சனி பெயர்ச்சி:புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே உள்ளே திருநள்ளாறு சனி பகவான் கோயில் Thirunallar

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • திருநள்ளாறு: புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே உள்ளே திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. திருநள்ளாறு என்றாலே நம் நினைவுக்கு வருவது சனீஸ்வர பகவான் தான் இங்கு அமர்ந்து இருக்கும் ஈசனின் திருப்பெயர் தர்ப்பாரண்யேஸ்வரர். அம்பிகையின் திருப்பெயர் பிராணேஸ்வரி. சனியைப் போல கொடுப்பவரும் இல்லை. சனியை போல கெடுப்பவரும் இல்லை. திரு நளச்சக்கரவர்த்தியின் துயரை ஆற்றியதால் திருநள்ளாறு என பெயர் பெற்றது.
    புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த திருநள்ளாரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நவக்கிரக ஸ்தலங்களில் சனி பரிகார ஸ்தலமாக உள்ள இக்கோவிலில், இரண்டரை ஆண்டிற்கு ஒரு முறை நடக்கும் சனிப்பெயர்ச்சி விழா பிரசித்திப் பெற்றது.

КОМЕНТАРІ • 1

  • @sathiyaraj8960
    @sathiyaraj8960 9 місяців тому

    அருமையான பதிவு