கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி? How to Apply Joint Patta to Individual Patta

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 104

  • @AlabAlab-y1x
    @AlabAlab-y1x 3 місяці тому +1

    Required message that every one should know about it.
    Thank you kutti info❤

    • @Kutti_Info
      @Kutti_Info  3 місяці тому

      Thank you sir 😊 kindly share with others also

    • @lveerabadiran8160
      @lveerabadiran8160 3 місяці тому +1

      ஐயா தானசெட்டில்மெண்ட் நிலத்தை அடுத்தவருக்கு பவர் பத்திரம் எழுதாலாமா

    • @Kutti_Info
      @Kutti_Info  3 місяці тому

      நிபந்தனை எதுவும் இல்லாத தான செட்டில்மெண்ட் என்றால் நீங்கள் தாராளமாக எழுதலாம்

  • @VenkateshVenkat-il8ky
    @VenkateshVenkat-il8ky 4 місяці тому +1

    Nice and valuable information bro 😊❤

  • @VenkateshVenkat-il8ky
    @VenkateshVenkat-il8ky 4 місяці тому +1

    Nice and keep it up 😊🎉

  • @visvamitra8371
    @visvamitra8371 4 місяці тому +1

    நன்றி

    • @Kutti_Info
      @Kutti_Info  4 місяці тому

      நன்றி ஐயா மற்றவர்களுக்கும் பகிருங்கள்

  • @எங்கவீட்டுதோட்டம்-ர2ட

    hi...if am going to legal action regarding kootu patta to thani patta...how long it will take ...i have problem in measurement...opp party not supoorting to measure t land...pl clfy..tq

    • @Kutti_Info
      @Kutti_Info  28 днів тому

      Pls contact the advocate. They can say clearly

  • @mahendranhemas6491
    @mahendranhemas6491 3 місяці тому +1

    பதில் கூறவும் நன்றி ஐயா

  • @dharciusdairy4659
    @dharciusdairy4659 3 місяці тому +1

    Is any way to contact you. Zfull issue um comment la ena la sola mudiyathu, na details ah explain pana ungaluku easy ah purium. Enga grand pa, enga ah appa and sithapa ku, pangu prichu 2008 la pattram pani kodothutanga, patta ah matama ah vittonga ah, na pattava ah matthunha nu suruvey kitta ah ketta ah mudiyathu andh ah idam problem ah iruku nu soludranga ah, enga ah sithapa ah oda ah samthamnum venum apdi nu soludranga ah patta ah mata, apdi ethum iruka ah ena ah??

    • @Kutti_Info
      @Kutti_Info  3 місяці тому

      Ithula mail pannunga bro.
      borntolearn0@gmail.com

  • @stevesaravana9562
    @stevesaravana9562 2 місяці тому +2

    கூட்டுப்பட்டா 7 நபர் பெயரில் உள்ளது அதில் ஒருவர் மட்டும் அந்த நிலத்தை விற்பனை செய்ய முன்வர வில்லை அதை தனி பட்டாவாக மாற்றி அவருக்கான பங்கை அவர் கையெழுத்து இல்லாமல் நீதிமன்றம் சென்று மற்றலாமா 🙏🙏

    • @Kutti_Info
      @Kutti_Info  2 місяці тому +1

      ஐயா நீங்கள் நீதிமன்றம் சென்று தான் பங்கை பிரிக்க முடியும்

  • @gayathri.c1385
    @gayathri.c1385 3 місяці тому +1

    Ennoda grandma aprm avunga kuda porathavanga rendu perulayu koottu patta iruku rendu peru alanthu 15 years aa pottu varanga enga grandma akka death aki 8year akituchu ipo avungalota daughter vanthu avunga side land seri ila soil nalla ila kuruka alaka solli prblm panranga

    • @Kutti_Info
      @Kutti_Info  3 місяці тому

      மேடம்
      உங்கள் மூவருக்கும் பொதுவான சொத்தாக இருப்பதால் நீங்கள் மூவரும் இணைந்து அந்த நிலத்தை அளக்கலாம். நீங்கள் பாகப்பிரிவினை எழுதாதால் இந்த பிரச்சனை தொடரும்

  • @rameshpal7233
    @rameshpal7233 2 місяці тому +1

    சார்,
    கூட்டுப் பட்டா வில் இருந்தவர் இறந்த பிறகு அவருடைய வாரீசுகளை பட்டாவில் இணணக்க முடியுமா?

