கடவுள் வாழ்த்து - அதிகாரம் 1 - அறத்துப்பால் - திருக்குறள் || Kadavul vazhthu - Adhikaram 1 Arathupal
Вставка
- Опубліковано 6 лют 2025
- கடவுள் வாழ்த்து - அதிகாரம் 1 - அறத்துப்பால் - திருக்குறள் || Kadavul vazhthu - Adhikaram 1 Arathupal
தெய்வப்புலவர் என்று போற்றப்படும் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது திருக்குறள். இதில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒரு அதிகாரத்திற்கு பத்து குறள் வீதம் மொத்தம் 1330 திருக்குறள் உள்ளன. இவை அனைத்தும் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பிரிவுகளுக்குள் வருகின்றன. திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களின் குறள் தினம் ஒரு குறள் விளக்கத்துடன் கொடுக்கப்படும்.
குறள் 1:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
குறள் 2:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
குறள் 3:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்
குறள் 4:
வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
குறள் 5:
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
குறள் 6:
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்
குறள் 7:
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது
குறள் 8:
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது
குறள் 9:
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
குறள் 10:
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்
திருக்குறள்
#thirukkural
#tamil
#thiruvalluvar
#திருக்குறள்
#திருவள்ளுவர்
#அறத்துப்பால்
#kural
#thirukural
#thirukkural
#thirukkuralintamil
#viral