கோடைக்கால காற்றே பாடல் | Kodai Kaala Kaatre song | Ilaiyaraaja | Malaysia Vasudevan .

Поділитися
Вставка
  • Опубліковано 11 лип 2022
  • #ilayarajasongs #gangaiamaranhits #tamilsongs #lovesongs #malaysiavasudevan #4koldsongs
    கோடைக்கால காற்றே பாடல் | Kodai Kaala Kaatre song | Ilaiyaraaja | Malaysia Vasudevan . Tamil Lyrics in Description .
    Movie : Panneer Pushpangal
    Music : Ilaiyaraaja
    Song : Kodai Kaala Kaatre
    Singers : Malaysia Vasudevan
    Lyrics : Gangai Amaran
    கோடைக்கால காற்றே
    குளிர்த்தென்றல் பாடும் பாட்டே
    மனம் தேடும் சுவையோடு
    தினம்தோறும் இசைபாடு
    அதை கேட்கும் நெஞ்சமே
    லாலா.ள.லல லா..
    சுகம் கோடி காணட்டும்
    லாலா.ள.லல லா..
    இவைகள் இளமாலை பூக்களே
    லலல லல லல லல லல லா
    புதுச்சோலை பூக்களே
    லலல லல லல லல லல லா
    கோடைகால காற்றே
    குளிர்த்தென்றல் பாடும் பாட்டே.
    லா லால லா.லா.
    லல ல. லாலால லாலா.
    லலல லா..லா .லா..
    லாலா..லல லா.லாலா..லல லா..
    வானில் போகும் மேகம் இங்கே
    யாரைத் தேடுதோ
    வாசம் வீசும் பூவின் ராகம்
    யாரைப் பாடுதோ
    தன் உணர்வுகளை மெல்லிசையாக
    நம் உறவுகளை வந்து கூடாதோ
    திருநாளும் கூடட்டும்
    சுகம் தேடி ஆடட்டும்
    இவைகள் இளமாலை பூக்களே
    லலல லல லல லல லல லா
    புதுச்சோலை பூக்களே
    லலல லல லல லல லல லா
    புதுச்சோலை பூக்களே
    கோடைகால காற்றே
    குளிர்த்தென்றல் பாடும் பாட்டே.
    லா.லலல.லல.லல..லல..லல
    லா.லா.லா.லா.லா.லா.
    லலலல லா..லா.லா.
    லல்லா.லா.லா.லா.
    லலலல..லா.லா.லா.லல லா..
    ஏதோ ஒன்றைத் தேடும்
    நெஞ்சம் இங்கே கண்டதே
    ஏங்கும் கண்ணில் தோன்றும்
    இன்பம் இங்கே என்றதே
    வெண்மலை அருவி
    பன்னீர் தூவி
    பொன்மலை அழகின்
    சுகம் ஏற்காதோ
    இவை யாவும் பாடங்கள்
    இனிதான வேதங்கள்
    இவைகள் இளமாலை பூக்களே
    லலல லல லல லல லல லா
    புதுச்சோலை பூக்களே
    லலல லல லல லல லல லா
    கோடைக்கால காற்றே
    குளிர்த்தென்றல் பாடும் பாட்டே
    மனம் தேடும் சுவையோடு
    தினம்தோறும் இசைபாடு
    அதை கேட்கும் நெஞ்சமே
    லாலா.ள.லல லா..
    சுகம் கோடி காணட்டும்
    லாலா.ள.லல லா..
    இவைகள் இளமாலை பூக்களே
    லலல லல லல லல லல லா
    புதுச்சோலை பூக்களே
    லலல லல லல லல லல லா
    கோடைகால காற்றே
    குளிர்த்தென்றல் பாடும் பாட்டே.
  • Розваги