    • @Kutti_Info
      @Kutti_Info  2 місяці тому

      தாராளமாக இணைக்க முடியும்

    • @rameshpal7233
      @rameshpal7233 2 місяці тому +1

      @@Kutti_Info நன்றி

    • @Kutti_Info
      @Kutti_Info  2 місяці тому

      நன்றி ஐயா நமது வீடியோவை அனைவருக்கும் பகிருங்கள்

  • @nagarajannagarajan7946
    @nagarajannagarajan7946 4 місяці тому +1

    கூட்டு பட்டாவில் உள்ள பெயர் உள்ள நபர் வாரிசுகளின் வாரிசு சான்றிதழ் தேவை படுமா

    • @Kutti_Info
      @Kutti_Info  4 місяці тому

      ஆமாம் ஐயா
      ஒருவேளை கூட்டு பட்டாவில் உள்ள ஏதாவது ஒரு நபர் இறந்து விட்டால் அந்த நபரின் வாரிசு சான்றிதழ் அடிப்படையில் அவருடைய வாரிசுகளின் பெயரும் பட்டாவில் இடம் பெரும்

    • @DivinefeelwithGowri
      @DivinefeelwithGowri 3 місяці тому +1

      Kootu patta la idam vithavargalin pearl ullathu... en mamanar peyar illai.. but ipo enga husband kum avanga anna kum mathi eluthitom... ipo enga husband name la vangunamna en pananum sir

    • @Kutti_Info
      @Kutti_Info  3 місяці тому

      மேடம் முதலில் உங்களுடைய மாமனார் கூட்டு பட்டாவில் ஒரு பங்கை வாங்கினாரா அல்லது அதிலிருந்து தெளிவாக அனைவரிடமும் கையெழுத்தை பெற்றுக் கொண்டு தனியாக ஒரு இடத்தை வாங்கினாரா? உங்களுடைய மாமனாருக்கு கிரயம் கிடைத்த பத்திரத்தையும் தற்போது உங்கள் கணவருக்கு கிரயம் கிடைத்த பத்திரத்தையும் வைத்து நீங்கள் நேரடியாக உங்கள் கணவர் மற்றும் அவரது சகோதரனின் பெயரில் பட்டா மாற்றம் செய்ய முடியும்

  • @MuruganMurugan-wq7wh
    @MuruganMurugan-wq7wh 4 місяці тому +4

    தந்தை உயிரோடு இருக்கும்போது ஒரு சொத்தை பி செட்டிலாக பவுண்டரி பிரிக்காமல் புது பாகமாக பாகப்பிரிவினை செய்து கொடுத்துள்ளார் அவை மூத்தவர் மேற்கு பக்கம் பவுண்டரி போட்டு தனது மனைவி பெயரில் தான செட்டில்மென்ட் செய்து தம்பியின் அனுமதி இல்லாமல் உட்பிரிவு செய்து தனிப்பட்ட ஏற்படுத்தி உள்ளதை எதிர்த்து டி ஆர் ஓ விடம் தம்பி மனு கொடுத்து விசாரணை மேற்கொண்டதில் இந்த உட்பிரிவு செல்லாதே என்றும் முந்தைய நிலைக்கு கொண்டு செல்ல உத்தரவு பிறப்பித்தார் என்றும் இதை எதிர்த்து அண்ணன் மேல் முறையீடு டி ஆர் ஓவியம் முறையிட்டு மனுஷ செய்துள்ளார் அந்த விசாரணையின் அடிப்படையில் டி ஆர் ஓ வழங்கிய உத்தரவு செல்லும் என்றும் வழங்கி உள்ளதை பழைய நிலையே கூட்டு பட்டாவாக தொடர என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை தெரிவிக்கவும்

    • @Kutti_Info
      @Kutti_Info  4 місяці тому

      தந்தை பாகப்பிரிவினை எழுதி விட்டு இருந்தால் அதில் அண்ணனுக்கும் தம்பிக்கும் தனித்தனி சொத்து கிடைத்திருக்கும். எனவே அண்ணன் செய்த உட்பிரிவு சரியானதாக ஆகிவிடும். ஒருவேளை தந்தை பாகப்பிரிவினை செய்யாமல் இரண்டு மகன்களுக்கும் பொதுவாக சொத்தை எழுதி வைத்திருந்தால் அந்த நிலையில் அண்ணன் செய்த உட்பிரிவுள்ள பட்டா மாற்றம் ஆனது தவறானது. நீங்கள் இதற்கு வட்டாட்சியரிடமே உங்களின் பாகப்பிரிவினை பத்திரத்தின் நகலை வைத்து பட்டா தவறுதலாக மாற்றப்பட்டுள்ளது என்று மனு கொடுங்கள். வட்டாட்சியர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீங்கள் மேல்முறையீட்டுக்காக கோட்டாட்சியரை அணுகலாம். கோட்டாட்சியரும் ஒரு வேலை உங்களுக்கு சரியான பதிலை தெரிவிக்கவில்லை என்றால் மாவட்ட வருவாய் அலுவலர் அணுகுங்கள்.

