அண்ணா நான் இலங்கையில் இருக்கிறேன். நான் பரியேறும் பெருமாள் படம் பார்ப்பதற்கு முன்னால் ஒரு சினிமா ரசிகனாக இருந்தேன். ஆனால் பரியேறும் பெருமாள் படம் பார்த்த பிறகு நான் இயக்குனர்களின் மீது மிக மரியாதை கொண்டேன்.. அதற்கு முழு காரணம் என் அண்ணா மாரி செல்வராஜ் அவர்கள் தான். நான் இந்த வழிகள் எல்லாம் அனுபவிக்க இல்லை ஆனால் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன். தற்போது வெளியாகியுள்ள வாழை டிரைலர் வரையிலும் என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றது மனதிற்குள் ஏதோ ஒரு மிகப்பெரிய வலி... மாரி செல்வராஜ் அண்ணா அவர்களின் படைப்புகள் அனைத்துமே அற்புதமானது.... 👍👍❤️ வாழை படம் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉💯👍👍❤️❤️❤️ வாழ்க தமிழ் ❤❤❤
என் அம்மா நான் சிறு வயதில் செய்த வேலை காய் தூக்குவது இரண்டு வாழைத்தார் தூக்கி கொண்டு கிடங்கு தாண்டி என்னையும் என் அண்ணாவையும் படிக்க வைத்தாள்... நெஞ்சு வலியுடன்..... 😢 கண் கலங்கிறதுறது......
வாழை நானும் சிறு வயதில் அந்த வாழ்க்கையை அந்த வாழையை சுமந்து இருக்கிறேன். பள்ளி நாட்கள் அல்லாத விடுமுறைகளில் நான் கடந்து வந்த பாதை என் சிறு வயது வாழ்க்கையை கண் முன் நிறுத்துகிறது இந்த வாழை. இது வாழை இல்லை பலரது வாழ்க்கை. நன்றி மாரி செல்வராஜ். என் சிறு வயது வலியை மறக்கவே நினைக்கிறேன்🙏🙏🙏🙏
இயற்கை சார்ந்த காட்சிகள் , படைப்பாற்றல் , ஒளி வடிவம், சொல்லாடல், சினிமா துறைக்கு நீங்கள் கிடைச்சது ஒரு வாரம் உங்களால் சினிமா துறை பெருமை அடைகின்றது , ஆகச் சிறந்த பொக்கிஷம் நீங்கள் !!.
ஒரு சாதாரண கிராமத்து ஏழை மாணவன் கல்வி கற்க குடும்ப பாரத்தை சுமக்க பகுதி நேர வேலைக்கு செல்லும் போது ஏற்படும் இன்னல்களை தொகுத்துள்ளார் மாரி .வாழை வாழட்டும் .வாழ்த்துவோம்
நான் 1987ல் ஒன்பதாம் வகுப்பு பள்ளியில் படிக்கும் பொழுது எங்களின் வகுப்பு ஆசிரியர், அரசு விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்த எங்களை சனி மற்றும் ஞாயிறு விடுமுறையின் போது அவர்களின் வயல் காட்டிற்கு அழைத்துச் சென்று, எள் செடிகளை அறுத்து, அதனை 20 கிலோ அளவுக்கு வாழை நாரை கயிறாக திரித்து கட்டி, அதனை காய வைக்கும் களத்திற்கு தலையில் சுமந்தபடி கிட்டத்தட்ட 1 கிலோமீட்டர் தூரத்திற்கு, அதனை சுமக்க முடியாமல் தலையில் சுமந்து கொண்டு சேர்ப்போம். நானும் என் கூட படிக்கும் மூன்று மாணவர்களும் சேர்ந்துதான் இதனைச் செய்வோம். அவர் எங்களிடம் இந்த வேலை வாங்குவதற்கு ஒரே ஒரு காரணம் நாங்கள் படிப்பில் 'சுமார்' தான். 100க்கு 15 மார்க் தான் பாஸ் மார்க் அது எடுப்பதே அன்றைக்கு குதிரை கொம்பாக இருக்கும். அந்தக் காலகட்டத்தின் நேரத்தில் ஏழ்மையில் வறுமையின் பின்புலத்தில் இருக்கப்படும் பொழுது படிப்பு அவ்வளவு எளிதில் மண்டையில் ஏறாது. அதுமட்டுமல்லாமல் அரசு விடுதியில் தங்கி படித்தோம். விடுதியின் விதிக்கப்பட்ட பிரகாரம் ஆறாம் வகுப்பிலிருந்து 11 ஆம் வகுப்பு வரை தொடர்ந்து தேர்ச்சி பெற்றால் தான் 12-ஆம் வகுப்பு வரை அதே விடுதியில் படித்துவிட்டு வெளியே வர முடியும். இடையில் ஏதாவது ஒரு வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அரசு விடுதியில் இடம் கிடையாது. தோல்வி அடைந்த அந்த வகுப்பை வீட்டில் இருந்தபடியே தான் வந்து படிக்க வேண்டும். அந்த காலகட்டத்தில் அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இதனை எங்கள் வகுப்பு ஆசிரியர் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, இறுதிப் பரீட்சை நெருங்கும் நேரத்தில் அவர், 'என் வயல்காட்டில் வந்து நீங்கள் வேலை செய்யுங்கள், உங்கள் அனைவரையும் நான் ஒன்பதாம் வகுப்பு தேர்ச்சி பெறுவதற்கு பரிந்துரை செய்து உங்களை பத்தாம் வகுப்பிற்கு அனுப்பி விடுவேன்'. என்று அவரின் வாய்மொழி உத்தரவை நம்பித்தான் அந்த வயதிலும் எங்களால் முடியாத வேலைச் சுமையை சுமந்து கொண்டு அந்த வேலையை நாங்கள் செய்து கொடுத்தோம். கழுத்து, தோள்பட்டை எல்லாம் பயங்கரமாக வலிக்கும். குடும்பத்தின் ஏழ்மை நினைத்துக் கொண்டு ரொம்ப கஷ்டமான வேலையையும் செய்து கொடுத்தோம்... அந்த வருடத்தின் கடைசி பரீட்சை எழுதி முடித்தவுடன் எங்களது 4 டிஜிட்டல் உள்ள பரீட்சை நம்பரை அவர் வாங்கிக் கொண்டு போய் வாருங்கள் என்று அனுப்பி வைத்துவிட்டார். ஒரு மாதம் கழித்து பள்ளிக்கு வந்து தேர்வு ரிசல்ட் ஒட்டிய அந்த கரும்பலகையில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் வரிசையில் எங்கள் நம்பர் வந்திருக்கிறதா என்று பார்த்த பிறகு தான் எங்களுக்கு நிம்மதி வந்தது. அடுத்த வருடம் பத்தாம் வகுப்பு பெஞ்சில் போய் உட்கார்ந்து விட்டோம்...
அது ஏன் மாரி அண்ணன் படம் பார்த்தால் மட்டும் இவளோ மனசோட ஒத்துப்போகுது னு தெரியல. எத்தனையோ பேரோட வலிய இவளோ தெளிவா யாரும் சொல்லிர முடியாது. எம் நெல்லைச் சீமையின் பெருமை நீர். ❤
@@ManiMani-uy4bgne thirunthu ne movie ya parkanum yarum alala ok va nellai makkal correct than erukanka mothala ne v2la ulla ottaya paru athuku piraku pasu summa nellai ya kurai solla vanthutiya poi valaya paru ne parkalanu movie otama eruka porathilai ok
பிரமாண்டமான சண்டை, பாடல்கள், அனைத்தும் இருந்தால் மட்டும் பிரமாண்டம் அல்ல !!மனித வாழ்வியலை மனதிற்கு கடத்துகிறதில் தான் பிரமாண்டம் அப்படி கடத்தும் ஒரு சில இயக்குனர்களில் மாமன்னன் மாரி செல்வராஜ் அண்ணா அவர்கள் ஆகச் சிறந்த படைப்பாளி!!!❤❤❤வாழை குலை தள்ளும் மனங்களை அள்ளும் ❤❤ வசூலில் வெல்லும்.. ❤❤❤
பரியேறும் பெருமாள் படத்தில் காட்டாத வலியை உணர வைத்தார்....அற்புதமான படைப்பு....என்னால் இன்றுவரை மீண்டு வரமுடியாத படைப்பு... மாரி செல்வராஜின் எண்ணத்தை எண்களின் எண்ணங்களில் செலுத்த இப்படி ஒரு வழியை கையாண்டிருக்கிறார். அதே போல் வாழை படமும் எங்களுள் தாக்கத்தை ஏற்படுத்த காத்திருக்கிறேன்❤
படம் வெற்றி பெற வாழ்த்துகள்...வாழ்க்கையின் வழிகளையும் வேதனைகளையும் எதார்த்தத்தையும் வெளிப்படுத்தும் தமிழ்த்திரையுலகில் சிறந்த படைப்பாக அமைய வாழை திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள் அண்ணா @mari Selvaraj ...ஒரு சாதாரண கிராமத்து ஏழை மாணவன் கல்வி கற்க குடும்ப பாரத்தை சுமக்க பகுதி நேர வேலைக்கு செல்லும் போது ஏற்படும் இன்னல்களை தொகுத்துள்ளார் மாரி .வாழை வாழட்டும் .வாழ்த்துவோம்...பச்சை பசலென நம் நெல்லை, தூத்துக்குடி மண்ணை பார்க்கும்போது எவ்ளோ ஒரு ஆனந்தம்...
