தமிழ் வளர்க்க போராடும் வாத்தியார் | Tamil saalai | இப்படியும் தமிழ் படிக்கலாமா|Positivitea

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ • 570

  • @sangeethadivsangeethadiv7609
    @sangeethadivsangeethadiv7609 Рік тому +283

    இவரைப் போன்ற ஆசிரியர் தமிழில் மட்டுமல்ல அனைத்து பாடங்களிலும் கிடைத்தால்இன்றைய குழந்தைச் செல்வங்கள் கல்வியை சுமையாக அல்ல சுகமாக படிப்பார்கள்.ஐயாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.இதேபோன்று அனைத்து பள்ளிகளிலும் அனைத்துப் பாடங்களுக்கும் ஆசிரியர்கள் அமைய வேண்டும் என்பதே எனது மிகப்பெரிய ஏக்கம்😢.

    • @kalvisaalai
      @kalvisaalai Рік тому +6

      நன்றி.

    • @sangeethadivsangeethadiv7609
      @sangeethadivsangeethadiv7609 Рік тому +4

      @@kalvisaalai மிகவும் சந்தோஷம் ஐயா

    • @karthicks859
      @karthicks859 Рік тому +3

      100% உண்மை 🙏

    • @mraa07rmchannel
      @mraa07rmchannel Рік тому +3

      ​@@kalvisaalaiஉங்களின் காணேளிக்கள் அனைத்தும் அருமை,

    • @Sasiragavan
      @Sasiragavan Рік тому +3

      உண்மையை சொன்னீர்கள்

  • @ayyappansri
    @ayyappansri Рік тому +53

    சுவாசத்தை உண்டு செய்யும் இடம் "வல்லினம்" (மார்பகம் - நுரையீரல்)
    சுவாசத்தை உள்வாங்கி வெளிக்கொண்டு செல்லும் இடம் "மெல்லினம்" (மூக்கு)
    சுவாசத்தை கிடத்தி செல்லும் இடம் "இடையினம்" (குரல் வளை / குரல் அலை)
    ஒட்டு மொத்தத்தில் நாம் எல்லோரும் தமிழினம்.
    வாழ்க தமிழ்! வெல்க தமிழ்!!

  • @sivaramansivaraman9378
    @sivaramansivaraman9378 Рік тому +130

    இந்த ஆசிரியரின் செயலுக்கு அங்கீகாரம் அளித்த தேனீர் இடைவெளிக்கு மனமார்ந்த நன்றிகள்.. 😊.. இவரின் மற்றொரு நேர்காணலுக்காக காத்திருக்கிறேன்.. 😊

    • @jayamsethuraman9300
      @jayamsethuraman9300 11 місяців тому +1

      தேநீர் ...தேயிலை நீர்
      தேனீர்....தேனில் இணைந்த நீர்

    • @karthistudioambai8496
      @karthistudioambai8496 10 місяців тому

      Super

  • @ThamizhAsivagam
    @ThamizhAsivagam 11 місяців тому +11

    தமிழ் மொழியின் சில விதிகள் :
    ௧) வினைத்தொகையில் ஒற்று எழுத்து வரக்கூடாது. 6:58
    ௨) கள் என்று முடியும் இடத்தில் ஒற்றெழுத்து வரக்கூடாது. 12:57
    ௩)
    •மூன்று சுழி ண் வந்தால் அதற்கு அருகில் ட தான் வரும் அல்லது ண வரும்(டண்ணகரம்).
    °இரண்டு சுழி ன் வந்தால் அதற்கு அருகில் ற தான் வரும் அல்லது ன வரும்(றன்னகரம்). 25:09
    ௪) மேல்நோக்கு லகரம் அடுத்து ஒற்றெழுத்து வரக்கூடாது. 26:02
    ௫) ல் ஆனது ற் ஆக திரியும்.
    ள் ஆனது ட் ஆக திரியும். 26:21
    ௬) சிறப்பு லகர ழ்க்கு அடுத்து ஒற்றெழுத்து கண்டிப்பாக வரும். 27:11
    ௭) தமிழ் என்கிற மொழி சொல் வரும்போது அந்த மொழிச் சொல்லை தொடர்ந்து வினைமுற்றாக இருந்தால் அந்த இடத்தில் ஒற்றை எழுத்து மிகாது. 27:30
    ௮) தமிழைக் கற்றான் என்ற சொல்லில் ஐ வெளிப்படையாக வருவதால் ஒற்றெழுத்து மிகும். 28:04
    ௯) நேர் எதிர் சொற்கள் சந்திக்கும்போது ஒற்றெழுத்து மிகாது. 28:34

  • @vijayEE-zo8do
    @vijayEE-zo8do Рік тому +72

    தமிழ் ஆசிரியர்கள் அனைவரும் இவரைப் போன்று இருக்க வேண்டும் 🙏🏻🙏🏻

    • @Navasakthi-yi8pt
      @Navasakthi-yi8pt Рік тому +2

      செந்நாய் புலவன், மதுரையில் சமீபத்தில் நான் பார்த்த பதாகை. செந்நாப்புலவர்.

