Alwars and Narasimha
Вставка
- Опубліковано 10 лют 2025
- D.A.Joseph choose those pasurams of Nalayiram which speaks of Lord Narasimha in detail, and gives meaning to them.
Pasurams list given below :
நம்மாழ்வார் திருவாய்மொழி
2934
ஆடியாடி யகம்கரைந்து, இசை
பாடிப்பாடிக் கண்ணீர்மல்கி, எங்கும்
நாடிநாடி நரசிங்காவென்று,
வாடிவாடு மிவ்வாணுதலெ. 2.4.1
2988
எங்கும்முளன்கண்ண னென்றமகனைக்காய்ந்து,
இங்கில்லையால் என் றிரணியன் தூண்புடைப்ப,
அங்கப்பொழுதே அவன்வீயத்தோன்றிய, என்
சிங்கப்பிரான்பெருமை யாராயும்சீர்மைத்தே. 2.8.9
3206
கிளரொளியால் குறைவில்லா
அரியுருவாய்க் கிளர்ந்தெழுந்து,
கிளரொளிய இரணியன
தகல்மார்பம் கிழிந்துகந்த,
வளரொளிய கனலாழி
வலம்புரியன் மணிநீல,
வளரொளியான் கவராத
வரிவளையால் குறைவிலமே. 4.8.7
3491
போழ்து மெலிந்தபுன் செக்கரில்,வான்திசை
சூழு மெழுந்துதி ரப்புன லா,மலை
கீழ்து பிளந்தசிங் கமொத்த தால்,அப்பன்
ஆழ்துயர் செய்தசு ரரைக்கொல்லு மாறே. 7.4.6
பெரியாழ்வார்
(83)
அளந்திட்ட தூணை அவந்தட்ட ஆங்கே
வளர்ந்திட்டு வாளுகிர்ச் சிங்க வுருவாய்
உளந்தொட் டிரணியன் ஒண்மார் வகலம்
பிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய்முலை யுண்டானே சப்பாணி. 1.6.9
உரம்பற்றிஇரணியனை
உகிர்நுதியால்ஒள்ளியமார்புறைக்கவூன்றி
சிரம்பற்றிமுடியிடியக்கண்பிதுங்க
வாயலரத்தெழித்தான்கோயில்
உரம்பெற்றமலர்க்கமலம்
உலகளந்தசேவடிபோல்உயர்ந்துகாட்ட
வரம்புற்றகதிர்ச்செந்நெல்
தாள்சாய்த்துத்தலைவணக்கும்தண்ணரங்கமே. 4.9.8
ஆண்டாள் - திருப்பாவை-23
மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துஉறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி
மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துஉதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போருமா போலேநீ பூவைப்பூ வண்ணாஉன்
கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனத்துஇருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.
திருப்பாணாழ்வார் - அமலனாதிபிரான் - 8 ஆம் பாசுரம்
பரிய னாகி வந்த அவுண னுடல்கீண்ட அமரர்க்கு
அரிய ஆதிபிரா னரங்கத் தமலன் முகத்து
கரிய வாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்டவப்
பெரிய வாய கண்க ளென்னைப் பேதைமை செய்தனவே.
