Palaivana Solai Movie Songs | Back To Back Video Songs | Chandrasekhar | Suhasini | Rajeev

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 17

  • @H.s.prabhuH.s.prabhu
    @H.s.prabhuH.s.prabhu Місяць тому +6

    இந்த படத்தின் இசை அமைப்பாளர் திரு சங்கர் கணேஷ்

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 9 місяців тому +2

    இந்த படப் பாடல்கள் எல்லாம் ஹிட் ஆனவை ஆனால் 1பாட்டை தவிர மற்ற பாடல்கள் காணவில்லையே வருத்தமே !

  • @PS2-6079
    @PS2-6079 5 місяців тому +11

    1981-ம் ஆண்டு ராபர்ட் - ராஜசேகரன் (இரட்டையர்கள்) இயக்கத்தில் சுஹாசினி, சந்திரசேகர், தியாகு, ஜனகராஜ், ராஜீவ் மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த படம் தான் "பாலைவனச் சோலை". இந்த இரட்டையர்களில் இசை மீது அதீத ஆர்வம் கொண்ட ராபர்ட் ஒரு சிறந்த கிட்டாரிஸ்டாகவும் வலம் வந்தார். இவர்கள் தான் இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமாரை தமிழ் திரை உலகிற்கு அறிமுகப் படுத்தியவர்கள்!
    தமிழ் திரை உலகில் காதலைப் போன்று நட்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படங்களில் இந்தப் படமும் அடங்கும். ஆணும், பெண்ணும் பழகினாலே அது காதலாகத் தான் இருக்கும் என்ற கருத்தினைத் தகர்த்து மாசற்ற நட்புடன் அவர்கள் இப்படியும் வாழலாம் என்று பாடம் புகட்டி நாற்பத்திமூன்றாண்டு கடந்து விட்டபோதிலும் நட்பிற்கு இலக்கணமாக இப்படத்தை மேற்கோள் காட்டலாம் அல்லவா?
    பொறுப்பில்லாத, வேலையில்லாத வாலிபர்கள் மத்தியில் பெண் ஒருத்தி கள்ளம் கபடமில்லாத நட்போடும், நம்பிக்கையோடும் பழகுவதை திரை காவியமாக காட்டி அதில் இரட்டையர்கள் வெற்றி பெற்றதை மறுக்க முடியாதல்லவா?
    ராபர்ட் என்கின்ற ராபர்ட் ஆசிர்வாதம் & ராஜசேகர் இருவரும் 1971 - 74 கல்வியாண்டில் சென்னை அடையாறு திரைப்படக் கல்லூரியில் ஒன்றாக ஒளிப்பதிவு படித்து விட்டு 1979-ம் ஆண்டு எழுத்தாளர் ஜெயபாரதி இயக்கத்தில் தமிழில் வெளியான கடைசி கறுப்பு வெள்ளைத் திரைப்படமான "குடிசை"க்கு ஒளிப்பதிவு செய்தார்கள். "ஒரு தலை ராகம்" திரைப்படத்தின் ஒளிப்பதிவிற்கு அங்கீகாரம் கிடைத்த கையோடு, இருவரும் சேர்ந்து ‘பாலைவனச் சோலை’ படத்தை இயக்கி வெற்றி பெற்றனர். முக்கிய வேடத்தில் நடித்த சுஹாசினியின் கதாபாத்திரம் அப்போது எல்லோராலும் பேசப்பட்டது!
    பிறகு பிரபு நடித்த "மனசுக்குள் மத்தாப்பு", ராம்கி நடித்த 'சின்னப்பூவே மெல்லப்பேசு", "கல்யாண காலம்", "தூரம் அதிகம் இல்லை", "பறவைகள் பலவிதம்", "தூரத்து பச்சை" ஆகிய படங்களையும் இருவரும் சேர்ந்து இயக்கினார்கள்.
    "மனசுக்குள் மத்தாப்பூ" பட நாயகி சரண்யாவை ராஜசேகர் காதலித்து திருமணம் செய்ததை ராபர்ட் விரும்பாததால் அவர்களது நீண்டகால நட்பில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து இரட்டையர்கள் பிரிந்து தனித்தனி பாதையை தேர்ந்தெடுத்து பயணித்தார்கள் என்பது தானே நிதர்சனம்!
    அதைவிட நண்பனை இழக்கக் காரணமான அந்தத் திருமண பந்தம் மூன்றாண்டுகளில் முறிந்து போகும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்!
    பாரதிராஜா இயக்கிய "நிழல்கள்" படத்தில் கதாநாயகனாக ராஜசேகர் அறிமுகமாகி பிரபலமானதால் தொடர்ந்து சில படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. திரை உலக வாழ்வில் ஏற்றத்தை தக்க வைக்க முடியாமல் அவரை சின்னத்திரை பக்கம் ஒதுங்க செய்ததும் காலம் செய்த கோலம் அல்லவா?
    ராஜசேகரன், 64-வது வயதில் உடல் நலம் குன்றி மறைந்தது திரை துறைக்கு பேரிழப்பாகும்!
    தனி ஆவர்த்தனமாக ராபர்ட் சென்னை திரைப்படக் கல்லூரியில் சில காலம் ஒளிப்பதிவு துறை பேராசிரியராக பணியாற்றினார். பிற்பாடு சில திரைப்படங்களுக்கும், ஆபாவாணன் தயாரிப்பில் பல டி.வி தொடர்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார் ராபர்ட். கடைசி வரையில் திருமணம் செய்து கொள்ளாமல் தனது சகோதரர்களின் குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்த ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ராபர்ட் ஆசிர்வாதம் உடல் நலக்குறைவு காரணமாக தன்னுடைய 68 -வது வயதில் காலமானார். இரட்டையர்கள் இருவரையும் காலம் எடுத்துக் கொண்டபோதிலும் அவர்களது படைப்புகள் மூலம் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதானே நிதர்சனம்!
    நிற்க.
    சரி... பாடல்களுக்கு வருவோம்!
    மலேசியா வாசுதேவன் குரலில், "ஆளானாலும் ஆளு", SPB குரலில்,
    "எங்கள் கதை" & "பௌர்ணமி நேரம்", வாணி ஜெயராம் குரலில், "மேகமே மேகமே" என நான்கு முத்தான பாடல்களுக்கான பாடலாசிரியர் வைரமுத்துவின் கற்பனை வரிகள் சங்கர்-கணேஷின் இசை மெட்டுக்குள் கட்டுண்டு சித்து வேலை செய்ததை என்னவென்று சொல்ல?
    இனிமையான இப்பாடல்கள் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன்.
    நன்றி. மீண்டும் ரசிப்போம்!
    ப.சிவசங்கர்.
    23-05-2024