    • @-Ravanan7958
      @-Ravanan7958 Рік тому

      ​@@Navasakthi-yi8pt ஏன்🤔

  • @hitbeautytech7704
    @hitbeautytech7704 11 місяців тому +5

    ஓரெழுத்து ஒருமொழியில் கள் பன்மைக்குப்பின் ஒற்று வரும் பூக்கள்,ஈக்கள்...

  • @francisplatiney8939
    @francisplatiney8939 Рік тому +41

    எனது மனைவியின் கர்ப்பகாலத்தில், 7 மாத கருவில் இருக்கும் குழந்தைக்கு ஐயாவின் வலையொளி யில் வெளிவந்த "ஏட்டில் படித்ததோடு இருந்துவிடாதே , நாம் ஏன் படித்தோம் என்பதையும் மறந்துவிடாதே"
    என்ற பாடலை என் குரலில் ஒலிப்பதிவு செய்து, தினமும் காலை ஒலித்து கேட்க செய்தேன்

    • @pavunraj5740
      @pavunraj5740 Рік тому +4

      அருமை மிகமிக அருமை சகோ தரா நல்லகருத்து வாழ்த்துகள்

    • @kalikayu
      @kalikayu Рік тому +3

      💯மிக அருமை...

    • @daisyp1121
      @daisyp1121 Рік тому +1

      Super

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 Рік тому +13

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் 84 மதிப்பெண் பெற்றேன் ...
    பணிரெண்டாம் வகுப்பில் 154 மதிப்பெண் பெற்றேன்..
    தமிழின் மீது ஆர்வம் மற்றும் எங்கள் பள்ளியின் தமிழ் ஆசிரியர்கள் 2007-2010 கல்வி ஆண்டுகள் -மரியாதைக்குரிய
    திருமதி வினோதினிஅவர்கள் மற்றும் மரியாதைக்குரிய திருமதி அன்பரசி அவர்கள் ஆகியோர்களை இந்த நேரத்தில் வணங்கி மகிழ்கின்றேன்...

  • @சி.ஜெ.அ.வைத்தீஸ்வரன்

    நெறியாளர் அண்ணன் அவர்கள் வாழ்த்துகள் தொடர்ந்து தமிழில் பேசி காணொளியை பதிவு செய்து வெளியிடுங்கள் நமது தாய் மொழியை வாழ வையுங்கள்.

    • @dasarathanshanmugam7249
      @dasarathanshanmugam7249 Рік тому +2

      இன்னும் நிறைய பேசுங்கள்

    • @Numbers0123
      @Numbers0123 Рік тому +1

      வாழ்த்துக்கள் என்று பழகிடிச்சு,, அதனால விதியை மற்றுங்கள்😊 புதுமைக்கு மாறட்டும் தமிழ் !
      அப்படியே, ரெண்டு மூணா ஒலிக்கும் ர/ற, ல/ள/ழ, ந/ண/ன, போன்றவற்றை ஒற்றை எழுத்தாக்குங்கள். (பெரிய "ற" வா சின்ன ர வான்னு ஒரே கன்ப்யூசனா ஆகுது!
      அதுகூடவே, "பட் ஆனா" என்பதை தமிழில் சேருங்கள்!
      தமிழ் வாழும் வளரும் !

  • @arul15099
    @arul15099 10 місяців тому +2

    தமிழ் வளர்ககப் போராடும் என்ற வரவேண்டும் ஐயா.

  • @PriyababuBabu-i6d
    @PriyababuBabu-i6d 8 місяців тому +2

    ஐயா; வாழ்க தமிழ் ,தமிழ் வாழ்க...

  • @RahulRahul-mn2jr
    @RahulRahul-mn2jr Рік тому +7

    தமிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.....
    வீரம் கற்றுத்தந்த எங்கள் தமிழை அழகாக பிழைகளை திருத்தி கற்றுத் தந்த ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்... ஈழத்தில் இருந்து தமிழ் அன்பன் ❤

  • @prabavathi7014
    @prabavathi7014 Рік тому +2

    Naama tamilnadulla irundhalum namma Tamila yendhalavuku zerova irukomnu ippodhu puriudhung iyya romba romba nandri

  • @seethajayaraman7243
    @seethajayaraman7243 Рік тому +9

    உங்களோடு பணி செய்யவேண்டும் என்று மனம் விரும்புதையா . நன்றி , மகிழ்ச்சி .தமிழோடு விளையாடுவோம். “ழ”வை சரியாக உச்சரிக்க வைக்க வேண்டும் அனைவரையும். “ழ”தானே தமிழுக்குப் பெருமையே 👍

