புதுக்கவிதை முன்னோடி நா காமராசன் நினைவலைகள்

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • மரபுக் கவிஞராகத் தமது கவிதைப் பயணத்தைத் தொடங்கி புதுக்கவிதை உலகின் முன்னோடியாகத் திகழ்ந்த இவரின் நூல்கள் அத்தனையும் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன. இவர் எழுதிய காகிதப் பூக்கள் கவிதை, மனித குல பரிணாமத்தின் பிரதிபலிப்பாகக் கருதப்படுகிறது. ' வானிலே தேனிலா ஆடுதே பாடுதே ' என்ற பாடலுக்கு மயங்காதவர்கள் கிடையாது.
    முந்தானை முடிச்சு படத்துக்காக இவர் எழுதிய 'வௌக்கு வெச்ச நேரத்துல மாமன் வந்தான்' பாடல் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமாய் ஒலித்த ஒரு பாடல். 'ரஜினி அங்கிள் ' என்று துவங்கும் ரஜினிக்குப் பெயர் வாங்கிக்கொடுத்த 'முத்துமணிச் சுடரே வா முல்லைமலர்ச் சரமே வா ' என்ற பாடல் வரிகள் இவர் பேனா பிரசவித்த வரிகள்தான். புகழ்மிக்கக் கவிஞராக பயணித்த அதே காலத்தில் அரசின் உயர் பதவிகளில் இருந்திருக்கிறார் என்பது வியக்கத்தக்கச் செய்தி. சினிமா பாடல்களை இலக்கியத் தரத்தோடு உருவாக்கியே தீர வேண்டும் என்ற கொள்கைப் பிடிப்போடு வாழ்ந்த மாமனிதர். 'பாவிகள் உலகமடா - இதுதான் வாழ்க்கையின் பாடமடா ' என்று வாழ்வதற்கு பாடம் எடுத்த கலைமாமணி நா காமராசன் அவர்களைக் கொண்டாட ஒரு விழா எடுத்திருக்கிறோம்...

КОМЕНТАРІ • 2

  • @p.mathialagan4966
    @p.mathialagan4966 2 роки тому +1

    மிகவும் சிறப்பு பாராட்டுக்கள் 💐💐💐👌👌👍

    • @RamkumarSanthanam
      @RamkumarSanthanam  2 роки тому

      மிக்க நன்றி இசைக்கவியே