயாருக்கும் சிறப்பு திருமஞ்சனம் அலங்காரம் மற்றும் உற்சவம் நடத்தப்படுகிறது. அதே போல் சிறிய மலையிலும் ஞாயிறு அன்று அருள்மிகு யோக ஆஞ்சநேயருக்கும் சிறப்பு திருமஞ்சனம் அலங்காரம் மற்றும் பிரார்த்தனைகள் உற்சவங்கள் விஷேசமாக நடத்தப்படுகிறது.
சோளிங்கர் ஸ்ரீயோக ஆஞ்சநேயர்
ஸ்ரீயோக ஆஞ்சநேயர், மனநோயாளிகளை குணப்படுத்தும் வலிமையுள்ளவர். நோயாளி இந்த க்ஷேத்திரத்திலுள்ள ’ஹனுமத் தீர்த்தம்’ என்னும் குளத்தில் நீராடிய பின் ஸ்ரீயோக ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய வேண்டும். நம்பிக்கையுடன் இதை செய்யும் நோயாளியின் மனநிலை சரியாவதை அவரது குடும்ப உறுப்பினர்கள் கண்கூடாகப் பார்க்கலாம்.
இது ஆன்மீக பூமி, சித்தர்களும்,மகான்களும், முனிவர்களும்,யோகிகளும், மகரிஷிகளும், நம்மை நல்வழி நடத்தும் மகா குருமார்களும், இன்னும் பிற தவஸ்ரேஷ்டர்களும், வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் மண்.
ௐ ஶ்ரீ ராமஜெயம்,
ராம நாமமே சொன்னால் அங்கே வருவார் ஹனுமார், க்ஷேமங்கள் யாவையும் தருவார்,
ஶ்ரீ ராம பக்த ஹனுமார்.
Any questions or comments please leave below in comment box.
For more videos please check my channel, hit the like button and subscribe. And share with your friends too.
Adding more videos once in a week.
Hope you enjoyed Watching
Thank You
Follow me
on Instagram:
/ sathish_fotography
on Flickr :
www.flickr.com...
www.flickr.com...
LIKE, SHARE & SUBSCRIBE MY CHANNEL
Super explanation👌
ஜெய் ஸ்ரீ ராம்🙏
thanks :)
Nice Area. Beautiful Drone Shots. Good Explain about Temple. 👏👏👏
Useful...I m going 2mrw...
Thanks for sholinur temple darshan
❤❤
20 mins not sir...24 mins...
thanks bro. i corrected now in subtitles.
Temple timings Ena bro?