  • @rajkumarn9639
    @rajkumarn9639 Рік тому +14

    நான் ராஜகுமார்.நா
    காஞ்சிபுரம்.
    இதுநாள் வரை ஐயா கதிரவன் போன்றவரை தான் தேடிகொண்டு இருந்தேன் 🎉
    தேநீர் இடைவேளை சேனலுக்கு நன்றி🎉🙏🏽

  • @ambosamy3453
    @ambosamy3453 10 місяців тому +1

    தமிழ் இனி வேகமாக வாழும் ...வளரும்...!
    ஐயா போன்ற அறிஞர்களை வெளிச்சத்துக்க கொண்டு வந்ததால்.

  • @ranahasuran
    @ranahasuran Рік тому +33

    கன்னல் தமிழை கற்றோர் மட்டுமல்லாது கல்லாதோர்க்கும் எளிதில் விளங்க பயனுற பயிற்றுவிக்கும் கதிரவன் ஐயா அவர்கள் மேலும் மேலும் பல உயரங்களை எட்ட வேண்டும் என்று உளமார வாழ்த்துகிறேன்...

  • @thangavelsithamparapillai1061
    @thangavelsithamparapillai1061 11 місяців тому +8

    *தமிழை வளா்ப்போம்
    தமிழைக்காப்போம்.
    *தமிழ் "கற்போம்
    *தமிழைக் கற்போம்.
    *தமிழைக்காப்போம்
    தமிழ்ப் பேராசிாியா்
    அவா்கட்கும்."ஊடக
    இயக்குநா்"
    அவா்கட்கும்
    நன்றி,
    ன்றியுடன்"
    K..N.

  • @subhamuthu6255
    @subhamuthu6255 Рік тому +6

    நீங்கள் நீண்ட ஆயுளும், ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்." என் மாணவன் எல்லோரும் மன்னர்கள்" என்று சொல்ல கேட்கிறேன்.

  • @subramanig3
    @subramanig3 Рік тому +23

    நெறியாளர் மிகச்சிறப்பாக தன் பணியைச் செவ்வனே செய்துள்ளார் வாழ்த்துக்கள் சகோதரரே.

  • @tamizh11
    @tamizh11 10 місяців тому +1

    மிகவும் நன்று..தமிழ் அய்யாவின் இது போன்ற காணொளிக்காக.. காத்திருக்கி
    றோம் தமிழ் அறிய... ஆவலுடன்.....

  • @syedresavumydeen9101
    @syedresavumydeen9101 Рік тому +2

    மிக அருமையான தழிழ் சொற்க்கள். ஆங்கில பாடத்தில்கூட 100க்கு 100 மதிப்பெண் பெற்று விடலாம்.தமிழில் புலவர் களைத் தவிர மற்றவர்களுக்கு1சதவிகிதமாவது பிழை வருகிறது.உங்கள் சேவை மிக மிக போற்றத்தக்கது.பாராட்டுகள்.

  • @ravi.sgrb.pugazharuvi2980
    @ravi.sgrb.pugazharuvi2980 Рік тому +5

    ஐயா இன்று காலையில் எழுந்தவுடன் உங்கள் காணொலி பார்த்தேன் மிக தெளிவாக உள்ளது என் மனது நன்றி ஐயா நன்றி தேனீர் இடைவேளை

  • @rajasekarank689
    @rajasekarank689 11 місяців тому +1

    ஐயா வணக்கம் தங்களின் அறிவுரை விளக்கங்கள் எனக்கு
    மட்டுமல்ல இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் அனைவருக்கும் பயன் தரும் நிகழ்ச்சியாக அமைந்திருக்கும் அய்யா🙏

  • @jayamsethuraman9300
    @jayamsethuraman9300 11 місяців тому +1

    நன்முயற்சி.வாழ்க.
    'என்னுடைய மாணவர்கள்' என்று பேட்டியில் சொல்கிறீர்கள். 'என் மாணவர்கள் ' என்றுதானே சொல்லவேண்டும். வீடியோ, யூடியூப் என்ற சொற்களுக்குத்தமிழ்ச்சொற்களைப்பயன்படுத்தியிருக்கலாம்.
    வாழ்க....

  • @palanisamyr998
    @palanisamyr998 Рік тому +2

    நெறியாளர் மிக சிறப்பு தான் கேள்விகளால் நல்ல பதில் வரவழைக்க முடியும் ❤❤❤❤❤🎉🎉😂😂

  • @agnibrostamil7164
    @agnibrostamil7164 Рік тому +10

    நேர்காணல் செய்யும் சகோதரரின் நோக்கம் , உச்சரிப்புM அருமை. ஐயா, அவர்களின் teachings மிக மிக அவசியம். உங்கள் சேவை தொடரட்டும்.