திருமங்கையாழ்வார்
1013
எரிந்தபைங்கணிலங்குபேழ்வாய் எயிற்றொடிதெவ்வுருவென்று,
இரிந்துவானோர் கலங்கியோட இருந்தவம்மானதிடம்,
நெரிந்தவேயின் முழையுள்நின்று நீணெறிவாயுழுவை,
திரிந்தவானைச்சுவடுபார்க்கும் சிங்கவேள்குன்றமே. 1.7.6
1075
பள்ளியி லோதி வந்ததன் சிறுவன்
வாயிலோ ராயிர நாமம்,
ஒள்ளிய வாகிப் போதவாங் கதனுக்
கொன்றுமோர் பொறுப்பில னாகி,
பிள்ளையைச் சீறி வெகுண்டுதூண் புடைப்பப்
பிறையெயிற் றனல்விழிப் பேழ்வாய்,
தெள்ளிய சிங்க மாகிய தேவைத்
திருவல்லிக் கேணிக்கண் டேனே. (2) 2.3.8
1241
ஓடாத வாளரியி
னுருவமது கொண்டு அன்
றுலப்பில்மிகு பெருவரத்த
விரணியனைப் பற்றி,
வாடாத வள்ளுகிரால்
பிளந்தவன்றன் மகனுக்
கருள்செய்தான் வாழுமிடம்
மல்லிகைசெங் கழுநீர்,
சேடேறு மலர்ச்செருந்தி
செழுங்கமுகம் பாளை
செண்பகங்கள் மணநாறும்
வண்பொழிலி னூடே,
ஆடேறு வயலாலைப்
புகைகமழு நாங்கூர்
அரிமேய விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே. 3.10.4
1412
எங்ஙனே யுய்வர் தானவர் நினைந்தால்
இரணியன் இலங்குபூ ணகலம்,
பொங்குவெங் குருதி பொன்மலை பிளந்து
பொழிதரு மருவியொத் திழிய,
வெங்கண்வா ளெயிற்றோர் வெள்ளிமா விலங்கல்
விண்ணுறக் கனல்விழித் தெழுந்தது,
அங்ஙனே யொக்க அரியுரு வானான்
அரங்கமா நகரமர்ந் தானே (5.7.5)
1501
பைங்கணா ளரியுருவாய் வெருவ நோக்கிப்
பருவரைத்தோ ளிரணியனைப் பற்றிவாங்கி
அங்கைவா ளுகிர் நுதியா லவன தாகம்
அங்குருதி பொங்குவித்தா னடிக்கீழ்நிற்பீர்
வெங்கண்மா களிறுந்தி வெண்ணியேற்ற
விறல்மன்னர் திறலழிய வெம்மாவுய்த்த
செங்கணான் கோச்சோழன் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (6.6.4)
பொய்கையாழ்வார் -93
(2174)
வயிறழல வாளுருவி வந்தானை யஞ்ச
எயிறிலக வாய்மடுத்த தென்நீ, - பொறியுகிரால்
பூவடியை யீடழித்த பொன்னாழிக் கையா,நின்
சேவடிமே லீடழியச் செற்று.
பூதத்தாழ்வார்-84
வரம்கருதித் தன்னை வணங்காத வன்மை,
உரம்கருதி மூர்க்கத் தவனை, - நரம்கலந்த
சிங்கமாய்க் கீண்ட திருவன் அடியிணையே,
அங்கண்மா ஞாலத் தமுது.
பேயாழ்வார் -65
(2346)
அங்கற் கிடரின்றி அந்திப் பொழுதத்து,
மங்க இரணியன தாகத்தை,- பொங்கி
அரியுருவ மாய்ப்பிளந்த அம்மா னவனே,
கரியுருவம் கொம்பொசித்தான் காய்ந்து.
பேயாழ்வார் -95
(2376)
புகுந்திலங்கும் அந்திப் பொழுதகத்து, அரியாய்
இகழ்ந்த இரணியன தாகம், சுகிர்ந்தெங்கும்
சிந்தப் பிளந்த திருமால் திருவடியே
வந்தித்தென் னெஞ்சமே வாழ்த்து.