    • @purushothamanvasudevan824
      @purushothamanvasudevan824 3 місяці тому +1

      மனைப்பிரிவில் கூட்டுப் பட்டா வில் 200 நபர் இருந்தால் தனித்தனியாக பத்திரப்பதிவு இருந்தால் எப்படி தனிப் பட்டா பெறும் முறையை விளக்கவும்.
      நான் அப்படி வாங்கிய மனைக்கு ஆன் லைனில் தனிப்பட்டா மனு செய்தேன்.என்னைப் போன்று வாங்கி ஒரே வரிசையில் உள்ள மனைப்பிரிவு வரைபடத்தில் டாட் லைன் வருவதாக,அது வழித்தடம் எனவே பத்திரத்தில் உள்ள பக்க அளவு மாறுபடும் தால் பட்டா வழங்க முடியாது, மனு நிராகரிக்கப்படுகிறது என்று பதில் கொடுத்துள்ளனர்.நாங்கள் வாங்கும் போது அப்படி எதுவும் இல்லை, மனைப்பிரிவின் வரைபடத்திலும் அப்போது காட்டப்படவில்லை.இதையும் விளக்குக.
      அப்படி இருந்தாலும் அதை நீக்கி மீதி இடத்தை அளந்து பட்டா வாங்க என்ன செய்யவேண்டும்?
      ஏன் அவர்கள் இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுத்து இதில் அரசு இடம் இவ்வளவு போக மீதி இவ்வளவு என்று எனது ஒப்புதலைப்பெற்று அவர்கள் பட்டா வழங்கக்கூடாது?

    • @Kutti_Info
      @Kutti_Info  3 місяці тому

      @purushothamanvasudevan824 ஐயா நீங்கள் சமீப காலத்தில் அந்த இடத்தை வாங்கி இருந்தால் நீங்கள் யாரிடமிருந்து வாங்கினீர்களோ அவர்கள் உங்களுக்கு தலையிட்டு முறையான பட்டாவை பெற்றுக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளுங்கள்.
      ஒருவேளை நீங்கள் அந்த மனை வாங்கி சில காலம் ஆகி இருந்தால் நீங்கள் முதலில் கிராம நிர்வாக அலுவலரிடம் உள்ள உங்களது இடத்திற்காக முழு வரைபடத்தையும் வாங்கி பாருங்கள். அதில் உங்களின் இடம் இருக்கும் இடத்திற்கான மொத்த விளக்கமும் தெரிந்து விடும்.
      நீங்கள் கூறுவதை வைத்து பார்க்கும் போது உங்களின் இடத்தில் பாதி இடம் புறம்போக்காக உள்ளது என்று எடுத்துக் கொள்ளும்படி உள்ளது. நீங்கள் ஒருவேளை புறம்போக்கையும் சேர்த்து நீங்கள் எழுதி இருக்கும் பட்சத்தில் அதை மறுக்கும் முழு அதிகாரமும் வட்டாட்சியருக்கு உண்டு நீங்கள் கூறுவது போல் புறம்போக்கை ஒதுக்கிவிட்டு மீதமுள்ள நிலத்திற்கு பட்டா தர மாட்டார் ஏனென்றால் நீங்கள் பொறம்போக்கையும் சேர்த்து தான் பத்திரப்பதிவு செய்துள்ளீர்கள் என்று பொருளாகும். எனவே நீங்கள் முதலில் நீங்கள் வாங்கியுள்ள இடத்திற்கான அரசாங்க பதிவேட்டில் அதாவது கிராம நிர்வாக அலுவலரிடம் உள்ள வரைபடத்தை பாருங்கள்.

  • @krishnamurthy5418
    @krishnamurthy5418 3 місяці тому +1

    கூட்டு பட்டா நிலம் வாங்கும்போது நாமக்கல் ஜகப்பந்தி காண்பித்து பத்திர பதிவு செய்தால் பதிவு செல்லுபடி ஆகுமா

    • @Kutti_Info
      @Kutti_Info  3 місяці тому

      ஐயா நாமக்கல் செக்குபந்தி என்றால் என்னவென்று எனக்கு தெரியவில்லை. நீங்கள் செக்குபந்தி எழுதினாலும் அந்த கூட்டு பட்டா நிலத்தில் எத்தனை பெயர் உள்ளது அனைவரும் கையெழுத்து விட்டால் மட்டுமே அது செல்லும்

  • @AjayAchilles-007
    @AjayAchilles-007 4 місяці тому +1

    Sir enga amma expired ayitanga avanga ponnu 3 members apuram appa irukuraru. Enga amma peru la land iruku ipo patta ku apply panen legal heir kudthu iruken amma death certificate vechuiruken ipo survior ena soldraru amma oda amma(patti, thatha) itha patta la name add agum soldraru patti thatha epova expired agitang avangaluku death certificate illa ipo ena pandrathu sir

    • @Kutti_Info
      @Kutti_Info  4 місяці тому

      உங்களின் அம்மாவினுடைய வாரிசு சான்றிதழில் உங்கள் அம்மா வழி தாத்தா பாட்டியின் பெயரை சேர்த்து இறந்து விட்டார்கள் என்று நீங்கள் குறிப்பிடவில்லையா?

  • @mkpedia8690
    @mkpedia8690 3 місяці тому +1

    ஐயா , என் பெயரில் உள்ள இடத்தை 1999 ஆறு வருடம் கழித்து இன்னொருவருக்கு விற்று விட்டார்கள். என்ன செய்வது ஈசி போட்டால் இரண்டு பேர்களுடைய பெயரும் வருகிறது. அட்மின் ரெஜிஸ்டர் இடம் கம்ப்ளைன்ட் கொடுத்தும் அந்த இரண்டாவது நபரை கண்டுபிடிக்க முடியவில்லை. இப்பொழுது என்ன செய்வது நீதிமன்றத்தில் கேஸ் போட வேண்டுமா ?

