🛕 கண்ணிறைந்த பெருமாள் & ஆலத்துரை மகாதேவர் குடைவரை கோயில் l Kudaivarai Kovil

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • வணக்கம் 🙏
    🛕 அருள்மிகு கண்ணிறைந்த பெருமாள் திருக்கோயில்
    ...................................................................................................................
    சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட குடைவரைக் கோயில் மலையடிப்பட்டியில் இருக்கிறது.
    நின்றான், அமர்ந்தான், கிடந்தான் எனும் மூன்று கோலங்களில் காட்சி தருகிறார்
    *நின்ற கோலத்தில் புருஷோத்தமன், அமர்ந்த கோலத்தில் ஹயக்ரீவர், நரசிம்மர் மற்றும் பரமபதனாதன் வடிவிலும், கிடந்த கோலத்தில் அரங்கநாதனாகவும் பெருமாள் காட்சிதருகிறார்.
    கருவறை.... மூன்று பாகங்களில் வாயில் கதவுகள் இல்லாமல், தூண்கள் மூலம் பிரிக்கப்பட்டுள்ளது.
    • கருவறையில் இரு தூண்கள் உள்ளன. இதை ஹரி நேத்திர தூண்கள் என்கிறார்கள். இதன் மூலம் சிருஷ்டி, ஸ்திதி, லயம் என்ற மூன்று வாயில்கள் வழியாக பள்ளி கொண்ட பெருமாளை, நாம் தரிசிக்கலாம்.
    திவாகர முனிவருக்கு அரங்கன் திருக்கோலத்தின் மீது அபார அன்பு. நாளும் ஒரு அரங்கன் திருக்கோலத்தைத் தரிசிக்காமல் எந்த உணவையும் உண்ண மாட்டார்.
    ஒரு சமயம் திவாகர முனிவர் இக்கோயிலுக்கு இறைவனின் திருவிளையாடலால் வந்து, நின்ற, அமர்ந்த கிடந்த இறைவனின் திருக்கோலக் காட்சி கிடைக்கப்பெற்றுள்ளார்.
    ஆதிசேஷன் மேல் பள்ளிகொள்ளும் அரங்கனின் திருவடி அருகே பூதேவி, நாபிக்கமலத்தில் பிரம்மா, சுற்றிலும் அஸ்வினி, தேவர்கள், கின்னரர், கிம்புருடர் அப்ஸரஸ்கள் சூழ திவாகரமுனிக்குக் காட்சிகொடுத்தபடி இருக்கிறார். பெருமாளுக்கு அருகிலேயே திவாகர முனி அமர்ந்து அருளுகிறார்.
    🛕 அருள்மிக ஆலத்துரை மகாதேவர் திருக்கோயில்
    ..............................................................................................................
    சிவபெருமானுக்கு என ஒரு குடைவறைக் கோவில் குடையப்பட்டு சப்தமாதர்களும் புடைப்புச் சிற்பங்களாக உள்ளனர்.
    ஒரே குன்றில் குடைந்து எடுக்கப்பட்ட திருமால் மற்றும் சிவன் கோயில்களில் இந்த சிவன் கோயிலில் நந்திவர்ம பல்லவன் (கி.பி.775-826) காலத்துக் கல்வெட்டு காணப்படுகிறது.
    சுமார் கி.பி.730இல் குவாவன் சாத்தன் என்னும் விடேல் விடுகு முத்தரையர் இம்மலையைக் குடைந்து எடுத்து கோயில் அமைத்தான் என்பதை கல்வெட்டின் மூலம் அறியலாம்.
    மூலஸ்தான தெய்வம் வாகீஸ்வரர் / ஆலத்துரை மகாதேவர் என்றும் வடிவுள்ள மங்கை என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயில் ஆலத்தூர்த்தளி என்று அழைக்கப்படுகிறது.
    அர்த்த மண்டபத்தின் மேற்குப் பக்கவாட்டுச் சுவரில் மூன்று அடிப்படைச் சிற்பங்கள் உள்ளன.
    1) பல ஆயுதங்களை ஏந்திய துர்க்கையின் சிற்பம்
    2) விஷ்ணு மற்றும் சிவனின் ஒருங்கிணைந்த வடிவமான ஹரி-ஹரா
    3) முருகனின் வடிவமான பிரம்ம சாஸ்தா
    வீரபத்ராவுடன் கூடிய சப்தமாத்ரிகைகளின் சிற்பங்கள் காணப்படுகின்றன. வீரபத்திரருடன் தொடங்கி மேற்கு முனையில் விநாயகருடன் முடிவடைகிறது
    Tempe Location : maps.app.goo.g...
    யாத்திரிகன் ஆன்மீகம் சேனலை பின் தொடர்வதற்கு மிகவும் நன்றி,
    👇
    பயனுள்ள ஆன்மீக தகவல்கள்