  • @nallasamy6423
    @nallasamy6423 Рік тому +3

    தமிழ் நாட்டில் உள்ள அனைத்து அரசு தமிழ் ஆசிரியர்கள் அனைவரும் இவரை போன்று தமிழ் கற்பித்தால் மிகவும் அருமையாக இருக்கும் 🙏🙏

  • @vethamaran3006
    @vethamaran3006 Рік тому +2

    உங்களது பாதம் தொட்டு வணங்க ஆசையாக உள்ளது.

  • @muniasamymuniasamy6793
    @muniasamymuniasamy6793 11 місяців тому +1

    வாழ்த்துக்கள் தமிழ் ஆசிரியர் அய்யா

  • @Devi-y4k
    @Devi-y4k Рік тому +3

    My tamil teacher.. TVS madurai. Proud sir

  • @roselinekirubai9416
    @roselinekirubai9416 Рік тому +6

    தமிழ் இலக்கணம் மீண்டும் பள்ளியில் படித்தது போன்று உள்ளது தங்களின் தமிழ் இலக்கணம் வகுப்பு. தங்களின் தமிழ் இலக்கணம் சேவை மேலும் சிறக்க எங்கள் வாழ்த்துகள்!🎉🎉🎉

  • @vinayakamurthyn5676
    @vinayakamurthyn5676 Рік тому +4

    50ஆண்டுகளுக்குமுன் எனக்குவாய்த தமிழாசிரியர்களைநினைவேற்றி எனது மாணவப் பருவத்தை அசைபோடச்செய்தமைக்கு நன்றி

  • @daisyrani4615
    @daisyrani4615 Рік тому +3

    நான் படிக்கும்போதும் எங்கள் பள்ளியில் தமிழ் ஆசிரியர்கள் மிக அருமையாக பாடம் நடத்துவார்கள் நடராஜன் தமிழ் ஐயா, வரதராஜன் தமிழ் ஐயா பள்ளியில் அத்தனை ஆசிரியர்களுமே மிக மிக அருமையானவர்கள்.

  • @ulike6893
    @ulike6893 Рік тому +2

    மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியும் , தமிழின் மீது மேலும் ஈடுபாடு உண்டாகிறது...
    நன்றி நன்றி நன்றி....

  • @mohamedariff319
    @mohamedariff319 Рік тому +9

    இறைவன் அருளால் ஆசிரியர் கதிரவன் அவர்கள் நூறாண்டுகள் வாழ வாழ்த்துகள்!

  • @paramarajahnaganathar629
    @paramarajahnaganathar629 Рік тому +24

    அற்புதமான உரையாடல்
    கண்டு மெய் சிலிர்த்தேன்.

  • @MagnetMan001
    @MagnetMan001 Рік тому +5

    எம் தமிழ் வளர்க்கும் ஐயாவிற்கு என் இதயம் நிறைந்து அன்பு கலந்த நன்றிகள் 💙✨

  • @umadevimuthuraj699
    @umadevimuthuraj699 Рік тому +6

    நெறியாளருக்கு வாழ்த்துகள். அனைவரும் தமிழில் எழும் சந்தேகங்களை கேட்ட விதம் மிக மிக அருமை..❤

  • @simplypandi4993
    @simplypandi4993 11 місяців тому

    I'm biggest fan of yuvan.
    இந்த பாட்ட நான், என் நண்பர் உதயா - 2 பேருமே, பாடல் வெளிவந்த நாள்ல இருந்து இப்பவும் எப்பவுமே கேட்டுட்டு தான் இருக்கோம்.
    ஆனால் இந்த பாடல் வெளிவந்ததே பலருக்கும் தெரியாது...
    ஆனால் இப்போ இந்த நிகழ்ச்சி ல தெரியப்படுத்தினதுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி & மகிழ்ச்சி ❤💐👌🙏🙏🙏
    "கணித மேதை இராமானுஜன் பெத்த பொண்ணு நீதானா...?
    கற்பனை பண்ணும் மகாகவி கம்பன் மகன் நீதானா...?
    அம்மே... தமிழில் M.A., ... நம்பி வா.....
    குறுந்தொகை கொண்டாடும் காதல் மைந்தா......" ❤

  • @mathijeyaraman2192
    @mathijeyaraman2192 Рік тому +42

    Sir nan TVS school la unga class la 3year padicha student exam la manapada padal la marakavea marakathu ungala intha channel la pathathu romba santhosam❤

