Kaaraaya vanna-Ramanaama sangeerthanam & Pathigam by Vallalar|Prabhakar|phoenix Melodies

Поділитися
Вставка
  • Опубліковано 21 січ 2024
  • திருவருட்பா ஐந்தாம் திருமுறை
    திருவருட் பிரகாச வள்ளலார் அருளிய
    இராமநாம சங்கீர்த்தனம்:
    காராய வண்ண, மணிவண்ண கண்ண! கனசங்கு சக்ர தரநீள்
    சீராய, தூய மலர்வாய நேய, ஸ்ரீராம ராம எனவே
    தாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்க! தாமோத ராய நம ஓம்!
    நாராயணாய நம! வாமனாய நம! கேச வாய நமவே!
    இராமநாமப் பதிகம்:
    திருமகள், எம் பெருமாட்டி மகிழும், வண்ணச்
    செழுங்கனியே! கொழும்பாகே! தேனே! தெய்வத்
    தருமகனைக் காத்தருளக், கரத்தே வென்றித்,
    தனுஎடுத்த ஒருமுதலே! தருமப் பேறே!
    இருமையும் என்னுளத்தமர்ந்த, ராம நாமத்
    து என் அரசே! என் அமுதே! என்தாயே! நின்
    மருமலர்ப்பொன் அடிவழுத்தும் சிறியேன், அந்தோ!
    மனந்தளர்ந்தேன்! அறிந்தும், அருள் வழங்கிலாயே!
    வான்வண்ணக் கருமுகிலே! மழையே! நீல மணிவண்ணக் கொழுஞ்சுடரே! மருந்தே! வானத்
    தேன்வண்ணச் செழுஞ்சுவையே! ராம நாமத்
    தெய்வமே! நின்புகழைத் தெளிந்தே, ஓதா
    ஊன்வண்ணப் புலைவாயார் இடத்தே சென்று, ஆங்கு
    உழைக்கின்றேன், செய்வகை ஒன்றுணரேன்! அந்தோ!
    கான்வண்ணக், குடும்பத்திற்கு இலக்கா என்னைக்,
    காட்டினையே! என்னே! நின் கருணை ஈதோ?
    #thiruvarutpa #vallalar #prabhakar #phoenixmelodies #prabhakardevotionalsongs

КОМЕНТАРІ • 8