    • @Kutti_Info
      @Kutti_Info  3 місяці тому

      ஐயா நீங்கள் நீதிமன்றம் சென்று தான் அந்த போலி பத்திரத்தை நீக்க வேண்டும்.

  • @rknrr4948
    @rknrr4948 3 місяці тому +1

    வனக்கம்.ஐயா.நான்சொல்லுவது.என்னவென்றால்.கூட்டுபட்டாவில்.மொத்தம்.6.நபர்.அதில்.ஆண்.2.பெண்கள்.4.அதில்ஆண்கள்.2டும்.பெண்கள்.3ம்.ஆகமொத்தம்.5.பாகம்.வாங்கிஉள்ளேன்.அதில்1.பாகத்தை.இன்னொருத்தர்.நமக்கு.தெரியாமல்.முடித்துவவிட்டார்.அதர்க்கு.என்னவழி.சொல்லுங்கள்.சார்....

    • @Kutti_Info
      @Kutti_Info  3 місяці тому

      ஐயா தற்போது அவர் விட்டுள்ள அந்த ஒரு பாகத்தையும் எந்த பாகம் என்று செக்குபந்தி சரியாக தெரியாமல் தான் எழுதியிருப்பார் அதாவது மொத்த ஆறு பாக நிலத்தில் ஒரு பாகத்தை விற்கிறேன் என்றுதான் விற்க முடியும். வாங்கிய நபர் ஏதாவது ஒரு இடத்தில் பயிர் செய்து கொண்டிருந்தால் அந்த இடத்தை கூட நீங்கள் எனக்கு ஒதுக்குங்கள் என்று கேட்கலாம் ஏனென்றால் இன்னும் யாருக்கும் தனி பட்டா கிடைக்கவில்லை மொத்த ஆறு பங்கு ஏதாவது ஐந்து பங்கு நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் இந்த விவரத்தை வாங்கிய நபருக்கு புரிய வையுங்கள். மொத்தத்தில் புதியதாக வாங்கியுள்ள நபர் அந்த ஒரு பாகம் எது என்று தெரியாமலேயே வாங்கியுள்ளார் இந்த விஷயம் அவருக்குத் தெரியும் போது அதில் உள்ள பிரச்சனை புரிந்து அவரே உங்களிடம் பாகப்பிரிவினை பத்திரம் எழுத வருவார்

  • @govibalasubiramaniyan
    @govibalasubiramaniyan 4 місяці тому +1

    இரண்டு நபர்களின் பெயரில் கணிணி சிட்டா உள்ளது இரண்டு பேரும் சேர்ந்து பத்திரம் செய்து கொள்ளலாமா??

    • @Kutti_Info
      @Kutti_Info  4 місяці тому

      அந்த நிலம் எந்த அடிப்படையில் அவர்களுக்கு கிடைக்கப் பட்டது என்பதை பொருத்தே அந்த நபர்கள் கட்டிடம் செய்து கொள்ளலாமா என்பதை கூற முடியும். அவர்கள் இருவருக்கும் முறைப்படி அந்த நிலம் பத்திரம் பதிவு செய்யப்பட்டு கிடைத்தது என்றால் அவர்கள் இருவரும் சேர்ந்து பத்திரம் செய்து கொள்ளலாம். அல்லலே அவரின் தந்தை சொத்தாக இருந்து அவர்கள் இருவரும் இணைந்து பத்திரம் செய்து கொள்ள விரும்பினால் செய்து கொள்ளலாம்.

  • @pradeepmichael2820
    @pradeepmichael2820 3 місяці тому +1

    ஐயா.. ஒரே இடத்தில் ஆறு பங்குகள் உள்ளன.. ஆனால் பட்டா இல்லை.... என் பங்கை மட்டும் பட்டா வாங்க முடியுமா?

    • @Kutti_Info
      @Kutti_Info  3 місяці тому

      பாகம் பிரிக்காமல் இருந்தால் பட்டா தனியாக வாங்க முடியாது

  • @ravikumarravi6093
    @ravikumarravi6093 2 місяці тому +1

    நாங்கள் ஒரு வீடு வாங்கினோம், இப்பொழுது தான் கூட்டு பட்ட வாங்கினோம். இப்பொழுது தனி பட்ட வாங்க முடியுமா, எவ்வளவு செலவு ஆகும்

    • @Kutti_Info
      @Kutti_Info  2 місяці тому +1

      தனிப்பட்ட வாங்குவதற்கு அரசாங்கத்திற்கான செலவு என்பது நிர்ணயிக்கப்பட்டது தான் ஒரு வேலை உங்களில் நிலத்தில் ஏதாவது உட்பிரிவுகள் இருந்தால் அந்த ஒரு உட்பிரிவிற்கு 400 ரூபாய் வீதம் கட்டணம் செலுத்த வேண்டும். கீழே உள்ள வீடியோவில் நாம் உட்பிரிவுள்ள பட்டா பெறுவதற்கான வழிமுறையை கூறியுள்ளோம்.
      ua-cam.com/video/_etKyXaBFqU/v-deo.htmlsi=QxF0URk1q99IhNPs