    • @gowthamar4531
      @gowthamar4531 4 місяці тому

      Naanu Ivar student tha in TVS school 🎒🎉

    • @gowthamar4531
      @gowthamar4531 4 місяці тому

      Naanu TVS la Ivar class paduchuruke, great tamil ayya🎉, Happy to see him

  • @karthicks859
    @karthicks859 Рік тому +9

    இவர் போன்ற ஆசிரியரை தமிழக அரசு பாடத்திட்ட வாரியாக ஒருமுறை 1-2 மணிநேரம் வகுப்பு/ஆன்லைன் பேசனும்.அடுத்த குழந்தைகள் அழகான தமிழ் பேசுவாங்க 🙏

  • @parthibannatarajan2900
    @parthibannatarajan2900 Рік тому +1

    தமிழ் ஆசிரியருக்கு எங்களது நன்றி கலந்த வாழ்த்துகள், பாராட்டுகள்.மேலும் அவர் தமிழ் வளர்ச்சிக்காக இன்னும் நிறைய செயல்களை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அவரது செயலுக்கு நாமும் உறுதுணையாக இருப்போம் என்று இந்த தருணத்தில் கூறிக் கொள்கிறேன், தேநீர் இடைவேளை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.அவர்களது காணொளி மிகச்சிறப்பானது.❤❤❤❤❤

  • @alagukirubaskitchen5475
    @alagukirubaskitchen5475 Рік тому +3

    ஏன் தமிழ் தேசியம் வேண்டும் என்றால் இது போன்ற நல்ல ஆசிரியர்கள் கூட தங்களாக வருமானம் தேடிக் கொள்வது தான் இன்று நல்ல தமிழ் தெரிந்தவர்களுக்கான நிலை

  • @shanmugamn3795
    @shanmugamn3795 22 дні тому

    தமிழ் ஆசானே! உனக்குக் கோடி புண்ணியம்.❤

  • @ponmudirponmudir8347
    @ponmudirponmudir8347 Рік тому +2

    ஐயாவிற்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். தங்களை கைகூப்பி வணங்குகிறேன்.

  • @BalaMurugan-ie8ej
    @BalaMurugan-ie8ej Рік тому +2

    நான் தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளி மாணவன், என் தமிழ் ஐயா பௌலியன்ஸ் அவர்கள் அவரும் இவரைப்போலவே. வாழ்த்துகள் ஐயா.

  • @thangapandiyan4282
    @thangapandiyan4282 Рік тому +3

    இவ்வளவு நேரம் இந்த கானெளியை எப்படி பார்த்தேன் எனக்கே ஆச்சரியமாக இருந்தது அவ்வளவு அருமையான பதிவு ❤❤❤❤🙏🙏🙏

  • @மஆபிரகாம்
    @மஆபிரகாம் Рік тому +5

    தமிழ் நாடு இவரைப் பாராட்ட வேண்டும்

  • @vasanthkumar5210
    @vasanthkumar5210 5 місяців тому +1

    கண் கலங்கிவிட்டேன், வாழ்த்துகள்

  • @gunasekaran4130
    @gunasekaran4130 Рік тому +1

    நம் தமிழ் ஆசிரியரை மேலும் பிரபலமடைய செய்த உங்களது சேனலுக்கு மிகவும் நன்றி நண்பரே தேனிலும் இனியது தமிழ் தமிழ் வாழ்க நாம் பேசக்கூடிய தமிழ் வார்த்தைகளுக்கு உயிர் இருக்கிறது ஆங்கில வார்த்தைகளுக்கு உயிர் கிடையாது நாம் பேசும் தமிழ் வார்த்தைகளால் உணர்ச்சி வசப்படுகிறோம் ஆனால் ஆங்கிலம் பேசும்போது அது கிடையாது

  • @phandu7288
    @phandu7288 11 місяців тому

    யார்ராக இருந்தாலும் பேசு வார்த்தைகள் தமிழ்ளாக இருந்தால் கேட்கும் போதே பெரானந்தம் கொள்வேன்.

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Рік тому +9

    உண்மையாக இறைசக்திதான் தமிழ்சக்தி...❤வாழ்த்துகள் ஐயா

  • @seethajayaraman7243
    @seethajayaraman7243 Рік тому +1

    ஆஹா !! தமிழே !! அருமை ! அருமை !! உன்னை எப்படி பயன்படுத்துவது என்று இன்று அறிகிறோம் . தமிழ் ஆசிரியருக்கு வணக்கங்கள் பல . என் எழுத்துக்கள் சரியா ஐயா ?

