Uyire uyire uyirin uyire christian song, உயிரே உயிரே உயிரின் உயிரே

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2024
  • உயிரே உயிரே உயிரின் உயிரே
    உடலாய் என்னில் வாவா
    உறவே உறவே உறவின் உறவே
    உணவாய் என்னில் வாவா
    உணர்வில் உறங்கும் உறவின் தேடல்
    உளமே மகிழும் இறையின் பாடல்
    வளமாக என்னில் நீ வா ஆ..ஆ
    தூங்காத நெஞ்சம் துளிர்கின்ற கண்கள்
    துடைக்கின்ற கரமாக நீ வா
    ஊமை என் உள்ளம் தவிக்கின்ற நேரம்
    உரைக்கின்ற சொல்லாக நீ வா
    தாங்காத துயர் தீர்க்க வா
    தாயாக எனைத் தேற்ற வா
    அன்பே வா அருளே வா
    எனை ஆள்கின்ற பரம் பொருளே வா
    வளம் சேர்க்கும் மழையாக வா
    வாழ்விக்கும் உணவாக வா
    விடியாத இரவில் விழிக்கின்ற இமைகள்
    மதிப்போடும் விளக்காக நீ வா
    விடிகின்ற பொழுதில் விரிகின்ற பூவும்
    மணம் வீசும் மகிழ்வாக நீ வா
    நீங்காத நினைவே நீ வா
    நின்றளும் நிறைவே நீ வா
    விழியே வா ஒளியே வா
    நல் விடிகாலை பொழுதே வா
    விழி காக்கும் இமையாக வா
    அது காணும் விளக்காக வா

КОМЕНТАРІ • 16