  • @Sakthimanoj115
    @Sakthimanoj115 3 місяці тому +1

    ஐயா,நான் எனது அண்ணன் இருவரும் சேர்ந்து 1999 -ல் 900 சதுர அடி நிலம் வாங்கினோம் அதில் 450 சதுர அடியில் நான் 2002 ல் வீடு கட்டிக்கொண்டேன்
    எங்கள் இருவரின் பெயரில் கூட்டுப்பட்டா வாங்கிய பின்2020ல் 450 சதுர அடி காலி நிலத்தை என்னுடைய அண்ணன் விற்றுவிட்டார் என் சம்மதத்துடன்
    2023 ல் விடுதலைப்பத்திரமும் எழுதிக்கொடுத்துவிட்டார் என் பெயரில் தனிப்பட்டா வாங்க
    என்ன செய்ய வேண்டும் ?2002 ல்
    இருந்து என் பெயரில் வீட்டுவரி கரண்ட்பில் கட்டி வருகிறேன்
    நன்றி

    • @Kutti_Info
      @Kutti_Info  3 місяці тому +1

      ஐயா நீங்கள் உட்பிரிவுடன் கூடிய பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் அந்த நேரத்தில் உங்களிடம் உள்ள விடுதலை பத்திரத்தின் நகலை சமர்ப்பியுங்கள். உங்களின் 450 சதுர அடிக்கு தனியான ஒரு உட்பிரிவு என்னும் தனி பட்டாவும் உங்களுக்கு கிடைத்துவிடும்

    • @Sakthimanoj115
      @Sakthimanoj115 3 місяці тому +1

      @@Kutti_Info மிக்க நன்றி ஐயா🙏

    • @Kutti_Info
      @Kutti_Info  3 місяці тому +1

      நன்றி ஐயா நமது வீடியோக்களை உங்களின் whatsapp குழுக்களில் பகிருங்கள்

    • @Sakthimanoj115
      @Sakthimanoj115 3 місяці тому +1

      @@Kutti_Info ஐயா,விடுதலைப்பத்திரம் பதிவு செய்தபோது
      கள ஆய்வுக்குப்பிறகு
      அசல் பத்திரங்களை திரும்ப அளிக்கும்போது பட்டாமாற்றம் தேவைப்படும் ஆவனங்களுக்கு இனையதளம்வாயிலாக வருவாய்துறைக்கு படிவம் அனுப்பப்பட்டது அதற்க்கான ஒப்புகைச்சீட்டை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தி இருந்தது நான் வாங்காமல் வந்துவிட்டேன் ஒப்புகைச்சீட்டு எந்த வகையில் பட்டா மாறுதலுக்கு தேவைப்படும்

    • @Kutti_Info
      @Kutti_Info  3 місяці тому +1

      உங்களின் பட்டா மாறுதலுக்கான விண்ணப்ப எண் அதில் தான் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த விண்ணப்பத்தில் உங்களின் எந்த புல எண்ணில் மாற்றம் நிகழ்கிறதோ அதுவும் தெளிவாக எழுதி இருக்கும் நீங்கள் தற்போது கூட சென்று அவர்களிடம் முறையிட்டு வாங்கிக் கொள்ளலாம்

  • @SankaranarayananS-r5l
    @SankaranarayananS-r5l 3 місяці тому +1

    Hi,
    ஒரு நிலத்தை இரண்டு பேர் பத்திர பதிவு செய்து பட்டா transfer apply பண்ணும் பொது இரண்டு பேரும் விண்ணப்ப தாரர்கள்aga apply seiya வேண்டுமா அ‌ல்லது ஒருவரின் பேரில் அப்ளை செய்தால் thanaga பட்டா இரண்டு பேருக்கும் கூட்டு பட்டா ஆக கெடைக்குமா.

    • @Kutti_Info
      @Kutti_Info  3 місяці тому

      ஐயா அந்த இருவரில் யாராவது ஒருவரின் பெயரில் நீங்கள் புதியதாக தமிழ் நிலம் இணையதளத்தில் ஒரு கணக்கை துவங்கி விண்ணப்பித்தால் போதும் கிளாமர் நிர்வாக அலுவலர் அந்த பத்திரத்தை படித்து பார்த்து இருவரின் பெயரையும் அந்த பட்டாவில் இணைத்து விடுவார்

    • @SankaranarayananS-r5l
      @SankaranarayananS-r5l 3 місяці тому +1

      @@Kutti_Info ரொம்ப நன்றி.
      வேறு oru சந்தேகம்-- If land is under corporation/municipality TSLR is only available and patta transfer panna try pannal invalid survey number nu varudhu.
      TSLR irundhal epadi ayya name tranfer panuvadhu. Please clarify me this also.