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 Рік тому +4

    ஐயாவை போல். இலங்கைசாகுல் அமீது..
    தமிழ் மொழியை அழகாக
    எடுத்துச் செல்கிறீர்கள்...🙏

  • @sarumathiselvakumar
    @sarumathiselvakumar Рік тому +4

    ஒரு நல்ல காணொளியைப் பார்த்த திருப்தி ஐயா நன்றி ❤

  • @KalaiyarasanKalaimani-pz7yk
    @KalaiyarasanKalaimani-pz7yk Рік тому +7

    அய்யா வணக்கம் உங்கள் கல்விச்சாலை யூடிப் சேனலை பின் தொடர்கிறேன் உங்கள் பணி தொடர்க வாழ்த்துகள், அதேபோல நம்ம " தேநீர் இடைவேளை" உங்கள் வீடியோ அனைத்தும் பயனுள்ள தகவல் உங்கள் பணி தொடர்க வாழ்த்துகள் ,,,,,,

  • @pkarthik-2265
    @pkarthik-2265 6 місяців тому +1

    ஐயா தமிழ் இவ்வளவு சிறப்பு இருக்குது இப்பதான் ஐயா தெரிகிறது இப்பதான் தமிழ் படிக்க ஆர்வமாக உள்ளது நாங்கள் படிக்கும் போது இது மாதிரி சொல்லிக் கொடுத்திருந்தா நாங்கள் எப்பொழுது தமிழ் கத்திருப்போம்

  • @seemabiju4413
    @seemabiju4413 4 місяці тому +1

    நான் ஒரு கேரளாவில் படித்த தமிழ் ஆசிரியை.. எனக்கு தமிழ் நிறைய கற்க வேண்டும் என்ற ஆர்வம் தினம் தினம் தோன்றுகிறது.. காரணம் நீங்க ளும் நீங்கள் கற்றுதரும் தமிழும் அத்தனை அழகு எளிமை புரிதல் அருமை ஐயா..❤❤❤❤❤

  • @RoseRose-om8ep
    @RoseRose-om8ep Рік тому +28

    ஆத்மார்த்த நிகழ்ச்சி
    அற்புதமான உரையாடல்
    கண்டு மெய் சிலிர்த்தேன்
    என் தமிழ் ஆசிரியயைக்கு முதலில் என் நன்றி. அவர்கள் தான் எனக்கு தமிழை ஊட்டி வளர்த்தார்கள். தரமான நிகழ்ச்சியை வழங்கிய தாங்களுக்கும் மிக்க நன்றி.

  • @shanNeoV
    @shanNeoV Рік тому +9

    இது போன்ற நல்ல காணொளிகளை எங்களுக்கு கொடுத்து கொண்டே இருங்கள்... பட்டிமன்றம் ஒன்றை உங்கள் தளத்தில் எதிர் பார்க்கிறேன்...😊

  • @MarimuthuKulandaivelu
    @MarimuthuKulandaivelu 4 місяці тому +1

    வாழ்கநலமுடன்வளர்கவளமுடன்

  • @lavanya2496
    @lavanya2496 Рік тому +3

    கருத்துரைகளும் மதிப்பீடுகளும் நல்ல தமிழில் இடம் பெறலாம். தமிழ் நிலைக்கும். தமிழ் நெஞ்சங்களில் மகிழ்ச்சி, பெருக்கெடுக்கும். நன்றி 🙏

  • @vijiyananthansenthil171
    @vijiyananthansenthil171 Рік тому +7

    நல்ல ஆசிரியர் ❤வணக்கம் 🙏🙏🙏வாழ்த்துக்கள் 🙏🙏

    • @sankarr5452
      @sankarr5452 Рік тому +1

      வாழ்த்துக்கள் அல்ல வாழ்த்துகள்

  • @Gokulcameraman
    @Gokulcameraman Рік тому +6

    ஆரம்பத்தில் ஆங்கில சொற்கள் இல்லாமல் பேச வேண்டும் என்று நெறியாளர் ஆயத்தமாகி விட்டு அடுத்த சில நிமிடங்களிலேயே youtube channel என்ற ஆங்கில சொற்கள் கூறுகிறார் 😃 . கதிரவன் ஐயன் நல்ல நேர்காணல் வாழ்த்துகள் 🤝

  • @rajendhiranm5309
    @rajendhiranm5309 7 місяців тому +1

    இதைக்காணும்போது
    தி மலை மாவட்டம் அரட்டவாடி குக் கிராமத்தில் என் தமிழாசிரியர் புலவர் கோவிந்தன் ஐயா

  • @jkmaths014
    @jkmaths014 Рік тому +8

    எங்கள் பள்ளி ஓரு சிறந்த ஆசிரியரை இழந்து விட்டது.