நான் ஒரு வாழை விவசாயியின் மகள் வாழைக்கு தேவையான நேரம் மழை இருக்காது அப்பா தண்ணீர் இறைத்து கஷ்ட படுவார். விழைந்து நிற்கும் போது காற்று மழை வந்து அனைத்தும் அழிந்து போகும். குத்தகை நிலம் என்பதால் எந்த நிவாரணமும் வந்து சேராது. இந்த வேலையே வேண்டாம் அப்பா நு சொன்ன அப்பா எனக்கு வேற ஒன்னும் தெரியாது னு சொல்லி அழுவாங்க இது வரை அந்த தொழில் ல எந்த லாபமும் நாங்க கண்டதில்லை. காலைல 4 மணிக்கு போய்ட்டு இரவு 10 மணிக்கு வீட்டுக்கு வருவாங்க. கடன் மட்டும் பல இலட்சம் இருக்கு....😂😂😂
முதன்முறையாக வாழை போட்டு அறுவடைக்கு தயாராக இருக்கும் போது.... கொரோனா வந்து விட்டது..... சரியான முறையில் விற்க முடியல.....தார் தாராக பழுத்து வீணாகி விடும்.... குரங்குகளின் அட்டகாசம் தாங்க முடியாத நிலையில்...ஒரு சீப் 10 ரூபாய் என ரோட்டில் வைத்து விற்று ..சொற்ப பணத்தை ஒன்று சேர்த்தோம்..... அடுத்த ஆண்டு....ஒரு புயல மாட்டிக் கொண்டது....மீள முடியாமல் .... இன்னும் தினறுகிறோம்....வாழை விவசாயம் ஒரு சூதாட்டம் போல.... நல்ல விலைக்கும் போகும்...இல்லஇயற்கை சீற்றங்களால் அழிந்தும் போய் விடும்....😢
கண்களில் நீர் வருகிறது ஒவ்வொரு வசனமும் வார்த்தை உச்சரிப்பும் எங்க ஊர் திருநெல்வேலி மாவட்டத்தை கண்முன் கொண்டு வருகிறது.. எம்மோவ்.. யக்கோவ்.. இந்த வார்த்தை எந்த சினிமாவிலும் வந்தது இல்லை மாரிசெல்வராஜ் நீ பலர் வாழ்க்கையில் நடந்ததை படமாய் எடுத்து உள்ளாய் மீண்டும் ஒரு கர்ணன் 🗡️💞💐💐
பச்சை பசலென நம் நெல்லை, தூத்துக்குடி மண்ணை பார்க்கும்போது எவ்ளோ ஒரு ஆனந்தம்.வாழை திரைப்படம் இன்னோரு பரியேறும் பெருமாள்,கர்ணன் போல பெரும் வெற்றிபெற வாழ்த்துக்கள் 💜❤️
@vikiwaran690 Unga ammava vachirundha para pasangala, Don't talk about para pasanga,if you want to say something directly shout with mari selvaraj otherwise you should not talk about particular religion like (sc and st)
அண்ணன் மாரி செல்வராஜ் தம் இளம் வயதில் பட்ட துன்பங்களை இப்படம் வாயிலாக நமக்கு அறிய செய்வார்... நாங்கள் ஆண்ட இனம் ஆளப்போகிற இனம் அப்படி இப்படி என்று சொல்லும் ஒரு கூட்டத்திற்கு இது ஒரு மரண அடியாக இருக்கும் வாழை வெற்றி பெற என் வாழ்த்துக்கள் ❤💚
மாரி அண்ணன் ரொம்ப நன்றி அண்ணா, நெறய பேரு பெரிய ஆளு ஆகுன பிறகு எங்க இருந்து வந்தோம்னு மறந்து செயல் பட்றாங்க ஆனா you've never forgotten where you've brought up and our native culture 🥺 you've given marvelous work ரொம்ப நன்றிங்கன்னா 🙏🏻😍
@@tazhasugumar அவர்க்கு தெரியவில்லை ஆனால் நான் தென்மாவட்டம் இல்லை ஆனால் எனக்கு வலிக்கிறது... காரணம் இந்த படத்தின் இயக்குனர் இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார் அதில் வரும் காட்சிகள் எழுத்துக்கள் இதிலும் இருப்பதால் வலிக்கிறது...
🎉🎉🎉 வாழும்போதே வரலாறு படைத்த.... எங்களின் திரைத் துறையின் ஆளுமையே!! அண்ணன் மாரி செல்வராஜின் வாழ்க்கை வரலாறு.... வாழும் தலைமுறைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு.... வாழை. 💐 வாழையடி வாழையாக வளர வாழ்த்துக்கள் 💐💐💐
ஆயிரம் விமர்சனம் இருந்தாலும்.மாரி அண்ணன் வாழ்க்கையில் அவர் பட்ட கஷ்டங்கள் பார்க்கும் போது நாம் எவ்வளவு அழகிய வாழ்க்கை வாழ்ந்து இருக்கின்றோம் என்ற உணர்வு புரிகிறது.அண்ணா உங்களின் ஒவ்வொரு வலியும் இன்று வெற்றி மாலையாக உங்களை அழகு அடைகிறது.உங்களின் இந்த படைப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா 😊😊😊😊
ஒரு மனிதன் அவர்களுக்கு இருக்கும் திறமையை மட்டுமே பார்த்து படம் எடுக்கிறார் ... பிரபலமான நடிகர் நடிகைகள் வைத்து படம் எடுக்காமல் இப்படி எல்லா படமும் ஹிட் தான் ❤
மலையாளத்தில் "வாழ" என்ற பெயரில் ஒரு திரைப்படம் உள்ளது, அது சமீபத்தில் வெளியாகி மலையாளத்தில் சூப்பர் ஹிட்டானது. மேலும் தமிழிலும் "வழா" திரைப்படம் வருகிறது..... இதுவும் சூப்பர் ஹிட்டாகும் என நம்புகிறேன்♥♥♥♥♥ all the best for the movie "VAZHAI" from kerala♥
படம் வெற்றி பெற வாழ்த்துகள் ❤💚❤❤....சிறு வயதியில் அனுபவித்த இன்னல்களை கடத்தி இருப்பார் போல இயக்குனர் அவர்கள்.படம் வசூல் ரீதியாகவும் , விருது பெறும் படமாக அமைந்தால் இது திரு.மாரிசெல்வராஜ் அவர்களுக்கு தொடர் நான்காவது பட வெற்றியாக தடம் பதிக்கும். தமிழ் சினிமாதுறையில் தவிற்கமுடியாத அடையாளத்தை ஏற்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது..திரு.சந்தோஷ் நாராயணன் அவர்களின் இசை ❤❤❤❤💚💚💚💚🎉🎉 வாழை எதிர்பார்ப்பை பூர்த்தி அடையச்செய்யுமா என்பது ஆகஸ்ட் 23 தெரிய ஆவல்.மிகைப்படுத்தாத இயல்பான வாழ்வியலை திரைக்காட்சியாக காட்டும் மிகச்சில இயக்குனர்கள் வரிசையில் இவரும் இடம்பிடித்துவிட்டார்....இயக்குனர் இமயம் திரு.பாரதிராஜா அவர்கள் ,பரியேறும் பெருமாள் வெற்றி அரங்க மேடையில் lமண்ணும் பேசுகின்றது மனிதர்களும் பேசுகின்றனர் என்று குறிப்பிட்டு பேசி திரு. மாரி செல்வராஜ் அவர்களை புகழ்ந்து இருப்பார்...இயக்குனர் பெரும் மதிப்பிற்குரிய ராம் அண்ணாவிற்கு நன்றிகள் ,சரியான ஒரு எழுத்தாளர் கலைஞனை எங்கள் முன் சமர்பித்துள்ளீர்கள்....வாழ்க மாரி அண்ணா உம் புகழ் ஓங்குக... சினிமா என்பது 2.30மணி நேர பொழுது போக்குதான் அதிலும் எதார்த்த மனிதர்களின் வாழ்வியல் வலிகளை கடத்துவது என்பதும் திரை படைப்பாளன் உரிமை.இரசித்து விமர்சிப்பதும் விவாதிப்பதும் அவர் அவர் அறம் சார்ந்தது...