КОМЕНТАРІ • 30

  • @PS2-6079
    @PS2-6079 Рік тому +32

    1981-ம் ஆண்டு ஹேமசித்ரா ஆர்ட்ஸ் பேனரில் பத்மினி தயாரிப்பில் இரட்டையர்கள் பாரதி-வாசு (சந்தானபாரதி, P வாசு) ஆகியோர்கள் இயக்கத்தில் நடிகர்கள் சுரேஷ், சாந்தி கிருஷ்ணா, பிரதாப், வெண்ணிறாடை மூர்த்தி, மாணவன் மனோகர் மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்து சக்கைபோடு போட்ட வெற்றிப் படம் தான் "பன்னீர் புஷ்பங்கள்."
    "வானில் போகும் மேகம் இங்கே யாரை தேடுதோ
    வாசம் வீசும் பூவின் ராகம் யாரை பாடுதோ "
    என்ன ஒரு சுகமான இசையோட்டம் !
    மனதின் அமைதியில் உதடுகளை முனுமுனுக்க வைத்த வரிகள்!
    இளமைக்காலத்து இனக்கவர்ச்சியின்பால் ஏற்படும் ஒருவித மோகவும், தாபமும் எல்லாம் நிலைகொள்ள மறுக்கும் தேரோட்டம் தானே?
    அப்போதெல்லாம் எங்கிருந்து வந்தது அந்த தைரியம் என்று, இன்று யோசித்தால் கூட ஏதோ ஒருவித வெட்கம் நிலைகுலைய வைப்பதின் அழகை சொல்லாமலேயே புரிகிறதல்லவா?
    கனவுத் தோரணங்கள் போர்த்திய பயமறியாத, கள்ளம் கபடமற்றது தானே இளமைக்கால நாட்கள்?
    அப்ப எதுவும் சொல்லிவிட்டு போகல...
    இப்ப நினைத்தாலும் அனைத்தும் சொல்லிமாளாது...
    நிற்க.
    சோமசுந்தரேஷ்வரின் வித்தியாசமான கற்பனை கதைக்கு ஒரு சபாஷ்!
    (கதை சுருக்கம்" பூந்தளிர் ஆட" பாடலின் பின்னூட்டத்தில் பகிர்ந்துள்ளேன்)
    விடலைத்தனமான காதல்கதை என்றாலும் கூட, எங்கேயும் வரம்புமீறின காட்சிகளோ, இரட்டை அர்த்த வசனமோ இடம்பெறவில்லை என்பதுதான் நிஜம்!
    விடலை பருவத்தில் இனக்கவர்ச்சி மூலம் எழும் காதல் வயப்பட்டு அறியாமையால் ஊரைவிட்டு ஓடிப்போகும் காதல் ஜோடிகளுக்கும், அவர்களுடைய பெற்றோர்களுக்கும் நேரிடையாக பாடம் புகட்டுவது போன்று அமையாமல் மிகவும் யதார்த்தமாக படமாக்கிய விதமும் இப்படம் வெற்றி பெற ஒரு காரணம் என்பது தானே நிதர்சனம்!
    நான் இந்த படத்தை அம்மாவிடம் அனுமதி பெற்று, அப்பாவிற்கு தெரியாமல் நண்பர்களுடன் ஜூலை மாதம் கடைசி வாரத்தில் இரவு காட்சியாக சென்னை ஈகா தியேட்டரில் கண்டு களித்த பசுமையான நினைவுகள் இப்பாடலை கேட்கும்போதெல்லாம் உயிர்த்தெழுந்து வருவதை தடுக்க முடியுமா?
    பாடல்களை பொறுத்தமட்டில் பன்முக திறமை கொண்ட கங்கை அமரனின் கற்பனையில் உதயமான வார்த்தை ஜாலங்களை இளையராஜா தன்னுடைய இசையெனும் தேனில் தோய்த்தெடுத்து மலேசியா வாசுதேவன் குரலில் ஒலிக்கச் செய்ததை ரசிகர்கள் மனதார ஏற்றுக்கொண்டார்கள் என்பது தான் நிதர்சனம்!
    யார் இந்த மலேசியா வாசுதேவன்?
    அன்றைய ஒருங்கிணைந்த மதராஸ் சமஸ்தானம், கேரளாவிலிருந்து மலேசியாவில் குடியேறிய சாத்து நாயர் - அம்மாளு தம்பதியரின் எட்டாவது மகனான ஆறுமுகம் என்கின்ற வாசுதேவன். வாலிப பருவத்தில் அங்குள்ள நாடகக்குழுவில் நடிகனாகவும், தமிழர் இசைக்குழுவில் மேடைப்பாடகனாகவும் அறிமுகமானார்.
    1970-களில் நற்பதிற்கும் மேற்பட்ட விளம்பரப்படங்களில் நடித்தார். தொடர்ந்து "பாவலர் பிரதர்ஸ்" இசைக்குழுவின் மேடை கச்சேரிகளில் பாடி வந்தார். அவரது முதல் திரை படப்பாடல் GK வெங்கடேஷின் இசையமைப்பில் உருவாகியிருந்தாலும் இளையராஜா இசையில், "பதினாறு
    வயதினிலே" படத்தில் வரும் "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு " எனும் பாடல் தான் அவரை உலகறியச்செய்தது என்று சொன்னால் மிகையல்ல!
    பாரதிராஜா இயக்கத்தில் உருவான "ஒரு கைதியின் டைரி" திரைபடத்தில் வில்லன் வேடம் மூலமாக பிசியான நடிகராகவும் மாறிவிட்டார்!
    சுமார் எட்டாயிரத்திற்கு மேற்பட்ட திரைப்பாடல்களை பாடியுள்ள மலேசியா வாசுதேவன் எண்பத்தைந்து படங்களுக்கு மேல் பலவித வேடங்களில் நடித்தும், நான்கைந்து திரைப்படங்களுக்கு இசை அமைத்தும், திரைப்படம் ஒன்றிற்கு கதை வசனம் படைத்தும் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தமிழக அரசின் கலைமாமணி விருது உட்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்படத்தக்கது. கடந்த 2011-ம் ஆண்டு உடல்நலம் குன்றி தன்னுடைய 67-வது வயதில் அவர் மறைந்துவிட்ட போதிலும் அவரது படைப்புகள் உலகம் உள்ளவரை நினைவுகூறும் என்பதில் சந்தேகமில்லை!
    நட்பிற்காக சம்பளம் பெறாத இளையராஜா, வழக்கமான கிராமத்து பாணியிலிருந்து சற்று விலகிப் போனதை இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் தெள்ளத்தெளிவாக தெரிகிறதல்லவா?
    நாற்பத்திரெண்டு ஆண்டு கடந்துவிட்டபோதிலும், இன்றும் கூட காதில் தேனூறும் விதமாக அமைந்த இந்த அருமையான பாடல் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன்.
    நன்றி. மீண்டும் ரசிப்போம்!
    ப.சிவசங்கர்.