    • @Kutti_Info
      @Kutti_Info  3 місяці тому

      Whose name is mentioned in TSLR extract?

    • @SankaranarayananS-r5l
      @SankaranarayananS-r5l 3 місяці тому +1

      ​@@Kutti_Info Its a company name who sold to us. Actually its two company name.

    • @Kutti_Info
      @Kutti_Info  3 місяці тому

      @SankaranarayananS-r5l Apply for Patta transfer

  • @mahendranhemas6491
    @mahendranhemas6491 3 місяці тому +1

    ஐயா மொத்தம் பதினைந்து ஏக்கர் வேறு ஒருவரிடம் இருந்து வாங்கினோம் மொத்தம் நாங்கள் மூன்று பேர்.பதினைந்து ஏக்கரில் பதினாங்கு ஏக்கரை மூவரும் வாங்கும் போதே தனிதனியாக பிரித்து தனிதனி சர்வே நெம்பரில் செக்பந்தி போட்டு பத்திரம் செய்துவிட்டோம்.மீதி ஒரு ஏக்கரை முப்பது முப்பது சென்ட் ஆக பிரித்து அதேபோல் மூவரும் பிரித்து அவர்அவர்பங்கை அவர்அவர் பத்திரத்தில் செக்பந்தி போட்டு எழுதி உள்ளோம்.அதில் அவர்அவர் பங்கில் வீடும் கட்டி விட்டோம்.மீதி பத்து சென்ட்டில் தடம் மற்றும் கிணறு பொதுவாக உளளது இதையும் அவரரவர்பத்திரத்தில் எழுதி உள்ளோம் இந்த ஒரு ஏக்கர் மட்டும் ஒரே புல எண்ணில் உள்ளது மூவர் பெயரும் பட்டாவில் உள்ளது அந்த மூவரில் நானும் ஒருவன். இப்போது நான் தனி பட்டாவாக மாற்றலாமா இல்லை கிணறு தடம் எல்லாம் வருவதால் அப்படியே கூட்டு பட்டாவாக விட்டுவிடலாமா.தனி பட்டாவாக மாற்ற என்ன செய்ய வேண்டும் என்னென்ன ஆவணங்கள் தேவை தயவுசெய்து பதில் கூறவும் நன்றி ஐயா

    • @Kutti_Info
      @Kutti_Info  3 місяці тому +1

      ஐயா நீங்கள் ஒரு ஏக்கரில் 10 சென்டை பொதுவாக விட்டுவிட்டு மீதமுள்ள 90 சென்ட் நிலத்தை மூவரும் 30 சென்ட் ஆக பிரித்துக் கொண்டதால் நீங்கள் தாராளமாக தற்போது உட்பிரி உள்ள பட்டா மாற்றுவதற்கு விண்ணப்பம் செய்து அந்த 10 சென்டிற்கு மூவரின் பெயரில் கூட்டு பட்டாவாகவும் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட 30 சென்ட் இடத்திற்கு தனி பட்டாவும் பெற்றுக் கொள்ளுங்கள்.

    • @mahendranhemas6491
      @mahendranhemas6491 3 місяці тому +1

      @@Kutti_Info நன்றி

    • @Kutti_Info
      @Kutti_Info  3 місяці тому

      நன்றி ஐயா. நமது வீடியோக்களை அனைவருக்கும் பகிருங்கள்

    • @mahendranhemas6491
      @mahendranhemas6491 3 місяці тому +1

      @@Kutti_Info நன்றி

    • @Kutti_Info
      @Kutti_Info  3 місяці тому

      நன்றி ஐயா

  • @mahendranhemas6491
    @mahendranhemas6491 3 місяці тому +1

    மூன்று பேர் அவரவர் பத்திரத்தில் அவருக்கு உண்டான பாகத்தை செக்குபந்தி போட்டு எழுதி உள்ளோம் ஆனால் பட்டா கூட்டு பட்டாவாக உள்ளது மூவர் பெயரும் உள்ளது இதில் தனி பட்டா பெறும் வழிமுறை என்ன

    • @Kutti_Info
      @Kutti_Info  3 місяці тому

      ஐயா அந்த பத்திரத்தில் நீங்கள் மூவரும் கையெழுத்திட்டு உள்ளீர்களா? அப்படி மூவரும் சேர்ந்து எழுதி இருந்தால் நீங்கள் உட்பிரிவுடன் கூடிய பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பம் செய்யுங்கள்

    • @mahendranhemas6491
      @mahendranhemas6491 3 місяці тому

      வேறு ஒருவரிடம் இருந்து வாங்கும் போது மொத்தம் பதினைந்து ஏக்கர். பதினாங்கு ஏக்கர் மூவரும் தனிதனியாக பத்திரம் செய்து தனி தனி புல எண்ணில் தனியாக தனி தனியாக பட்டா செய்துவிட்டனர் .ஒரு ஏக்கர் மட்டும் மூவரும் ஒரே சர்வே எண்ணில் வைத்துள்ளோம்.ஒவ்வொருவருக்கும் முப்பது சென்ட் இடம்.அதில் ஒவ்வொருக்கும் தனியாக வீடும் உள்ளது மீதி பத்து சென்ட்டில் தடம் மட்டும் கிணறு பொதுவாக உள்ளது இவை அனைத்தும் அவரரருக்கு உண்டான பாகத்தை அவரவர் பத்திரத்தில் செக்குபந்தி போட்டு எழுதி உள்ளோம்.ஆனால் பட்டா மட்டும் கூட்டாக உள்ளது.இதை தனி பட்டாவாக மாற்றலாமா அல்லது அப்படியே விட்டுவிடலாமா