இதுவரை காதல் காமெடி வன்முறை ஜாதி மதம் இதனை சார்ந்தது தான் திரைப்படம் ஆகும் தற்போது பா.ரஞ்சித் மாரி செல்வராஜ் வெற்றிமாறன் ராஜூ முருகன் கோபி நயினார் போன்ற இயக்குனர்களின் வருகைக்கு பின்னரே மக்களின் எதார்த்த வாழ்க்கையை அழுத்தம் திருத்தமாக மிகவும் சுதந்திரமாக வெளிக்கொண்டு வந்துள்ளனர் இவர்கள் இல்லாமல் இன்று கோலிவுட் இயங்காது என்பது நிதர்சனமான உண்மை எவராலும் மறுக்க முடியாது
திரைப்படம் என்பது எங்கள் வாழ்வியலை ஒற்று வருதல் நமக்கான உரிமையை நாம் பேறுதலில் பெரிய போராட்டமே இங்கு நடத்த வேண்டி இருக்கு. இப்படிப்பட்ட வாழ்வியலில் திரைப்படம் எடுக்கும் அண்ணன் அவர்களை நாம் ஒவ்வொருவரும் கொண்டாட வேண்டும்....🎉🎉🎉🎉
அருமையான கிராமத்து வாழ்க்கையை அழகாக காண்பித்துள்ளார்... அனைவரின் நடிப்பும் அமர்க்களம்.... புரட்சி இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்❤❤❤
கஷ்ட படவில்லை நஷ்ட படவில்லை அடி பட வில்லை உடல் நிலை மாற வில்லை 3 நிமிடம் வீடியோ என் மனதில் பெரும் வலியை ஏற்படுத்தி விட்டது 😢 கலையின் ராஜா மாறி செல்வராஜா
திரையரங்கில் இந்த படம் முடிவில் அனைவரும் கண்களிலும் கண்ணீர் வரும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை 😢😢😢. கண்டிப்பாக இப்படம் மக்கள் மனதில் பெரிய அளவில் இடம் பெறும்.❤️ திரு.மாரி செல்வராஜ் அண்ணா-விற்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் ❤
வாழ்க்கையின் வழிகளையும் வேதனைகளையும் எதார்த்தத்தையும் வெளிப்படுத்தும் தமிழ்த்திரையுலகில் சிறந்த படைப்பாக அமைய வாழை திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள் அண்ணா @mari Selvaraj
தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்குக் கொண்டு செல்லும் சில படைப்பாளிகளில் மாரி செல்வராஜ் மிகவும் முக்கியமானவர். "வாழை" மகத்தான வெற்றி பெற வாழ்த்துக்கள்! நாம் புலம் பெயர்ந்து வாழும் கனடாவில் 'வாழை'யை ரசிப்பதற்கு காத்திருக்கிறோம். 💐
வாழைக்காய் லோடு ஏற்றும் வேலை ரொம்ப கஷ்டம் இந்த வேலை பார்த்ததால் சொல்லுற இன்னும் எங்க ஊர் இளைஞர் போய் கொண்டு இருக்காங்க அந்த வேலைக்கு திருநெல்வேலி அம்பாசமுத்திரம் ஊர்க்காடு my village ❤️💚😕
நான் பள்ளி பருவத்தில் கோடை விடுமுறைக்கு எங்கள் ஊர் செம்பூருக்கு செல்லும் போது வாழைத் தார் தூக்கி கொண்டு சென்ற அனுபவம் நிறைய இருக்கிறது .... 1998- 2000 ல் புளியங்குளம் மக்கள் வாழை தார் லாரியில் செல்லும் போது ஏற்பட்ட விபத்து என் வாழ்க்கையில் மறக்க முடியாத சோகத்தை தந்தது ..... இந்த திரைகவியம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்❤❤❤❤🎉🎉🎉🎉
❤❤❤🎉🎉🎉 டிரைலரை பார்க்கும்போது கணத்த இதயத்துடன் பார்க்க முடிந்த எல்லா கிராமங்களிலும் உழைக்கும் மக்களின் யாரோ இரண்டு மூன்று சிறுவர்கள் ஒரே சம்பவம் இல்லாமல் வெவ்வேற சம்பவங்களின் இன்னல் பட்ட துயரத்தை அனுபவித்து இருப்பார்கள் அந்த வழியை கடத்தி உள்ளார் இன்று நான் நம்புகிறேன்❤❤❤ இத்திரைப்படம் வெல்ல வாழ்த்துகிறேன்
வணக்கம் இயக்குநர்.திரு மாரி செல்வராஜ் அவர்களுக்கு.. நன்றிகள் பல பல கோடி. நான் என் வாழ்வில் சுமந்த நினைவுகள்.என் பள்ளி பருவத்தில் .வருடம் 1994-1996 . அக்காலத் கட்டத்தில் வலியுடன் கூடிய .பயணத் தொடர்ந்தேன்.8ஆம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை .. என்னை போன்று எத்தனை ஏழை மாணவரகளின்...ஆழ், மனதின்.வலி.... இப்படி தான் நாங்கள் கல்வி கற்றோம்
வாழை கதையை திரையில் காண காத்துகொண்டிருக்கும் அனைவருக்கும் அவர்களின் வலி யை திரையில் காண்பீர்கள் அந்த வலியை நான் நேரில் கண்டவன் இப்பொழுதும் கண் கலங்குகிறது💔
தாயை போல மதிக்க வேண்டிய ஆசிரியரை காதலிப்பது போல எடுத்திருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. சிறு மாணவர்களின் மனதில் நஞ்சை விதப்பதாக இருக்கிறது. இது என் யாருக்கும் புரியவில்லை. ஒரு நல்ல நட்பாக, வழிகாட்டியாக அந்த ஆசிரியர் கதாபாத்திரத்தை மாற்றி இருக்கவேண்டும். 😢. நம்மை போல் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது இன்னும் தவறான எண்ணம் இப்படம் ஏற்படுத்தும். இவர்களுக்கு ஆசிரியர் யார் காதலி யார் என்றே தெரியாது என்று......தயவு செய்து இயக்குனர் கருத்தில் கொள்ளவேண்டும்.....❤
இந்த விபத்து எனக்கும் நன்றாக நினைவிருக்கிறது..17 பேர் இறந்தார்கள் என்று நினைக்கிறேன்.. அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளைத் திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் இன்றும் காணலாம்.. இந்த விபத்தை மையமாக வைத்துதான் படம் எடுக்கப்பட்டதா?
படம் இன்று தான் தியேட்டர்ல பாத்தேன். அருமையான படம்! இந்த படத்துக்கு கண்டிப்பா அந்த குழந்தை நட்சத்திர பையனுக்கும், இயக்குனர் மாரி செல்வராஜ் க்கும் தேசிய விருது நிச்சயம்! ❤ தியேட்டர்ல போய் பாருங்கய்யா.. மனுஷன் பின்னீட்டாரு. 👌🏻🙌🏼🙌🏼🙌🏼🙌🏼🙌🏼👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻❤❤ 27.08.2024
This movie is unique.... heart of tamilnadu... Director sir thalakuninj vanangerea... Vazhkayudea paseeyudea vellayea kaatti thantigea... All the charector of this movie hat's off 🫡🫡🫡... good work God bless you guys ❤❤❤
Meri Selvaraj films.are very rooted...hits at the heart directly!! This shud be released in Hindi, marathi and all other Indian languages!! Tax free and must watch for all Indians!
புது இயக்குனர் இந்த படத்த எடுத்து இருந்தா எவனும் பார்க்க மாட்டான்னு தெரிந்து,4 வது படமாக வாழை தந்து.. அணைத்து இயக்குனரும் பாராட்டி தள்ளுமாறு படம் எடுத்தான் பாரு.. மாரி... தரம்.... 👍👍👌👌
இப்பதான் ரஞ்சித் படம் எடுத்து 5 நாள் ஆச்சு அஞ்சு நாளா எந்த பயலுக்கும் தூக்கம் இல்லை ஒரே வைத்தெரிச்சல் ரஞ்சித் எடுத்த படமாவது பரவால்ல இப்போ மாரி செல்வராஜ் எடுத்துவிட்டு இருக்கிறான் பாரு இதைப் பார்த்து ஒரு குரூப் செத்தே போயிருவாங்க இவனுங்க இப்படி படம் எடுக்கிறார்கள் என்று மாரி செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.... எல்லாருக்கும் இன்னும் எரியும்
பா.ரஞ்சித்,இப்போது ஒரு தங்கலான் வெற்றி படம் கொடுத்தார்.. அடுத்து மாரிசெல்வராஜ் அவர்கள் வாவெற்றி படம்.... வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐இரண்டு இயக்குனர் கள் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமைகள் 💐💐💐💐💐💐
Last day intha movie paathen... Theatrela thembi thembi aluthuten... 90s life திரும்ப kannumunnadi konduvanthuchu... என் அப்பா அம்மா உழைப்பு kannumunnadi வந்து ninnuchi... இன்னும் என் மனசு நிம்மதி அடையில... வலி மிகுந்த படம் இல்ல இது பலரொட வலி மிகுந்த வாழ்க்கை😢
உண்மையாகவே அண்ணன் மாரி செல்வராஜ் அவர்களின் படைப்பு உலக சினிமாவின் பொக்கிஷம். இயக்குனர் ராம் அவர்களின் படைப்பை பார்த்து பிரம்மத்துள்ளேன். அவர் வழியில் வந்த மாரி செல்வராஜ் தனக்கான சமூக பொறுப்பை ஒரு ஆகச்சிறந்த கலை படிப்பாக தருவார் என்ற நம்பிக்கை ஒவ்வொரு படத்திற்கும் உண்டு. வெறும் பெருமைக்காக மட்டுமல்லாமல் தனக்கான பயணம் அண்ணல் அம்பேத்கரின் புத்தரின் பரிணாமங்கள் இது பிரதிபலிப்பதில் ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. கலரா இருந்தா தான் குழந்தைகள் படம் என்பதை வழக்கமாகக் கொண்ட தமிழ் சினிமாவின் மாற்று சினிமா தான் வாழை ..... பணத்தை நோக்கி பயணிக்காமல் பயணத்தை நோக்கி தனக்காக பொறுப்பாக பயணிப்பதில் உங்கள் பாதை சிறந்த முன்னுதாரணம் வாழ்த்துக்கள் அண்ணா....