    • திருத்தலச் சிறப்புகள்
    தலபுராணங்கள்
    • தல புராணங்கள்
    🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕
    யாத்திரிகன் ஆன்மீகம் சேனலில் தொடர்ச்சியாக இந்து மதம் தொடர்பான பல பயனுள்ள கருத்துக்களும், பல அற்புத திருக்கோயில்களின் தலபுராணங்களும், இறைவனின் திருவிளையாடல் மற்றும் இதிகாசங்கள், புராணங்கள் தொடர்பான பல அரிய தகவல்கள் பதிவிடப்படும், கண்டு பயனடையுங்கள்.
    👣👣வாருங்கள் நம்முடைய பயணத்தினை தொடருவோம்👣👣
    🙏 உங்களுடைய நல்லதர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள் 🙏
    #KudaivaraiKovil #kanniranthaperumal #perumal #narasimha #narasimhadeva #malayadipatti #pattisami #thanjavur #trichy #shivavishnu #mutharaiyar #chozha #chola #nayak #hilltemple #pudukottai #pudukottaitemples #thanjavurtemple #shiva #vishnu #sivavishnu #purushothaman #arangan #srirangam #padmanathaswamy #mahavishnu #sengipatti #சிவன் #விஷ்ணு #மகாவிஷ்ணு #மலையடிப்பட்டி #பட்டிசாமி #திவாகரமுனிவர் #முனிவர் #குடைவரைகோயில் #கோயில் #சிவன்கோயில் #சிவாலயம் #வைஷ்ணவத்தலம் #திருமங்கையாழ்வார் #வீரபத்திரன் #சப்தமாதர்கள் #மகிஷன் #சிற்பங்கள் #மலைகோயில் #சோழதேசம் #செங்கிப்பட்டி #ஆலத்துரை #மகாதேவர் #வாகீஸ்வரர் #திரிசூலகர் #sivan #மழுவடியார் #விநாயகர் #ஹரி-ஹரா #பிரம்மசாஸ்தா #நரசிம்மர் #புருஷோத்தமன் #ஹயக்ரீவர் #பரமபதனாதன் #அரங்கநாதன் #லட்சுமி #ஆதிசேஷன் #பூதேவி #பிரம்மா #அஸ்வினி #தேவர்கள் #கின்னரர் #கிம்புருடர் #அப்ஸரஸ்கள் #கண்ணிறைந்தபெருமாள் #கண்ணிறைந்த #பெருமாள்
    #ஆலத்துரைமகாதேவர் #குளத்தூர் #புதுக்கோட்டை #shiva #தஞ்சாவூர் #சூரியன் #சந்திரன் #லிங்கம் #துவாரபாலகர்கள் #அர்த்தமண்டபம் #லகுலீசபாசுபதம் #நகுலீசபாசுபதம் #நகலீசர் #இரண்டாம்நந்திவர்மன் #அழிஞ்சில் #வில்வம் #மலர்ஸ்தம்பவழிபாடு #நகுலீசதத்துவம்

КОМЕНТАРІ • 9

  • @tamilarasang-jj7zb
    @tamilarasang-jj7zb 22 дні тому +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @mangaysivam2813
    @mangaysivam2813 22 дні тому +2

    ஓம் namo நாராயணா, நன்றி

  • @gantharuban3933
    @gantharuban3933 24 дні тому +2

    Ohm Namonarayana

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 22 дні тому +2

    Om Sri Aiaduri Arulmigu Perumal Eswaranatha perumane Nanthiperumane yours Thiruvadi Saranam Saranam Saranam🌷🌷🌷🌷🌷🌷🌷🌷💯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @sudha-lm1gx
      @sudha-lm1gx 20 днів тому +1

      Wr s d temple

    • @YathriganAanmeegam
      @YathriganAanmeegam  7 днів тому

      Temple Details in Video Description,
      Tempe Location : maps.app.goo.gl/sGo65UPFrUSbiCZTA

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 24 дні тому +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @raninathan6809
    @raninathan6809 22 дні тому +1

    Om namo narayanaya namaka

  • @p.ratnasingamp.r.rishikesa1974
    @p.ratnasingamp.r.rishikesa1974 22 дні тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