  • @m.bharathi4000
    @m.bharathi4000 3 місяці тому +1

    கூட்டு பட்டாவில் பங்கு தர மாறுதல் என்ன செய்வது

    • @Kutti_Info
      @Kutti_Info  3 місяці тому

      கூட்டு பட்டாவில் உங்கள் பெயர் இருக்கும்போது யாரும் பங்கத்தர மறுக்க முடியாது ஒருவேளை அவ்வாறு மதிக்கிறார்கள் என்றால் உங்களிடம் பாகப்பிரிவினை பற்றிடம் இருந்தால் நீங்கள் பத்திரத்தை வைத்து உங்கள் பெயரை பிரித்துக் கொள்ளுங்கள் அப்படி எதுவும் இல்லை தந்தை இறந்த பிறகு வந்த சொத்து என்றால் நீங்கள் நீதிமன்றத்தை நாட வேண்டும்

  • @jpambai4710
    @jpambai4710 4 місяці тому +2

    கூட்டு பட்டா நிலத்தில் ஒருவர் தனது அனுபவபூர்வமான பங்கை விற்று விட்டால் அதை எப்படி தடுப்பது அது எப்படி சரி செய்வது மற்ற பங்குதாரர்கள்

    • @Kutti_Info
      @Kutti_Info  4 місяці тому

      ஐயா கூட்டுப்பட்டார் நிலத்தில் அனுபவம் என்று யாரும் தன்னுடைய தூதரை விற்க முடியாது ஏனென்றால் அவர் அனுபவித்துக் கொண்டிருக்கும் பங்கானது மற்றவர்களுக்கு கூட உரிமையானது. எனவே அவர் ஏதாவது ஒரு பங்கை மட்டும் செக்குபந்தி போட்டு விற்றால் அது தவறானது. ஆனால் அவரே மொத்தமாக உள்ள நிலத்தில் தனது பங்கை மட்டும் விற்பனை செய்தால் அது தவறு இல்லை. அதாவது கூட்டு பட்டாவில் அவருடைய பெயர் இருந்த இடத்தில் தற்போது புதிய ஒருவரின் பெயர் வந்துவிடும்

    • @jpambai4710
      @jpambai4710 4 місяці тому +1

      @@Kutti_Info நன்றி ஐயா நன்றி

    • @Kutti_Info
      @Kutti_Info  4 місяці тому

      நன்றி ஐயா நமது வீடியோக்களை மற்றவர்களுக்கும் பகிருங்கள்

    • @m.bharathi4000
      @m.bharathi4000 3 місяці тому +1

      கூட்டு பட்டாவில் ஒருவர் மட்டும் அதிகம் பங்கு நிலத்தை அனுபவித்து கொண்டு மற்றொருவருக்கு பங்கு தர மறுத்தால்

    • @Kutti_Info
      @Kutti_Info  3 місяці тому

      சிவில் நீதிமன்றத்தை நாட வேண்டும்

  • @mahendranhemas6491
    @mahendranhemas6491 3 місяці тому +1

    ஐயா மேலும் ஒரு சந்தேகம் என் அப்பா சுயமாக சப்பாதித்த சொத்து அதை எனக்கு தான செட்டில்மெண்ட் கொடுத்து விட்டார்.அவர் அந்த சொத்தை வாங்கும் போது பத்திரத்தில் சாமிநாதன் என்ற பெயரில் வாங்கியுள்ளார்.அவருக்கு சாமியப்பன் என்ற பெயரும் உண்டு.ரேசன் கார்டு ஆதார் கார்டு மற்றும் பட்டாவில் சாமியப்பன் என்ற பெயர் இருந்தது.எனவே எனக்கு தான செட்டில்மெண்ட் செய்யும்போது சாமிநாதன் சாமியப்பன் இருவரும் ஒருவரே என நோட்டரி வக்கீலிடம் என் அப்பா கையெழுத்து இட்டு சான்று வாங்கி எனது பெயருக்கு தான செட்டில்மெண்ட் செய்துவிட்டார்.தான செட்டல்மெண்ட் பத்திரத்தில் சாமிநாதன் என்கிற சாமியப்பன் என ஒவ்வொரு பக்கத்திலும் எழுதி அதன்கீழ் கையொப்பம் இட்டுள்ளார். எனவே இதே போதுமானதா இல்லை வேறு ஏதேனும் சான்றிதல் தேவையா எனது அப்பா ஆறு மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்