பெரிய ஸ்டார்கள் காத்து இருக்க அவர்களை இயக்காம தனக்கு பிடிச்ச வாழ்க்கைய படமாக்கணும்னு நினைச்சி பண்ணி இருக்காரு பாருங்க..great 👏
Yaru Wait panra
😂 yaruya kaathuthu irukka 😂😂😂😂 Q la nikkura mari pesuringa😅
@@ManiPsatheemka udhanidhi kal la vizhunthu panlaya 🤣 apdi tha
Un vaai unrutu 🤡😆
என்ன ஜாதி படம் எடுக்கவா?
அண்ணா நான் இலங்கையில் இருக்கிறேன். நான் பரியேறும் பெருமாள் படம் பார்ப்பதற்கு முன்னால் ஒரு சினிமா ரசிகனாக இருந்தேன். ஆனால் பரியேறும் பெருமாள் படம் பார்த்த பிறகு நான் இயக்குனர்களின் மீது மிக மரியாதை கொண்டேன்.. அதற்கு முழு காரணம் என் அண்ணா மாரி செல்வராஜ் அவர்கள் தான். நான் இந்த வழிகள் எல்லாம் அனுபவிக்க இல்லை ஆனால் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன். தற்போது வெளியாகியுள்ள வாழை டிரைலர் வரையிலும் என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றது மனதிற்குள் ஏதோ ஒரு மிகப்பெரிய வலி... மாரி செல்வராஜ் அண்ணா அவர்களின் படைப்புகள் அனைத்துமே அற்புதமானது.... 👍👍❤️ வாழை படம் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉💯👍👍❤️❤️❤️ வாழ்க தமிழ் ❤❤❤
Vaalka thamil❤
@KanakarajChinnஅதை தமிழில் பதியக் கூடாதா!!
வாழ்க தமிழ்
@@kadkavperu5925 sorry bro .I am now Dubai .I don't have thamil key port.i will dry
👍👍👍
என் அம்மா நான் சிறு வயதில் செய்த வேலை காய் தூக்குவது இரண்டு வாழைத்தார் தூக்கி கொண்டு கிடங்கு தாண்டி என்னையும் என் அண்ணாவையும் படிக்க வைத்தாள்... நெஞ்சு வலியுடன்..... 😢 கண் கலங்கிறதுறது......
Nalla irunga
❤🫂🫂💯
😢😢
Ippo neenga ennvaaga irrukkireenga enn velai seireenga?
vaalga valamudan god bless you
வாழை நானும் சிறு வயதில் அந்த வாழ்க்கையை அந்த வாழையை சுமந்து இருக்கிறேன். பள்ளி நாட்கள் அல்லாத விடுமுறைகளில் நான் கடந்து வந்த பாதை என் சிறு வயது வாழ்க்கையை கண் முன் நிறுத்துகிறது இந்த வாழை.
இது வாழை இல்லை
பலரது வாழ்க்கை.
நன்றி மாரி செல்வராஜ்.
என் சிறு வயது வலியை
மறக்கவே நினைக்கிறேன்🙏🙏🙏🙏
எனக்கும் இந்த வாழைதாருக்கும் சம்மந்தமே இல்ல ஆனா இதை பாக்கும்போது எனக்கு என்னையே அறியாமல் கண் கலங்குது, emotional is same all workers people😢
Full of positive comments 😍😍😍
Vanmam suzhul youtube la , ipadi oru trailer, Loved it ❤
இயற்கை சார்ந்த காட்சிகள் , படைப்பாற்றல் , ஒளி வடிவம், சொல்லாடல், சினிமா துறைக்கு நீங்கள் கிடைச்சது ஒரு வாரம் உங்களால் சினிமா துறை பெருமை அடைகின்றது , ஆகச் சிறந்த பொக்கிஷம் நீங்கள் !!.
ஒரு சாதாரண கிராமத்து ஏழை மாணவன் கல்வி கற்க குடும்ப பாரத்தை சுமக்க பகுதி நேர வேலைக்கு செல்லும் போது ஏற்படும் இன்னல்களை தொகுத்துள்ளார் மாரி .வாழை வாழட்டும் .வாழ்த்துவோம்
Brother there us error in translation can you tell me about this movie?
நான் 1987ல் ஒன்பதாம் வகுப்பு பள்ளியில் படிக்கும் பொழுது எங்களின் வகுப்பு ஆசிரியர், அரசு விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்த எங்களை சனி மற்றும் ஞாயிறு விடுமுறையின் போது அவர்களின் வயல் காட்டிற்கு அழைத்துச் சென்று, எள் செடிகளை அறுத்து, அதனை 20 கிலோ அளவுக்கு வாழை நாரை கயிறாக திரித்து கட்டி, அதனை காய வைக்கும் களத்திற்கு தலையில் சுமந்தபடி கிட்டத்தட்ட 1 கிலோமீட்டர் தூரத்திற்கு, அதனை சுமக்க முடியாமல் தலையில் சுமந்து கொண்டு சேர்ப்போம். நானும் என் கூட படிக்கும் மூன்று மாணவர்களும் சேர்ந்துதான் இதனைச் செய்வோம்.
அவர் எங்களிடம் இந்த வேலை வாங்குவதற்கு ஒரே ஒரு காரணம் நாங்கள் படிப்பில் 'சுமார்' தான். 100க்கு 15 மார்க் தான் பாஸ் மார்க் அது எடுப்பதே அன்றைக்கு குதிரை கொம்பாக இருக்கும். அந்தக் காலகட்டத்தின் நேரத்தில் ஏழ்மையில் வறுமையின் பின்புலத்தில் இருக்கப்படும் பொழுது படிப்பு அவ்வளவு எளிதில் மண்டையில் ஏறாது.
அதுமட்டுமல்லாமல் அரசு விடுதியில் தங்கி படித்தோம். விடுதியின் விதிக்கப்பட்ட பிரகாரம் ஆறாம் வகுப்பிலிருந்து 11 ஆம் வகுப்பு வரை தொடர்ந்து தேர்ச்சி பெற்றால் தான் 12-ஆம் வகுப்பு வரை அதே விடுதியில் படித்துவிட்டு வெளியே வர முடியும்.
இடையில் ஏதாவது ஒரு வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அரசு விடுதியில் இடம் கிடையாது. தோல்வி அடைந்த அந்த வகுப்பை வீட்டில் இருந்தபடியே தான் வந்து படிக்க வேண்டும். அந்த காலகட்டத்தில் அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
இதனை எங்கள் வகுப்பு ஆசிரியர் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, இறுதிப் பரீட்சை நெருங்கும் நேரத்தில் அவர், 'என் வயல்காட்டில் வந்து நீங்கள் வேலை செய்யுங்கள், உங்கள் அனைவரையும் நான் ஒன்பதாம் வகுப்பு தேர்ச்சி பெறுவதற்கு பரிந்துரை செய்து உங்களை பத்தாம் வகுப்பிற்கு அனுப்பி விடுவேன்'. என்று அவரின் வாய்மொழி உத்தரவை நம்பித்தான் அந்த வயதிலும் எங்களால் முடியாத வேலைச் சுமையை சுமந்து கொண்டு அந்த வேலையை நாங்கள் செய்து கொடுத்தோம்.
கழுத்து, தோள்பட்டை எல்லாம் பயங்கரமாக வலிக்கும். குடும்பத்தின் ஏழ்மை நினைத்துக் கொண்டு ரொம்ப கஷ்டமான வேலையையும் செய்து கொடுத்தோம்...
அந்த வருடத்தின் கடைசி பரீட்சை எழுதி முடித்தவுடன் எங்களது 4 டிஜிட்டல் உள்ள பரீட்சை நம்பரை அவர் வாங்கிக் கொண்டு போய் வாருங்கள் என்று அனுப்பி வைத்துவிட்டார்.
ஒரு மாதம் கழித்து பள்ளிக்கு வந்து தேர்வு ரிசல்ட் ஒட்டிய அந்த கரும்பலகையில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் வரிசையில் எங்கள் நம்பர் வந்திருக்கிறதா என்று பார்த்த பிறகு தான் எங்களுக்கு நிம்மதி வந்தது.
அடுத்த வருடம் பத்தாம் வகுப்பு பெஞ்சில் போய் உட்கார்ந்து விட்டோம்...