    • @kalvisaalai
      @kalvisaalai Рік тому +8

      டி.வி.எஸ். மேனிலைப்பள்ளியில் 2004 முதல் 2018 வரை பணிபுரிந்தேன். அதைத்தான் எம் தம்பி திரு.கண்ணன் குறிப்பிட்டுள்ளார்.❤

    • @pravink-ls6nr
      @pravink-ls6nr Рік тому +1

      ஒரு சிறந்த ஆசிரியர்
      ( ஓர் × ஒரு )

  • @seeralanganapathy8378
    @seeralanganapathy8378 Рік тому +1

    ஐயா உங்களுக்கு மிக்க நன்றி ஐயா உங்கள பனி தொடர எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்

  • @Tamilselvam.K
    @Tamilselvam.K Рік тому +3

    ஆசிரியர் பெருமக்கள் தான் மாணாக்களுக்கு முதல் பெற்றோர் ❤️❤️🙏🙏🙏🙏🙏🙏

  • @jahneychriast2141
    @jahneychriast2141 Рік тому +3

    He is a wonderfully gifted man!! இவரிடம் இருந்து நான் படிக்கிறேன் !!

  • @gengaikumar1993
    @gengaikumar1993 10 місяців тому

    மிகவும் எளிமையாக விளக்கம் அளிக்கிறார்.
    மகிழ்ச்சி...
    வாழ்த்துகள்.

  • @RajKumar-h4e2k
    @RajKumar-h4e2k Рік тому +3

    ஐயா நீங்கள் எங்கள் ஊர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்

  • @seethajayaraman7243
    @seethajayaraman7243 Рік тому +4

    இந்தபேட்டியை அளித்த உங்களுக்கு மிக்க நன்றி ஐயா !
    வாழ்க வளமுடன் !!

  • @sarankumar.r1167
    @sarankumar.r1167 9 місяців тому

    ஐயா தமிழ் மேல் உள்ள ஆர்வத்தை மென்மேலும் தூண்டியதிற்கு நன்றி

  • @loganathanperumal7031
    @loganathanperumal7031 11 місяців тому

    Vazhtha vayathillai . Thangal thazh paninthu vanagugiren.
    Thangalin vilakkam,en palli aasiriyai thamizh ammavai ninavootiyathu. Nandri. Vazhga Tamizh.

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Рік тому +3

    அருமையான பதிவு ஐயா எனக்கு எங்கள் தமிழ் ஆசிரியர் ரமேஷ் ஐயா சற்று ஞாபகத்திற்கு வருகிறார் உங்களைப் போல் அவரும் அற்புதமாக தமிழை மாணவர்களுக்கு கற்றுத் தரும் விதத்தில் கற்றுத் தருவார் நீங்கள் சொல்வது போல் வல்லினம் மெல்லினம் இடையினம் இதன் பொருள் அவரும் எனக்கு அப்படித்தான் பிறப்பிடம் அதிர்வு அலை சொல்லிக் கொடுத்தார்❤😊❤😊😊😊❤❤😊

  • @நீர்மருத்துவம்942

    ஆல் போல் தழைத்து அருகு போல வேரோடி, மூங்கில் போல் சுற்றம் முசியாமல் வாழ்க..விண்வெளியாய் விரிக விண்வெளியாய் விரிக விண்வெளியாய் விரிக விண்வெளியாய் விரிக விண்வெளியாய் விரிக விண்வெளியாய் விரிக

  • @srinivasangovindaraj1708
    @srinivasangovindaraj1708 Рік тому +2

    மிக்க நன்றி.... இதனால் தான் தேனீர் இடைவேளை வலையொளியை பின்தொடர்கின்றோம்.... நீண்ட நாட்களுக்கு பிறகு சிரிப்பும் சிந்தனையும் ஒரு சேர தந்த நிகழ்வு...பசிய மறந்து பார்த்துக்கொண்டு இருந்தேன் நன்றி 🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏

  • @amburosssavarimuthu9452
    @amburosssavarimuthu9452 Рік тому

    வாழ்த்துகள் ஆசிரியர் அவர்களுக்கு மக்களே எல்லோரும் ரோம்ப நிறைவாக சொல்லும் சொல் super இதற்கு மாற்றாக ரொம்ப குதூகலமாக,திரு கவுண்டமணி சொன்னதுபோல் கிளுகிளுப்பாக,நெகிழ்வாக,என்று சொல்லலாம் வாழ்க தமிழ்.

  • @Bharathiyan
    @Bharathiyan Рік тому +2

    நான் உங்கள் மாணவன் என்பதில் மிக பெருமை அடைகிறேன் அய்யா

  • @PulendraMohanachandran-on6pb
    @PulendraMohanachandran-on6pb 3 місяці тому

    🙏அருமையான விளக்கம் ஐயா மென்மேலும் தமிழ் வாழ்க❤️

  • @panneerselvamnavappin2857
    @panneerselvamnavappin2857 Рік тому +1

    பல்நோக்கு நல்ல முயற்சி!வளர்க, வெல்க தமிழ் மொழி சேவை! வாழ்க தமிழ்!