    • @Kutti_Info
      @Kutti_Info  3 місяці тому +1

      ஐயா வேறு எதுவும் தேவையில்லை அந்த தான செட்டில்மெண்ட் பத்திரத்தை வைத்து உடனடியாக பட்டா மாற்றம் செய்து விடுங்கள்

    • @mahendranhemas6491
      @mahendranhemas6491 3 місяці тому +2

      மிக்க நன்றி அனைத்து கேள்விகளுக்கும் பதில் தருகிறீர்கள் உங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

    • @Kutti_Info
      @Kutti_Info  3 місяці тому +1

      நன்றி ஐயா நமது வீடியோக்களை அனைவருக்கும் பகிருங்கள்

  • @somasundaramgiri5290
    @somasundaramgiri5290 2 місяці тому +1

    Ungala epdi contact pandarathu any mobile number sir?some more doubts kekanum

    • @Kutti_Info
      @Kutti_Info  2 місяці тому

      borntolearn0@gmail.com

  • @Honest5
    @Honest5 3 місяці тому +1

    1 ஏக்கர் நிலத்தை 10 பிரிவுகளாக பிரித்து, 10 பேருக்கு விற்றபின், 10 பேர் பெயர்களும் கூட்டு பட்டாவில் உள்ளது.
    இந்த 10 பேரும் தனிப்பட்டா பெறுவது எப்படி என்று தெரியப்படுத்தினால் உபயோகமாக இருக்கும்..(நிலம் மாநகராட்சி எல்லைக்குள் வருகிறது)

    • @Kutti_Info
      @Kutti_Info  3 місяці тому +1

      ஐயா பத்து பேருக்கு பிரித்து விட்டார்கள் என்றால் அது பாகப்பிரிவினை ஆகிவிடும் அதாவது தனித்தனியாக கிரயம் எழுதியுள்ளார்கள் எனவே ஒவ்வொருவரும் அவர்களுக்கு கிடைத்த நிறைய பத்திரத்தின் அடிப்படையில் அவர்கள் தாராளமாக தங்களுக்கான தனிப்பட்டவை பெற்றுக் கொள்ளலாம். எனவே ஒவ்வொருவரும் உட்பிரிவு உள்ள பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்

    • @Honest5
      @Honest5 3 місяці тому +1

      @@Kutti_Info தங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி. 🙏
      தனிப்பட்டாவாக மாற்றாமலேயே, இந்த 10 பேரில் ஒருவர் தான் வாங்கிய நிலத்தை விற்க முடியுமா என்றும் தெரிவியுங்கள்...

    • @Kutti_Info
      @Kutti_Info  3 місяці тому

      ஐயா தாராளமாக விற்க முடியும் ஆனால் உங்களுக்கு யார் நிலம் கொடுத்தாரோ அவருடைய பெயரில் பட்டா இருக்க வேண்டும் அது மட்டும் இல்லாமல் அந்த பட்டா உள்ள நபரிடம் இருந்து நீங்கள் வாங்கிய பத்திரம் வேண்டும் அப்போதுதான் பத்திரப்பதிவு செய்ய முடியும்

    • @Honest5
      @Honest5 3 місяці тому +1

      @@Kutti_Info நன்றி! 🙏🙏🙏

    • @Kutti_Info
      @Kutti_Info  3 місяці тому

      நன்றி நமது வீடியோவை அனைவருக்கும் பகிருங்கள்

  • @sriranga.pkv.2101
    @sriranga.pkv.2101 4 місяці тому +1

    Unga mobile number plz. Impartant matter

    • @Kutti_Info
      @Kutti_Info  4 місяці тому

      Kindly mail us. We'll share a mobile number there

    • @sriranga.pkv.2101
      @sriranga.pkv.2101 4 місяці тому +1

      Enakku mail use panna theriyathu

    • @Kutti_Info
      @Kutti_Info  4 місяці тому

      Aiya privacy issues irukurathaala than mobile number share pannala. Yaarkutayavathu kuduthu mail pannunga

  • @govibalasubiramaniyan
    @govibalasubiramaniyan 4 місяці тому +1

    இரண்டு நபர்களின் பெயரில் கணிணி சிட்டா உள்ளது இரண்டு பேரும் சேர்ந்து பத்திரம் செய்து கொள்ளலாமா??

    • @Kutti_Info
      @Kutti_Info  4 місяці тому

      அந்த நிலம் எந்த அடிப்படையில் அவர்களுக்கு கிடைக்கப் பட்டது என்பதை பொருத்தே அந்த நபர்கள் கட்டிடம் செய்து கொள்ளலாமா என்பதை கூற முடியும். அவர்கள் இருவருக்கும் முறைப்படி அந்த நிலம் பத்திரம் பதிவு செய்யப்பட்டு கிடைத்தது என்றால் அவர்கள் இருவரும் சேர்ந்து பத்திரம் செய்து கொள்ளலாம். அல்லலே அவரின் தந்தை சொத்தாக இருந்து அவர்கள் இருவரும் இணைந்து பத்திரம் செய்து கொள்ள விரும்பினால் செய்து கொள்ளலாம்.