ஒரு மனிதனுக்கு தேவை நிம்மதி மாமா ❤❤❤
😢😢😢@@balasubramaniyan1973
Yaaru saamy nee.. ivlo super script narrate pandra👌👌👌👌@@balasubramaniyan1973
அது ஏன் மாரி அண்ணன் படம் பார்த்தால் மட்டும் இவளோ மனசோட ஒத்துப்போகுது னு தெரியல. எத்தனையோ பேரோட வலிய இவளோ தெளிவா யாரும் சொல்லிர முடியாது. எம் நெல்லைச் சீமையின் பெருமை நீர். ❤
திருந்த வேண்டும் நெல்லை மக்களும்
@@ManiMani-uy4bgne thirunthu ne movie ya parkanum yarum alala ok va nellai makkal correct than erukanka mothala ne v2la ulla ottaya paru athuku piraku pasu summa nellai ya kurai solla vanthutiya poi valaya paru ne parkalanu movie otama eruka porathilai ok
@@Priya-yf5sw intha ni aluthutiye
சிலரது கஷ்டங்களை பார்க்கும் போது நம் பாடுவது எல்லாம் ஒன்றுமே இல்லை என்று தொன்றுகிறது வாழை வெற்றி பெற வாழ்த்துக்கள்...
Aama 😢👏🏻👏🏻👏🏻
வலியின் வழித்தடம் வாழை🍃
பச்சை புரட்சியாளர்'''" மாரிசெல்வராஜ் 💚
Namma வலியெல்லாம் சொல்ல ஒருத்தர் இருக்காரு அண்ணே மாரிசெல்வராஜ் ஒடம்பெல்லம் சிலுக்குது ❤
பிரமாண்டமான சண்டை, பாடல்கள், அனைத்தும் இருந்தால் மட்டும் பிரமாண்டம் அல்ல !!மனித வாழ்வியலை மனதிற்கு கடத்துகிறதில் தான் பிரமாண்டம் அப்படி கடத்தும் ஒரு சில இயக்குனர்களில் மாமன்னன் மாரி செல்வராஜ் அண்ணா அவர்கள் ஆகச் சிறந்த படைப்பாளி!!!❤❤❤வாழை குலை தள்ளும்
மனங்களை அள்ளும் ❤❤
வசூலில் வெல்லும்.. ❤❤❤
❤❤❤
பரியேறும் பெருமாள் படத்தில் காட்டாத வலியை உணர வைத்தார்....அற்புதமான படைப்பு....என்னால் இன்றுவரை மீண்டு வரமுடியாத படைப்பு... மாரி செல்வராஜின் எண்ணத்தை எண்களின் எண்ணங்களில் செலுத்த இப்படி ஒரு வழியை கையாண்டிருக்கிறார். அதே போல் வாழை படமும் எங்களுள் தாக்கத்தை ஏற்படுத்த காத்திருக்கிறேன்❤
I am watched movie 3 time 🎉🎉
படம் வெற்றி பெற வாழ்த்துகள்...வாழ்க்கையின் வழிகளையும் வேதனைகளையும் எதார்த்தத்தையும் வெளிப்படுத்தும் தமிழ்த்திரையுலகில் சிறந்த படைப்பாக அமைய வாழை திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள் அண்ணா @mari Selvaraj ...ஒரு சாதாரண கிராமத்து ஏழை மாணவன் கல்வி கற்க குடும்ப பாரத்தை சுமக்க பகுதி நேர வேலைக்கு செல்லும் போது ஏற்படும் இன்னல்களை தொகுத்துள்ளார் மாரி .வாழை வாழட்டும் .வாழ்த்துவோம்...பச்சை பசலென நம் நெல்லை, தூத்துக்குடி மண்ணை பார்க்கும்போது எவ்ளோ ஒரு ஆனந்தம்...
*தமிழ் சினிமாவில் வாழை அழியாத தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயம் இல்லை வாழை படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் மாரி அண்ணா*
Adhu தக்கம் இல்ல தம்பி தாக்கம்
வாழை💚....கிராமத்து மண்ணின் கதை❤❤❤....இப்படத்தில் நடித்து பணியாற்றிய அனைவருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவிக்கிறேன்🙏🏻❤️🔥
புளியங்குளம் மாரி செல்வராஜ் 💖💖
Love From Kerala❤
நான் ஒரு வாழை விவசாயியின் மகள் வாழைக்கு தேவையான நேரம் மழை இருக்காது அப்பா தண்ணீர் இறைத்து கஷ்ட படுவார். விழைந்து நிற்கும் போது காற்று மழை வந்து அனைத்தும் அழிந்து போகும். குத்தகை நிலம் என்பதால் எந்த நிவாரணமும் வந்து சேராது. இந்த வேலையே வேண்டாம் அப்பா நு சொன்ன அப்பா எனக்கு வேற ஒன்னும் தெரியாது னு சொல்லி அழுவாங்க இது வரை அந்த தொழில் ல எந்த லாபமும் நாங்க கண்டதில்லை. காலைல 4 மணிக்கு போய்ட்டு இரவு 10 மணிக்கு வீட்டுக்கு வருவாங்க. கடன் மட்டும் பல இலட்சம் இருக்கு....😂😂😂
முதன்முறையாக வாழை போட்டு அறுவடைக்கு தயாராக இருக்கும் போது.... கொரோனா வந்து விட்டது..... சரியான முறையில் விற்க முடியல.....தார் தாராக பழுத்து வீணாகி விடும்.... குரங்குகளின் அட்டகாசம் தாங்க முடியாத நிலையில்...ஒரு சீப் 10 ரூபாய் என ரோட்டில் வைத்து விற்று ..சொற்ப பணத்தை ஒன்று சேர்த்தோம்..... அடுத்த ஆண்டு....ஒரு புயல மாட்டிக் கொண்டது....மீள முடியாமல் .... இன்னும் தினறுகிறோம்....வாழை விவசாயம் ஒரு சூதாட்டம் போல.... நல்ல விலைக்கும் போகும்...இல்லஇயற்கை சீற்றங்களால் அழிந்தும் போய் விடும்....😢
Then why laughing smiley?
இத்தனை வலியிலும் இந்த புன்னகை தான் வாழ்க்கையின் நம்பிக்கை
.
..
.
😢
கண்களில் நீர் வருகிறது ஒவ்வொரு வசனமும் வார்த்தை உச்சரிப்பும் எங்க ஊர் திருநெல்வேலி மாவட்டத்தை கண்முன் கொண்டு வருகிறது..
எம்மோவ்.. யக்கோவ்.. இந்த வார்த்தை எந்த சினிமாவிலும் வந்தது இல்லை மாரிசெல்வராஜ் நீ பலர் வாழ்க்கையில் நடந்ததை படமாய் எடுத்து உள்ளாய் மீண்டும் ஒரு கர்ணன் 🗡️💞💐💐
இத்தனை வருட தமிழ் சினிமாவில் நம் வாழ்வின் காலடித்தடங்களையும் வழிகளையும் உணர்த்தும் ஒரே படைப்பாளி மாரி😢❤
பச்சை பசலென நம் நெல்லை, தூத்துக்குடி மண்ணை பார்க்கும்போது எவ்ளோ ஒரு ஆனந்தம்.வாழை திரைப்படம் இன்னோரு பரியேறும் பெருமாள்,கர்ணன் போல பெரும் வெற்றிபெற வாழ்த்துக்கள் 💜❤️
Intha para pasanga tholla thanga mudila da 🤭🤭
ஒரு மனிதனுக்கு தேவை நிம்மதி மாமா
இதே குருப்பு தான்டா புர்கா படமும் எடுத்தானுங்க😂
அப்ப மட்டும் ஏன் அந்த படத்த புடிச்சி ஊம்பிகிட்டு இருந்திங்க
@@vikiwaran690Sir periya British king En da suthra payale correct aha irukum 😅
@vikiwaran690 Unga ammava vachirundha para pasangala, Don't talk about para pasanga,if you want to say something directly shout with mari selvaraj otherwise you should not talk about particular religion like (sc and st)
அண்ணன் மாரி செல்வராஜ் தம் இளம் வயதில் பட்ட துன்பங்களை இப்படம் வாயிலாக நமக்கு அறிய செய்வார்...
நாங்கள் ஆண்ட இனம் ஆளப்போகிற இனம் அப்படி இப்படி என்று சொல்லும் ஒரு கூட்டத்திற்கு இது ஒரு மரண அடியாக இருக்கும்
வாழை வெற்றி பெற என் வாழ்த்துக்கள் ❤💚
பரியேரும் பெருமாள் கூட 🥺
enga ithu thevai ilatha content .konja konjama ipa thaan neenga soldra antha community layum ellarum maranga..revenge edutha aprm thirumbi romba pinadi poiruvom....ithe maari thaan ellarum maamanan kum sonanga😅 Vazhai la ivalo theliva arasiyal purinchu pesura maari selvaraj en maamanan edutharne therila!!
Nall sollidu kadicila.... Onnga puthiea kamidigala 😂❤️💚
Endha peachi pundai ku kovam varuthu Paavam andha time la avaru pata kastatha sonna adutha caste pathi umba va da peasuraa
@@viratvishal1718 aamam Kathir ah potu maata adikra mari adichu mari selavaraj oda vali ah padathula kondu vanthan parunga 👏👏👏 👏
Am from Telugu I love Mari sir for remembering my village days.......