    • @skilllearnacademy6005
      @skilllearnacademy6005 Рік тому +1

      சூப்பர் நண்பரே ...அருமையான பதிவு அதுவும்...மூன்று மாதத்திற்க்கு முன் 👏👏👏

    • @PS2-6079
      @PS2-6079 Рік тому +3

      @@skilllearnacademy6005 நன்றி அன்பரே...

    • @nagarajanphysics6932
      @nagarajanphysics6932 3 місяці тому +1

      எனக்கு Malaysia வாசுதேவன் ரொம்ப pidikkum

    • @PS2-6079
      @PS2-6079 3 місяці тому

      @@nagarajanphysics6932 சந்தோஷம்!

    • @michaelarokiasamy8622
      @michaelarokiasamy8622 3 місяці тому +1

      Golden Memories, அன்பரின் பதிவு அருமை 👍👍👍

  • @skilllearnacademy6005
    @skilllearnacademy6005 Рік тому +10

    நம் வாழ்நாளில் நல்ல பொக்கிஷம் ,நம்ம கல்லூரி மாற்றும் பள்ளி பருவம்

  • @p.shanmugam6605
    @p.shanmugam6605 10 місяців тому +8

    கடந்த காலத்தை நினைத்து பார்க்க வைக்கும் பாடல் 💝💝❤️❤️

  • @vijayalr423
    @vijayalr423 2 місяці тому +3

    ம.வாசுதேவனின் அமைதியான இனிமையான voice.

  • @sivakumarc6166
    @sivakumarc6166 3 місяці тому +3

    இசைக்கு உயிர் கொடுத்த எங்கள் இளையராஜா

  • @skilllearnacademy6005
    @skilllearnacademy6005 Рік тому +6

    நல்ல இசை நல்ல லொகேஷன் நல்ல காட்சியமைப்பு

  • @balasubramani7266
    @balasubramani7266 Рік тому +13

    ஆனந்தமாய் ,ஆனந்த பரவசமாய் இருப்பது போல் உணர்கிறேன்

  • @subramaniyankandhasamy6228
    @subramaniyankandhasamy6228 10 місяців тому +2

    மலேசியாவின் melody இசை ராஜா வின் இசையும் வேறு உலகத்துக்கு கொண்டு போகும்

  • @hemalathamahalingam7496
    @hemalathamahalingam7496 Рік тому +6

    Evergreen favourite song💜💜💜

  • @hemalathamahalingam7496
    @hemalathamahalingam7496 Рік тому +5

    Malaysia vasudevan sir voice magic

  • @rolands1375
    @rolands1375 11 місяців тому +3

    Marakamudyatha songs school college nenivugal varuthu

  • @ravid6329
    @ravid6329 Місяць тому

    என் நினைவில் நினற பாடல்.

  • @hariharandeebak
    @hariharandeebak 11 місяців тому +1

    Imagine songs

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 Рік тому +2

    இந்த நடிகைதான் நேருக்கு நேர் படத்தில் சூர்யாவின் அக்கா என்பதை நான் உறுதி செய்கின்றேன்🌹By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 LNG & LPG 🌹 28.4.2023🌹