  • @mscreativestamil6129
    @mscreativestamil6129 3 місяці тому

    ஐயா என்னது பள்ளி பருவத்தை உங்கள் வகுப்பறையில் செலவிடவில்லை என்பதில் வருத்தம் இருந்தாலும் உங்கள் காணொளியை பார்க்கும் பொழுது நான் மாணவராக அங்கு அமர்ந்து இருப்பது போன்று தோன்றுகிறது
    உங்கள் பணியை மென்மேலும் மேம்படுத்த எனது வாழ்த்துக்கள் 🙏

  • @Don-Killer-
    @Don-Killer- Рік тому +4

    தமிழ் கடல் அய்யா கதிரவன் வாழ்க பல்லாண்டு‌.‌‌❤❤❤

  • @rkbala2189
    @rkbala2189 Рік тому +9

    நிகழ்ச்சி மிகவும் அருமை..ஆசிரியர் அவர்களுக்கும் நெறியாளர் அவர்களுக்கும் வாழ்த்துகள்❤❤❤

  • @vinoth3159
    @vinoth3159 11 місяців тому

    தமிழ் ஐயா வாழ்க❤🎉😊

  • @devipriya3365
    @devipriya3365 Рік тому

    Tamil வாழ்க தமிழ் ஆசிரியர் வாழ்க

  • @geetharam9341
    @geetharam9341 3 місяці тому

    அருமை அருமை ஐயா நீங்க சொல்ற மாதிரி தமிழ் ஆசிரியர் வகுப்புக்காக காத்திருப்பார்கள்

  • @vaishuvaishu9361
    @vaishuvaishu9361 Рік тому +1

    பயணம் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா...

  • @karthikeyanveerabahu4029
    @karthikeyanveerabahu4029 11 місяців тому

    படித்தவர்கள் கூட தமிழையும், இலக்கணத்தையும் மறந்து வரும் நிலையில்
    இது இப்போது மிக அவசியமான ஒன்று. அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் தமிழ் இளைஞர்கள் தமிழில் ஆர்வமின்றி இருக்கின்றனர். காரணம், அவர்களிடம் எழும் இதுபோன்ற ஐயங்களை தீர்க்க போதுமான அளவு வாய்ப்புகளை ஏற்படுத்த தவறிவருகிறோம். காணும் இடங்களிலெல்லாம் தமிழ் வியாபித்து இருக்க செய்ய வேண்டும். அதுவும் இலக்கணப் பிழையின்றி. இதை அரசும், சமூகமும் உறுதிப் படுத்த வேண்டும். தமிழ்,தமிழ் என வெறுமென புலம்பாமல், ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்யவேண்டும்.

  • @YADHUMANAVAL-yadhumanaval...
    @YADHUMANAVAL-yadhumanaval... Рік тому +1

    உண்மையாகவே நீங்கள் ஒரு சகாப்தம் ❤❤❤

  • @ilangoj7816
    @ilangoj7816 Рік тому +1

    நான் பார்த்ததிலேயே மிக அருமையான காணொளி

  • @SUTHESWARANPRIYANKANSPRIYANKAN

    எனக்கு ஒரு சந்தேகம் கள் விகுதி வரும் போது இரட்டிக்காது எண்டிங்க பசுக்கள் தானே சரி 😊

    • @memorytipschannel
      @memorytipschannel 5 місяців тому +1

      முற்றியலுகரத்திற்குப் பின் வல்லினம் மிகும்🙏

  • @senthurpothikulam9799
    @senthurpothikulam9799 Рік тому +2

    வாழ்த்துகள் 🙏🙏🙏

  • @vijayamohan8173
    @vijayamohan8173 Рік тому

    மிகச்சிறந்த ஆசிரியர் நீங்க..நானும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் தான்.🎉🎉🎉 எனக்கு தேநீர் இடைவேளை வலையொலி மிகவும் பிடிக்கும்.

  • @vv-ky4bi
    @vv-ky4bi Рік тому +3

    He is one of the great tamil teacher i have ever seen

  • @Drstephenmickelraj
    @Drstephenmickelraj Рік тому +3

    பெருமகிழ்ச்சி.. பேரன்பு நல்வாழ்த்துகள் கதிரவன் அண்ணா..❤❤

  • @manimegalaikrishnan7872
    @manimegalaikrishnan7872 11 місяців тому

    Im from Malaysia learning a lot from sir

  • @soopersubuu
    @soopersubuu Рік тому +1

    ❤ தமிழ் வெல்லும் ❤
    #வாழ்கதமிழ் ❤

  • @rajendraramasamy7034
    @rajendraramasamy7034 Рік тому +1

    மிகவும் மகிழ்ச்சி ஐயாவை பேட்டி கண்டதற்க்கு

    • @renukadeviramaswamy5373
      @renukadeviramaswamy5373 Рік тому

      ‘கண்டதற்கு ‘என்பதுதான் சரி வல்லின ற அருகே ஒற்று வராது