    • @Balamuruganthilgavathi69Balamu
      @Balamuruganthilgavathi69Balamu 3 місяці тому +1

      Intha padathi nengal. Yevelau rasithu irukirergal. Endru thrigirathu

    • @PS2-6079
      @PS2-6079 3 місяці тому

      @@Balamuruganthilgavathi69Balamu பதிவிற்கு நன்றி மேடம்.

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 5 місяців тому +2

    அருமையானபாடல்கள்❤❤

  • @m.subramanianm.subramanian7394
    @m.subramanianm.subramanian7394 6 місяців тому +3

    Super song

  • @dr.s.karthik3194
    @dr.s.karthik3194 Рік тому +3

    Songs super

  • @muthukrishnan6310
    @muthukrishnan6310 3 місяці тому +2

    Music sankarganesh

  • @SivasankaranP-x1y
    @SivasankaranP-x1y 2 місяці тому +2

    Sankar ganesh

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 2 місяці тому

      மூன்றாவது சரணம்
      ராகம் (மெட்டு)
      மிக அருமை

  • @PrabhaKaran-rh6cf
    @PrabhaKaran-rh6cf 8 місяців тому +7

    இந்த படத்தின் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா

    • @balamuruganramanujam1044
      @balamuruganramanujam1044 7 місяців тому +3

      அடப்பாவி இந்த படத்தின் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்

    • @user-yg8hy8zz4t
      @user-yg8hy8zz4t 6 місяців тому +2

      ஆம் இப்படத்தின் இசையமைப்பாளர் கணேஷ் தான்.ஆதாரம் சங்கர்கணேஷின் மனதோடு மனோ நிகழ்ச்சி.

    • @NethiyaNethiya-b3c
      @NethiyaNethiya-b3c Місяць тому

      Ny 18:47 ❤​@@user-yg8hy8zz4t

  • @KanaguM-k4x
    @KanaguM-k4x 13 днів тому +1

    🫶🏹🙏💯♥️👌👈

  • @Maduraikarada
    @Maduraikarada 10 місяців тому

    Harirama superpadal❤😅 1:21