மாரி அண்ணன் ரொம்ப நன்றி அண்ணா, நெறய பேரு பெரிய ஆளு ஆகுன பிறகு எங்க இருந்து வந்தோம்னு மறந்து செயல் பட்றாங்க ஆனா you've never forgotten where you've brought up and our native culture 🥺 you've given marvelous work ரொம்ப நன்றிங்கன்னா 🙏🏻😍
நெல்லைல படமெடுத்தா செண்டிமெண்ட்டா ஓடுமுங்க சொன்னது நாங்க இல்ல கோடம்பாக்கம்.... 🔥🔥🔥🔥 ❤️💚
Adhellam commercial movie ku sonnadhu. Idhu madhiri padam lam clap vangum but collection 😢
Collection ena nu check pannunga bro @@Parthibang89
ட்ரைலரே மிரட்டி இருக்கு..படம் வேற லெவல் ல வரும்.🔥🔥
Mamannanukum idhan da sonninga aana padam ooombikichu
@@karthickkumar6277நீ ஏன்டா இங்க வந்து ஊம்பிக்கிட்டு இருக்க..😂😂 கதரிகிட்டே பட புரோமோசனுக்கு வேலை செய்யுங்கடா..😅
@@MuthuKumar-br6sh Sarra thevidiapayalr
இது ஒரு படம் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியல என்ன அவ்வளவு வலியும் வேதனையும் எனக்கு உண்டு இதனைப் பார்க்கும்போது என் கண்கள் தேம்பி அழுகிறது
Love From Kerala❤
என் அண்ணன் மாரி செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
உங்கள் கதைகளை கமெண்ட்டில் சொல்லுங்கள் உண்மையை கேட்க கூடிய காதுகள் நாங்கள் தான்❤
ஓவரா உருட்டாத😂
@@tazhasugumar அவர்க்கு தெரியவில்லை ஆனால் நான் தென்மாவட்டம் இல்லை ஆனால் எனக்கு வலிக்கிறது... காரணம் இந்த படத்தின் இயக்குனர் இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார் அதில் வரும் காட்சிகள் எழுத்துக்கள் இதிலும் இருப்பதால் வலிக்கிறது...
1:15 sana MAGICAL 🥹🙏
Deii yara neenga? 😂
🎉🎉🎉 வாழும்போதே வரலாறு படைத்த.... எங்களின் திரைத் துறையின் ஆளுமையே!! அண்ணன் மாரி செல்வராஜின் வாழ்க்கை வரலாறு.... வாழும் தலைமுறைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு.... வாழை. 💐 வாழையடி வாழையாக வளர வாழ்த்துக்கள் 💐💐💐
Sana🥁🔥 Mari Selvaraj combo
Love From Mammootty&Dq Fans❤❤
ஆயிரம் விமர்சனம் இருந்தாலும்.மாரி அண்ணன் வாழ்க்கையில் அவர் பட்ட கஷ்டங்கள் பார்க்கும் போது நாம் எவ்வளவு அழகிய வாழ்க்கை வாழ்ந்து இருக்கின்றோம் என்ற உணர்வு புரிகிறது.அண்ணா உங்களின் ஒவ்வொரு வலியும் இன்று வெற்றி மாலையாக உங்களை அழகு அடைகிறது.உங்களின் இந்த படைப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா 😊😊😊😊
poor brajmins oda story edunga...seat kidaikrathu kadtam, scholarship illae, freebies illae...pavom
Mari doesn't like brahmins. So better don't expect any from these people. Way forward is study hard and get places well as usual.
@@travelsiteeswari4725 dont theu have 10% reservation?
besides, dont get me started with the bias towards brahmins in job interviews & promotions
Best behavior tamil people ashamed you all 👎
திருநெல்வேலி ❤ என் துரை வாழைக்காய் லோடு வண்டி ஓட்டும் போது உள்ள நியாபகம் வருகிறது.
All The Best From Kerala❤❤❤
❤
Super 👍🎉🎉🎉🎉
உயிர் போனால் திரும்பி வராது
வாழ்க்கை தேவை நிம்மதி
ஒரு மனிதன் அவர்களுக்கு இருக்கும் திறமையை மட்டுமே பார்த்து படம் எடுக்கிறார் ... பிரபலமான நடிகர் நடிகைகள் வைத்து படம் எடுக்காமல் இப்படி எல்லா படமும் ஹிட் தான் ❤
மலையாளத்தில் "வாழ" என்ற பெயரில் ஒரு திரைப்படம் உள்ளது, அது சமீபத்தில் வெளியாகி மலையாளத்தில் சூப்பர் ஹிட்டானது.
மேலும் தமிழிலும் "வழா" திரைப்படம் வருகிறது.....
இதுவும் சூப்பர் ஹிட்டாகும் என நம்புகிறேன்♥♥♥♥♥
all the best for the movie "VAZHAI" from kerala♥
படம் வெற்றி பெற வாழ்த்துகள் ❤💚❤❤....சிறு வயதியில் அனுபவித்த இன்னல்களை கடத்தி இருப்பார் போல இயக்குனர் அவர்கள்.படம் வசூல் ரீதியாகவும் , விருது பெறும் படமாக அமைந்தால் இது திரு.மாரிசெல்வராஜ் அவர்களுக்கு தொடர் நான்காவது பட வெற்றியாக தடம் பதிக்கும். தமிழ் சினிமாதுறையில் தவிற்கமுடியாத அடையாளத்தை ஏற்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது..திரு.சந்தோஷ் நாராயணன் அவர்களின் இசை ❤❤❤❤💚💚💚💚🎉🎉 வாழை எதிர்பார்ப்பை பூர்த்தி அடையச்செய்யுமா என்பது ஆகஸ்ட் 23 தெரிய ஆவல்.மிகைப்படுத்தாத இயல்பான வாழ்வியலை திரைக்காட்சியாக காட்டும் மிகச்சில இயக்குனர்கள் வரிசையில் இவரும் இடம்பிடித்துவிட்டார்....இயக்குனர் இமயம் திரு.பாரதிராஜா அவர்கள் ,பரியேறும் பெருமாள் வெற்றி அரங்க மேடையில் lமண்ணும் பேசுகின்றது மனிதர்களும் பேசுகின்றனர் என்று குறிப்பிட்டு பேசி திரு. மாரி செல்வராஜ் அவர்களை புகழ்ந்து இருப்பார்...இயக்குனர் பெரும் மதிப்பிற்குரிய ராம் அண்ணாவிற்கு நன்றிகள் ,சரியான ஒரு எழுத்தாளர் கலைஞனை எங்கள் முன் சமர்பித்துள்ளீர்கள்....வாழ்க மாரி அண்ணா உம் புகழ் ஓங்குக... சினிமா என்பது 2.30மணி நேர பொழுது போக்குதான் அதிலும் எதார்த்த மனிதர்களின் வாழ்வியல் வலிகளை கடத்துவது என்பதும் திரை படைப்பாளன் உரிமை.இரசித்து விமர்சிப்பதும் விவாதிப்பதும் அவர் அவர் அறம் சார்ந்தது...