திருமழிசை ஆழ்வார் - நான்முகன் திருவந்தாதி
(2402)
இவையா பிலவாய் திறந்தெரி கான்ற
இவையா எரிவட்டக் கண்கள் - இவையா
எரிபொங்கிக் காட்டு மிமையோர் பெருமான்,
அரிபொங்கிக் காட்டும் அழகு. 21
திருவரங்கத்தமுதனார் -
இராமாநுச நூற்றந்தாதி
(2893)
வளர்ந்தவெங் கோப மடங்கலொன் றாய்,அன்று வாளவுணன்
கிளர்ந்தபொன் னாகம் கிழித்தவன் கீர்த்திப் பயிரெழுந்து
விளைந்திடும் சிந்தை இராமா னுசனென்றன் மெய்வினைநோய் 103
களைந்துநன் ஞானம் அளித்தனன் கையிற் கனியென்னவே
ஸ்ரீலக்ஷ்மிந்ருஸிம்ஹன் அடைக்கலப்பத்து
(அத்திப்பட்டு ஸ்ரீ அழகியசிங்கர் அருளிச்செய்தது)
இங்குளனங்குளனல்லன் என்றுரைக்கக்கூடாமே
எங்குமுளனென்கண்ணன் என்றுரைத்ததன்மகனைக்
குங்குமம்போற்சிவந்தகண்ணன் குருட்டவுணனுதைத்திட்ட
சங்கணிதூண்பிளந்தபிரான் சதிரடியை யடைந்தேனே. .6
Anega namaskaram. How beautiful and useful uanyasam. Jai sri ram
அடியேன் நமஸ்காரம் 🙏🙏🙏
உயர்திரு ஸ்ரீ ஜோசப் அய்யங்கார் அவர்கள் குருவடி சரணம் திருவடி சரணம் ராதே கிருஷ்ணா ராதே கோவிந்தா
திரு. ஜோஸப் ஐயங்கார் திருவடிகளுக்கு நமஸ்காரம் 🙏🏾
Super speech patangaluku namaskaram
அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி.மிக்க நன்றி ஸ்வாமி
நன்றி ஐயா, இது போல திருவேங்கடநாதனைக் குறித்த பிரபந்தங்களை தொகுத்து வழங்க வேண்டுகிறேன்🙏.
Jai sri ram🙏
ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐🙇🙏 அதி அற்புதம் அற்புதம் ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐🙇🙏
Namaskarams and express my great happiness and gratitude for this lovely and enchanting discourse. We are always eagerly waiting for the next, long discourse, just like we wait for a postman to bring good letters and telegrams.
ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ 🙏
😊
Jaisrimannarayana
அடியேன் தாசன் ஸ்ரீமதே ராமானுஜாய ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் நரம் கலந்த சிங்கத்தை நயம்பட கூறி திரு வாயாலே தரிசிக்க பெரிய ஆழ்வாரா திருப்பாணாழ்வார் திருமங்கை மன்னனோ...
Danyosmi Swamy 🙏
👌👌👌👌 super sir
untold discourse🙏
Adiyen Dasan Swamy 🙏🙏🙏🙏l
அடியேன் சுவாமி 🙏🙏🙏 Aṭiyēṉ Cuvāmi
Jai sriman narayana
Shrimathe Ramanujaya namaha Jai Shriman narayana.Jai lashmi narasimha
ஜெய் ஸ்ரீமன் நாராயணா 🙏🙏🙏🙏
சுவாமி அடியேன் அனந்த கோடி நமஸ்காரம்
🙏🏻 அடியேனின்🙇🏻♂️நமஸ்காரங்கள்🙇🏻♂️சுவாமி🙏🏻
*🌹ஜெய்♥️ஸ்ரீ✨️மன்💙நாராயணாய🌹*
நமஷ்காரங்களை தெரிவித்து கொள்கிறேன் சுவாமி
அழகிய சிங்கம் லக்ஷ்மிநரசிமாய நமஹ 🙏
சுவாமிகள் திருவடிகளே சரணம் 🙏
🎉🎉🎉
Jai Narasimha...🌺💮🏵️🌸
Jai Narashima 🦁12:23 Kambar
Jai Sriman Narayana.. Jai Lakshmi Narasimha
🙏🏼🙇🏻♂️🙏🏼
Adiyen, can these two pasurams from thiruchandavirutham be on the list?
1) வரத்தினில் சிரத்தை மிக்க
2) வானிறத்து ஓர் சீயம்
May God bless you and your family with Good health and happiness Sir...
🙏
Adiyen namaskaram. Below Paasuram from Periya Thirumozhi should -also be in be the list ?
மிக்கானை* மறைஆய் விரிந்த விளக்கை,* என்னுள்-
புக்கானை* புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை*
தக்கானை கடிகைத்* தடங்குன்றின் மிசைஇருந்த*
அக்காரக் கனியை* அடைந்து உய்ந்து போனேனே
Adiyen Ramanuja thasan
👌👌💯💯💐💐
👏🙏🤗🌷🌸🪔
😂😂😂😂😂
🙏
🙏