ஈதுல் அழ்ஹா தொழுகை/ இஸ்லாமியா அறக்கட்டளை, சுல்தான்பேட்டை/ Eid Al adha prayer Puducherry /عيد الاضحى

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025
  • அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
    தொழும் முறை
    பெருநாள் தொழுகை இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும். தக்பீர் தஹ்ரீமாவுக்குப் பின்னர், முதல் ரக்அத்தில் அல்லாஹும்ம பாயித் பைனீ… அல்லது வஜ்ஜஹத்து வஜ்ஹிய லில்லதீ… என்ற துஆவை ஓதி விட்டு, அல்லாஹு அக்பர் என்று ஏழு தடவை இமாம் கூற வேண்டும்.
    பின்பற்றித் தொழுபவர்களும் ஏழு தடவை சப்தமின்றிக் கூற வேண்டும்.
    பின்னர் ஸூரத்துல் ஃபாத்திஹா மற்றும் துணை சூராக்கள் ஓதி ருகூவு, ஸஜ்தா மற்றும் மற்ற தொழுகையில் செய்யும் அனைத்துக் காரியங்களையும் செய்ய வேண்டும்.
    பின்னர் அல்லாஹு அக்பர் என்று கூறி இரண்டாம் ரக்அத்திற்கு எழுந்தவுடன் ஸூரத்துல் ஃபாத்திஹா ஓதுவதற்கு முன்னர் இமாம் ஐந்து தடவை அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். பின்பற்றித் தொழுபவர்களும் சப்தமின்றி ஐந்து தடவை அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும்.
    பின்னர் மற்றத் தொழுகைகளைப் போல் ஸூரத்துல் பாத்திஹா மற்றும் துணை சூராக்களை ஓதி, ருகூவு, ஸஜ்தா போன்ற அனைத்துக் காரியங்களையும் செய்து தொழுகையை முடிக்க வேண்டும். கூடுதல் தக்பீர் கூறும் போது தக்பீர்களுக்கு இடையில் ஓதுவதற்கு எந்த துஆவையும் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தரவில்லை. எனவே கூடுதல் தக்பீர்களுக்கிடையில் எந்த துஆவும் ஓதக் கூடாது.
    நபி (ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும், இரண்டாம் ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூறுவார்கள். இவற்றை கிராஅத்திற்கு முன்பு கூறுவார்கள்.
    அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)
    நூல்கள்: அபூதாவூத் 971, தாரகுத்னீ பாகம்: 2, பக்: 48, பைஹகீ 5968
    ஓத வேண்டிய சூராக்கள்
    நபி (ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகையிலும் முதல் ரக்அத்தில் அஃலா (87வது) அத்தியாயத்தையும் இரண்டாவது ரக்அத்தில் காஷியா (88வது) அத்தியாயத்தையும் ஓதியுள்ளார்கள்.
    சில சமயங்களில் காஃப் (50வது) அத்தியாயத்தையும் இரண்டாவது ரக்அத்தில் ஸூரத்துல் கமர் (54வது) அத்தியாயத்தையும் ஓதியுள்ளார்கள்.
    நபி (ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகையிலும் ஜுமுஆத் தொழுகையிலும் ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா (என்ற 87 வது அத்தியாயத்தையும்) ஹல் அதாக்க ஹதீஸுல் காஷியா (என்ற 88 வது அத்தியாயத்தையும்) ஓதுபவர்களாக இருந்தார்கள். பெருநாளும், ஜுமுஆவும் ஓரே நாளில் வந்து விட்டால் அப்போது இந்த இரண்டு அத்தியாயங்களை இரண்டு தொழுகையிலும் ஓதுவார்கள்.
    அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)
    நூல்: முஸ்லிம் 1452
    அபூவாகித் அல்லைஸீ (ரலி) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள், நோன்புப் பெருநாள் தொழுகையில் என்ன ஓதுவார்கள்?’ என்று உமர் (ரலி) அவர்கள் கேட்ட போது, ‘அவ்விரு தொழுகையிலும் காஃப் வல்குர்ஆனில் மஜீத் (என்ற 50 வது அத்தியாயத்தையும்) இக்தரபத்திஸ் ஸாஅத்தி வன் ஷக்கல் கமர் (என்ற 54வது அத்தியாயத்தையும்) ஓதுவார்கள்’ என்று பதிலளித்தார்கள்.
    அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ்
    நூல்: முஸ்லிம் 1477
    அல்லாஹுவின் உற்ற நண்பர் இப்ராஹீம் அலைஹிஸலாம் அவர்களின் தியாகத்தை நினைவுக் கூறும் விதமாக கொண்டாடப்படும் இத்திருநாளில்…
    இப்ராஹீம் நபியும் அவர்களது குடும்பத்தினரும் செய்தது போன்ற தியாகத்தை நம்மால் செய்ய முடியாவிட்டாலும்……….
    அவர்கள் நமக்கு முஹம்மத் ஸல் அவர்கள் மூலம்காட்டித் தந்த இம்மார்க்கத்தை அதன் தூய வடிவில் பின்பற்றி…….
    இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெற்ற நன்மக்களாக அல்லாஹ் உங்களையும் என்னையும் ஆக்கி அருள் புரிவானாக
    #eiduladha 2022
    #ஈதுல்அழ்ஹா
    #عيدالأضحى
    join to channel membership & get more information
    / @iqraulquranonlinemadr...

КОМЕНТАРІ •