Well said bro 💯🙌🏻
@@SathishKumark21 ஆம் சகோ நன்றி
Super
Except mamannan 😂
இதுவரை காதல் காமெடி வன்முறை ஜாதி மதம் இதனை சார்ந்தது தான் திரைப்படம் ஆகும்
தற்போது பா.ரஞ்சித் மாரி செல்வராஜ் வெற்றிமாறன் ராஜூ முருகன் கோபி நயினார் போன்ற இயக்குனர்களின் வருகைக்கு பின்னரே மக்களின் எதார்த்த வாழ்க்கையை அழுத்தம் திருத்தமாக மிகவும் சுதந்திரமாக வெளிக்கொண்டு வந்துள்ளனர்
இவர்கள் இல்லாமல் இன்று கோலிவுட் இயங்காது என்பது நிதர்சனமான உண்மை எவராலும் மறுக்க முடியாது
😅😮
unmai than
திரைப்படம் என்பது எங்கள் வாழ்வியலை ஒற்று வருதல் நமக்கான உரிமையை நாம் பேறுதலில் பெரிய போராட்டமே இங்கு நடத்த வேண்டி இருக்கு. இப்படிப்பட்ட வாழ்வியலில் திரைப்படம் எடுக்கும் அண்ணன் அவர்களை நாம் ஒவ்வொருவரும் கொண்டாட வேண்டும்....🎉🎉🎉🎉
அருமையான கிராமத்து வாழ்க்கையை அழகாக காண்பித்துள்ளார்... அனைவரின் நடிப்பும் அமர்க்களம்.... புரட்சி இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்❤❤❤
கஷ்ட படவில்லை நஷ்ட படவில்லை அடி பட வில்லை உடல் நிலை மாற வில்லை 3 நிமிடம் வீடியோ என் மனதில் பெரும் வலியை ஏற்படுத்தி விட்டது 😢 கலையின் ராஜா மாறி செல்வராஜா
திரையரங்கில் இந்த படம் முடிவில் அனைவரும் கண்களிலும் கண்ணீர் வரும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை 😢😢😢. கண்டிப்பாக இப்படம் மக்கள் மனதில் பெரிய அளவில் இடம் பெறும்.❤️ திரு.மாரி செல்வராஜ் அண்ணா-விற்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் ❤
😂 theatre la release aagala... இதுக்கு தான் படிங்கடா படிங்கானு சொல்லுறே 😅
@@asarafali4034நீ ஒழுங்கா படிடா..... திரையரங்கில் தான் மிரட்டல்
@@asarafali4034 coming 23rd da thooma
@@asarafali4034நீ போய் முதலில் படி
@@asarafali4034நீ அப்படி என்ன படிச்சி கிழிச்ச.. இங்க நாங்க எல்லாரும் BE, MBBS னு போய்ட்டு இருக்கோம்.. இங்க வந்து படி னு சொல்லிட்டு இருக்க
வாழ்க்கையின் வழிகளையும் வேதனைகளையும் எதார்த்தத்தையும் வெளிப்படுத்தும் தமிழ்த்திரையுலகில் சிறந்த படைப்பாக அமைய வாழை திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள் அண்ணா @mari Selvaraj
ஒரு மனிதனுக்கு தேவை நிம்மதி மாமா ❤❤❤❤
@@apratheep9140 பால் டாயில் வாங்கி குடி
வரும் 😂😂😂😂😂
வாழை எங்களின் வாழ்க்கை வரலாறு பிரமாண்ட இயக்குனர் என் அண்ணனின் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்
Advance வாழ்த்துக்கள் மாரி அண்ணா ❤
தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்குக் கொண்டு செல்லும் சில படைப்பாளிகளில் மாரி செல்வராஜ் மிகவும் முக்கியமானவர். "வாழை" மகத்தான வெற்றி பெற வாழ்த்துக்கள்! நாம் புலம் பெயர்ந்து வாழும் கனடாவில் 'வாழை'யை ரசிப்பதற்கு காத்திருக்கிறோம். 💐
வாழை எங்கள் நெல்லை மண் பேசும் கதை வாழ்த்துக்கள் மாரி அண்ணா ❤
Love From Mallu❤❤❤
@@Yaaseenk ❤❤
வாழைக்காய் லோடு ஏற்றும் வேலை ரொம்ப கஷ்டம் இந்த வேலை பார்த்ததால் சொல்லுற இன்னும் எங்க ஊர் இளைஞர் போய் கொண்டு இருக்காங்க அந்த வேலைக்கு திருநெல்வேலி அம்பாசமுத்திரம் ஊர்க்காடு my village ❤️💚😕
Love From Mammootty Fans❤❤
தஞ்சாவூர் பக்கமும் இன்னும் இந்த வாழை load லாரி ஓடிட்டு தான் இருக்கு
@@TheTravellerPk திருநெல்வேலி களக்காடு பக்கமும் வாழை தான் முதன்மை தொழில் அதிகமாக கேரளாவிற்கு லோடு ஏற்றுவோம்
நான் பள்ளி பருவத்தில் கோடை விடுமுறைக்கு எங்கள் ஊர் செம்பூருக்கு செல்லும் போது வாழைத் தார் தூக்கி கொண்டு சென்ற அனுபவம் நிறைய இருக்கிறது .... 1998- 2000 ல் புளியங்குளம் மக்கள் வாழை தார் லாரியில் செல்லும் போது ஏற்பட்ட விபத்து என் வாழ்க்கையில் மறக்க முடியாத சோகத்தை தந்தது ..... இந்த திரைகவியம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்❤❤❤❤🎉🎉🎉🎉
Enaku pakkathu Ooru dhan Malavai
Any news link please send, want to read about it. Is this movie based on that?
Nanum sembur than unga name ena brother
@@meenak7308 எங்க அம்மாக்கு செம்பூர் , ரஜினி அக்கா பையன்...
@@kskplus7128 Rekhakka paiyana da thambi
❤❤❤🎉🎉🎉 டிரைலரை பார்க்கும்போது கணத்த இதயத்துடன் பார்க்க முடிந்த எல்லா கிராமங்களிலும் உழைக்கும் மக்களின் யாரோ இரண்டு மூன்று சிறுவர்கள் ஒரே சம்பவம் இல்லாமல் வெவ்வேற சம்பவங்களின் இன்னல் பட்ட துயரத்தை அனுபவித்து இருப்பார்கள் அந்த வழியை கடத்தி உள்ளார் இன்று நான் நம்புகிறேன்❤❤❤ இத்திரைப்படம் வெல்ல வாழ்த்துகிறேன்
வணக்கம்
இயக்குநர்.திரு மாரி செல்வராஜ் அவர்களுக்கு.. நன்றிகள் பல பல கோடி.
நான் என் வாழ்வில் சுமந்த நினைவுகள்.என் பள்ளி பருவத்தில் .வருடம் 1994-1996 . அக்காலத் கட்டத்தில் வலியுடன் கூடிய .பயணத் தொடர்ந்தேன்.8ஆம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை .. என்னை போன்று எத்தனை ஏழை மாணவரகளின்...ஆழ், மனதின்.வலி....
இப்படி தான் நாங்கள் கல்வி கற்றோம்
வாழை கதையை திரையில் காண காத்துகொண்டிருக்கும் அனைவருக்கும் அவர்களின் வலி யை திரையில் காண்பீர்கள் அந்த வலியை நான் நேரில் கண்டவன் இப்பொழுதும் கண் கலங்குகிறது💔
One of the best trailer in recent time...❤❤❤
From Maari Selvaraj ✅
Cinematography + SaNa's music + Sound design technical uh strong uh erukku 💪⚡
தாயை போல மதிக்க வேண்டிய ஆசிரியரை காதலிப்பது போல எடுத்திருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. சிறு மாணவர்களின் மனதில் நஞ்சை விதப்பதாக இருக்கிறது. இது என் யாருக்கும் புரியவில்லை. ஒரு நல்ல நட்பாக, வழிகாட்டியாக அந்த ஆசிரியர் கதாபாத்திரத்தை மாற்றி இருக்கவேண்டும். 😢. நம்மை போல் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது இன்னும் தவறான எண்ணம் இப்படம் ஏற்படுத்தும். இவர்களுக்கு ஆசிரியர் யார் காதலி யார் என்றே தெரியாது என்று......தயவு செய்து இயக்குனர் கருத்தில் கொள்ளவேண்டும்.....❤
You are mistaken. It’s not lover. It’s pure love. Periya Ishttam. It’s there in teenagers.
😢😢😢
தமிழ்நாடு பொக்கிஷம் வாழை சூப்பர் படம் 💞💞💞
മലയാളത്തിലും ഒരു വാഴ തമിഴിലും ഒരു വാഴയ് ❤️
വാഴൈ
என்ன சொல்லுறது னு தெரியல 🎉❤மாரி அண்ணா படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா 😢🎉 இந்த படம் வேற லெவல் அண்ணா
உண்மையில் மனுஷன் மாரிசெல்வராஜ் உன் ரியல் கதை அருமையான படைப்பு நிச்சயம் இந்த படைப்பு பல விருதுகள் பெற வாழ்த்துக்கள் சல்யூட் தலைவா 👋👋👋👋👋👋👋
For sure🫡🤝
ஐயா யாருய்யா நீ எல்லா வீடியோக்கும் கமெண்ட் போடுற
திருநெல்வேலி மக்களின் வாழ்வியல் ❤️💚❤️💚 வாழை👆👆👆
இது ஒரு உண்மை சம்பவம் எங்கள் ஊர் பேட்மாநகரத்தில் நடந்த உண்மை சம்பவம்😢 இப்ப நெனச்சா கூட கண் கலங்குகிறது
Enna sambavam bro please explain
Ena story ?
லாரியில் வாழைக்காய் லோடு ஏற்றிச் செல்லும் போது லாரி வயலில் கவிழ்ந்தது அதில் வாழைக்காய் சுமக்கிறவர்கள் இருந்தார்கள் சில போர் உயிரிழந்தனர்
இந்த விபத்து எனக்கும் நன்றாக நினைவிருக்கிறது..17 பேர் இறந்தார்கள் என்று நினைக்கிறேன்.. அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளைத் திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் இன்றும் காணலாம்.. இந்த விபத்தை மையமாக வைத்துதான் படம் எடுக்கப்பட்டதா?
ஒவ்வொரு படத்திலும் ஒரு விதமான வலியை மனதிற்குள் கடத்துகிறார்🥲✨✨✨
நீங்கள் இயக்கும் ஒவ்வொரு படமும் ஒரு பாடம் வரலாறு அண்ணா 🥰🥰🥰
1:58 Love you maari anna💙🫂🔥🔥🔥
படம் இன்று தான் தியேட்டர்ல பாத்தேன். அருமையான படம்! இந்த படத்துக்கு கண்டிப்பா அந்த குழந்தை நட்சத்திர பையனுக்கும், இயக்குனர் மாரி செல்வராஜ் க்கும் தேசிய விருது நிச்சயம்! ❤ தியேட்டர்ல போய் பாருங்கய்யா.. மனுஷன் பின்னீட்டாரு. 👌🏻🙌🏼🙌🏼🙌🏼🙌🏼🙌🏼👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻❤❤
27.08.2024
தமிழ் சினிமா உலகத்தின் இன்னொரு பக்கம்.. அது மாரி செல்வராஜின் மக்கள் உலகம்.. வாழ்த்துகள் வாழை டீம்... மாரி அண்ணா...!
What a impact trailer. Only Mari Selvaraj can do it🎉❤😢
Trailer காட்சிகளைப் பார்க்கும் பொழுது இரட்டை குழந்தை பிறந்த சந்தோஷத்தை கொடுக்கிறது இன்னும் திரைப்படம் எப்படி இருக்குமோ தெரியலையே❤❤❤
😂😂😂😂😂😂😂
இயக்குநருக்கு எதிராகவும் அவரையும் அவர் படத்தையும் ஆதரித்து பேசுவோர் மீதும் எத்தனை எத்தனை எதிர் மறையான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்😢
மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்த படைப்பு வாழை திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...🙏🙏😍😍😍
This movie is unique.... heart of tamilnadu... Director sir thalakuninj vanangerea... Vazhkayudea paseeyudea vellayea kaatti thantigea... All the charector of this movie hat's off 🫡🫡🫡... good work God bless you guys ❤❤❤
அழகிய லைலா பார்வதி ரசிகர்கள்...🥰
சிறு வயதில் தார் சுமக்க பல நாள் போயிருக்கேன்... கழுத்து வலி மறுநாள் தாங்க முடியாது
காய்ச்சுமை னா சொல்லுவாங்க நண்பா
Love From Kerala❤
We can feel the pain from your words, hope your are in better position today
@@vijayanand.b402 All The Best From Mallus💎
👌👌👌👌
1:15 SANA'S MAGIC 😇🤯
பல காலத்திற்கு பிறகு கண்ணிமைக்காமல் பார்த்த முன்னோட்டம்..
வெள்ளித்திரையில் காண காத்திருக்கிறேன்.❤
Meri Selvaraj films.are very rooted...hits at the heart directly!! This shud be released in Hindi, marathi and all other Indian languages!! Tax free and must watch for all Indians!
Was fandry released in tamil? This must be watched in tamil only.
அருமை அண்ணா மாரி selvarj❤️❤️❤️
Karunan reference were identified ✅ mari Selvaraj 💥🔥 1:22
என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் வரும் காட்சிகள் பல 😢😢
புது இயக்குனர் இந்த படத்த எடுத்து இருந்தா எவனும் பார்க்க மாட்டான்னு தெரிந்து,4 வது படமாக வாழை தந்து.. அணைத்து இயக்குனரும் பாராட்டி தள்ளுமாறு படம் எடுத்தான் பாரு.. மாரி... தரம்.... 👍👍👌👌
உங்கள் வாழ்க்கையை உலகறிய வேண்டும்,வாழை திரைப்படத்திற்கு வாழ்த்துக்கள் மாரி அண்ணா.
இப்பதான் ரஞ்சித் படம் எடுத்து 5 நாள் ஆச்சு அஞ்சு நாளா எந்த பயலுக்கும் தூக்கம் இல்லை ஒரே வைத்தெரிச்சல் ரஞ்சித் எடுத்த படமாவது பரவால்ல இப்போ மாரி செல்வராஜ் எடுத்துவிட்டு இருக்கிறான் பாரு இதைப் பார்த்து ஒரு குரூப் செத்தே போயிருவாங்க இவனுங்க இப்படி படம் எடுக்கிறார்கள் என்று மாரி செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.... எல்லாருக்கும் இன்னும் எரியும்
Ada ocku porandhavane ocla thindradhu neenga than 30 percentage nakki engluku 18 than ocla vayru valakradhu nee thanda mundane @@Anandharajsmart
Evamle oc.... Quota ellorukum tha irukku... Atha vechu munnernungana enga thatta en ni pakkura@@Anandharajsmart
@@maddyfx9947 Irundhalum Oruthanuku Ivlo Jaathi Veri Irukka Koodadhu da 🥵Konjam Think Pannu da Yen Ippudi SC ST mela ivlo Vanmam unaku 😒
Correct 💯. Pidukidan ooo dan
@@Anandharajsmart Bayangarama Tharkuri ya Iruppa polaye 🤡😆
அண்ணன் மாரிசெல்வராசின் மறக்கவே நினைக்கிறேன் புத்தகத்தை படித்தவர்கள் எத்தனை பேர் ❤
அதுல வர ஒவ்வொரு கதையும் ஒரு படம் பார்க்கிறதுக்கு சமம் சார்
வாழைக்குப் பிறகு பச்சை நிறத்தில் தெரிபவைகள் பசுமையாய் தெரிய போவதில்லை 🖤. Emotionally damaged 😞
எங்களுள் ஒருவரின் குரல், எங்கள் குரலாக ஒலிக்கின்றது, கேட்பவர்கள் கேளுங்கள் ஏனென்றால் எங்களால் தான் சொல்ல முடியும் வலியின் வழிகளை....🙏🙏
SaNa 🛐❤️🔥
ஏலே செவலிங்கம் ஓடாத ஓடாத ஓடாததததத லா...., இந்த வார்த்தை தியேட்டர்-லா நம்மலா சாவடிக்க போகுதுனு மட்டும் இப்பவே கேக்குது உள்ளுக்குள்ள...
poi velaya paaruda
priyamanoharan9687 nee poi paruda venna
@@priyamanoharan9687 யாருப்பா நீங்க.. மிளகாய் பொடி எதுவும் சாப்டியா...
Mari Selvaraj siroda sondha kadhai😢😢😢
ஆகச்சிறந்த படைப்பாக இது இருக்கும். வாழத்துகள் திரு. மாரி செல்வராஜ் & படக்குழு.
வாழ்த்துக்கள் மாரி செல்வராஜ் அண்ணே
சந்தோஷ் நாராயணன்❤️
பா.ரஞ்சித்,இப்போது ஒரு தங்கலான் வெற்றி படம் கொடுத்தார்.. அடுத்து மாரிசெல்வராஜ் அவர்கள் வாவெற்றி படம்.... வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐இரண்டு இயக்குனர் கள் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமைகள் 💐💐💐💐💐💐
vertimaaran also last month viduthalai 2 varuthu.
😂
நீ உன் சாதிக்கு படம்எடுப்ப அவன் உன் சாதிக்கு படம்எடுப்பான் அப்ப நான்ங்க யாரு என்ன செய்ய
பா. ரஞ்சித் வெற்றி படமா? அது எந்த உலகத்தில் நடந்தது😂
தங்கலான் பட budget 140 கோடி, இன்றுவரை மொத்த கலெக்ஷன் 29 கோடி
இது படம் மட்டுமல்ல தனிப்பட்ட மனிதனின் வலி ❤ சிறந்த காவியம்.
Last day intha movie paathen... Theatrela thembi thembi aluthuten... 90s life திரும்ப kannumunnadi konduvanthuchu... என் அப்பா அம்மா உழைப்பு kannumunnadi வந்து ninnuchi... இன்னும் என் மனசு நிம்மதி அடையில... வலி மிகுந்த படம் இல்ல இது பலரொட வலி மிகுந்த வாழ்க்கை😢
Dhanush anna sarbaga movei blockbuster aava Vazhthukkal🎉🎉🎉
100 நாள் படம் ஓட வாழ்த்துக்கள் வளத்துடன் வாழ்க
மண்ணின் மைந்தர் சகோதரர் மாரி செல்வராஜ் இயக்கும் வாழை திரைப்படம் வெற்றியும், பொது மக்கள் மத்தியில் நல்லதொரு கலந்துரையாடலும் உருவாக்கட்டும்..
உண்மையாகவே அண்ணன் மாரி செல்வராஜ் அவர்களின் படைப்பு உலக சினிமாவின் பொக்கிஷம். இயக்குனர் ராம் அவர்களின் படைப்பை பார்த்து பிரம்மத்துள்ளேன். அவர் வழியில் வந்த மாரி செல்வராஜ் தனக்கான சமூக பொறுப்பை ஒரு ஆகச்சிறந்த கலை படிப்பாக தருவார் என்ற நம்பிக்கை ஒவ்வொரு படத்திற்கும் உண்டு. வெறும் பெருமைக்காக மட்டுமல்லாமல் தனக்கான பயணம் அண்ணல் அம்பேத்கரின் புத்தரின் பரிணாமங்கள் இது பிரதிபலிப்பதில் ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. கலரா இருந்தா தான் குழந்தைகள் படம் என்பதை வழக்கமாகக் கொண்ட தமிழ் சினிமாவின் மாற்று சினிமா தான் வாழை ..... பணத்தை நோக்கி பயணிக்காமல் பயணத்தை நோக்கி தனக்காக பொறுப்பாக பயணிப்பதில் உங்கள் பாதை சிறந்த முன்னுதாரணம் வாழ்த்துக்கள் அண்ணா....
Brilliant... మారి సెల్వరాజ్ కి 🎉🎉🎉
SaNa & Theni Eswar ❤️🔥
மாரி செல்வராஜ் அடுத்த ஒரு பொக்கிஷம்.
Love From Mammootty Fans❤❤